சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
```தூர்தர்ஷன் லோகோவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய லோகோவுக்கு பதிலாக, புதிய சின்னத்தை வடிவமைக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷனின் மேல் இருக்கும் பழையகால நினைவுகளைப் பாதுகாக்கும் வகையிலும், இக்கால இளைஞர்களுடன் டிடிக்கான இணைப்பை ஏற்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 23 சேனல்களை ஒளிபரப்பி வரும் தூர்தர்ஷன், இதற்காக புதிய சின்ன வடிவமைப்புப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.புதிய சின்னங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 13-ம் தேதி கடைசி நாள் ஆகும்```
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக