வியாழன், 31 ஆகஸ்ட், 2017

Mathi News இன்றைய பரபரப்பு செய்திகள் 31/08/17 !

Mathi News இன்றைய பரபரப்பு  செய்திகள் 31/08/17 !

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

வங்கி , கேஸ் மானியம் , பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 76பேர் விடுவிடுப்பு இந்திய துணை தூதரக அதிகாரி நடராஜனிடம் மீனவர்கள் ஒப்படைப்பு.

திமுக ஒருபோதும் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்காது.ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவே விருப்பம் - சேலம் திருமண விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேச்சு.

பெனாசீர் புட்டோ கொலை வழக்கு : முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு 2 காவல் அதிகாரிகளுக்கு 17 ஆண்டுகள் சிறை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றம்.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சாட்சிகளை விசாரிக்க டிடிவி.தினகரன் தரப்புக்கு செப்.11 வரை காலஅவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு.

சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசியது குறுந்தகடுகளாக வெளியீடு  தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சகோதர யுத்தத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் - அமைச்சர் உதயகுமார்.

கமல்ஹாசன் ட்விட்டரை நம்பி ஆட்சி நடத்துகிறார். தமிழக மக்கள் நலனுக்காகவே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5.7% ஆக சரிவு : மத்திய அரசு.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக சட்சமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு.
சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

ஆட்சிக்கு எதிராக 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கும் நிலைமை வரும்.தமிழக மக்களின் நன்மைக்காக திமுக சிந்தித்து நல்ல முடிவை எடுக்கும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் கடம்பூர் ராஜு நீக்கம் - டிடிவி தினகரன்.

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கும் பா.ஜ.க வின் அழுத்தத்திற்கும் அதிமுக இரையாகி விடக்கூடாது.அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் - தனியரசு எம்எல்ஏ.

டிடிவி.தினகரன் இல்லத்துக்கு விஜிலா சத்தியானந்த் எம்பி நாஞ்சில் சம்பத்  வெற்றிவேல் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நாளை நேரில் சந்திக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

புளூவேல் விபரீதம் : பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழியுங்கள் காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் அறிவுரை.

புளூவேல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வுக்கு சிறப்பு செல் அமைக்கப்படும் : மதுரை ஆட்சியர் தகவல்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள புரியாத புதிர் திரைப்படத்தை வெளியிட தடை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

பாஜக தலைவர் அமித்ஷாவுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு மேற்கொண்டார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒருமணி நேரமாக அமித்ஷாவுடன் தம்பிதுரை ஆலோசனை நடத்தினார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடக்கிறது - தமிழக அரசு விளக்கம்.

ஹைதராபாத்தில் காரை மெதுவாக ஓட்டுமாறு கூறிய முதியவரை சட்டை காலரை பிடித்து இழுத்து அடித்ததாக கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மீது புகார் எழுந்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி39 ராக்கெட்.

அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2ம் இடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் விருதைப் பெறவே டெல்லி வந்தேன், அரசியலுக்காக அல்ல எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறைக்கு, நிலுவைத் தொகை ரூ.2,542 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கோரிக்கை வைத்தேன் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.

பீகார் : கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பீகார் மக்களுக்கு நடிகர் அமிர்கான் ரூ.25 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார் நடிகர் அமிர்கான்.

நாகையில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவையொட்டி செப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறை.

நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஃபெப்சி தொழிலாளர்கள் அறிவிப்பு.

இலங்கைக்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் : 50 ஓவர் முடிவில் 375 ரன் குவித்தது இந்திய அணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக