MATHI NEWS 7am -3-8-2017-tuesday
♈ 🇮🇳 மாநிலங்களவையில் மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா வெளியிட்டு உள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது என தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு சுமார் 47.22 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளனர். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த மொத்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் 19.1 சதவிதம் வெளிநாட்டு பயணிகள் தமிழ் நாட்டில் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
♈ 🇮🇳 இந்தியாவில், தாய்ப்பால் அளிக்கப்படாததால், ஆண்டுதோறும், ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக, ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு போதிய தாய்ப்பால் அளிக்காமையால்,ஆண்டுதோறும், சீனா, இந்தியா, நைஜீரியா, மெக்சிகோ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், 2.36 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில், இந்தியாவைச் சேர்ந்த, ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. இந்தியாவில், தாய்ப்பால் புகட்டாமல் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதால், இந்திய பொருளாதாரம் பெரியளவில் பொருள் இழப்பை சந்தித்து வருகிறது
♈ 🇮🇳 வடக்கு டில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள தெருக்களை தேர்ந்தெடுத்து, 'அபராத வாகன நிறுத்துமிடங்கள்' அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பகுதிகளில், 200 அடி அகலமுள்ள சாலைகள்,அபராத வாகன நிறுத்துமிடமாக அறிவிக்கப்படும். இந்த இடங்களில் வாகனம் நிறுத்துவோர் சாதாரண கட்டணத்தை விட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.இங்கு, ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் வாகனங்களை நிறுத்தலாம். அதற்கு தகுந்தபடி அபராதம் செலுத்துவது போல்,கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 - 500;ஆட்டோவுக்கு ரூ.300 -- 1,500; கார்களுக்கு ரூ.100 - 2,500; பஸ், வேன்களுக்கு ரூ.400 - 2,500 ரூபாய் அபராத கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக, கமலா நகரில் ஆறு சாலைகள், மாடல் டவுன் - 2ல், நான்கு சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்
♈ 🇮🇳 ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்முவில், 10ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. தேர்வில், மூன்று மாணவர்களுக்கு பதில், வேறு மூன்று பேர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று பேரையும், போலீசார் கைது செய்தனர்
♈ 🇮🇳 வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு எண்ணுடன்,ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்தது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், ஆதார் - பான் எண்களை இணைக்க, நேற்று, கவுன்டரில், கூட்டம் குவிந்தது. எனினும்,ஒரே நேரத்தில், பலரும் வருமான வரித்துறை இணையதளத்தில் நுழைந்ததால், 'சர்வர்' பல மணி நேரம் செயல் இழந்தது.இதனால், வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.ஆதார் - பான் இணைப்பதில்,பலருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னை,வருமான வரி தலைமை அலுவல கத்தில், 'பயோ மெட்ரிக்' கருவி வைக்கப்பட்டுள்ளது.இணையதளத்தில், ஆதார் - பான் அட்டைகளை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், 'பயோ மெட்ரிக்' கருவியை பயன்படுத்தலாம். இதில், கைவிரலை பதித்தால், அது, ஆதார் அட்டையின் போது, பதித்த ரேகையுடன் ஒப்பிட்டு, உடனே, இரு எண்களையும் இணைத்து விடுகிறது. அதனால், இங்கும் அதிக கூட்டம் குவிகிறது.
♈ 🇮🇳 திருநெல்வேலி : கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரோ அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லாரியை விடுவித்தனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆண்டார்குளத்தில் தனியார் நிலத்தில் நேற்றுகேரளத்தில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்டிவிட்டு தப்ப முயன்றனர்.
♈ 🇮🇳 நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்தவர் அருணன். இவர், சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என் தந்தை, தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2003ம் ஆண்டு அவர் பணியில் இருந்த போதே இறந்துவிட்டார். இதையடுத்து தபால் துறையினரிடம் வேலை கேட்டு நான் மனு கொடுத்தேன். ஆனால் தபால் துறை அதிகாரிகள் முறைப்படி பரிசீலிக்காமல் நிராகரித்து விட்டனர். எனவே, எனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதிபதி மனுதாரருக்கு கருணை வேலை வழங்குவது குறித்து 3 மாதத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் விவகாரத்தில் தபால் துறையின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் தமிழக தபால் துறை தலைவர், தூத்துக்குடி தபால் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 5ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
♈ 🇮🇳 காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோதண்டனின் மகள் சாந்தி (16)அதே, கிராமத்தை சேர்ந்தவர் ராமு (51). இவரது மகன் பிரேம்குமார் (20) இவரது உறவினர் சரவணன் (27)கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சாந்தி செங்கல்பட்டில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது, பிரேம்குமார் சாந்தியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பிரேம்குமாரின் தந்தை ராமு,உறவினர் சரவணன் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், எஸ்.ஐ தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார், ராமு, சரவணனை கைது செய்தனர்.
♈ 🇮🇳 சென்னை நந்தனம் சிஐடியு காலனியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சித்தார்த் 2 வயது என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் மாலை சித்தார்த் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது சமையல் அறையில் குடிநீர் கேனில் மண்ணெண்ணெய் இருந்ததாக கூறப்படுகிறது. இதை குடிநீர் என நினைத்து சித்தார்த் எடுத்து குடித்துள்ளான். சிறிது நேரத்தில் சிறுவன் எரிச்சல் தாங்க முடியாமல் துடித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது தாய் உடனே சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தற்போது சித்தார்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
♈ 🇮🇳 விழுப்புரம் அரசு குடோனில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான இலவச தொலைக்காட்சி பெட்டிகள் 1100 வெடித்து சிதறின. தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்
♈ 🇮🇳 மைத்ரேயன் எம்.பி. செய்தியார்களிடம் கூறியதாவது:பன்னீர்செல்வம் தலைமையில் சேரவரும் அனைவரையும் வரவேற்கிறேன். அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, விரும்புவோர் பன்னீர்செல்வம் அணியில் சேரலாம். பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு ஊழல் அரசு, எனவே ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இவ்வாறு கூறினார்
♈ 🇮 போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவினர் என கூறிக் கொள்ளும் சிலர் மிரட்டல் விடுப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு புகார் கூறியுள்ளார்-விஸ்வரூபம் ♈ 🇮 சாத்தனூர் அணை எஸ்.ஐ.யை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல்* சாத்தனூர் அணை எஸ்.ஐ.யை கண்டித்து சொற்பனந்தால் கிராமத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈமச்சடங்குக்கு வாகனங்களில் சென்றபோது ரூ.2,000 லஞ்சம் வாங்கியதாக எஸ்.ஐ. மீது குற்றம் சாட்டியுள்ளனர். ஈமச்சடங்கு முடித்து விட்டு திருப்பும்போதும் லஞ்சம் கேட்டதாக எஸ்.ஐ. வெள்ளையத்தேவன் மீது புகார் தெரிவித்துள்ளனர்
♈ 🇮 சிங்கப்பூரின் மேல் புகித் சாலைப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கத்திமுனையில் கொள்ளையடித்த இந்தியர் கைது♈ 🇮 சென்னை வியாசர்பாடி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர் பொன்னுசாமி, வ/45, என்பவர் நேற்று (31.7.17) இரவு 2nd shift (6 to 10)பணி முடித்துவிட்டு கொளத்தூர் விநாயகபுரத்திலுள்ள வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இரவு 11.00 மணியளவில் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலை,S.R.P. Colony, சண்முகா மகால் அருகே சென்று கொண்டிருந்த போது, எதரே வேகமாக வந்த மாநகர பேருந்து பொன்னுசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் தலைமை காவலர் பொன்னுசாமிக்கு தலையில் பயங்கர அடிபட்டு, அதிக ரத்தம் வெளியேறி மயக்கமடைந்தார். பின்னர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் (தீவிர சிகிச்சை பிரிவு, வார்டு எண்.201) சேர்க்கப்பட்ட பொன்னுசாமி நள்ளரவு முதல் இன்று மதியம் வரை எந்தவித முன்னேற்றமின்றி மயக்கநிலையிலேயே உள்ளதாகவும், மேற்படி மருத்துவமனையில் சரிவர மருத்துவம் அளிக்கப்படவில்லை, அவரது மனைவி மற்றும் உறவினர்க்கும் சரியான வெளியுலக பக்குவம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. சொன்னதுபோல அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பார்க்கும்போது நிஜமாகவே பாவமாக உள்ளது. இப்படியே சென்றால் நிலைமை மோசமாகும் என்பதால் ஒரு குடும்ப தலைவனை காப்பாற்றி, அப்பாவி பெண் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க, இரக்க குணம் கொண்ட காவல்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு, தனியார் மருத்துவமனையில் அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை பெறுதற்கும், பொது சேம நலநிதியிலிருந்து பணம் பெற்று தரவும் உதவ வேண்டும் என காவலர்கள் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது♈அமெரிக்காவில் சீன தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை–விஸ்வரூபம்♈ 🇮 தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது♈ 🇮 கிரிக்கெட்: இந்தியா-இலங்கை 2வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்♈ 🇮 சென்னை: நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டது♈ 🇮🇳 திருவள்ளூர்: 3 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்♈ 🇮 ஆக-03: பெட்ரோல் விலை ரூ. 68.02, டீசல் விலை ரூ.58.77♈ 🇮 பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி♈ 🇮 குமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்♈ கரூர் ராஜாஜி சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்♈ 🇮 மதுரை - நாகர்கோவில் இடையே இரட்டை மின் ரயில் பாதை ♈🇮🇳
காலை செய்திகள்@3/8/17
காஷ்மீர் துப்பாக்கிச் சண்டை : 2 பயங்கரவாதிகள் பலி; 3 ராணுவ வீரர்கள் காயம்
டோக்லாமில் படைகளை உடனே திரும்பப்பெற உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று இந்தியாவுக்கு, சீனா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் வருகை
நெய்வேலியில் 22 நாட்களாக நடந்து வந்த என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
நான் கட்சி அலுவலகத்துக்கு செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை-் டி.டி.வி.தினகரன்
ஆக-03: பெட்ரோல் விலை ரூ. 68.02, டீசல் விலை ரூ.58.77
கர்நாடக மந்திரியின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.10 கோடி சிக்கி உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.டெங்கு காய்ச்சல் காரணமாக இருவரும்,பன்றிக் காய்ச்சல் காரணமாக ஒருவரும் உயிரிழந்தனர்.
ஜெயக்குமார் விரைவில் அமைச்சர் பதவியை இழப்பார் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார்.
அதிமுகவின் இரண்டு அணிகளை இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் குவாரி பரிவர்த்தனைகள் நடைபெற்றது வருமான வரித்துறை மூலம் தெரியவந்துள்ளது.
விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ராமதாஸ் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
துணைவேந்தர் நியமனத்தில் மோசடி குற்றச்சாட்டு காரணமாக தமிழக கவர்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவள்ளூர்: 3 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்
சென்னை: நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டது
3 நாட்கள் சுற்றுப்பயணம் - பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா 22-ந் தேதி தமிழகம் வருகை
திருச்சி : மாயமான மாணவிகள் சடலமாக மீட்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து உயர்வு
ரூ.1,553 கோடி செலவில், திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது
மருத்துவ உபகரணங்களில், 2018 ஜன., 1 முதல், எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அச்சிடப்படும்,'' என, மத்திய ரசாயன மற்றும் வேளாண்மை துறை இணையமைச்சர், மன்சுக் எல்.மந்தவியா தெரிவித்து உள்ளார்.
புதுடில்லியில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில், 'அபராத' வாகன நிறுத்துமிடங்களை அமைக்க, டில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் கேரளா: பா.ஜ., எம்.பி., மீனாட்சி லேகி
இலங்கை வட மாகாணத்தில் இன்னும் 260 விடுதலைப் புலிகள் இருக்கின்றனர் என்று சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத விடுதலைப் புலி போராளிகள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது
தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்பவர்களை ஊக்குவிக்க, இதற்கான வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 500 கிராம் என்ற வரம்பை உயர்த்தி, ஒரு தனி நபர் 4 கிலோ வரை தங்கம் வாங்க அனுமதித்துள்ளது மத்திய அரசு. அறக்கட்டளையோ ஆண்டுக்கு 20 கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கிக் கொள்ளலாம்
அமெரிக்காவில் சீன தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை
சிங்கப்பூரின் மேல் புகித் சாலைப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கத்திமுனையில் கொள்ளையடித்த இந்தியர் கைது.
தடகள வீராங்கனை சித்ராவுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்குவதும், அவரது பயிற்சி மற்றும் உணவு செலவுக்குகாக தினசரி ரூ.500 வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட்: இந்தியா-இலங்கை 2வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்
இந்திய அணிக்காக நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தக்கூடியவர் ராகுல் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தெரிவித்தார்.
காலை செய்திகள் 03.08.17
*♈🌙இன்று தாயகம் திரும்புகின்றனர் மீனவர்கள்!*
இலங்கை சிறையில் இருந்து கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்ட 77 மீனவர்களை இன்று இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இன்று மாலை நாகபட்டினம் வந்து சேர்வார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
*♈🌙சிவாஜி சிலை அகற்றம்!*
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காரணத்தால் காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற முடிவு செய்தனர். அகற்றப்படும் சிலை, சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்படும் என கூறியது தமிழக அரசு. சிலையை அகற்ற தடை இல்லை என உயர்நீதி மன்றம் கூறியதையடுத்து, நேற்று இரவு காமராஜர் சாலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டது.
*♈🌙சிவகங்கை வட்டாசியர் திடீர் இடமாற்றம்*
சிவகங்கையின் வட்டாசியராக நாகநாதன் இருந்துவந்தார். அவரை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று வருவாய்த்துறை ஊழியர்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்திவந்தனர். அப்போது இடமாற்றம் செய்யப்படாத நாகநாதன், தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
*♈🌙ரமோன் மகசேசே விருது பெரும் தமிழச்சி!*
ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மகசேசே விருதுக்கு 82 வயதான தமிழாசிரியர் கெத்சீ சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விழா ஆகஸ்ட் 31 நடைபெற உள்ளது. இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட் விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர். அதற்காக அவருக்கு விருது வழங்கப்படுகிறது.
*♈🌙நிலத்துக்காக 10 ஆண்டுகளாக போராடும் விவசாயி*
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டைச் சேர்ந்த பக்கிரிசாமியிடமிருந்து, 10 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு வழங்குவதற்காக என்று கூறி நிலத்தை அரசு கையப்படுத்தியிருந்தது. விவசாயிகளுக்கு அந்த நிலம் வழங்கப்படாத நிலையில் பக்கிரிசாமிக்கு இன்னமும் அந்த நிலத்தை திரும்ப அளிக்கவில்லை.
*♈🌙நீங்க விர்ஜினா? பல மனைவிகள் இருக்கா?'*
பீகார் மருத்துவக் கல்லூரியில் வில்லங்கமாக கேட்கப்பட்ட கேள்விகள் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்தக் கல்லூரியில் பெண் ஊழியர்களுக்கு அவர்களது கன்னித்தன்மை பற்றிக் குறிப்பிடுமாறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. கணவர்களுக்கு எத்தனை மனைவிகள் என்றும் கேள்வி உள்ளது.
*♈🌙என்.எல்.சி போராட்டம் முடிவுக்கு வந்தது..!*
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து 22 நாள்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. ஒப்பந்த் தொழிலாளர்களின் 26 நாள்கள் வேலை என்பதை 19 நாள்களாக நிர்வாகம் குறைத்தது. இதனைக் கண்டித்து கடந்த மாதம் 12-ம் தேதியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
*♈🌙சித்த மருத்துவத்துக்கு மாணவர்கள் ஆர்வம்*
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் உள்ளது. இங்கு சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும் சிறப்புப் பிரிவினருக்கு 100 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
*♈🌙5,057 பேருக்கு இடம் ஒதுக்கீடு*
பொறியியல் படிப்புக்கான பதினொறாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 49,130 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பதினொறாவது நாள் கலந்தாய்வுக்கு 8,316 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 5,057 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 3,223 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை.
*♈🌙விவசாயி வெட்டிப் படுகொலை!*
திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தில் சக்திவேல் என்ற விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சாலையில் நின்றிருந்த சக்திவேலை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டது. இது பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*♈🌙தனுஷ்கோடி கடலில் இறந்த நிலையில் டால்பின*
ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரையில் முற்றிலும் சேதமடைந்து இறந்த நிலையில் ஆன் இன கூன்முதுகு ஓங்கி டால்பின் கரை ஒதுங்கியது. இது 80 கிலோ எடையும் 155 செ.மீ நீளமும், 52 செ.மீ அகலமும் கொண்டது. இவை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகம் வாழும் டால்பின் இனமாகும்.
*♈🌙பாழாகும் நினைவு இல்லம்..!*
கன்னியாகுமரி தலக்குளத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்த மாவீரன் வேலு தம்பி தளவாய் நினைவு இல்லம் அமைந்துள்ளது. பாரம்பரியமிக்க அத்தகைய நினைவு இல்லம் முறையாக பராமரிக்கப்படாததால் அதனுள் சமூக விரோதிகள் உட்புகுந்து மது அருந்தியும் மதுபாட்டில்களை உடைத்து வீசியும் செல்கின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.
*♈🌙கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்..!*
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், 'நெடுவாசல், கதிராமங்கலம் கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பெரும்பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால், மத்திய மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை எழுப்பினர்.
*♈🌙டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும்..!*
டெங்கு காய்ச்சல் குறித்து பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், 'கன்னியாகுமரியில் பரவும் டெங்கு காய்ச்சல் இந்த மாதம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். டெங்கு காய்ச்சல் பரவுதலையும், பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுக்கின்றன' என்றார்.
*♈🌙ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி*
காஞ்சிபுரம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் ஏரியில் 5 மாணவர்கள் குளிக்கச் சென்றிருந்தனர். அப்போது, 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் யூசப் மற்றும் அனிஷ்குமார் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் கூடுவாஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
*♈🌙கிணற்றில் விழுந்த டிராக்டர்*
தருமபுரி கடத்தூர் அருகே விவசாயக் கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து விழுந்தது. டிராக்டரில் சென்ற வள்ளி, சரோஜா, சரவணன் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து குறித்து கடத்தூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வள்ளி என்ற பெண், டிராக்டரை ஓட்ட முயன்றதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.
*♈🌙ஆதார் தகவல்களைப் பாதுகாக்கச் சட்டம்!*
ஆதார் எடுப்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கச் சட்டம் இயற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. ஆதார் எண்ணுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனிநபர் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து அரசு புது சட்டம் இயற்றும் முடிவுக்கு வந்துள்ளதாம்.
மாலை செய்திகள் (03.08.17)
தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகுமாறு வருமான வரித்துறை மீண்டும் நோட்டிஸ் அனுப்பியது. நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறார்
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பெப்ஸி வேலை நிறுத்தம் வாபஸ் 3 நாட்களாக நடைபெற்று வந்த ஃபெப்ஸி திரைப்பட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்: ரஜினியின் அறிவுரை, தயாரிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு: கிரிக்கெட் வீரர் புஜாரா, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டர் சர்தார் சிங் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜூனா விருது
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை.
சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈடுபட்டார்
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவிற்கு இடைக்காலத் தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: காங்கிரஸ் கட்சி சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு.
நீட் பிரச்னையில் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் அரசியல் செய்வதாக தமிழிசை விமர்சனம்: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட் கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம்.
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் திவ்யா பாரதி மீது புகார்: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது மதுரை காவல்துறை.
நீட் குளறுபடியால் பொறியியல் படிப்பில் காலியிடம் அதிகரிக்கும் என ராமதாஸ் எச்சரிக்கை: மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்.
திருவண்ணாமலை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி: சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சையளிக்க செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை.
கேரள வன்முறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்: பாஜக, இடதுசாரிக கட்சி உறுப்பினர்கள் மோதலால் மக்களவையில் சலசலப்பு.
டிடிவி தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்குவது போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாடகம்: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை.
எடப்பாடி மற்றும் டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது: ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான சண்முகநாதன் தூத்துக்குடியில் பேட்டி..
ஜெயலலிதா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார்: அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மீண்டும் உறுதி.
சென்னை அண்ணா சாலையில் கம்பம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 8 பேர் படுகாயம், போக்குவரத்து பாதிக்கபட்டதால் வாகன ஓட்டிகள் அவதி.
நீட் தேர்வில் இருந்து நடப்பு ஆண்டுக்காவது விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம்: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம்: தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் பக்கம் இருந்தாலும், மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர்: டி.டி.வி. தினகரன் கருத்துக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்.
தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் தெரிவிக்க தகுதியில்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என்று அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி. சேகர் ரெட்டியோடு கூட்டுச்சேர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் என்றும் ஓபிஎஸ் மீது புகார்
டோக்லாமில் இருந்து படைக்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி.
சீனா எல்லைப் பிரச்சனையில் மத்திய பாஜக அரசு மவுனம் சாதித்து வருவதாக காங்கிரஸ் கட்சி புகார்
அசாம் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டார்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவு கோரிக்கை: அனைத்து எம்.பி.க்களுக்கும் வெங்கையா நாயுடு கடிதம்.
மாலை செய்திகள்@3/8/17
சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் வீடுகள் மற்றும் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து அவர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்ப ஆஜராகி விளக்கமளித்தார். நேற்று அவரது சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.
இந்நிலையில், இன்று மாலை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய பாஸ்கருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
காஷ்மீரில் கொல்லப்படுவதற்கு முன்னதாக லஷ்கர் பயங்கரவாதி - பாதுகாப்பு படையினர் இடையிலான உரையாடல் விபரம் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அரசின் இணையதளம் ‘ஹேக்கிங்’ செய்யப்பட்டு இந்திய தேசியக் கீதம் வெளியிடப்பட்டு உள்ளது.
பிரணாப், தனக்கு தந்தை போல் இருந்து வழிகாட்டியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தலைமைச் செயலருடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை
இறைச்சிகாக மாடு விற்பனை: இடைக்கால தடை நீடிப்பு
புதிய அணைகளை ஏன் கட்டக்கூடாது: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
மதுரை-வாஞ்சிமணியாச்சி இரட்டை ரயில்பாதைக்கு ரூ. 1,872 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை - கன்னியாகுமரி 4 வழிசாலைக்கு ஒப்புதல்: பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக., அலுவலகத்திற்கு தினகரன் நிச்சயம் வருவார்; நாஞ்சில் சம்பத்
ராஜஸ்தானில் பாடப்புத்தகங்களில் வரலாறு மாற்றம் கல்வியாளர்கள் எதிர்ப்பு
அதிமுக அம்மா அணி டிடிவி தினகரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என நாஞ்சில் சம்பத் கூறிஉள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் ‘நோட்டா’ காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவரப்பட்டது என மத்திய சட்ட மந்திரி கூறிஉள்ளார்.
ஏ.சி. கேரவனுக்காக முறையற்ற வகையில் மின்சாரம் எடுத்ததன் அடிப்படையில் நடிகர் தனுஷ் மீது அபராதம் விதிக்கப்பட உள்ளதாக ஆண்டிப்பட்டி மின்சார வாரியத்தின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் கூறியுள்ளார்.
கேரளாவில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்த பெண், தாலி கட்டிய சில நிமிடங்களில் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதை கேக் வெட்டி கொண்டாடினார் மணமகன்
சண்டிகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஹர்ஷித் சர்மா என்ற மாணவன், கூகுளில் ரூ.1.44 கோடி ஊதியத்துடன் கிராபிக் டிசைனராக பணியில் சேர்ந்திருப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் இந்தியா வம்சாவளி டாக்டர் ஒருவர் மீது 118 பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏமனில் பத்து லட்சம் குழந்தைகள் பட்டினி மற்றும் காலரா நோயால் இறக்க போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஹரியானா மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் சட்ட விரோதமாக 134 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி சிறைத்துறை டிஜிபி மற்றும் கர்நாடக அரசு உயர் அதிகாரிகளுக்கு எழுதிய 2 கடிதங்களையும் உயர்மட்டக்குழுவிடம் ஒப்படைத்து விட்டேன்-முன்னாள் டிஐஜி ரூபா.
கோடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கு - குண்டர் சட்டத்தில் 4 பேர் கைதானதை எதிர்த்த வழக்கில் அக். 26-க்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜனவரி 1 முதல் ஆக.3 வரை கர்நாடகாவிற்கு 60 டிஎம்சி தண்ணீர் கிடைத்தும் தமிழகத்திற்கு 9 டிஎம்சி மட்டுமே தந்துள்ளது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்.
ரேஷன் மண்எண்ணெய் விலை உயர்கிறது : படிப்படியாக உயர்த்தி மானியத்தை ரத்து செய்ய அரசு முடிவு.
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டதாலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தான் கேட்க வேண்டும்.பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் தீரன் சின்னமலையின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - முக.ஸ்டாலின்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீன்டும் சம்மன்.
சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் டிஜிபி டிகே.ராஜேந்திரன் சந்திப்பு.
ரூ.89 கோடி விவகாரத்திலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகியிருக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.
ஓபிஎஸ் அணியில் இருந்து தங்கள் அணிக்கு வந்தால் ரூ.5 கோடி தருவதாக டிடிவி, எடப்பாடி அணியினர் பேரம் பேசுகின்றனர் : எம்எல்ஏ சண்முகநாதன்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
நவோதயா பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்க முடியுமா?: மத்திய அரசு 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
டி.டி.வி தினகரனுடன் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி புதிய சட்டமுன்வடிவை மத்திய அரசிடம் வழங்கியுள்ளோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்.
குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
சென்னை வடபழனியில் பெஃப்சி நிர்வாகிகளுடன் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆலோசனை.
கிரண்பேடி குறித்து ராம்நாத் கோவிந்திடம் பேசவில்லை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
தீரன் சின்னமலை படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் மரியாதை.
நீட் தேர்வில் புதுச்சேரிக்கும் விலக்கு கோரி மத்திய அமைச்சர் நட்டாவிடம் கோரிக்கை வைத்தோம்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
முதல்வர் உள்பட 5 அமைச்சர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள சசிகலாவை முதல்வலர் உள்பட 5 அமைச்சர்கள் சந்தித்தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆணழகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுக்களை தீபாவளி பண்டிகை முதல் ரிலீஸ் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநராக கிறிஸ்டோபர் ரே பொறுப்பேற்றுக் கொண்டார்.
மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்களின் நிரந்திர வைப்பு தொகைக்கு 8% வட்டி உறுதி செய்யப்படும் : அருண் ஜெட்லி.
பணம் பறிக்கும் நோக்கத்துடன் சினிமா பைனான்சியர் போத்ரா தொல்லை கொடுத்ததாக பாரிவேந்தர் புகார்.
கிரிக்கெட் வீரர் புஜாரா, வீராங்கனை ஹர்மன்ப்ரீத் ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.
ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.
பாராலிம்பிக் வீரர் ஜஹாரியாவுக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கில் மாநகர காவல் ஆணையர் பதில் தர உத்தரவிட்டு வழக்கு 14க்கு ஒத்திவைப்பு.
சென்னை அண்ணா சாலையில் மாநகரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்பென்சர் பிளாசா எதிரில் மாநகரப் பேருந்து தடம் எண் 18k விபத்துக்குள்ளானது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 1,086 மில்லியன் கன அடியாக உள்ளது.
மணப்பாறை அருகே கீழபூசாரிப்பட்டியில் ரயில் மோதியதில் 27 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவாஜி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் அரை நிர்வாண போராட்டம்.
இரவு செய்திகள்@3/8/17
காஷ்மீர் : போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ததாக கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நாட்டின் முதல் நதி நீர் இணைப்பு திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி தெரிவித்துள்ளார்.
இந்தியா படைகளை திரும்ப பெறவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்கும் என சீனா மிரட்டல் விடுத்து உள்ளது.
நம்மிடம் வலுவான ராணுவம் உள்ளது -போர் ஒரு தீர்வாகது என மாநிலங்களவையில் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்தார்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது இயல்பு தான் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, மாமனார் தனது மருமகனை கொன்று புதைத்த விவகாரம் எட்டு மாதங்களுக்கு பின் அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்
வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜய பாஸ்கரிடம் விசாரணை நிறைவு
மதுரை:நாளை(ஆக.,4) முதல் ஹெல்மெட் கட்டாயம்: காவல் ஆணையர் உத்தரவு
கோவை மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடாத ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் 300 பேரை திடீரென்று நீக்கி தனி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெண்தொழில் முனைவோர் கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 11 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019ம் ஆண்டிற்குள் குறைந்த பட்ச கல்வி தகுதியை பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் புதிய சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது
மும்பை: 16 வயது சிறுவனை 15 மாணவர்கள் ஒரு வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவுக்கு கடத்த இருந்த 7.5 கிலோ போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மதுரை விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு போதை பொருள் கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா தலைமையிலான குழுவினர் நேற்று கோவை வந்தனர். அவர்கள் கோவை சுங்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, ஆவின் பாலகம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்
கடற்கரையில் காமராஜர் சிலைக்கு அருகே சிவாஜிக்கு புதிய சிலை அமைக்க முயற்சி செய்வோம் என்று ராம்குமார், பிரபு பேட்டி அளித்துள்ளனர்.
வருமான வரி சோதனையின் போது சிஆர்பிஎப் படையை பயன்படுத்தியதற்கு கர்நாடகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் உள்பட 5 அமைச்சர்கள் பதிலளிக்க மதுரை ஹைகோர்ட் நோட்டீஸ்ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிராக செயல்பட்டதாக வழக்குசிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் உள்ளிட்டோர் சந்திதத்தாக வழக்கு
நடிகர் சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:இரவோடு இரவாக நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அப்புறப்படுத்தியது தமிழர்களுக்கு இழைத்த அவமானம்சிவாஜி சிலையை மெரீனா கடற்கரை பகுதியிலேயே மீண்டும் நிறுவ வேண்டும்.
அரியானா மாநிலம் லாந்துராவில் உள்ள ஜே.பி. சர்வதேச பள்ளியில் ஆங்கில மொழித் தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்காத 6 வகுப்பு மாணவிகளை ஆசிரியை மோசமாக திட்டிஉள்ளார். இரு மாணவிகளை வகுப்பறையில் ஆடைகளை களைய செய்து துன்புறுத்தி உள்ளார். பள்ளியில் நேர்ந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்
பெப்சி ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருக்கிறார். மேலும் ஊழியர்கள் நாளை முதல் பணிக்கு வருவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்
காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா இன்று மாநிலங்களவையில் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்க சிறப்பு கொள்கையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நாகாலாந்தில் மக்கள் முன்னணி கட்சிக்கு எதிராக செயல்பட்ட 36 எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட்ட கெடு முடிய உள்ளதை அடுத்து அவர்களை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
வெங்காயம் பதுக்கலை தடுப்பதற்காக ஒடிசா மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தியதுஇந்த சோதனையை உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை நடத்தி வருகிறதுமேலும், ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.17 க்கு விற்கவும் வியாபாரிகளுக்கு ஓடிசா அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் மலையாள திரையுலகில் மேலும் பரபரப்பு அதிகரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மஞ்சுவாரியரின் சகோதரரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
உலக அளவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் தங்கத்தின் தேவை 10 சதவீதம் குறைந்துவிட்டதாக தெரிவிப்புஇந்த வருட காலாண்டில் தங்கத்தின் தேவை 953 டன்கள் குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளதுஆனால் 2016ஆம் காலாண்டில் தங்கத்தின் தேவை 1055.6 டன்கள் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்ரிக்க அணித்தலைவர் ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இந்த சாதனையை ஐபிஎல் தொடரில் மேற்கிந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்து முறியடித்திருந்தார்.இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்த இரு ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்துள்ளார்.கர்நாடகா கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடிய புரோலு ரவீந்திர என்னும் இளம் கிரிக்கெட் வீரர் 58 பந்தில் 144 ஓட்டங்கள் விளாசினார்.இதில், புரோலு 29 பந்தில் சதம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தமாக 13 சிக்சர், 4 பவுண்டரி அடித்து அசத்தியுள்ளார்.
அமெரிக்காவில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட இந்திய தடகள வீரர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் நிர்வாகம் மற்றும் மானேஜ்மென்ட் மீது வெறுப்படைந்து, இலங்கை அணிகள் விளையாடும் போட்டிகளை பார்க்கமாட்டேன் என்று ரணதுங்கா கூறியுள்ளார்
வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் 6-ம் நிலை வீரரான காயல் மோன்பில்ஸ்-ஐ வீழ்த்தி யூகி பாம்ப்ரி அசத்தியுள்ளார்.
அர்ஜூனா விருது: தேர்வுபெற்ற தமிழக வீரர்களுக்கு ஓ.பி.எஸ் வாழ்த்து
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இக்னிஸ் மாடலில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சிரியாவில் சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் உதவி செய்கிறது என்று வெளியிட்டுள்ள துருக்கி பத்திரிகை செய்திக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக