MATHI NEWS முக்கிய செய்திகள்@26/8/17
டேரா சச்சா தலைவர் வழக்கின் தீர்ப்பிற்குப் பின் கலவரம்: 12 பேர் பலி, வாகனங்களுக்கு தீ வைப்பு
அரியானா-பஞ்சாப் கலவரம்: பொதுசொத்துகளை சேதப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
அரியானா பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
அரியானா கலவரம் எதிரொலி : டெல்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு - மாநில காவல்துறை
பஞ்சாப் கலவரம்: மாநில முதல்வரிடம் சோனியா ஆலோசனை
வன்முறையால் ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டை சாமியார் குருமீத்சிங் சொத்துக்களை விற்று வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சாமியார் வழக்கில் 4 கோடி பக்தர்களை நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை:பாஜ எம்பி சக்ஷி மகராஜ்
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நரோதா கம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 4 மாதத்திற்குள் தீர்ப்பை அறிவிக்கவேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று நார்வே சென்றார்
‘முத்தலாக்’ வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு மிரட்டல் பாதுகாப்பு அளிக்கக்கோரி மம்தா பானர்ஜிக்கு கடிதம்
தினகரனுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைசெல்வன் ஆதரவு:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
கமுதி அருகே கண்மாயில் கிடக்கும் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டில் பருவ கால பயிர் தகவல்கள்
மனநலம் பாதித்தவர் போல தினகரன் செயல்: அமைச்சர் சீனிவாசன்
கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வும் உடையும் என்று சீமான் கூறியுள்ளார்.ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டால் தமிழகம் சோமாலியா போல் உடையும் என சீமான் பேச்சுமக்கள் பிரச்சனை பற்றி அ.தி.மு.க.விற்கு அக்கறை இல்லை என சீமான் கொந்தளிப்பு
முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெருகுவதை தடுக்க அராஜகம் :நாஞ்சில் சம்பத்
சென்னையில் புதியபடங்களின் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல்: 2 பேர் கைது
கின்னஸ் சாதனை படைக்க ஒரு லட்சம் விநாயகர் உருவ பொருட்களை சேகரிக்க முயற்சி: தீவிர லட்சியத்தில் உதகை நிஷாலி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேபாள பிரதமர் இன்று வருகை
துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றபின் முதல் முறையாக வெங்கையா நாயுடு நாளை சென்னை வருகை
பீகாரில் துப்பாக்கி முனையில் எஸ்.பி.ஐ. கிளையில் ரூ. 5 லட்சம் கொள்ளை
இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துகோரள பதவியேற்றுக் கொண்டார்இலங்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு நீதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இல்லத்தில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர்: குஜராத் சாம்பியன்.
Mathi News காலை செய்திகள்26/8/17
காஷ்மீர் மாநிலத்தில் காவல் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பஞ்சாப், அரியானாவில் வன்முறை கலவரத்தில் 29 பேர் பலி ரெயில் நிலையங்கள், மின்சார நிலையத்துக்கு தீவைப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 7 வீரர்கள் காயம்
வட தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பீகார் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
எடப்பாடி பழனிசாமி தலைமையில் 28-ந் தேதி அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
ரூ.200 நோட்டுகள் 28–ந்தேதி முதல் வினியோகம் ஏ.டி.எம்–ல் கிடைப்பது தாமதம் ஆகும் ரிசர்வ் வங்கி:
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பான்-ஆதார் இணைப்புக்கு 31 வரையே அவகாசம்
ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் தான் இந்தியை எதிர்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட முருகன் மறுப்பு: 30 நாள் பரோல் கோரி நளினி புதிய மனு
இந்திய பயணத்தை தவிர்க்க சீனர்களுக்கு அரசு கோரிக்கை
இந்தியாவிற்கு வரும் பிரிட்டன் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுரை
ஜி.எஸ்.டி., வரியால் தீப்பெட்டி பட்டாசு தொழில் பாதிப்பு வாசன் ஆதங்கம்
கல்பாக்கம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் : 7 பேர் படுகாயம்
குடியாத்தம் அருகே 6 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இப்போதுதான் முதல் முறையாக சேலம் மாவட்டத்தின் முதல் முறையாக ஆட்சியராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலப்பாளையத்தில் நகை கடை உரிமையாளர் கொலை: கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை உறவினர்கள் 2 பேர் கைது
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள்
பிரிட்டன்: பக்கிங்காம் அரண்மனை அருகே போலீசாருக்கு கத்தி குத்து - தீவிரவாத தாக்குதலா? என விசாரணை
மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தகவல்
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தோல்வியில் முடிந்தன - அமெரிக்கா தகவல்
ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் தாக்குதல்: பெல்ஜியம் நாட்டில் பாதுகாப்பு படையினரை தாக்கி துப்பாக்கிச்சூடு
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மறுஆய்வு மனு
ரோஹிங்யா போராளிகள்- பாதுகாப்பு படையினர் மோதல் 71 பேர் பலி
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கணையை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.
இன்றைய(ஆக.,26) விலை: பெட்ரோல் ரூ.71.52; டீசல் ரூ.59.97.
செய்திகள்@26/8/17
ஹரியானாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஃஎப் வீரர் மற்றும் போலீசார் வீர மரணம்
வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்ய பீகார் வந்தடைந்தார் பிரதமர் மோடி
ஹவாலா ஏஜென்ட் மொய்ன் குரேஷி டெல்லியில் கைது
குர்மீத் ராம் ரகீம் சிங்:தேராவில் பாலியல் பலாத்காரங்கள் நடந்ததை வெளிக்கொண்டு வந்த செய்தியாளர் கொல்லப்பட்ட வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது.
அரியானாவில் குர்மித் ராமின் ஆசிரமத்தை கையகபடுத்தியது அரசு:ராம் ரஹீமின் 2 ஆசிரமங்களுக்கு சீல்
வேலூர் சிறையில் உள்ள முருகனுடன் வழக்கறிஞர் புகழேந்தி சந்திப்பு
பரோலில் வெளிவந்த பேரறிவாளனிடம் 2வது நாளாக கையெழுத்து பெறப்பட்டது
முதல்வர் பழனிசாமிக்கு பேரறிவாளன் தாயார் நன்றி
விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை: தாயாரை சமாதானப்படுத்திய பேரறிவாளன்
சென்னை அடையாரில் உள்ள தினகரன் வீட்டு அருகில் வைத்துள்ள பேனரில் தினகரன் முகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர்
சென்னையில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த 10 பேர் மீது வழக்கு
எடப்பாடி பழனிச்சாமி கொள்கை முடிவு எடுக்க தடை வேண்டும்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும்
ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஜெ.தீபா கடிதம்
ஆரம்பாக்கம் அருகே மர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு
சேலம் அருகே கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு
2ம் நிலை காவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் திருநங்கை நஸ்ரியா தேர்வு
தமிழகத்தில் 5 போலி ஹோமியோபதி மருத்துவர்கள் கைது
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தை சுற்றி அவ்வப்போது வட்டமடிக்கும் ஹெலிகாப்டர்
பீதியில் மக்களும், அதிகாரிகளும் காணப்படுகின்றனர்
மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
சென்னை:மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டண சலுகை 2 மாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவன் பலி
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டத்தை மதிக்காத காங்கிரஸ் அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
2ம் நாள் மருத்துவ கலந்தாய்வு துவங்கியது: 1,464 பேருக்கு அழைப்பு
குர்மீத் ராம் விஐபி சிறையில் அடைப்பு; ரோக்தாக்கில் 144 தடை உத்தரவு, 600-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து
புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஓம்சக்திசேகர் மனு
புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரியில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு
புதுச்சேரியில் பொறியியல் படிப்புக்கு 31ம் தேதி இறுதிகட்ட கலந்தாய்வு
திருப்பதி வனப்பகுதியில் கூலி தொழிலாளர்களை இறக்கி விட்ட தமிழக பஸ் டிரைவர் கைது
செம்மரம் வெட்டி கடத்துவதற்கு தமிழக பஸ் டிரைவர்கள் உதவி செய்வதாக தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் 36 பேரை ஏற்றிச்சென்றனர்
போலீசார் மீது கல்வீச்சு நடத்திய தேரா சச்சா ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி வைரலாகியுள்ளது
தேரா சச்சா ஆதரவாளர் கல் வீசுவதும், குண்டடி பட்டு கீழே விழுவதும் காட்சிகளாக அதில் உள்ளது
துப்பாக்கி சூடு காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது
டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப் போட்ட ஹார்வே புயல்
மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று கரையை கடந்தது
கனமழை நீடிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
12 ஆண்டுகளுக்குப் பிறகு டெக்சாஸ் மாகாணத்தை மிரட்டும் கடுமையான புயல்
மேவெதர் - மெக்கிரிகோர் மோதும் குத்துச்சண்டை போட்டியின் மூலம் ரூ.4,230 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்: ஷியா மசூதிக்குள் ஐ.எஸ். தீவிரவாதி மனித வெடிகுண்டு தாக்குதல்- பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
மதிய செய்திகள்@26/8/17
காஷ்மீரில் போலீஸ் குடியிருப்பை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் பலி
பீகார் வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார் - 500 கோடி நிவாரணம் அறிவிப்பு
பீகாரில் அரசு பணம் ரூ.1000 கோடி ஊழல்: வழக்கை ஏற்று விசாரணையை தொடங்கியது சிபிஐ
கலவரச்சூழலை அறிந்தும் தடுக்காத ஹரியானா முதல்வர்: உள்துறை அமைச்சகத்திடம் உளவுத்துறை அறிக்கை
பஞ்ச்குலா துணை போலீஸ் ஆணையர் இடைநீக்கம்
சிர்சாவில் குர்மீத் ராம் ஆசிரமத்தில் ராணுவம் நுழைந்தது
மத தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கபட்டதும் 5 மாநிலங்களில் கலவரம் பரவியது இது தொடர்பாக 1000 பேர் கைது செய்யபட்டு உள்ளனர்
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாருக்கு மினரல் வாட்டர் வசதியுடன் ஒரு பெண் உதவியாளர் என சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.
பாலியல் பலாத்கார சாமியாருக்கு சொந்தமான மையங்களுக்கு சீல்: பாதுகாப்பு படைகள் ரெய்டு
பஞ்சாப், ஹரியானா கலவர எதிரொலி: பால் கிடைக்காமல் சிம்லா மக்கள் தவிப்பு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்இந்த மாத இறுதிக்குள் இணைக்காவிட்டால் பான் எண் ரத்து செய்யப்படும்வருமான வரி தாக்கலும் செல்லாததாகிவிடும்
தமிழகத்தில் ஜோக்கர் ஆட்சி: கர்நாடக அமைச்சர் விமர்சனம்
சிவகங்கை, விழுப்புரம், அரியலூர் மாவட்ட செயலர் நீக்கம்: தினகரன்
கடவுளைத் தவிர எங்களை யாராலும் மிரட்ட முடியாது. எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு புதுச்சேரி சென்றுள்ளனரே தவிர யாருக்கும் பயந்து ஓடவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்
தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையே போர்: தினகரன்
எங்களுக்கு 8 அமைச்சர்கள் - 60 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என திவாகரன் கூறினார்.
சபாநாயகர் அனுப்பியதாக கூறிய நோட்டீஸ் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லைஅப்படியே கிடைத்தாலும் விளக்கம் அளிக்கமாட்டோம்:பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல்
ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் 2 நாளில் ஜனாதிபதியை சந்திப்போம்- தங்க தமிழ்ச்செல்வன்
சட்டமன்றத்தை கூட்டி முதல்-அமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கொ.ம.தே.க. ஈஸ்வரன்
போலீசாரால் தமிழகத்திற்கு பெருமை: முதல்வர் பழனிசாமி
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அடுத்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்க்ள்.
அமெரிக்க அதிகர் ட்ரம்ப்பின் ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா:வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று வெளியேறினார்;செபாஸ்டியன் ராஜினாமா செய்யவில்லை நீக்கப்பட்டுவிட்டார் என வெள்ளை மாளிகை அறிக்கை
அண்ணா பல்கலைக்கழக கூடைப்பந்து: செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன்
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை
அகில இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.
*இன்றைய 1 வரிச்செய்திகள்!*
26/08/17 சனிக்கிழமை!
பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த உதயசந்திரன், இனி பாடத்திட்ட மாற்றம் தொடர்பானவற்றை மட்டும் கவனிப்பதுடன் புதிய முதன்மை செயலர் பிரதீப்யாதவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், பழனிசாமிக்கு எதிராக தினசரி ஒரு எம்எல்ஏ பேசி அதிர்ச்சியளித்து வருகின்றனர்.
வடகொரிய ராணுவம், நேற்று நடத்திய மூன்று ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கணையை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.
அரசு கொறடாவின் பரிந்துரையை ஏற்று 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ள பேரவைத் தலைவர் தனபால், இதில் உள்ள சட்டச்சிக்கல்களை தீர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு - ஹரியாணா, பஞ்சாபில் வன்முறை, 31 பேர் பலி - ரயில், பஸ்களுக்கு தீ வைப்பு - 250 பேர் படுகாயம்.
மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவில்பட்டி - நல்லி இடையே நடைபெற்ற பணிகள் முடிந்ததன் காரணமாக ரயில்கள் வழக்கமாக இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பான் எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் இருந்து அடுத்த மாதம் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று முதல் துவங்குகின்றன.
புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்ததுள்ளது என்றும் வருகிற 28 - ந்தேதி (திங்கட்கிழமை) முதல் வங்கிகள் மூலம் தமிழகத்தில் வினியோகம் செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெகசாஸ், அமெரிக்காவில் கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் வலுவடைந்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பீதி நிலவுகிறது.
'ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்" என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலு}ர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை ஒரு மாத கால பரோலில் விடுவிக்க தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ. 2.97 கோடி வரை கூடுதலான கட்டணத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் அழைப்பு மேற்கொண்ட வாடிக்கையாளர்களிடம் வசூலித்துள்ளது.
ஆமதாபாத்தில் நடந்து வந்த கியு மாஸ்டர்ஸ் லீக் ஸ்னூக்கர் போட்டியின் நேற்றைய இறுதி ஆட்டத்தில் உள்ளூர் அணியான குஜராத் கிங்ஸ் டெல்லி டான்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
💎 பெட்ரோல் ஒரு
லிட்டர் விலை - ரூ.71.52
💎 டீசல் ஒரு
லிட்டர் விலை - ரூ.59.97
💎 தங்கம் 1
கிராம் - ரூ.2,775.00
💎 வெள்ளி 1
கிராம் - ரூ.42.60
மாலை செய்திகள்@26/8/17
ஆதார் விவரங்களை திருடிய அமெரிக்காவின் சிஐஏ: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிக்கு கடும் மிரட்டல் வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராம் ரஹீமின் ‛இசட்' பிரிவு பாதுகாப்பு வாபஸ்
கேரளாவில் ரியல் எஸ்டேட் துறையில் ரூ. 6,000 கோடி முதலீடு செய்ய குர்மீத் ராம் ரகீம் சிங் திட்டமிட்டு இருந்தார்.
தேரா தலைமையகத்திற்குள் நுழைய ராணுவத்திற்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பா.ஜ.,வில் இணைந்தார்
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விடுவித்து தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
நானே நினைத்திருந்தால் முதல்வராகியிருக்க முடியும். சசிகலா என்னை முதல்வராக்கியிருக்கலாம். ஆனால், நான் அதனை விரும்பவில்லை. கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி முதல்வராக்கப்பட்டார் என தினகரன் கூறினார்.
துணை முதல்வராக இருக்குமாறு அமைச்சர்கள் கூறினர்: தினகரன்
தினகரன் ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என கடலூர் மாவட்ட அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூறி உள்ளனர்.
அரசியல் புரோக்கர்களை வைத்து தினகரன் தரப்பு எம்எல்ஏக்களுக்கு ஆசை காட்டுகிறது:தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நிச்சயம் 21ஐ தாண்டாது -தினகரன் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: அருண்மொழித்தேவன் எம்.பி.
4 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
நம்பி வந்தவர்களுக்காக பன்னீர் பரிந்துரை: பதவி அளிக்க பழனிச்சாமி யோசனை
கிரானைட் முறைகேடு தொடர்பான விரிவான அறிக்கை ஹைகோர்ட்டில் தாக்கல்;
கனிமவள முறைகேடுகளை விசாரிக்கும் ஆணையத்தின் செயல்பாடு முடிவுக்கு வந்ததுஆணையராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தகவல்
சென்னை துறைமுகத்தில் 40 டன் செம்மரக்கட்டை பறிமுதல்
கோயில் நிலங்கள் கோயில் நலனுக்கே: ஐகோர்ட் உத்தரவு
சுங்கத்துறையின் இணையதளத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை தேவை: வாசன்
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு மீண்டும் முழுமையான அதிகாரத்தை வழங்கிடுக: ஜவாஹிருல்லா
குர்மீத் ஆதரவாளர்கள் வன்முறைகளுக்குப் பிறகு புதுடெல்லியில் அமைதி திரும்பியது
கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அரசுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறது
அரசியல் லாபத்திற்காக பஞ்சகுலா நகரத்தில் நடந்த வன்முறையை மாநில அரசு வேடிக்கை பார்த்ததாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளிக்காட்டியதாக இரு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தெரு வியாபாரிகளிடம் பணம் பறிக்க உத்திரப்பிரதேசத்தில் போலீஸ் போன்று நடித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்
ஏர் இந்தியாவின் மும்பை-கொச்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக விமானம் புறப்படுவதற்கு பல மணிநேரம் தாமதம் ஏற்பட்டது
பாகிஸ்தானின் மக்கள் தொகை கடந்த 19 வருடங்களில் 57 சதவீதம் உயர்வு
தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்:
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,774
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,192
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,130
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.70
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,700
இலங்கைக்கு எதிராக வரும் போட்டிகளிலும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும் என்று பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் குறிப்பட்டுள்ளார்.
*🔴🔵மதி செய்திச் சுருக்கம் (26/08/2017)*
1 மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பழுது 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
2 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில் பங்கு விலையை குறைவாக நிர்ணயிக்கும்படி மத்திய அரசு வழியுறுத்தி இருக்கிறது.
3 சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 71.38 புள்ளிகள் அதிகரித்து நிப்டி 19.65 புள்ளிகள் முன்னேற்றம்.
4 கடந்த ஜீலை மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 பியூச்சர் சப்ளை செயின் நிறுவனம் புதிய பங்குகள் வெளியிட அனுமதி வேண்டி பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளது.
6 தற்போது நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 23 கோடி டன்னாக இருக்கிறது.
7 நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜீலை வரையிலான முதல் 7 மாதங்களில் தனியார் பங்கு முதலீடாக 881 கோடி டாலர் ஈர்க்கப்பட்டு இருக்கிறது.
8 தனியார் துறையைச் சேர்ந்த எச்.டீ.எப்.சி ஸ்டாண்டர்டு லைப் நிறுவனம் ஆயுள் காப்பீட்டுச் சேவையில் ஈடுபட்டுள்ளது.
9 நாட்டின் மொத்த உற்பத்தியில் அன்னிய முதலீட்டின் பங்கு 2.5 சதவீதம் ஆகும்.
10 இந்திய ஆயுள் காப்பீட்டு துறையால் பொதுத்துறையை சேர்ந்த எல்.ஐ.சி நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது.
11 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்.
12 53 வயதில் அமெரிக்க பெண்ணுக்கு ரூ.5,000 கோடி ஜாக்பாட்!!! அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மேவிஸ் வான்ஸிக் அவருக்கு தற்போது ஜாக்பாட்டில் ரூ.5,000 கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது. ஒரு நபருக்கு இவ்வளவு பெரிய தொகை ஜாக்பாட்டில் பரிசாக கிடைத்துள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை.
13 தென்னாப்பிரிக்காவில் தொடங்க இருக்கும் டி20 குளோபல் லீக் தொடரில் பங்கேற்கும் பெனோனி ஜால்மி அணியின் பயிற்சியாளராக, கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
14 நெய்மாரின் இடத்தை நிரப்ப பல முயற்சிகளை எடுத்த பார்சிலோனா அணி, இறுதியாக பிரான்ஸ் நாட்டு வீரரும், பொருஷியா டோர்ட்மண்ட் கிளப்பின் நட்சத்திர ஸ்டிரைக்கருமான ஓசுமானே டெம்பெல்லேவை 105 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கியுள்ளது. இது பார்சிலோனா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 2ம் நிலை காவலருக்கான உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பில் திருநங்கை நஸ்ரியா தேர்வாகியுள்ளார்.
16 ஆமதாபாத்தில் நடந்து வந்த கியூ மாஸ்டர்ஸ் லீக் ஸ்னூக்கர் போட்டியின் நேற்றைய இறுதி ஆட்டத்தில் உள்ளூர் அணியான குஜராத் கிங்ஸ் டெல்லி டான்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
17 ஜப்பானில் உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லூலு ஹசிமோட்டோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பொம்மைக்கென பிரத்யேகமாக உடைகள் வடிவமைக்கப்பட்டு அவை விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
18 திருத்தணி மாவட்டத்தில், கடும் வறட்சி மற்றும் போதிய நிதியுதவி இல்லாததால், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு பின், விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு, பயனாளிகள் தேர்வு செய்யும் பணியில், கால்நடை துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
*🔴🔵 மதி செய்திகள் 24/7*
19 பெண்கள் கல்வி மையத்துக்கான நிதி உதவி ரத்து செய்யப்படாது' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது
20 இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடியா செல்லூலார் நிறுவனம் ரூ. 2.97 கோடி வரை கூடுதலான கட்டணத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் அழைப்பு மேற்கொண்ட வாடிக்கையாளர்களிடம் வசூலித்துள்ளது.
21 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை ஒரு மாத கால பரோலில் விடுவிக்க தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
22 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் தோல்வி கண்டார்.
23 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் போட்டித் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர்.
24 டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரையால் தான் நான் சிறப்பாக விளையாட முடிந்தது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
25 டெகசாஸ், அமெரிக்காவில் கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் வலுவடைந்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பீதி நிலவுகிறது.
26 'ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
27 புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்ததுள்ளது என்றும் வருகிற 28–ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வங்கிகள் மூலம் தமிழகத்தில் வினியோகம் செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
28 மத்திய அரசுத் துறைகளின் செயல்பாடுகள் அனைத்தையும் நிகழாண்டு இறுதிக்குள் கணினிமயமாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலன் - குறைதீர்ப்பாயத் துறை இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
29 டெல்லி வைஷாலி பகுதியுடன் நொய்டா நகரை இணைக்கும் ‘புளூ லைன்’ மெட்ரோ ரெயில் சேவைக்குட்பட்ட 50 ரெயில் நிலையங்களில் நேற்றி இலவச வைபை சேவை தொடங்கியது.
30 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகரான செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா செய்துள்ளார்.
31 ஓணம் பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் இருந்து அடுத்த மாதம் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று முதல் துவங்குகின்றன.
32 நிறவெறி தூண்டுதலினால் இரண்டு கொலைகளைச் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மார்க் அஸேவுக்கு இதுவரை பயன்படுத்தாத ஊசி மருந்து மூலம் புளோரிடாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
33 கோவை -ஈச்சனேரி அருகே தென்காசியிலிருந்து கோவை நோக்கி வந்த டிராவல்ஸ் பஸ்சும், கொச்சியிலிருந்து கோவை நோக்கி வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பஸ் கவிழ்ந்ததில் 10 பயணிகள் காயமடைந்தனர்.
34 பான் எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
35 பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளை வேரறுப்பதற்காக அந்த நாட்டுக்கு தூதரக ரீதியில் உதவ தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
36 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.52 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
37 கோவில்பட்டி-நல்லி இடையே நடைபெற்ற பணிகள் முடிந்ததன் காரணமாக ரயில்கள் வழக்கமாக இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
38 தரவரிசை பட்டியலில் முதல், 26 இடங்களை பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் வந்த, ௧௦ பேர், சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியை தேர்வு செய்தனர்
39 இங்கிலாந்தின் தலைசிறந்த மாரத்தான் ஓட்டப் பந்தய வீரரான மோ பாரா தனது கடைசி 5000 மீ ஓட்டத்தில் 0.03 வினாடி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.
40 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு, உணவு பாதுகாப்பு தரச்சான்று கட்டாயமாக பெற வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
41 பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு: ஹரியாணா, பஞ்சாபில் வன்முறை; 31 பேர் பலி - ரயில், பஸ்களுக்கு தீ வைப்பு; 250 பேர் படுகாயம்
42 சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
43 தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் தான் இந்தியை எதிர்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
44 குட்கா விவகாரம் குறித்து அவை உரிமைக்குழு கூட்ட முடிவை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
45 தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வருகிறார்.
46 ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
*🔴🔵மதி செய்திகள் 24/7*
47 அரசு கொறடாவின் பரிந்துரையை ஏற்று 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ள பேரவைத் தலைவர் தனபால், இதில் உள்ள சட்டச்சிக்கல்களை தீர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
48 மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
49 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
50 இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 12 டெஸ்டுகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்சின் (தென்ஆப்பிரிக்கா) உலக சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்.
51 ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர் விருதை 3-வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.
52 ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கணையை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.
53 வடகொரிய ராணுவம், நேற்று நடத்திய மூன்று ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
54 தென் கொரியாவில் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாம்சங் நிறுவன துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
55 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று 72 அடி உயர விநாயகர் சிலை நிறுவி பூஜைகள் செய்யப்பட்டது.
56 உத்தரபிரதேச மாநிலத்தில் என்கவுன்ட்டரில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
57 முதல்வர் பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், பழனிசாமிக்கு எதிராக தினசரி ஒரு எம்எல்ஏ பேசி அதிர்ச்சியளித்து வருகின்றனர்.
58 பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த உதயசந்திரன், இனி பாடத்திட்ட மாற்றம் தொடர்பானவற்றை மட்டும் கவனிப்பதுடன் புதிய முதன்மை செயலர் பிரதீப்யாதவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக