வெள்ளி, 28 ஜூலை, 2017

ஆஹா' முனையானது அரிச்சல் முனை!



'ஆஹா' முனையானது அரிச்சல் முனை!

கடந்த 1964ம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி தீவே அழிந்து போனது. ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்தது. முகுந்த்ராயர் சத்திரத்துக்கு பிறகு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தனுஷ்கோடியை புயல் தாக்கிய சமயத்தில் இந்த சாலை அலங்கோலமாகி விட்டது.  அதற்கு பிறகு, அரிச்சல் முனைக்கு வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சாலை போடப்படவில்லை. சேரும் சகதியுமாக உள்ள இந்தப் பகுதியில் ஃபோர் வீல் ட்ரைவ் கொண்ட ஜீப்புகள் மட்டுமே போக முடியும். சாதாரண வாகனங்கள் சென்றால் சேற்றில் சிக்கிக் கொள்ளும்.

ராமேஸ்வரத்தில் இருந்து  அரிச்சல் முனைக்கு சாலை போடும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 9.5 கி.மீ தொலைவுக்கு  சாலை போடும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ரமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக அரிச்சல் முனைக்கு செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. இருபுறமும் கடல் தண்ணீர் சூழ்ந்திருக்க இந்த பயணம் சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக