ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

MATHI NEWS மதி செய்திகள்@21/8/17

காலை செய்திகள்@21/8/17

இன்று நண்பகல் 12 மணிக்கு அ.தி.மு.க.,இரு அணிகள் இணைப்பு

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன

பன்னீர்-பழனிசாமி இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்திக்கின்றனர்

கட்சியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து அதிமுக இன்று அவசர ஆலோசனை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க தடை

டெல்லியில் பா.ஜனதா முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டது அருண் ஜெட்லி பேச்சு

‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டால் விபரீதம்: கேரள கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

டெல்லியில் தமிழக விவசாயிகள் யாகம் வளர்த்து போராட்டம்

எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைப்பு குறித்த பேரம் துபாயில் முடிந்து 500 கோடி ரூபாய் செட்டில் செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது இரு அணிகள் அல்ல இரு கம்பெனிகள் இணைவதாகவும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் சிறப்பாக நடிக்கின்றனர்: ஸ்டாலின்

அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: ஸ்டாலின்

22ம்தேதி வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு: அரசு ஊழியர், ஆசிரியர்களுடன் பேச்சில் சுமூகமான தீர்வு ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: ஓபிஎஸ்

அமித் ஷா நாளை(ஆக.,22) தமிழகம் வருகை

சிறையில் ஜீவ சமாதி அடைய முருகன் 4வது நாளாக உண்ணாவிரதம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் தொடங்கியது

ரஜினி உள்பட 7 கோடி பேரும் பாஜகவில் இணைய வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்

ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார்: தமிழருவி மணியன்

குமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி பாதிப்பு

கருணாநிதி மிகவும் நலமுடன் இருக்கிறார்: திருமாவளவன்

புதுவை அருகே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மணமகன் குடித்து விட்டு பேசியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

உத்தரபிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவு

திரையரங்கில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் கைது

உத்கல் ரயில் விபத்து: 4 ரயில்வே அதிகாரிகள் இடைநீக்கம்

தொடர் கன மழையால் உ.பி.யில் 69 பேர் பலி 20 லட்சம் மக்கள் பாதிப்பு

ஐஐடி.யில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய சர்ச்சைக்குரிய பேராசிரியர் ராஜினாமா கடிதம் ஏற்பு

போதைப் பொருள் கடத்த முயன்று போலீசில் சிக்கிய பி.எட். பட்டதாரிப் பெண்தனியார் பயிற்சி நிறுவனத்திற்குக் கட்டணம் செலுத்த முடியாததால் வம்பில் மாட்டிக் கொண்ட ஆந்திரப் பெண்100 கிலோ போதைப் பொருள் கடத்த முயன்ற போது ரயில் நிலையத்தில் பிடிபட்டார்.

ஆளில்லா விமானம் பறந்ததால் டெல்லி விமான நிலையம் அரை மணி நேரம் மூடல்

35ஏ விவகாரம்: காஷ்மீர் பேரவை சிறப்புக் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

173 பசுக்கள் உயிரிழந்த சம்பவம்: சத்தீஸ்கர் அரசு அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம்

வெளிநாடுகளில் இருந்து 24 சிலைகள் மீட்பு: 3 ஆண்டுகளில் மத்திய அரசு நடவடிக்கை

இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது பாஜக: கர்நாடக முதல்வர் சித்தராமையா

நவோதயா மாதிரி பள்ளிகளில் சிறுபான்மை இன மாணவிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய மந்திரி தகவல்

மும்பை, இந்திய முன்னாள் ஆக்கி வீரரை கத்தியால் குத்தி படுகொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தம்பதியின் விவாகரத்தை வெளிநாட்டு கோர்ட்டு தீர்மானிக்க முடியாது மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மும்பை:மெட்ரோ பணிமனை அமைக்க தவறான சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு

பிச்சையெடுக்கும் சிறுவர் மறுவாழ்வுக்குச் சட்டம்: அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தல்

கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது

இலங்கையில் 5 பெண்கள் உட்பட 27 இந்தியர்களை ஜாப்னா நகரில் கைதாகியுள்ளதாக தகவல்.விசா காலம் முடிந்து சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் தங்கியிருந்ததால் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் இன்று கைது செய்தனர்இதில் பெரும்பாலானோர் ஜோசியம் பார்க்கும் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூருக்குக் கிழக்கே வர்த்தகக் கப்பல் ஒன்று போர்க் கப்பலுடன் மோதிக்கொண்டது

வங்கதேச பிரதமரை கொல்ல முயற்சி: 10 பயங்கரவாதிகளுக்கு தூக்கு

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சியையொட்டி வடகொரியா கடும் எச்சரிக்கை

பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சி சேனலான ‘சேனல்-4' சிறுவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி நிகழ்ச்சிய நடத்தி வந்தது.இதில் 'சிறார் மேதை'என்ற பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் வென்றுள்ளார்.இவர் தெற்கு லண்டனில் வசித்து வரும் ராகுல் தோஷி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

பிரபல ஹாலிவுட் நகைச்சுவை கலைஞர் ஜெர்ரி லூவிஸ் மரணம்

தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று சாதனை படைத்த இந்திய கால்பந்து அணி

டி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டி : சென்னை சேப்பாக்கம் அணி சாம்பியன்

ஆக-21: பெட்ரோல் விலை ரூ. 71.01, டீசல் விலை ரூ.60.01.

*முக்கிய செய்திகள்@21/8/17💐*

அதிமுக இரு அணிகள் இணைய உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இறுதிக்கட்ட ஆலோசனை

அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு

சென்னையில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் தினகரன் ஆலோசனை
டி.டி.வி தினகரன் வீட்டில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைகின்றன. கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஆறுகளை இணைக்காமல் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்.அணிகள் இணைப்பை பற்றி பேசுகிறார்கள்: அன்புமணி ராமதாஸ்

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்து இருப்பது தவறானது என ஜி. ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

சென்னை மெரினாவில் போலீசுக்கு கத்திகுத்து

பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம்: கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம் டிஐஜி ரூபா அளித்தார்

சசிகலா வீடியோ கிராபிக்ஸ்: புகழேந்தி

பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப் பதிவுக்கு 5 மதிப்பெண்

புதுச்சேரியில் கடல் சீற்றம்

நாமக்கல் அருகே கார் மோதி தூக்கிவீசப்பட்ட பெண் உயிர் தப்பினார்: சிசிடிவி கேமராவில் பதிவான விபத்துக் காட்சி

99 ஆண்டுகளுக்கு முழு அளவிலான சூரிய கிரகணம் இன்று பிற்பகல் நிகழ்கிறது. இதனை சுமார் 30 கோடி பேர் கண்டு ரசிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த சூரிய கிரணம் முழு அளவில் தெரியும். சென்னையில் 26 நிமிடம் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

குற்றாலத்தில் குளிக்கத் தடை நீக்கம்- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்துவரும் முருகன் இன்று முதல் மவுன விரதத்தை தொடங்கினார்

விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்திய 13 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பவானிசாகர் அருகே யானைகள் அட்டகாசம் : வனத்துறை அதிகாரிகள் வாகனம் சிறைபிடிப்பு

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு: 15 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

போராடுபவர்களை மிரட்டாமல் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்: அரசுக்கு ஜாக்டோ - ஜியோ வேண்டுகோள்

மலைக்கோட்டை பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல் : முன்னேற்பாடு பணி துவங்கியது

2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடி நுழைவுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறும்: அதிகாரிகள் தகவல்

மும்பையில் ரயில் மீது பாறாங்கல் விழுந்து விபத்து: 3 பேர் காயம்

முசாபர் நகர் ரயில் விபத்து: 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

கேரளாவில் மீண்டும் கனமழை: இடுக்கி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு

பாக்டீரியாவை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன்: நாசா புதிய திட்டம்

சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க்கப்பல் மோதியது. இதில் 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் மாயமாகியுள்ளனர்.

நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி உடையில் துப்பட்டாவிலான மூவர்ண தேசிய கொடியை கழுத்தில் சுற்றி இருப்பதுபோன்ற ‘செல்பி’ படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

நன்றாக விளையாடாத பட்சத்தில் டோனி வெளியில் தான் உட்கார வேண்டும் காம்பீர் சொல்கிறார்

உலக பேட்மிண்டன் போட்டி கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. இந்திய நட்சத்திரங்கள் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் சாதிக்கும் ஆவலில் காத்திருக்கிறார்கள்.

    4.30pm -21-8-2017-monday

சென்னை துறைமுகத்தில்  மர்மமான முறையில்   துறைமுக  ஊழியர்  ஷீதர்   இறப்பு  உடலை  வாங்க  மறுத்து   சென்னை  துறைமுக மருத்துவமனையில்  உறவினர்கள்  முற்றுகையிட்டு வருகின்றனர்

♈ 🇮🇳  பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே ஆளுநர் வித்தியாசாகர்ராவ் சென்னை வந்தார். மும்பையில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஆளுநர்  சென்னை வந்துள்ளார்

♈ 🇮🇳  ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து ஜெ. சமாதியில் அஞ்சலி

♈ 🇮🇳  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜனை புதிய அமைச்சர்களாக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். ஓபிஎஸ் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறையை கவனிக்கவுள்ளதாகவும், பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறையை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

♈ 🇮🇳  அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டிய அவசியம் என்ன?: சி.ஆர் சரஸ்வதி கேள்வி

♈ 🇮🇳  ஆட்சி நீடிக்காது: கனிமொழி பேட்டி

♈ 🇮🇳  டில்லி கட்டளைக்கு ஏற்ப ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., நடிப்பு: ஸ்டாலின்

♈ 🇮🇳  சென்னை : அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கவர்னர் மாளிகை சென்றுள்ளார். கவர்னரை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது

♈ 🇮🇳  ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தால், அதனை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை,அடையாற்றில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்

♈ 🇮🇳  அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவதில் கடைசி நேரத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், ஆர்.எஸ்.எஸ்.,சிந்தனையாளரும், ஆடிட்டருமான குருமூர்த்தியுடன் இரண்டு தரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகே, அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்திற்கு வர முடியும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். எனவே, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பழனிசாமி தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியும்,ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மாபா.பாண்டியராஜன், மைத்ரேயன்,செம்மலை ஆகியோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பரபரப்பான சூழல் நிலவுகிறது

♈ 🇮🇳  வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக வால்பாறை மற்றும் சின்னகல்லாறில் ஓரிரு இடங்களில் தலா 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது

♈ 🇮🇳  அதிமுக இரு அணிகள் இணைப்பு இன்று நடைபெறுவதை அடுத்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் டில்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக தலைமை அலுவலகம் வர உள்ளார்

♈ 🇮🇳  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல் முறையாக இன்று (ஆக.,21) லடாக் எல்லைக்கு செல்ல உள்ளார். அங்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களை சந்தித்து, அவர்களுடன் பேச உள்ளார். எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஜனாதிபதி லடாக் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. லடாக்கில் ஜனாதிபதியை ராணுவ தளபதி பிபின் ராவத் வரவேற்க உள்ளார்

♈ 🇮🇳  எல்லையில் சீன ராணுவம் போர் ஒத்திகை;இந்திய படைகள் வலிமையை கொண்டு உள்ளது - ராஜ்நாத் சிங்

♈ 🇮🇳  கேரளாவில் பருவ மழை29 சதவீதம் பற்றாக்குறையாக பெய்து உள்ளது: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

♈ 🇮🇳  சசிகலாவை சந்திக்க வந்த பார்வையாளர்களையும் விசாரிக்க டிஐஜி ரூபா பரிந்துரை

 6.30pm -21-8-2017-monday

♈ 🇮🇳  முத்தலாக் விவகாரம்: நாளை தீர்ப்பு

♈ 🇮🇳  அதிமுக பாஜகவுடன் இணையும் காரணத்தினால்தான் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார்களோ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதிமுகவின் இரு அணிகள் இணைய பாஜகவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் இருந்து வந்த குழப்பம் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் மேலும் குழப்பம் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. தினகரன் அணியின் நகர்வை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

♈ 🇮🇳  நயன்தாராவுடன் 'நானும் ரெளடிதான்' என்ற ஒரே படத்தில் நடித்துள்ள ராகுல்தாத்தா நயன்தாராவுக்கு எழுதிய காதல் கடிதம் ஒன்றை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த காதல் கவிதை என்னவென்று பார்ப்போமா!

கண்ணே நயன்... நீதான் என் குயின்...

நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்...

I Know நீ ஒரு lady lion...

ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain...

உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்...

அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்...

காதுமா...என் Face ஆயிடுச்சு Shine...நீதான் என் ஹீரோயின்...

இப்படிக்கு...

ராகுல் தாத்தா

♈ 🇮🇳  கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சிகளில் லைவ் நிகழ்ச்சி என்பதே மிகவும் அரிதாகவே இருக்கும். ஆனால் தற்போது எடுத்ததெற்கெல்லாம் லைவ் நிகழ்ச்சி தான். அதுவும் நேற்று லைவ் நிகழ்ச்சிகளால் கிட்டத்தட்ட பல தொலைக்காட்சிகள் பிசி. ஒரு பக்கம் இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' ஆடியோ விழாவின் லைவ் ஒளிபரப்பு. இன்னொரு பக்கம் ஒரு செய்தி சேனலில் 'ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கூறும் தமிழருவி மணியனின் லைவ் நிகழ்ச்சி. இன்னொரு பக்கம் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி. இன்னொரு பக்கம் சேப்பாக்கம் மற்றும் தூத்துக்குடி அணிகள் மோதிய டி.என்.பி.எல் போட்டியின் லைவ். இந்த இத்தனை லைவ் நிகழ்ச்சிகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால் பொதுமக்கள் ரிமோட்டுக்கு அதிக வேலை கொடுத்தனர்.இது போதாதென்று பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு. இன்று கமல்ஹாசன்,காயத்ரியை வெளியேற்றும் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியையும் பெரும்பாலானோர் ரசித்தனர்

♈ 🇮🇳  கொய்யா இலைகளை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். துளிராக இருக்கும் கொய்யா  இலைகள் 3 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு  சேர்த்து குடிக்கவும்

♈ 🇮🇳  அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டேன் எரிமலை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடிக்கும். தற்போது அந்த எரிமலை வெடிக்கும் அபாயத்தில் உள்ளது

♈ 🇮🇳  மத்தியில் மோடி அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு?

♈ 🇮🇳  வேலூர்: அரக்கோணம் அருகே சித்தேரியில் நடந்த ரயில் விபத்து வழக்கில் ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

♈ 🇮🇳  டெல்லியில் 12 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

*மாலை செய்திகள்@21/8/17💥*

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் பிரிந்து கிடந்த அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.

துணை முதல்வராக பதவியேற்றார் OPS : தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக பதவியேற்றார் மாஃபா பாண்டியராஜன்

துணை முதல்வராக ஓ.பி.எஸ். நியமனம்: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்

அ.தி.மு.க., கட்சியை நிர்வகிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பு

மனதிலுள்ள பாரம் நீங்கி விட்டது - ஓபிஎஸ்

ஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைத்தது: ஓபிஎஸ்

புதிய வரலாறு படைத்துள்ளோம்; சின்னத்தை மீட்போம்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க பிரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

ஜெயலலிதா ஆத்மா நிறைவேறும் வகையில் நாம் இணைந்துள்ளோம்: எடப்பாடி

சிறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்: சபாநாயகர் தனபாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயக்குமார் தடித்த வார்த்தையை பயன்படுத்துகிறார்: நாஞ்சில் சம்பத்

பதவியை பாதுகாக்கவே இணைந்துள்ளனர்: திவாகரன்

மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம்

சசிகலாவைப் பதவியிலிருந்து நீக்கக் கூடுகிறது பொதுக்குழு என வழிகாட்டு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அறிவிப்பு

அதிமுக அரசு தொடரக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது: கனிமொழி

அதிமுக அணிகள் இணைந்திருப்பது சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம்: ராமதாஸ் சாடல்

டோக்லாம் மோதல் நீடித்து வரும் நிலையில் எல்லையில் மீண்டும் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது.

லடாக்கில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை

ஜம்மு-காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பு தீவிரவாதி கைது: 1 சீன துப்பாக்கி, 6 தோட்டாக்கள் பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் ஏடிஎம்க்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் ரூ.57 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட குட்கா ஏற்றி வந்த லாரியை, ஐதராபாத் போலீஸ் டாஸ்க் ஃபோர்ஸ் படையினர் பிடித்தனர். ரூ.54 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட குட்காவை 2 லாரிகளில் ஏற்றி வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தது ஐதராபாத் போலீஸ் டாஸ்க் ஃபோர்ஸ்.

அரக்கோணம் அருகே சித்தேரியில் நடந்த ரயில் விபத்து வழக்கில் ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு நடந்த விபத்துக்கு ரயில் ஓட்டுநரே காரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு வேலூர் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 2012-ம் ஆண்டு அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா: மீரா- பயந்தர் மாநகராட்சி தேர்தல் 2017 முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கியது. மேயர் தேர்தல் மீரா- பயந்தர் மாநகராட்சி மொத்தம் 95 உறுப்பினர்களை கொண்டது. 95ல் 94 இடங்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஏனெனில் எதிர் போட்டியாளர் இல்லாத காரணத்தால் ஏற்கனவே காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் தற்போது 61 வாக்குகள் பெற்று பாஜக முன்னணியில் உள்ளது. சிவ சேனா 22, காங்கிரஸ் 10, தேசியவாத காங்கிரஸ் கட்சி 0, மற்றவை 2 ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது.

கேரளாவில் பருவ மழை 29 சதவீதம் பற்றாக்குறையாக பெய்து உள்ளது: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் நிதிஷ் அரசு மீது கடும் தாக்குதலை தொடுத்தனர்.

எல்லையில் சீன ராணுவம் போர் ஒத்திகை; இந்திய படைகள் வலிமையை கொண்டு உள்ளது - ராஜ்நாத் சிங்

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவுதமிழன் தலையில் கோமாளிக்குல்லா என பதிவுபோதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா என கமல் பதிவு

பிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: சின்மயி

ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவை ஒதுக்கி வைக்காது- சசி தம்பி திவாகரன்

ரூ.5 லட்சம் மதிப்பில் போக்குவரத்து காவலர்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை விசாரணைக்கு சீனா அதிருப்தி

தோல்வி அடைந்ததால் ஆத்திரம்: இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்தை சிறைபிடித்த ரசிகர்கள்

ரஷ்யாவில் பளு தூக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற நபர் ஒருவர் தெரு சண்டையில் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு செய்திகள்@21/8/17

நாளை உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணை இல்லை

லாடக்கில் எங்களுடைய ராணுவம் மீது இந்திய ராணுவம்தான் "வன்முறை நடவடிக்கையை" தொடங்கியது என சீனா சாடிஉள்ளது.

டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கின்றனர்

நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விசாரணையை முடிக்காத சிபிஐ மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

வங்கிகள் தங்க இறக்குமதிக்கு 3% ஜி எஸ் டி : அரசு அறிவிப்பு

பதவி சண்டை தான் தர்ம யுத்தமா? : ஸ்டாலின் கண்டனம்

எடப்பாடி, 2 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு

ஊட்டி: கலெக்டர் போல் போனில் பேசி மோசடி செய்ய முயன்ற நபர் கைது

சர்ச்சை பேட்டி; அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு

ஊட்டி: யானை தாக்கி பெண் பலி

தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு முதல் பலி - சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுவன் மரணம்

இந்த அரசு நீடிக்குமா நீடிக்காது என்பது குறித்து கேரண்டி கூற முடியாது- சசிகலா சகோதரர் திவாகரன்

சசிகலா நீக்கம் குறித்து அதிமுக பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும் என அமைச்சர் ஓ..எஸ். மணியன் கூறிஉள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

பதவி வேட்கைக்காக டெல்லியின் எடுபிடிகளாக மாறுவதா?- ஸ்டாலின் சாடல்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கினால் முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவோம் எனவும், ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் பச்சை துரோகிகள் எனவும் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஒரிசா மாநிலம் சாம்பல்பூர் அருகே லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

மகராஷ்டிர மாநில லாட்டரி விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி வரியை குறைக்கச் சொல்லி போராட்டம் நடத்தினர்.

தற்போதைய பாஜக தலைவரான அவ்தார் சிங் பதானா டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு பிஜு ஜனதா தளம் எம்.பி. ஒடிய மொழியில் பதில் கடிதம் அனுப்பிஉள்ளார்.

அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது

மணிக்கு 350 கிலோமீட்டர் - உலகின் அதிவேக புல்லெட் ரெயில்: சீனாவில் செப்.21-ல் அறிமுகம்

இளையோர் கிரிக்கெட்டிற்கான கட்டமைப்பு வசதிகள் உலகளவில் இந்தியாவில்தான் சிறப்பாக உள்ளது என்று பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் கூறியுள்ளார்.

யுவராஜ் சிங் அணியில் இடம்பெறாததை ஓய்வு என்று கூறுவது சரியாக வார்த்தை கிடையாது. அவர் அணியில் மீண்டும் இடம்பிடிப்பது கடினம் என காம்பீர் கூறியுள்ளார்.

லண்டனில் ஓய்வு பெற்றதை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பாருக்குச் சென்ற உசைன் போல்ட், 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.

சசிகலாவை நீக்கிவிட வில்லை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வளர்ச்சிக்காக ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் : பிரதமர் மோடி.

முத்தலாக் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.

பதவிச்சண்டைக்கு பெயர் தர்மயுத்தமாம் - அணிகள் இணைப்பு குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை.

துணை முதலமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

வரும் காலத்தில் வளர்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை தொடும் என பிரதமர் நம்பிக்கை.

அதிமுக அணிகள் இணைப்பு சுயநல,
சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் -  பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.

பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சசிகலாவிற்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளனர் அதை முறியடிக்க நான் அரசியல் களம் கண்டுள்ளேன் - திவாகரன்.

இதுவரை என்னை 6 எம்.எல்.ஏக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் உள்ளனர்.இணைப்பால் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முடியாது - திவாகரன்.

JACTOGEO வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு வரும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா.

சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுப்பது பற்றி வைத்திலிங்கம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து : ஓஎஸ்.மணியன்.

எங்களை யாரும் பிரிக்க முடியாது அனைவரும் ஒன்றுபட்டு உள்ளோம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேசினார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் பழனிசாமி. துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி & வைத்திலிங்கம் அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.

தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அஇஅதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன ஓபிஎஸ் ட்விட்டர் பதிவு.

அம்மா ஆசையை, அமாவாசை அன்று நிறைவேற்றியுள்ளார்கள் - அணிகள் இணைப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிப்பட வேண்டும் என தர்மயுத்தம் நடத்தியவர்கள், மர்மங்கள் வெளிப்படும் முன்னரே ஒருதாய் மக்கள் ஆகிவிட்டார்கள் - ஸ்டாலின்.

பெரும்பான்மையை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு, ஜனநாயக வழியில் விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது - ஸ்டாலின்.

அதிமுக அணிகள் ஒன்றிணைந்ததற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாழ்த்து. துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வத்திற்கும் சரத்குமார் வாழ்த்து.


மதி செய்திச் சுருக்கம் (21/08/2017

1 வங்காள தேசத்தில் கடும் மழை பெய்து வருவதால் ஆஸ்திரேலியா விளையாட இருந்த இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2 அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

3 ஜே.கே. டயர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) ஒட்டுமொத்த அளவில் ரூ.117 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது.

4 ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 4.31 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.24.20- ல் முடிவுற்றது.

5 பார்தி ஏர்டெல் பங்கின் விலை 1.21 சதவீதம் அதிகரித்து ரூ.421.60 - க்கு கைமாறியது.

6 ஐடியா செல்லுலார் பங்கு விலை 0.95 சதவீதம் உயர்ந்து ரூ.90.25- ல் நிலை கொண்டது.

7 டாட்டா கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 0.23 சதவீதம் அதிகரித்து ரூ.640.25-க்கு கைமாறியது.

8 மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மோனிகா பால் என்ற பெண்மணி பெரிய அளவிலான துர்கா சிலைகளை தனியாக செய்து சாதனை படைத்து வருகிறார்.

9 பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வரும் புதிய வீடியோ ஆதாரத்தை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவிடம் ரூபா அளித்துள்ளார்.

10 முன்னாள் நீதிபதி கர்ணன் பரோல் கேட்டு மேற்கு வங்காள கவர்னருக்கு அனுப்பிய மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர கர்ணன் முடிவு செய்துள்ளார்.

11 பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பி.ஜே.பி தலைவர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களை அவர்கள் சந்திக்கவுள்ளனர்.

12 டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியுடன் 5 வருட ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைப் பதிவு ஆகஸ்ட் 23 முதல் இணையதளத்தில் தொடங்கப்படுகிறது.

13 பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் உதய்ப்பூர் மாணவர் ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

14 டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

15 தமிழகம் முழுவதும் பரவலாக பெய்யும் மழையால், பாசன பிரச்னை சற்றே தீர்ந்துள்ளது. இதனால், மழையை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

16 நவோதயா மாதிரி பள்ளிகளில் சிறுபான்மை இன மாணவிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை ராஜாங்க மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்

17 டான்ஸ்ரீ நல்லா கே.எஸ். சேவையை பாராட்டி மலேசிய அரசு சமீபத்தில் சேவை தன்னார்வ படையின் சிறப்பு விருதான துணை ஆணையர் விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

18 பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மதி செய்திகள்

19 பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும், சுற்றுப்பயணம் செய்து வரும், பா.ஜ., தேசிய தலைவர்,அமித் ஷா, நாளை சென்னை வருகிறார். தமிழகத்தில், மூன்று நாட்கள், பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

20 பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை மற்றும் தெருக்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளுக்கே முடங்கியுள்ளனர்.

21 சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் டிமிட்ரோவ் ஆண்கள் பிரிவின் பட்டத்தை வென்றார்.

22 தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அந்நிய முதலீட்டை ஈர்க்க ஈரான் முயன்று வருகிறது.

23 டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று யாகம் வளர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

24 ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சமாதியில் சோனியா காந்தி மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

25 திருச்செந்தூரில் சுப்ரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் தொடங்கியது. சுவாமி குமரவிடங்க பெருமாள் எழுதந்தருளிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

26 குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து குறைந்ததால் இரு அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

27 பிரிட்டன் நாட்டு தொலைக்காட்சி நடத்திய அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல் தோஷி ‘சிறார் மேதை’ விருதினை வென்றுள்ளார்.

28 99 ஆண்டுகளுக்கு முழு அளவிலான சூரிய கிரகணம் இன்று பிற்பகல் நிகழ்கிறது. இதனை சுமார் 30 கோடி பேர் கண்டு ரசிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த சூரிய கிரணம் முழு அளவில் தெரியும். சென்னையில் 26 நிமிடம் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

29 அரசு சார்பில் தங்குவதற்கு வசதி செய்து தரப்படும் நிலையில், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடக் கூடாது என்று தனது அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

30 கல்லுாரி, பல்கலைகளில், 'ஸ்வச்தா பக்வாடா' எனும், துாய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, செப்டம்பர் 1 முதல், 15ம் தேதி வரை நடத்த, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

31 இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சிரமம் இல்லாமல் வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று மோதுகிறது.

32 திருப்பதியில் விரைவில் புண்ணிய தலங்களுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் திட்டம் தொடங்க உள்ளதாக ஆந்திர சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

33 அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து டெல்லியில் கடந்த 19ம் தேதி நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

மதி செய்திகள்

34 கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

35 இன்று நண்பகல் ஓ பன்னீர் செல்வமும், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

36 தமிழகத்தில், 144 ஆண்டுகளுக்கு பின், செப்., 12 முதல், 23ம் தேதி வரை, காவிரி மஹா புஷ்கரம் எனும், புனித நீராடல் நடக்கிறது.

37 தென் மாநிலங்களின் மின்சார பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு நடத்தும் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க, மின் வாரிய குழு, இன்று கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்கிறது

38 மத்திய பிரதேசத்தில், அரசு பணிகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்,'' என, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

39 மணலி மற்றும் எண்ணூர் பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளின் நீர் தேவையைப் பூர்த்திசெய்ய, ரூ.235 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

40 மதுரை-டேராடூன் விரைவு ரயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

41 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

42 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.01 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

43 அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைகின்றன. கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

44 ஹாலிவுட் திரையுலகில் அசைக்கமுடியாத காமெடி நடிகராக வலம் வந்த ஜெர்ரி லூவிஸ் (91) லாஸ் வேகாஸில் உள்ள தனது இல்லத்தில் முதுமை காரணமாக காலமானார்.

45 நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் முதல் அரசு முறை பயணமாக இன்று காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே பகுதிக்கு செல்கிறார்.

46 டெல்லியில், பா.ஜனதா முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

47 இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் ஜப்பானின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பலின் சிதைந்த சில பாகங்கள் பசுபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

48 சிங்கப்பூர் கடல் பகுதியில் சென்ற அமெரிக்க போர்க்கப்பல், சரக்கு கப்பலுடன் மோதிய விபத்தில் 10 பேர் மாயமாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

49 ரஜினி உள்பட தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் பாஜகவில் இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதில் யாருமே விடுபடக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணான் கூறியுள்ளார்.
மதி செய்திகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக