திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சுவிதா சிறப்பு ரயில்...
சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூர் -திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82601: ஆகஸ்ட் 11, 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எ'ண் 82602: ஆகஸ்ட் 15, 27 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் -எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82631: ஆகஸ்ட் 11, 24 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
ரயில் எண் 82632: ஆகஸ்ட் 15, 27 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக