ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

MATHI NEWS முக்கிய செய்திகள்@28/7/17



MATHI NEWS முக்கிய செய்திகள்@28/7/17

புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் உழையுங்கள்: அதிகாரிகளுடனான ஆலோசனையில் மோடி பேச்சு

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குர்மீத் ராம் ரகீம்சிங் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு துணை ராணுவ படையினர் குவிப்பு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து பிரதமர் மோடி ஜனாதிபதி வாழ்த்து:இந்திய பாட்மிண்டன் சங்கம் சிந்துவிற்கு 10 லட்சம் பரிசு

டிடிவி தினகரனும் எம்.எல்.ஏ போஸும் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது போஸ் தன் ஆதரவை தினகரனுக்கு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் என் ஆதரவு முதல்வருக்குதான் என்று ஏ.கே.போஸ் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சி தானாக கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல: ஸ்டாலின்

ஆதரவு குறித்து ஓரிரு நாளில் தெரிவிப்போம்: எம்.எல்.ஏ.கருணாஸ்

ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தோன்றுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்

பா.ஜ.க.வில் கடைசி தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன்: நயினார் நாகேந்திரன்

அரசை கலைத்து விட்டு ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் :  அதிமுக இணைப்பில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை: தமிழிசை

பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவுக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தினார் லாலுபிரசாத் யாதவ். அதன் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த போட்டோவுக்கு பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட போட்டோவுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.

லக்னோவில் பிணவறையில் இறந்த பெண்ணின் உடலை தெருநாய்கள் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் எடியூரப்பா கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது:கர்நாடக முதல்வர் சீதராமையா

மோடியின் 'மன் கி பாத்' வெறும் பேச்சு மட்டுமே: காங்கிரஸ் விமர்சனம்

மும்பையில் சட்டவிரோதமாக 36 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் தம்பதி கைது

ஸ்பெயின் தீவிரவாதத் தாக்குதல் பலி 16 ஆக உயர்வு

தான்சானியாவில் 3,20,000 அகதிகளுக்கு உணவளிக்க ஐ.நா. அழைப்பு

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.


இன்றைய 1 வரிச்செய்திகள்!

28/08/17 திங்கள்கிழமை!

இலங்கையுடனான
3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, தோனி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா போட்டியை வென்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

*மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடிய துணிச்சலான போலீஸ்காரருக்கு முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.*

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நிதி ஆயோக் ஆதரவு தெரிவித்து உள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டு பழங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை அதிகரிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய அமைச்சர் தலைமையிலான குழு, கோயம்பேடு பழச்சந்தையை நேற்று பார்வையிட்டு, பழ வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் மனோஜ்குமார், கவிந்தர் பிஸ்ட் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் - லக்னோ எக்ஸ்பிரஸ் நாளை இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா துபாய் சென்றுள்ளார். அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. டீசலின் விலையும் லிட்டருக்கு ரூ.3.67 அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கைகளை, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.

*உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (64) இன்று பதவியேற்று கொண்டார்.*

தொடர்ந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை, வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.

தமிழகத்தில், 2015க்கு பின் அனுமதி பெற்று, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் பதிவு செய்யாத, 300க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கி உள்ளது.

மத்திய அரசின் சிறு, குறு நிறுவனங்கள் துறையின் புதிய திட்டத்தை பயன்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில், திருப்பூர் பின்னலாடை துறையினர் இறங்கி உள்ளனர்.

தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகள் விநியாகம் செய்யப்பட இருக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இணையதளம் மூலம் ஊடுருவி ஆதார் தகவல்களைத் திருட முடியாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த, ஆதித்யா ஜாவர், 21, மிகவும் இளம் வயதில், சி.ஏ., உட்பட பல தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

💎 பெட்ரோல் ஒரு
லிட்டர் விலை - ரூ.71.60

💎 டீசல் ஒரு
லிட்டர் விலை - ரூ.60.03

💎 தங்கம் 1
கிராம் - ரூ.2,774.00

💎 வெள்ளி 1
கிராம் - ரூ.42.05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக