செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

மோடியுடன் மோதப்போவது யாரு?



மோடியுடன் மோதப்போவது யாரு?

2019 ம் ஆண்டில்  நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தல் பற்றிய சமீபத்தில் கருத்துக் கணிப்புகள் மோடியே் மீண்டும் பிரதமர் ஆ வார்என்றும் பிஜேபி சுமார் 300 தொகுதிக ளை கைப்பற்றும் என்றும்  தெரிவிக்கின்றன

இப்பொழுது தான் பாராளுமன்ற தேர்தல் நடந்தமாதிரி இருந்தது. அதற்குள் மூன்று வருடம் முடிந்து விட்டது.அடுத்த தேர்தலுக்கு
 இடையில்ஒரு வருடம் தான் இருக்கிறது. மோடி யின்மூன்று வருட ஆட்சியில்  நாடு நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது
.
டீமானிட்டிசேசன் ஜிஎஸ்டி என்று சாமானிய மக்களும் உணரும் வகையில் மத்திய அரசு
திட்டங்கள் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி மாதிரி
ஏழைகளை குளிர்விக்கும் இலவச திட்டங்கள்
எதுவும் மோடி அரசில் இல்லை.

மக்களை நேர்மையான பாதைக்கு திரும்பி வரும் வகையில் அனைத்து திட்டங்களுக்கும்
ஆதார் எண் .கட்டாயமாக்க ப்பட்டுள்ளது. வியாபாரிகள் நேர்மையாக தொழில் செய்து அரசைஏமாற்றாமல் வரி செலுத்த வேண்டும் எச்சரிக் கை செய்யப்பட்டுள்ளார்கள்

கணக்கு வழக்கு இல்லாமல் வெளிநாட்டு நிதியை பெற்றுக் கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்த என்ஜிஓக்களின் லைசன்ஸ் ரத்துசெய்யப்பட்டு அரசின் கண்காணிப்பில்
 இருக்கிறார்கள்.
.
ஆக மொத்தத்தில் மக்களின் வழியில் அரசு என்கிற நிலை மாறி அரசின் வழியில்மக்கள் என்று நாடு சென்றுக்கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இது வரை இல்லாத
புதுமை.இதுஉண்மையிலேயே  இந்தியாவ ின் முன்னேற்றத்திற்கு கிடைத்த நல்ல சந் தர்ப்பம் என்றே சொல்லலாம்.

ஒரு நாட்டின்அரசாட்சியைப்பற்றி நம்ம திருவள் ளுவர் கூட ஒரு குறளில் அற்புதமாக கூறியுள் ளார்.

குடிபுறம் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்..

அதாவது ஒரு அரசு ஒழுக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் மக்களும் தவறு செய்ய மாட்டார்கள். மக்கள் தவறு செய்யாமல் வாழ்வதற்கான சூழ்நிலை களை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசே நல்ல அரசு என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

இதைத்தான் மோடி செய்து கொண்டிருக்கி றார்இதற்காக அரசை தாக்கி ஆயிரம் விமர் சனங்கள் வந்து கொண்டிருக்கிறது . இருந் தாலும்மோடி கவலைப்படவில்லை.அவர்
வேலையைஅவர் செய்து கொண்டிருக்கிறார்.

சரிப்பா..என்னமோ மோடியோடு மோதப்போ வது யாரு என்கிற பெயரில் டைட்டில் வைத்து
விட்டு திருக்குறளை சொல்லிக்கொண்டு இருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.

இந்த அளவிற்கு சுதந்திர இந்தியாவில் மிர ட்டியஅரசு எதுவும் இல்லையென்றாலும் மோடியைவீழ்த்த போவது யார் என்கிற கேள் வியே இன்னும் இந்தியாவில் எழ வில்லை . அதை விடுங் கள் மோடியோடு மோதப்போ வது யாரு என்கிறகேள்விக்கே இன்னும் விடை கிடைக்கவில்லைஎன்பதே யதார்த்த நிலைமை.

சுதந்திர இந்தியாவில் நடந்த மூன்று தேர்த ல்க ளில் அன்றைய ஆளும் கட்சிக்கு எதிராக கிட்டதட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர் ந்து ஆளும் கட்சியை முறியடிக்க ஒன்று சேர்ந்தசம்பவங்கள் நடந்துள்ளது.இரு முறை காங்கிர சை ஒரு முறை பிஜேபியை எதிர்க் கட்சிகள் ஒன்று கூடி முறியடித்துள்ளன.

சுதந்திர இந்தியாவில் முதல் பொது தேர்தல் நடந்த 1952 ல் இருந்து பார்த்தால் 1977 ல் தான்இந்திரா காந்தியை எதிர்த்து எதிர்க்க ட்சிகள் ஒன்று சேர்கிறார்கள்.அதுவும் எமர் ஜென்சி மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரந்திருக்க வாய்ப் பில்லை.

இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பிரதமர்க ளில்இந்திராகாந்தியின் அரசியல் சாணக் கியம்வேறு யாரிடமும் இருந்ததில்லை. ஆ னால் அவராலேயே அவருக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் மொரார்ஜி தலைமையில் ஒன்று திரள்வதை தடுக்க முடியவில்லை

1977 தேர்தலில் இந்திராகாந்தி தோல்வி யடை ந்த பிறகு தான் மொரார்ஜி ஆட்சியை அவரால்சரன்சிங்கை வைத்து உடைக்க முடி ந்ததே தவிர தன்னுடைய தோல்விக்கு முன் பே  எதிர்க் கட்சிகளை அவரால் உடைக்க முடியாமல் போனதுஅவரின் அரசியல் வாழ் வில் மாபெரும் சறுக்கல்தான்.

அடுத்து 1989 தேர்தலில் வெறும் 64 கோடி ரூபாய் போபர்ஸஊழல் குற்றச்சாட்டுகளு க்காக ராஜீவ் காந்தியை வீழ்த்த  எதிர்க்கட்சி கள விபி சிங் தலைமையில் ஒன்று சேரவி ட்டதன் மூலம் ராஜீவ் காந்தியின் அரசியல் அனுபவமின்மை யை அறிந்து கொள்ள லாம்

ராஜீவ காந்தி உண்மையிலேயே் ஒரு சராசரி
அரசியல்வாதியாக இருந்திருந்தாலே போது ம்.விபி சிங் என்கிற பிரதமர் இந்திய வரலாற றில் இருந்திருக்க மாட்டார்.

2004 ல்  இருந்த வாஜ்பாய் அரசின் மீது பெரி யஅளவில் எதிர்ப்பு இல்லாமல் இருந்த போதி லும் சோனியா தலைமையில்  ஒருவலுவான
 கூட்ட ணி அமைந்ததை தடுக்க அப்போதைய பிஜே பியின் தலைமையாக இருந்த அத்வா னி தவறியதில் இருந்தே அத்வானியின் அரசியல் சாணக்கியத்தனத்தை  அறிந்து கொள்ளலாம்.

1999 தேர்தலில் பிஜேபியோட இருந்த திரி ணா முல் காங்கிரஸ் திமுக பிஜூ ஜனதா தளம்  போ ன்ற கட்சிகளை பிஜேபி கூட்டணி யில் தக்க வைத்திருந்தாலே போதும் 2004 தேர்தலிலும் பிஜேபியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணியில்  இருந்த திமுக பாமக மதிமுக
கட்சிகள் காங்கிரஸ் பக்கம் தாவாமல் இருந் திரு ந்தாலே போதும் பிஜேபி ஆட்சிக்கட்டி லில்தொடர்ந்து அமர்ந்திருக்கும். ஆக ஆட்சி யைகைப்பற்றுவதை விட அதை தக்க வைத் துக் கொள்வதில் தான் அரசியல் ராஜதந்தி ரம் உள்ளது.

அந்த வகையில் பார்த்தால் மோடி அமித்ஷா விடம் மிகுந்த அரசியல் தந்திரம் இருக்கிறது
இல்லை என்றால் மோடி பிரதமராக கூடாது
அதை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது
என்று கூறி பிஜேபி கூட்டணியில் இருந்து
சென்ற நிதிஷ்குமார் இப்பொழுது 2019 லிலும்மோடியே பிரதமர் என்று கூறிக்கொ ண்டு பிஜேபி கூட்டணிக்கு வருவாரா?

ஆக 2019 தேர்தலில் மோடியை எதிர்க்க காங் கிரஸ் முன்னிறுத்த நினைத்த நிதிஷ்குமார் இப் பொழுது பிஜேபி முகாமில் ஐக்கியமாக விட்டார்.நவீன் பட்நாயக் சைலன்டாகி விட் டார்.நேற்று வரை மோடியை எதிர்ப்பதே
என் வாழ் நாள் லட்சியம் என்று சொல்லி
வந்த மம்தா பானர்ஜி இன்று மோடி நல்லவர்
தான் இந்த அமித்ஷா தான் சரியில்லை என்று கூறிவிட்டார்.

இது தாங்க அரசியல் ராஜதந்திரம் . தேர்த லுக்குமுன்பாகவே பீகாரில் மெகா கூட்டணி யின் முன்பிஜேபி தேறாது என்று உணர்ந்து அந்த கூட்ட ணியை உடைக்க ஈகோவை ஓரங் கட்டி விட்டுநிதிஷை பிஜேபி இழுக்கிறது பாருங்கள் அது தான் ராஜ தந்திரம்.
.
மாறாக காங்கிரஸ் கட்சியோ காங்கிரசில் இருந்து பிரிந்து போன ஜெகன் மோகன் ரெ ட்டியையே இன்னும் தன் பக்கம் கொண்டு வர
முடியாமல் ஆந்திராவில் தள்ளாட்டத்தில் இருக்கிறது

ஆந்திரா மாதிரி காங்கிரசுக்கு எம்பிக்களை அள்ளிக்கொடுத்த  மாநிலம் வேறெதுவும்
இருக்காது. ஆனால் அங்கே காங்கிரஸ்க்கு
இப்பொழுது முட்டை தான் கிடைக்கும். ஆந்தி
ராவில் காங்கிரஸ் உயிர் பெறாமல் ஆட்சி யைபற்றி கனவு கூட காண முடியாது.

இந்தியாவின் வடக்கு மேற்கு மாநிலங்களில் எஎப்பொழுதும் காங்கிரசை  விட. பிஜேபியே ஸ்ட்ராங்.கிழக்கு மற்றும் தெற்கில் பிஜேபி யை விட  ஸ்ட்ராங்காக இருந்த காங்கிரஸ் மோடி ஆட்சி க்கு வந்த பிறகு கிழக்கு தெற் கிலும் பிஜே பியி டம் மண்ணை கவ்வி விட் டது

மோடியோட ஸ்பெசாலிட்டி என்னவென்றால் அவரை எதிர்த்து  வீசப்படும் ஆயுதங்களே
அவரின் இருக்கைக்கு பலம் சேர்த்து அவரை
உயரத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.
அதனால் டீமானிட்டீசேசன் ஜிஎஸ்டி போன்ற
மக்களின் குறைகள் எல்லாம் நிறைகளாகி
அவரின் இருக்கைக்கு வலு சேர்க்கும் என் பதை வருங்காலம் சொல்லும்.

வழக்கமா ஆளும் கட்சியை வீழ்த்த எதிர்க்கட் சிகள் ஒன்று சேர்வது வழக்கம் ஆனால் மோ டியைஆதரித்து எதிர்கட்சிகள் ஒன்று சேர ஆரம்பித்துவிட்டதில் இருந்து வரும் தேர்த லில் மோடியோடுமோதப்போவது  யாரு என் பதே கேள்வியாகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக