செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

கலைஞரை சந்தித்த பின் வைகோ பேட்டி.



கலைஞரை சந்தித்த பின் வைகோ பேட்டி.

*என்னை வைகோ என கூறியவர் அண்ணன் கலைஞர் தான்*

*அதற்கு முன் யாரும் என்னை அவ்வாறு அழைத்ததில்லை.*

*29ஆண்டுகள் அவருக்கு நிழலாக இருந்தேன்.*

*என் மீது அளவற்ற பாசம் கொண்டவர்.*

*என்னை அரசியலில் வார்ப்பித்தவர்.*

*என் அடி மனதில் ஆழ பதிந்துள்ளார்.*

*உள்ளே சென்ற போது என்னை கையை பற்றி கொண்டார்.*

*இரண்டு மாதமாக அண்ணன் என் கனவில் வந்தார்.*

*அவரை பார்த்து கண்ணீர் விட்டேன் அவரின் கண்ணிலும் கண்ணீர் வந்தது.*

*அவர் பேச முற்பட்டார்..ஆனால் குழாய் பொறுத்தப்பட்டதால் பேச முடியவில்லை.*

*அவர் முழு நலம் பெறுவார்.*

*நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார் மீண்டும் உரையாற்றுவார்.*

*முரசொலி மாநாட்டிற்கு வரச்சொன்னார் ஸ்டாலின் அப்போது நானும் வருவதாக சொன்னேன் அவரின்  முகத்தில் பொன் முறுவல் காண கிடைத்தது.*

*முரசொலி விழாவில் கலந்து கொள்வேன்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக