MATHI NEWS காலை செய்திகள்@11/8/17
தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் எத்தனை? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதுஇதுகுறித்து வரும் 16ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளை தடை செய்ய விதிகள் வகுக்க இருப்பதாக நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 33,345 சாலை விபத்துகள் நடந்துள்ளதுஇதில் 8,452 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டிஎன் இணையதளம் தயாராகி விட்டதால் தொழில் நிறுவனங்கள் தங்களின் ஜூலை மாதத்திய மாதாந்திர படிவத்தையும் வரியையும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தின் மூலம் செலுத்தலாம்.
உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான் என சகிப்புத்தன்மை குறித்து துணை ஜனாதிபதி பதவி காலத்தை நிறைவு செய்த ஹமீது அன்சாரி பேச்சுக்கு மறைமுகமாக துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள வெங்கையா நாயுடு பதிலடி கொடுத்துள்ளார்
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு குறித்து, அதிகாரபூர்வமாக எந்த தகவ லும் எங்களுக்கு வரவில்லை என முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவை அதிமுகவின் பொதுச் செயலராக்கியது நாங்கள்தான்-அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம் என திவாகரன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்னும் அங்கீகரிக்க வில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுத்துறை அதிகாரிகளுக்கு (மாநில சிவில் சர்வீஸ்) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நிலை உயர்வு அளித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடித்து சிறப்பாக செயல்பட்டவர் ஹமீது அன்சாரி என அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நாட்டில் 682 பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன, அதில் தமிழகத்தில் 232 என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தல் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் மூலம் நடத்தப்படும் என்று உ ச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் உணவை பார்சல் செய்து கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
தன்னலமற்ற மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் மகத்தான தொண்டுகளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, கொச்சைப்படுத்த வேண்டாம்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முரசொலி பவளவிழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:அரசியலில் சேர்வதாக இருந்தால் 1983ல் கருணாநிதி அழைத்தபோதே சேர்ந்திருப்பேன்தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம் தான் முக்கியம்தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும்.திராவிடம் என்பது நாடு தழுவிய ஒன்று
விம்மாமல், பம்மாமல் ஆவன செய், புரட்சியின் வித்து தனிச்சிந்தனையே என டுவீட்டரில் கருத்துப்பதிவு வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்.
கமல் அரசியலுக்கு வந்தால் மகிழச்சி : நடிகர் பிரபு
திண்டுக்கல் எஸ்பிஎஸ் நகரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்குடியில் அனுமதியின்றி செயல்படும் நீச்சல் குளத்தை மூட மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மழை வெள்ளத்தில் ஒரு தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதை கவனிக்காமல் சென்ற ஒரு அரசுப் பேருந்து விபத்தில் சிக்கி, அந்தரத்தில் தொங்கி நின்றது. இவ்விபத்தில் பேருந்துப் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்
கிருஷ்ணகிரி,பணமுட்லு என்ற கிராமத்தில் கிரானைட் குவாரியில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது.இதில் குவாரியில் இருந்த இஸ்மாயில் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தங்கவயல் மாரிகுப்பம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் லோக்ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோதனை நடத்தினார்.மாரிகுப்பம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்ததை தொடர்ந்து கோலார் மாவட்ட லோக்ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் பவன்குமார் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆவணங்களை ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் நீர் ஆதாரங்களை வலுப்படுத்த நீர் மேலாண்மை என்ற புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.
தாராபுரம் அருகே மூலனூரில் நிதி நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை
அமித்ஷா இங்கு வந்துவிட்டார், உங்களுடைய ஓய்வு நேரம் முடிந்துவிட்டது என பிரதமர் மோடி பா.ஜனதா எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்
பீகார்: வயதானவர்களை தேடி மருத்துவ உதவி வழங்கும் தெரபி வேன் அறிமுகம்
நாரதா வழக்கில் கோல்கட்டா மேயரிடம் அமலாக்கத்துறை விசாரணை
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 546 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அபு துஜானா மரணத்தின் விளைவுகளை இந்தியா எதிர்க்கொள்ள வேண்டும் என்ற மிரட்டல் கடிதம் உ.பி. ரெயிலில் எடுக்கப்பட்டு உள்ளது.
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் உரிமை தொடர்பாக பூடான் தெரிவித்ததாக சீன தூதரக அதிகாரி வெளியிட்ட தகவல்களை பூடான் நிராகரித்துள்ளது
தென் சீன கடற்பகுதியில் சீனாவால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுக்கு சற்று தொலைவில் அமெரிக்க போர் கப்பல் ஒன்று பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் தன் மகளுக்கு 600-க்கும் மேற்பட்ட முறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 12000 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பாகிஸ்தான் நாட்டின் அன்னை தெரசா என்று அன்போடு அழைக்கப்படும் டாக்டர் ரூத் பாவ் இன்று காலமானார்.உடல்நிலை சரியில்லாமல் சில நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்
ஊழல் குற்றச்சாட்டினை தொடர்ந்து இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் கருணாநாயகா பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்
பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து போலீஸார் அவர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளனர்அதில், கைதான பல்சர் சுனில் முதல் குற்றவாளியாகவும், திலீப்பை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்க கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பி.வி.சிந்து முறைப்படி தனது பதவி பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
உலக தடகளப் போட்டியில் போட்ஸ்வானா வீரர் மக்வாலா தனியாக ஓடி வந்தார்தனியாக ரேஸில் கலந்து கொண்டு ஓடிய அவர் அரை இறுதிக்குத் தகுதி பெற்றார்-வயிற்று வலி காரணமாக மற்ற வீரர்களுடன் அவர் ஓட முடியவில்லை.
இன்றைய🛑பரபரப்பு🛑செய்திகள் 10/08/17
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை : தேர்தல் ஆணையம்.
விகே.சசிகலா தலைமையிலான அதிமுகவை தான் மக்கள் ஏற்று கொள்வார்கள். அதிமுக என்பது ஒரு அணி தான் மூன்று அணிகள் இல்லை- சுப்பிரமணிய சுவாமி.
இன்று வெளியான அறிக்கை மூலமாக நாங்கள் வைத்த கோரிக்கைகளில் பாதி வந்து விட்டார்கள், மீதி வரட்டும் பின்னர் இணைப்பு குறித்து பேசுலாம் - ஓபிஎஸ்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டுமென்றே தொண்டர்கள் நினைக்கிறார்கள்- ஓ.பன்னீர்செல்வம்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் முரசொலி நாளிதழின் பவள விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு முறையான இருக்கை வசதி மற்றும் பத்திரிகையாளரை அனுமதிக்காமல் அலைக்கழிப்பு.
செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசிய சேகர்பாபு எம்எல்ஏ.தொடர்ச்சியாக திமுக நிகழ்ச்சிகளில் பத்திரிக்கையாளர்களை அவமானப் படுத்தும் அவலம்.
துரோகத்தின் உச்சகட்டத்திற்கு சென்று இருக்கிறார் எடப்படாடி நாங்களும் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.ஆளுநர் அவசரமாக தமிழகம் வர வேண்டியது இருந்தாலும் இருக்கலாம் - டிடிவி ஆதரவாளர் புகழேந்தி.
கருத்து சுதந்திரத்திற்கும், எழுத்து சுதந்திரத்திற்கும் தரும் மரியாதையே முரசொலி பவள விழாவின் சிறப்பு : இந்து குழும தலைவர்.
அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம் கூடிய விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் : ஒபிஎஸ்.
குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
செப்டம்பர் 1ம் தேதி முதல் பி.இ. படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என உயர் கல்வித்துறை அறிவிப்பு.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முரசொலி செல்வம், இந்து ராம், தினமலர் ரமேஷ், விகடன் சீனிவாசன், தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, உள்ளிட்டோரும் முரசொலி விழாவில் பேசுகின்றனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.
முரசொலி பவள விழா மேடையில் ஏறாமல் பார்வையாளராக கிழே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
தினகரனின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகள் 75பேருக்கு அதிகாரமில்லை : எம்எல்ஏ வெற்றிவேல்.
தேர்தல் ஆணையத்தின் தலைவராக எப்போது எடப்பாடி பழனிசாமி ஆனார் என தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் முதலமைச்சர் பதவியை இழக்க நேரிடும் - டிடிவி தினகரன்.
சசிகலா கூறியதால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. தேவைப்பட்டால் கட்சியை அறுவை சிகிச்சை செய்யப்படும். கட்சி விரோத நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் : டிடிவி தினகரன்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மடியில் கனம் இருப்பதால் பயம் இருக்கிறது.சசிகலா நியமித்த திண்டுக்கல் சீனிவாசனை ஏற்பவர்கள், என்னை ஏற்க மறுப்பதேன் ? : டிடிவி தினகரன்.
மடியில் கனம் இருப்பதால் அமைச்சர்கள் சிலர் என்னை விலக்க திட்டமிடுகின்றனர். பதவியில் இருக்கிற வரையில் சுருட்டிக் கொண்டு செல்வதில் தீர்க்கமாக இருக்கிறார்கள் : டிடிவி தினகரன்.
அந்நிய செலவாணி மோசடி வழக்கில் வரும் 16ஆம் தேதி சாட்சி விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராக உத்தரவு.
டெல்லியை திருப்திபடுத்தவே ஈபிஎஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளது : நாஞ்சில் சம்பத்.
எல்லோரையும் ஒன்றிணைப்பதற்கு ஈபிஎஸ் அணி தீர்மானம் உதவி செய்யும் : அன்வர் ராஜா.
ஊழல் புகாரில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ரவி கருணநாயகே ராஜினாமா.
சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் - ஓ.பி.எஸ்.ஆதரவாளர் கே.பி.முனுசாமி.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போதுதான் விழித்துள்ளது : ஓபிஎஸ் அணி.
ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது யூகமே : கே.பி.முனுசாமி.
டெல்லியில் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.
ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை, சசிகலா, டிடிவியை கட்சியிலிருந்து நீக்கினால் பேச்சு என கூறியிருந்தோம் : ஓபிஎஸ் அணி.
இலங்கை கடற்படையால் கைதான 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்.
பா.ஜ.கவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமாருக்கு எதிராக லாலு பிரசாத் மகன் யாத்திரை.
தற்போதைய செய்திகள்@11/8/17
நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய நாயுடு இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அரசு அனுமதி மறுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரசு வழக்கறிஞர் நியமன வழக்கில் சட்டத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விதவைகள் நல திட்டங்கள் குறித்த புதிய அம்சங்களை உருவாக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்களை கொண்ட குழுவாக அமைத்து பணியாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த கூட்டத்தல் முரசொலி பவளவிழா குறித்தும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது 2 மகன்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சென்னையில் விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கம்
மன்னார்குடியில் தினகரன் பேனர் கிழிப்பு
தஞ்சாவூரில் 5,568 மதுபாட்டீல் பறிமுதல்: 3 பேர் கைது
சேலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை: ரவுடி கைது
டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் விவசாயிகள் சந்திப்புதமிழ்நாடு இல்லம் முன்பு 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்பயிர்கடன் ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
தாராபுரம் அருகே 10-க்கும் மேற்பட்ட தனியார் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் கோணத்தில் கட்டப்பட்ட அரசுக் கல்லூரியை திறக்க வேண்டும்கட்டிடம் கட்டி முடிக்கப்ப்டடும் திறக்கப்படாததற்கு மாணவர்கள் எதிர்ப்புகாலம் தாழ்த்தப்படுவதாக குற்றம்சாட்டி மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
பெரம்பலூர் மரவந்தம் கிராமத்தில் சாலையோர மரத்தின் மீது பள்ளி வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக வி.களத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக வந்த பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை முயற்சிதான் காதலித்த இருவரும் தன்னை விட்டு நழுவியதால் வேதனையில் முடிவுரயில் நிலையத்தில் இருந்தோர் மீட்டுக் காப்பாற்றியதால் தப்பினார்
கருத்து சொல்கிறபோது அண்ணன்-தம்பிகள் என்ற உணர்வோடு பேச வேண்டும் என ஒ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒருதாய் மக்கள் எனவும் கூறியுள்ளார்.
அதிமுக வலுவாக இருப்பது பாஜகவுக்குத்தான் நல்லது் அதிமுக ஆட்சி கலையும் எனதுவதந்தி-பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ
ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோத்பூர் மாவட்டத்தின் பாலேசர் பகுதியில் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீநகரில் உள்ள சோமபர்பக் பகுதியில் உள்ள ஜம்மு-காஷ்மீர் வங்கியின் ஏடிஎம் மிஷினை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சீனாவில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் பெண் ஒருவர், தனக்கு பிறந்த பிஞ்சு குழந்தையை பிளாஸ்டிக் பையில் பார்சல் கட்டி அனாதை இல்லத்திற்கு கொரியர் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
சோமாலியா கடற் கொள்ளையர்களால் கடலில் வீசப்பட்ட 180 அகதிகள்6 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்சர்வதேச படையினர் நெருங்கியதைத் தொடர்ந்து கடலில் தூக்கி வீசினார்கள் கொள்ளையர்கள்
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 336 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 336.46 புள்ளிகள் சரிந்து 31,194.87 புள்ளிகளாக உள்ளது.தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 115.90 புள்ளிகள் குறைந்து 9,704.35 புள்ளிகளாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக