MATHI NEWS காலை செய்திகள்@25/8/17
தமிழக மக்களுக்கு, முதல்-அமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 3 ஆயிரம் இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
200 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் கிடைக்கும்
மருத்துவ படிப்புக்கு இன்று பொது கவுன்சிலிங்
சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கின் இறுதி விசாரணை 30–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
25 வருட கால போராட்டத்துக்கு தற்காலிக நிம்மதி : பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்
மலேசியாவில் உலக தமிழ் இணைய மாநாடு துவங்கியது
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகஸ்ட் 27-ல் சென்னை வருகை
லடாக் அருகே சாலை அமைக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம்
குர்மீத் வழக்கில் இன்று தீர்ப்பையொட்டி பஞ்சாப்பில் 144 தடை உத்தரவு
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் ஏழுமலை உடன் பணியாற்றிய பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டரை திடீரென கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததால் அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி கள்ளத்துப்பாக்கி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: கோரக்பூர் மருத்துவமனைக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைக்கு யோகி உத்தரவு
மேற்கு வங்கத்தில் நடப்பது தலிபான் அரசு: பா.ஜ., விமர்சனம்
ஆக-25: பெட்ரோல் விலை ரூ. 71.51, டீசல் விலை ரூ.60.02
அமெரிக்கா: உணவகத்தில் சமையல்காரரை சுட்டுக்கொன்ற பணியாளர் - பிணைக்கைதிகளாக மக்கள் பிடிப்பு
தீவிரவாதத்துக்கு எதிரான எங்களது பங்களிப்பை ட்ரம்ப் அவமதித்துவிட்டார்: பாகிஸ்தான்
டிரம்பின் புதிய தெற்காசிய கொள்கையை நிராகரித்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரீஸ்டைல் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 1-3 என்ற புள்ளி கணக்கில் லூய்சாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
*மதிய செய்திகள்@25/8/17💥*
விநாயகர் சதுர்த்தி: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
மாநிலங்களவை எம்.பி.யாக அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் 19 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் : பள்ளி கல்வித்துறைக்கு முதன்மை செயலாளர் பதவி அறிமுகம்
2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் வரும் செப்டம்பர் 20ல் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வுநிலையால் இன்றும் மழை தொடரும்
ஸ்டாலின் மீது நடவடிக்கை: வரும் 28ல் சட்டசபை உரிமை மீறல் குழு கூட்டம்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: மு.க.ஸ்டாலின்
கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மருத்துவக் கலந்தாய்வில் 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பதைத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.
அணு பிளவு சோதனை தொடக்கம்ஒரு வாரத்தில் மின் உற்பத்திகூடங்குளம் இயக்குனர் ஜின்னா தகவல்
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துஅரசு பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் படுகாயம்
பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம் : அற்புதம்மாள்
கல்வித்துறை செயலர் உதயச்சந்திரனின் அதிகாரத்தை குறைத்து அவமதிப்பதா? – பாமக நிறுவனர் ராமதாஸ் கணடனம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்று 1 மாத பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய கோரி தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அய்யலுசாமி செல்ஃபோன் டவரில் ஏறி கண்ணில் கருப்புத்துணி கட்டி தற்கொலை மிரட்டல்
கடலூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சக ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்துக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வைகோ
புரசைவாக்கத்தில் டிடிவி தினகரன், திவாகரன் உருவபொம்மை எரிப்பு
அ.தி.மு.க.வில் உண்மை தொண்டருக்கே இனி பதவி: திவாகரன்
புதுச்சேரி: தினகரன் ஆதரவாளர்கள் தங்க உள்ள ரிசார்ட்டில் போலீசார் குவிப்பு
புதிய போர்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகை: அதிகாரிகள் வரவேற்பு
டில்லியில் செப்., 24,25ல் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம்
குர்மீத் ராமுக்கு எதிரான பலாத்கார வழக்கில் சிபிஐ கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குவதையொட்டி மூன்று மாநிலங்களில் பாதுகாப்பு அதிஉஷார் படுத்தப்பட்டு உள்ளது.
மும்பையில் புறநகர் ரயில் தடம்புரண்டு விபத்து
ஒவ்வொரு தலைவராக பின்வாங்குவதால் லாலுவின் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சிக்கல்
ஸ்டண்ட் யூனியன் பொன்விழா: ரஜினி, கமல் பங்கேற்பு
கேரள நடிகை காரில், கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யபட்ட வழக்கில் நடிகர் திலீப் ஜாமீன் மனு மீது இன்று நீதிமன்றம் முடிவு எடுக்கிறது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் வசம் செல்லலாம் என அமெரிக்கா கவலை
தங்கம் விலை உயர்வு:
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,774
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,192
24 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.23,304
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.70
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,700
மணிப்பூரைச் சேர்ந்த பிரதிப்குமார் சிங் எச்.ஐ.வி. நோயுடன் உலக ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
முத்தரப்பு கால்பந்து தொடர்: இந்திய அணி சாம்பியன்.
*மாலை செய்திகள்@25/8/17💥*
சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி எனத் தீர்ப்பு: ஆகஸ்ட் 28-ல் தண்டனை அறிவிப்பு
பலாத்கார வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரகீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரியானாவில் கலவரம் வெடித்துள்ளது. 3 பேர் பலியானார்கள். பஞ்சாபில் ரயில் நிலையத்திற்கும், பெட்ரோல் பங்கிற்கும் தீ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.
காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய வீரர் காயம்
கோப்புகளை பார்ப்பதோடு உங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாதீர்கள், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி புரிந்து கொள்ளுங்கள். சாமானிய மக்களைப் பற்றி சிந்தியுங்கள், வேகமாகச் செயல்படுங்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
தேரா சச்சா சவுதா என்பது ஒரு சீக்கிய ஆன்மீக அமைப்புசீக்கிய மதத்தில் தேரா சச்சா சவுதா சாமியார் ராம் ரஹீமுக்கு கடும் எதிர்ப்புபலாத்கார வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ கோர்ட் தீர்ப்பு
நாளை தமிழகம் வருகிறார் கவர்னர்
திண்டுக்கல் மாவட்ட அதிமுகவை இரண்டாக பிரித்தார் தினகரன்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ஆதரவு எம்.எல்.ஏ தங்கதுரை நியமனம்திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக நல்லசாமி நியமனம்
ஆட்சியை கலைக்க கோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்டிராபிக் ராமசாமி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்24 மணிநேரத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டி.டி.வி. தினகரன் நாளை திருப்பூர் பயணம்
தினகரன் அணிக்கு 80 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உண்டுதங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தகவல்
அரசு கொறடா மீது வழக்கு தொடருவோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறி உள்ளனர்
தமிழகத்தில் சட்டவிரோத அமைச்சரவை நீடிக்க ஆளுநர் இடமளித்துவிடக் கூடாது மு.க. ஸ்டாலின்
குதிரைபேர ஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்தவர்களாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள்: ஸ்டாலின்
தி.நகரில் உள்ள புகாரி ஹோட்டலில் வடமாநில தொழிலாளர்கள் 3பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் விநாயகர் சிலை கரைக்க வந்த இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.மேலும், சிலை கரைக்க சென்றவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்கோடி கடல் பகுதியில் ஒதுங்கிய 75 கிலோ கஞ்சா
ஓணம் பண்டிகை: செப்.,4ல் சென்னைக்கு உள்ளூர் விடுமுறை
ஜெயலலிதா சொத்துக்களில் மூக்கை நுழைக்க கூடாது என்று சசிகலா குடும்பத்தினர் என்னிடம் கூறினார்கள் என தீபக் கூறி உள்ளார்.
நாகை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
ஆந்திர மாநிலம் சந்திரகிரி காவல்நிலையத்தில் தமிழக அரசுப் பேருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.செம்மரம் கடத்த ஆட்களை ஏற்றிவந்ததாக பேருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீர் மக்களுக்கு சிறப்புரிமை: தீபாவளிக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
கல்விக் கடனுக்கான மான்யம் கோரி விண்ணப்பிக்க வங்கிகளுக்கு அனுமதி: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச வைபை சேவை - இன்று தொடங்கியது
மும்பை அருகே புறநகர் ரெயில் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 5 பேர் காயம்
முத்தலாக் வழக்கு தொடர்ந்த இஷ்ரத் ஜஹானை ’அழுக்கு பெண்’ என குடும்பம் புறக்கணிப்பு
சட்டவிரோத பணபரிவர்த்தனை: டில்லி சுகாதார அமைச்சர் மீது வழக்கு
நிதிஷ்குமார் அரசு மீது ரூ.700 கோடி ஊழல் புகார்: சட்டசபையில் ராப்ரிதேவி அமளி
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷிவானி மிஸ்ரா என்ற 15 வயது மாணவி தனது சகோதரனுடன் அங்குள்ள சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த வினோத் சவுராசியா என்ற வாலிபர் அவரிடம் பேச முயற்சித்துள்ளார்.ஆனால் ஷிவானி மறுத்தவுடன், கத்தியை வைத்து தாக்கியுள்ளார். இதனால் அப்பெண்ணின் கை துண்டாகியதால் இரத்த வெள்ளத்தில் வலியில் துடித்துள்ளார்.
பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகிறார்.
பயங்கரவாதம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் எச்சரிக்கையின் எதிரொலியாக பாகிஸ்தான் விரைவில் பாராளுமன்றத்தை கூட்ட தயாராகிறது.
அமெரிக்காவை பயமுறுத்தும்'ஹார்வி' புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 201 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் கனமழையும் வெள்ள அபாயமும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாம்சங் நிறுவன துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷியா: கடலுக்குள் பஸ் பாய்ந்த விபத்தில் 14 பேர் பலி
ஆப்கன்: மசூதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு
இரட்டைக் கொலையாளிக்கு புதிய ஊசி மருந்து மூலம் மரண தண்டனை: புளோரிடாவில் நிறைவேறியது
அனிதா பால்துரைக்கு ஏன் அர்ஜினா விருது வழங்கப்படவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.மேலும், வரும் திங்கள்கிழமை பதிலளிக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2013ல் கடைசியாக விளையாடிய வீராங்கனைக்கு அர்ஜினா விருது வழங்கியதை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த அனிதா பால்துரை தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
உலக பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருமுறை ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற சைக்கிள் பந்தய வீரரான ஜேக் பாப்ரிட்ஜ் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர் விருதை 3-வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதுபோல் உங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று டோனி அறிவுரை கூறினார் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்
ஜெர்மனி கால்பந்து கிளப் அணியான பொருசியா டார்ட்மண்டில் விளையாடும் ஓஸ்மான் டெம்பெல்லை 150 மில்லியன் யூரோவிற்கு வாங்க பார்சிலோனா விருப்பம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் செல்லும் உலக லெவன் அணியின் கேப்டனாக டுபிளெசிஸ் தேர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக