ஜியோ-வில் அதிவேக 4ஜி: டிராய் அறிக்கை
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் வேகமான நெட்வொர்க் வரிசையில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ சேவையின் தரவிறக்க சராசரி வேகம் விநாடிக்கு 18 மெகாபைட்டாக (எம்பிபிஎஸ்) உள்ளது.
டிராய் சோதனைகளின்படி, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தரவிறக்க சராசரி வேகம் மிகக் குறைவாக 8.91எம்பிபிஎஸ் ஆக உளளது .
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தரவிறக்க வேகம் மிக அதிகமாக இருப்பதாக தனியார் நிறுவனத்தின் அளவீட்டின் அடிப்படையில் ஏர்டெல் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இண்டர்நெட் வேகம் ஜூன் மாத தொடக்கத்தில் 19.12 எம்பிபிஎஸ் ஆக இருந்துள்ளது.
ஜீன் மாத இறுதியில் 18.65 எம்பிபிஎஸ்-ஆக குறைந்துள்ளது.
முக்கியமாக ஜியோ சேவையின் தரவிறக்க வேகம் அதற்கடுத்து உள்ள வோடபோன் நிறுவனத்தை விட 68 சதவீதம் அதிகம் என்றும் கூறியுள்ளது.
கடந்த 7 மாதங்களாக ஜியோ அதிக வேகம் கொண்ட சேவையாக உள்ளது.
தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தனது
’மை ஸ்பீட்’
மென்பொருள் மூலம் , நிறுவனங்களின் தரவிறக்க வேகம் உள்ளிட்ட நிகழ்நேர தகவல்களை சேகரிக்கிறது.
இந்த
தகவல்கள்படி வோடபோன் நிறுவனத்தின் ஜூன் மாத தரவிறக்க வேகம் 11.07 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐடியா செல்லுலார் 9.46 எம்பிபிஎஸ் ,
ஏர்டெல் 8.91 எம்பிபிஎஸ் என ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளன.
இதர சேவை நிறுவனங்களி 4ஜி வேகம் வெளியிடப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக