இன்றைய பரபரப்பு செய்திகள் 19/08/17 !
ராஜீவ் கொலை வழக்கு : வேலூர் சிறையில் உள்ள முருகன் 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்.ஜீவசமாதி அடைய அனுமதி வழங்காத நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் இன்று முதல் தண்ணீர் மட்டுமே அருந்த உள்ளார்.
வேதா நிலையத்தை நினைவிடமாக்குவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை : ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து.
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் தொடக்கம்.வேதா இல்லத்தில் அளவெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.
கட்டணத்தை திருப்பித் தராவிட்டால் தனியார் பள்ளிகளை அரசே நடத்தும் - கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு.
லண்டன் சென்ற எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.
அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இல்லை ஓபிஎஸ் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். தர்மயுத்தத்தின் மூலக்கருவே சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பது தான் : கேபி. முனுசாமி.
45 ஆண்டுகளுக்கு பிறகு, இலங்கை கடற்படையின் தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ரூ.640 கோடியில் 3000 கண்மாய்களை சீரமைக்கும் பணியில் ஊழல் என வைகோ புகார்.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனுடன் வழக்கறிஞர் புகழேந்தி சந்திப்பு.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு; தனது மகள் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் அளித்தார்.
அதிமுக அணிகள் இணைப்புக்கு அந்த அணியில் உள்ள சிலரே எதிர்ப்பு தெரிவிப்பதால், அது நடைபெற வாய்ப்பில்லை - துரைமுருகன்.
பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். சசிகலா குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் - பொன்னையன்.
டிடிவி தினகரனுக்கு மிஞ்சப்போவது 5 எம்எல்ஏ-க்கள் மட்டுமே : கலசப்பாக்கம் எம்எல்ஏ சாடல்.
இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை ஓபிஎஸ் அணி வரவேற்றுள்ளது.அதிமுக அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் : கடம்பூர் ராஜு.
கட்சி, ஆட்சியில் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பாக அணிகள் இணைப்பில் தாமதம் என்பது உண்மையல்ல - அன்வர் ராஜா.
பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களால் திருச்சி மாநகராட்சியின் இணையதளம் முடக்கம்.
தினகரன் இல்லத்தில் எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, சுந்தர்ராஜன், சுப்ரமணியன் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷா ஒன்றும் அவதாரபுருஷர் கிடையாது; தமிழ்நாடு ஒன்றும் குஜராத் இல்லை. எந்த நிபந்தனைகளும் எங்களை கட்டுப்படுத்த முடியாது; அணிகள் இணைப்பு என்ற கேலிக்கூத்து நீண்ட நாட்கள் நடக்க வாய்ப்பில்லை : நாஞ்சில் சம்பத்.
பதவிக்காக விதை நெல்லையே விற்க அவர்கள் முடிவு கட்டிவிட்டார்கள்.எல்லா அறைகூவல்களையும் சந்திக்க டிடிவி தயாராக உள்ளார் டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் : நாஞ்சில் சம்பத்
திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமியை வரவேற்க சென்ற தினகரன் ஆதரவாளர் சிவபதிக்கு அனுமதி மறுப்பு.
அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டியதில்லை; உட்கட்சி பிரச்னையால் தானாக கலையும் - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைவதால் அதிமுகவில் எந்த மாற்றமும் வராது - நாஞ்சில் சம்பத்.
ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை தொடர்பான விசாரணைக்கு பழனியப்பன் எம்எல்ஏ ஆஜராகவில்லை.
தொய்வு இல்லாமல் மக்கள் சேவை செய்ய அணிகள் இணைப்பு அவசியம் : ஜிகே. வாசன்.
பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவே இறுதியானது மக்கள் விமர்சனம் செய்யாத அளவிற்கு எங்கள் செயல்பாடுகள் இருக்கும் - கேபி.முனுசாமி
குற்றால மலைப்பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
வேதாரண்யத்தில் பெய்த கனமழையால் 3000 ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி நிறுத்தம்.
அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தினால் படகுகளுக்கான மானியங்கள் ரத்து : ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.
காஞ்சிபுரம் : மதுராந்தகம் ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
சர்வதேச உயரம் குன்றியவர்களுக்கான போட்டியில் 3 தங்கம் வென்ற தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு.
கோவை : சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில், 2-ம் ஆண்டு பொறியியல் மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை.
வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அநேக இடங்களில் மழைபெய்ய வாய்ப்பு.வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு.
*இன்றைய 1 வரிச்செய்திகள்!*
19/08/17 சனிக்கிழமை!
*புதிய மெட்ரோ ரெயில்* கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இது தனியார் முதலீடுகளுக்கு வாய்ப்பை உருவாக்கும்.
*தமிழக அரசின்* சூரிய மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் இந்தாண்டு ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கட்டப்பட உள்ளன.
*செயற்கை மூட்டு* உபகரணங்களின் விலையை அதிரடியாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை கட்டணம் ரூ.2.5 லட்சம் வரை குறையும் எனத் தெரிவித்துள்ளது.
*தேசிய அளவில்* எடுக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி 2,700 யானைகளுடன் தமிழகம் 4 - ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் 6,049 யானைகளுடன் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
*இந்தியா-நேபாளம்* எல்லையில் மூடப்பட்டிருந்த ரெயில் சேவை மூன்று ஆண்டிற்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
*கிருஷ்ணகிரி மாவட்டத்தில்* தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னை பற்றிய 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளதாக சென்னை அறக்கட்டளையின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்தார்.
*கூட்டாக வாழும் எறும்புகளுக்கு,* முக்கியமான உணர்வு, நுகரும் சக்தி தான். எதிரிகளை கண்டறிவது முதல், சாரி சாரியா ஊறும் போது, தகவல்களை பரிமாறுவது வரை, எல்லாவற்றுக்கும் வாசனைகளைத் தான், எறும்புகள் பயன்படுத்துகின்றன. இந்நிலையில், நியூயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மரபணு மாற்றத்தின் மூலம், வாசனை அறியும் உணர்வு, 90 சதவீதம் இல்லாத எறும்புகளை உருவாக்கி உள்ளனர்.
*10ம் வகுப்பு மாணவர்களுக்கு,* மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், நவ., 5ல் தேர்வு நடக்க உள்ளது.
*மனிதர்களால் உருவாக்கப்படும்*
கடல் மாசுக்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி, வருந்தத்தக்க தகவல்கள் வர துவங்கி உள்ளன. தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் கடல் பகுதிகளில் இருக்கும், ஆமை முகம் கொண்ட கடல் பாம்புகள், மெல்ல அடர் கறுப்பு நிறத்திற்கு மாறி வருவதை, கடல் உயிரியியல் வல்லுனர்கள், சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
*அமெரிக்காவின் வெர்ஜினியா* மாகாணத்தில் இனவெறி மோதலுக்கு அதிருப்தி தெரிவித்து வர்த்தக குழுக்களின் மூத்த சி.இ.ஓ-க்கள் பதவி விலகியதையடுத்து அக்குழுவை கலைக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.
*கர்நாடகா மற்றும் ஆந்திராவில்*
இருந்து, தமிழகத்திற்கு நெல் வரத்து அதிகரித்து உள்ளதால், அரிசி விலை குறையும் வாய்ப்பு உருவாகி வருகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக