புதன், 9 ஆகஸ்ட், 2017

MATHI NEWS மதி செய்திகள்@10/8/17

 MATHI NEWS  காலை செய்திகள்@10/8/17

இந்தியா உட்பட 80 நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று கத்தார் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டில்லியில் பயங்கரவாதி கைது

5 ஆண்டுகளில் ஊழலை அடியோடு ஒழிப்போம் பாராளுமன்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார்.

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக் காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

இந்திய ராணுவம், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகவும், 1962-ம் ஆண்டு போரிலிருந்து பாதுகாப்புப்படையினர் பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பதாகவும், மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் வாகன பதிவிற்கு இனி ஆதார் கட்டாயம்

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் அகல் தஹாத் விரைவு ரெயிலின் கழிவறையில் சக்தி குறைந்த வெடிகுண்டானது கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் : லாலு கட்சி கவுன்சிலர் சுட்டுக்கொலை

பாராளுமன்றத்தில் தம்பிதுரை தமிழில் பேசியதற்கு இந்தி மொழி பேசும் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் அமளி நிலவியது.

கமுதி அருகே மணல் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற தனிப்படை காவலருக்கு அரிவாள் வெட்டு.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 12 தமிழக மீனவர்கள் கைது3 விசைப்படகுகளுடன் மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்கடந்த 3 தினங்களில் 61 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரிடம் பேச தயார்: இலங்கை வடமாகாண முதல்வர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்டில் மின்சாரம் தாக்கி தேசிய அளவிலான மல்யுத்த வீரர் விஷால் வெர்மா உயிரிழந்துள்ளார். ஜார்க்கண்டில் உள்ள ஜெய்ப்பால் விளையாட்டு அரங்கில் மின்சாரம் தாக்கி வெர்மா உயிரிழந்துள்ளார்

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் பற்றி நடைபெறும் விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வருகைக்காக காத்திருப்பேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு, கார் கவிழ்ந்து 2 பேர் பலி; 10 பேர் படுகாயம்

முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது : சரத்குமார்

ராமேஸ்வரம்: 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

குழப்பத்தையும், சூழ்ச்சியையும் தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வகையில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற இயக்கத்தை துவக்கியுள்ளதாக, திரிணமுல் காங்.,கை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கிய ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய்பட் சிங்கானியாமகன் கௌதம் சிங்கானியாவால் துரத்தப்பட்டதால் பண வசதியின்றி தவிப்புமுதுமை காரணமாக தனது பங்குகளை மகனுக்கே கொடுத்திருந்தார் விஜய்பட் சிங்கானியா

இலங்கையில் உள்ள பலப்பிட்டிய மருத்துவமனையில் ஒரு பெண்ணிக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை சுமார் 5 கிலோ 980 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சாதாரணமாக பிறக்கும் குழந்தையின் எடை 3.5 கி என்பது குறிப்பிடத்தக்கது

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ரிக்டர் 4.9 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கைகள் எதும் விடப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன

அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

புனேயில், டி.என்.பி.எல். கிரிக்கெட் பற்றிய சூதாட்டத்தில் ஈடுபட்ட தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.35 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

10/08/17 சிறப்புசெய்திகள்!

பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, தரவரிசை பட்டியல், இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில், நம்பர் 1 பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டராக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா இரண்டு பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

புதிதாக வெளியிடப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுள்ளதாக மத்திய அரசு, மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடனான எல்லையில், 24 மணி நேரமும் செயல்படக் கூடிய, 'விர்சுவல்" எனப்படும், லேசர் மூலமான மாய வேலியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, என, லோக்சபாவில், உள்துறை இணையமைச்சர், கிரண் ரிஜுஜு நேற்று  தெரிவித்தார்.

காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலங்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம்  நள்ளிரவு வரை நீடித்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் நேற்று  வெற்றி பெற்றார்.

சென்னைக்கான அமெரிக்கத் துணைத் தூதராக ராபர்ட் பரஜெஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை அவர் பொறுப்பேற்றார்.

தொழில்நுட்ப கல்வித்துறையால், ஜூனில் நடத்தப்பட்ட கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, நேற்று (ஆக.,9) வெளியானது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டையொட்டி நாடாளுமன்றத்தில் கூட்டுக்கூட்டம் நேற்று  நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்திய பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் நிறுவனங்கள், கிடங்குகள் நேற்று  ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொகுசு கார்களுக்கான செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதி பா.ஜ.க எம்.பியும் முன்னாள் மத்திய மத்திய மந்திரியுமான சன்வர் லால் ஜாட் (62) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

வாடிக்கையாளர்களின், 'லாக்கர்" பாதுகாப்பில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என, அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் நடக்கவுள்ள, ஜி.இ.எஸ்., எனப்படும், சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மகள், இவாங்கா டிரம்ப், சம்மதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அவகாசம் கேட்டதால் 'நீட்" தேர்வு வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரனை!.

மதிய செய்திகள்@10/8/17

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

பேரறிவாளன் விடுதலை வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14க்கு டெல்லி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளவுப்பட்டு பல அணிகளாக செயல்படும் அதிமுக, விரைவில் பாஜகவுடன் இணையும் என சிவசேனா எம்பி, மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பேசினார்.

இஸ்லாமியர்கள் ஒருவித அச்சத்துடன் வாழும் சூழ்நிலை இந்தியாவில் உருவாகியுள்ளது என துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி தெரித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், தினகரனுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என தீர்மானம் நிறைவேற்றபட்டு உள்ளது.

முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா நியமித்த தினகரன் நியமனம் செல்லாது என்றால், மேலும் சசிகலாவின் நியமனமான அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் பதவிகள் செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிமுகவிலிருந்து சசிகலாவும், தினகரனும் நீக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டி.டி.வி தினகரனால் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது - என எடப்பாடி பழனிசாமி அணி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தீர்மானத்தில் ஜெயலலிதாவால் நியமிக்கபட்ட கழக நிர்வாகிகள் கையெழுத்திட்டு உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.எடப்பாடி கொண்டு வந்துள்ள தீர்மானத்தில், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.இந்த தீர்மானத்திற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி அணி தீர்மானத்தை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது

அதிமுக அணிகள் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது: ஜெயக்குமார்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: தங்கதமிழ்செல்வன்

தினகரன் எதிர்ப்பு திட்டமிட்ட நாடகம்: புகழேந்தி

பழனிசாமி எந்த தீர்மானம் போட்டாலும் செல்லாது: வெற்றிவேல்

முதல்வர் பழனிசாமி தவறான முடிவு எடுத்து விட்டார்: புகழேந்தி

டில்லியை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கை: நாஞ்சில் சம்பத் கண்டனம்

தவறான பாதையில் ஈபிஎஸ் அணி; வெற்றிவேல்

புதுச்சேரியின் தொழிலதிபர்களில் ஒருவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான தயாளன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நகலை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரி ம.தி.முக. மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்

நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

எடப்பாடி தலைமையிலான நிர்வாகிகளுக்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை : எம்எல்ஏ வெற்றிவேல் கருத்து

காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைப்பு : கர்நாடக முதல்வர் சித்தராமையா.

நதிகள் இணையலாம், அதிமுக அணிகள் இணைப்பு என்பது நடக்காது அணிகள் இணைப்பு என்பது ஒரு ஏமாற்று வேலை : டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.

முரசொலி பவள விழா முடிந்த பின்னர் நாளை மறுநாள் லண்டன் செல்கிறார் முக.ஸ்டாலின்.

பான் கார்டைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க மத்திய அரசு முடிவு.

நீட் தேர்வில் மாறுபட்ட கேள்வி தாளை சிபிஎஸ்இ வழங்கியது ஏன் ? : உச்சநீதிமன்றம்.

மாறுபட்ட கேள்வி தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல : உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் சாலையோர பள்ளத்தில் 2 கார்கள் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு.

புதுச்சேரியில் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில் நிதி வீணடிக்கப்படுகிறது : கிரண்பேடி.

திருப்பூர் : அவிநாசியில் பராமரிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதிகள் விஷமருந்தி தற்கொலை.

சென்னை விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளை புகைப்படம் எடுத்த பயணியிடம் போலீசார் விசாரணை.

டோக்லாம் தங்களுக்கு சொந்தமானது என்ற சீனாவின் கருத்தை பூடான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்,மீது நடவடிக்கை எடுக்க மும்பையை சேர்ந்த 1000 மதகுருக்கள் ஐநாவுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 'ஆவா' எனும் பாதாள உலகக்குழுவை சேர்ந்த தலைவி நிஷா விக்டர் கைதுஅவருடன் சேர்ந்து ஆறு பேரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்து யாழ் சிறையில் அடைத்தனர்கைதானவர்களை 3 நாள் தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க யாழ் நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவின் பென்சில்வெனியா மாகாணத்தில் தாய் வைத்திருந்த துப்பாகியால் சொந்த தம்பியை 10 வயது சிறுவன் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விரைவில் பங்கு சந்தையில் இருந்து பங்குகளை வாங்க மற்றும் விற்க ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்படும். இதற்கான பணிகளில் மத்திய அரசும், இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியும் செய்து வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இணைப்பினால் கருப்புப் பணம் பங்கு சந்தையில் புழங்குவதைக் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

🛑இன்றைய🛑பரபரப்பு🛑செய்திகள் 10/08/17 !

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை : தேர்தல் ஆணையம்.

விகே.சசிகலா தலைமையிலான அதிமுகவை தான் மக்கள் ஏற்று கொள்வார்கள். அதிமுக என்பது ஒரு அணி தான் மூன்று அணிகள் இல்லை-  சுப்பிரமணிய சுவாமி.

இன்று வெளியான அறிக்கை மூலமாக நாங்கள் வைத்த கோரிக்கைகளில் பாதி வந்து விட்டார்கள், மீதி வரட்டும் பின்னர் இணைப்பு குறித்து பேசுலாம் - ஓபிஎஸ்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டுமென்றே தொண்டர்கள் நினைக்கிறார்கள்- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் முரசொலி நாளிதழின் பவள விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு முறையான இருக்கை வசதி மற்றும் பத்திரிகையாளரை அனுமதிக்காமல் அலைக்கழிப்பு.

செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசிய சேகர்பாபு எம்எல்ஏ.தொடர்ச்சியாக திமுக நிகழ்ச்சிகளில் பத்திரிக்கையாளர்களை அவமானப் படுத்தும் அவலம்.

துரோகத்தின்  உச்சகட்டத்திற்கு சென்று இருக்கிறார் எடப்படாடி நாங்களும் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.ஆளுநர் அவசரமாக தமிழகம் வர வேண்டியது இருந்தாலும் இருக்கலாம் - டிடிவி ஆதரவாளர் புகழேந்தி.

கருத்து சுதந்திரத்திற்கும், எழுத்து சுதந்திரத்திற்கும் தரும் மரியாதையே முரசொலி பவள விழாவின் சிறப்பு : இந்து குழும தலைவர்.

அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம் கூடிய விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் : ஒபிஎஸ்.

குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

செப்டம்பர் 1ம் தேதி முதல் பி.இ. படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என உயர் கல்வித்துறை அறிவிப்பு.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முரசொலி செல்வம், இந்து ராம், தினமலர் ரமேஷ், விகடன் சீனிவாசன், தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, உள்ளிட்டோரும் முரசொலி விழாவில் பேசுகின்றனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.

முரசொலி பவள விழா மேடையில் ஏறாமல் பார்வையாளராக கிழே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
தினகரனின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகள் 75பேருக்கு அதிகாரமில்லை : எம்எல்ஏ வெற்றிவேல்.

தேர்தல் ஆணையத்தின் தலைவராக எப்போது எடப்பாடி பழனிசாமி ஆனார் என தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் முதலமைச்சர் பதவியை இழக்க நேரிடும் - டிடிவி தினகரன்.

சசிகலா கூறியதால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. தேவைப்பட்டால் கட்சியை அறுவை சிகிச்சை செய்யப்படும். கட்சி விரோத நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் : டிடிவி தினகரன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மடியில் கனம் இருப்பதால் பயம் இருக்கிறது.சசிகலா நியமித்த திண்டுக்கல் சீனிவாசனை ஏற்பவர்கள், என்னை ஏற்க மறுப்பதேன் ? : டிடிவி தினகரன்.

மடியில் கனம் இருப்பதால் அமைச்சர்கள் சிலர் என்னை விலக்க திட்டமிடுகின்றனர். பதவியில் இருக்கிற வரையில் சுருட்டிக் கொண்டு செல்வதில் தீர்க்கமாக இருக்கிறார்கள் : டிடிவி தினகரன்.

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் வரும் 16ஆம் தேதி சாட்சி விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராக உத்தரவு.

டெல்லியை திருப்திபடுத்தவே ஈபிஎஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளது : நாஞ்சில் சம்பத்.

எல்லோரையும் ஒன்றிணைப்பதற்கு ஈபிஎஸ் அணி தீர்மானம் உதவி செய்யும் : அன்வர் ராஜா.

ஊழல் புகாரில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ரவி கருணநாயகே ராஜினாமா.

சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் - ஓ.பி.எஸ்.ஆதரவாளர் கே.பி.முனுசாமி.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போதுதான் விழித்துள்ளது : ஓபிஎஸ் அணி.

ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது யூகமே : கே.பி.முனுசாமி.

டெல்லியில் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை, சசிகலா, டிடிவியை கட்சியிலிருந்து நீக்கினால் பேச்சு என கூறியிருந்தோம் : ஓபிஎஸ் அணி.

இலங்கை கடற்படையால் கைதான 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்.

பா.ஜ.கவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமாருக்கு எதிராக லாலு பிரசாத் மகன் யாத்திரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக