புதன், 19 ஜூலை, 2017

இயற்கை உலகம்: அணில்கள் மறப்பதில்லை!...



இயற்கை உலகம்: அணில்கள் மறப்பதில்லை!...

அணில்கள் நினைவாற்றலுக்கு பெயர் பெற்றவை. அவை உணவை எங்காவது பதுக்கி வைத்துவிட்டு, திரும்பவும் அதே இடத்தில் போய் அதை எடுக்கும் திறன் படைத்தவை. ஆனால், அணில்கள், புதிதாகக் கற்றுக்கொண்ட ஒரு செயலை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டவை என்பதை, இங்கிலாந்தின் எக்செட்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆய்வுக்கூடத்தில், சில சாம்பல் நிற அணில்கள் உணவைப் பெற, சில வேலைகளைச் செய்ய வைத்தனர் விஞ்ஞானிகள். பிறகு, 22 மாதங்கள் கழித்து அதே உத்தி மூலம் உணவைப் பெறுகின்றனவா என்று சோதித்தபோது, சில வினாடிகளில் அந்த அணில்கள் அந்த வேலையைச் செய்து உணவைப் பெற்றுக்கொண்டன. இந்த நினைவாற்றலின் உதவியால் தான் நகர்ப்புறங்களிலும் அணில்களால் உயிர் வாழ முடிகிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக