வியாழன், 3 ஆகஸ்ட், 2017

*பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் புஜாரா உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜூனா விருது*

*பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் புஜாரா உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜூனா விருது*


*பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.* *அவருடன் சேர்த்து மொத்தம் 17 பேர் அர்ஜூனா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.*
கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
இந்த பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் பாட்டி வெண்கலம் வென்றார்.
தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும்.
தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துதந்த மாரியப்பன் தங்கவேலுக்கு தற்போது அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரியப்பனுடன் சேர்ந்து வருண் பாட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, வீராங்கணை ஹர்பிரின்த் கவுர், கோல்பர் சாவ்ராசிய என மொத்தம் 17 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த மாரியப்பன் தங்கவேல்:
இவர் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார்.
விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.
மாரியப்பனின் சாதனைகளை கவுரவிக்கு வகையில் மத்திய அரசுக்கு மாரியப்பன்னுக்கு அர்ஜூனா விருது அறிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது
முன்னாள் ஹாக்கி  வீரரும், கேப்டனுமான சர்தார் சிங், ஈட்டி எரியும் வீரர் தேவேந்திர ஜாஜாரியா ஆகிய்ோர் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக