ஞாயிறு, 30 ஜூலை, 2017

MATHI NEWS -30-7-2017-sunday

MATHI NEWS    8.30am -30-7-2017-sunday

♈ 🇮🇳  கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற காதலரை போலீசார் மீட்பு-மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  காதல் ஜோடி ஒன்று கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றது. இதை பார்த்த போலீசார், உடனடியாக அந்த காதல் ஜோடியை மீட்டு,காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், நுங்கம்பாக்கம் வீராசாமி தெருவை சேர்ந்த 19 வயது இளைஞன் என்பதும், கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும் தெரிய வந்தது. அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்ய முயன்றது தெரிந்தது. அவர்களை சமாதானப்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்



♈ 🇮🇳  சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் போரூர் ஏரியும் ஒன்று. இங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி  வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் கரைப்பகுதியில் குப்பை கழிவுகள் தேங்கியும், புதர் மண்டியும் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. இவற்றை சுத்தம் செய்யும் பணியில் சென்னை பெருநகர காவல்துறை, தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேற்று தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று  ஏரிக்கரையில் கிடந்த குப்பை, கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், செடி கொடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். சேகரிக்கப்பட்ட குப்பைகளை சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்து அகற்றினர். இந்த பணியில், வடக்கு கூடுதல் கமிஷனர் ஜெயராமன், வடக்கு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பெரியய்யா மற்றும் வடக்கு இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் ஈடுபட்டனர்

♈ இன்றைய(ஜூலை 30) விலை: பெட்ரோல் ரூ.67.51; டீசல் ரூ.58.32

♈ 🇮🇳  இன்று மன் கீ பாத்தில் பிரதமர் மோடி உரை

♈ 🇮  கேரளாவில் இன்று முழு அடைப்பு-கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை :

♈ 🇮  சென்னை: ராயப்பேட்டை பகுதியில் டிரான்பார்மரில் தீ விபத்து–விஸ்வரூபம்

♈ 🇮 இ ந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.சீனாவுக்கான சுற்றுலா, சென்னையில் இருந்து, செப்., 29ல்,புறப்படும். இந்த ஏழு நாள் விமான சுற்றுலாவுக்கான கட்டணம், நபர் ஒன்றுக்கு, 94 ஆயிரம் ரூபாய்

♈ 🇮  ''மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்பாக, கோர்ட்டில் பதிலளிப்பேன்; நானே நேரடியாக சென்று வாதாடுவேன்,'' என, கர்நாடக மாநில, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா தெரிவித்தார்

♈ 🇮  ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட, 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் அடிக்கடி, 'மக்கர்' செய்வதால், ஊழியர்கள் தவிக்கின்றனர்.தமிழகத்தில், 2.03கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. அவர்களுக்கு, ஏப்., 1 முதல்'ஸ்மார்ட்' கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும், 25 ஆயிரத்து, 532ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.அதில், ரேஷன் கார்டு தாரர்களின் விபரம் மற்றும் அரிசி,பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் இருப்பு, வினியோக விபரம் போன்றவை இருக்கும். பொருட்கள் வழங்கியதும், கார்டு தாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., சென்று விடும்.கருவியில் பதிவாகும் விபரங்கள் அடிப்படையில், கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், இக்கருவி, 'ஆன்லைன்'மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், அலுவலகங்களில் இருந்தபடியே,அதிகாரிகள், கடைகளை கண்காணிக்க முடியும்.இக்கருவிகள் அடிக்கடி, 'ஹேங்' ஆவதால்' பொருட்கள் வினியோகம் செய்வதில், தாமதம் ஏற்படுகிறது. மேலும், கருவிகள் பழுதானாலும், உடனுக்குடன் சரிசெய்து கொடுப்பதில்லை.அந்த சமயங்களில், பொருட்கள் வினியோகம், சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், ஊழியர்களிடம் கார்டு தாரர்கள் பிரச்னை செய்கின்றன.

♈ 🇮  பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட அயோத்தி எக்ஸ்பிரஸ்,கும்பகோணத்தில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

♈ 🇮  ஆதார் கார்டு வைத்திருந்தாலும், அதில் உள்ள விபரங்கள், பான் கார்டில் உள்ள விபரங்களுடன் ஒத்து போகாததால், ஆயிரக்கணக்கானோர், அவை இரண்டையும், இணைக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த குறைபாட்டை தவிர்ப்பதற்காக, மீண்டும் பான் அட்டைக்கோ, ஆதார் அட்டைக்கோ, திருத்தம் கோரி மனு கொடுக்க வேண்டியுள்ளது.இந்த நடைமுறைகள் முடிய, 10நாட்களுக்கு மேல் ஆவதால், கடைசி தேதியான, ஜூலை, 31க்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.அதனால், ஜூலை, 31 கெடுவை, மேலும், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என அவர்கள்,எதிர்பார்க்கின்றனர்

♈ 🇮  'மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, டில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது--- விஸ்வரூபம்

♈ 🇮 மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹனுமபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (23). இவர் கோகலூரு கிராமத்தை சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து வந்தார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர்,ஜெயராமுடன் இனி பேசவோ, பழகவோ கூடாது என அந்த பெண்ணுக்கு புத்திமதி கூறினர். ஆனால் அந்த பெண் காதலனை சந்தித்து வீட்டில் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். ஜெயராம், மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று காலை மைனர் பெண்ணை யாருக்கும் தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்த பெண் வீட்டார் ஜெயராம் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஊரக போலீசார் ஜெயராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

♈ 🇮 சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,சேலத்தில் இருந்து தனி ரயில் மூலம் நேற்று கரூர் ரயில் நிலையம் வந்து, ஆய்வு மேற்கொண்ட ஹரிசங்கர் வர்மா ஈரோடு - கரூர் திருச்சி மற்றும் சேலம் கரூர் - திண்டுக்கல் ஆகிய இரண்டு வழித்தடங்கள் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்,கரூர் - திருச்சி இடையிலான பணி மார்ச் இறுதிக்குள் முடிவடைந்து விடும் என இவ்வாறு கூறினார்.

 11.30am -30-7-2017-sunday

♈ 🇮🇳  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சின்னையாசத்திரம் பகுதியில் போலியாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய ஈடுபடுவதாக, 3 பேரை போலிசார் கைது செய்தனர்

♈ 🇮🇳  வாடிக்கையாளர்களின் A.T.M. கார்டு எண்கள் மூலம் 40 லட்சம் மோசடி: பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கைது-அவினாசி சாலையில் இருக்கும்,குறிப்பிட்ட ஒரு  பெட்ரோல் பங்க்கில்

♈ 🇮🇳  கொடைக்கானல் கூக்கால் பிரிவு,மன்னவனூர் உள்ளிட்ட இடங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டத்தால் சுற்றுலாக்கயணிகள்,கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

 ♈ 🇮🇳  வேளாண்துறை வெளியிட்ட செய்தி: தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும். ஹெக்டேர் ஒன்றுக்கு 175 தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிரிமீய தொகையை காசோலையாக வேளாண் அலுவலகங்களில் செலுத்த வேண்டும். இதில் மத்திய அரசு 50சதவீதம், மாநில அரசு மற்றும் விவசாயிகள் தலா 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும். மரங்களின் வயதுக்கு ஏற்றாற் போல் மரம் ஒன்றிற்கு தொகை வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044- 4343400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.சமீபத்தில் சி.ஏ.ஜி., தனது அறிக்கையில், ரயில்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என ரயில்வேக்கு கண்டனம் தெரிவித்திருந்தது

♈ 🇮  கலாம் மணி மண்டபத்தில் குரான், பைபிள் புத்தகங்கள்

♈ 🇮  சேலத்தில் கட்டட தொழிலாளி அடித்துக்கொலை

♈ காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

♈ 🇮  கோவை: சூலூர் அருகே கணவன், மனைவி கொலை

♈   புதுச்சேரி: பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்த கவர்னர்-vishwarubam

♈   விருதுநகரில் இளைஞர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு–விஸ்வரூபம்

♈ 🇮 ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

♈   கொரியா ஏவுகணை சோதனை: சீனாவுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம்

♈   திருப்பதியில் ஒன்றறை வயது ஆண் குழந்தை மீட்பு.

♈   போருக்கு தயாராகுங்க; ராணுவத்திற்கு சீன அதிபர் அறிவுரை

♈   மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 25.கால்டாக்சி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் ஒன்றறை வயதில் குழந்தை உள்ளனர். நேற்று இரவு வீட்டில் மூன்று பேரும் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம கும்பல், அவரது வீட்டுக்கதவை தட்டியது. விசாரணையில், அவர்கள் போலீஸ் எனக்கூறியுளளனர். ரமேஷ் கதவை திறக்க மறுத்துள்ளார். தொடர்ந்து அந்த மர்ம கும்பல் கதவை உடைத்தது. இதனால், பயந்து போன ரமேஷ் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அங்கு, அந்த மர்ம கும்பல், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிசென்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் நாகமலை புதுக்கோட்டையில் நடந்த கொலை சம்பவத்தில் ரமேசிற்கு தொடர்பு உள்ளது. இதனால், பழிக்கு பழியாக ரமேஷ் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

♈   மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6,699 கன அடியிலிருந்து 7,017 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 33.30 அடியாகவும், நீர் இருப்பு 8.90 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

♈ 🇮 தஞ்சை : கதிராமங்கலத்தில் அண்ணாதுரை, அமுதா ஆகிய இருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக 71 வது நாளாகப் போராட்டம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது

♈ 🇮 சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த மேராஜ் என்ற பெண் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

♈ 🇮🇳  சென்னையில் கல்லூரி மாணவர்கள் பைக் ரேஸால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒண்டிக்குப்பத்தில் மாணவர்களின் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்தார். ரேஸ் சென்று விபத்தை ஏற்படுத்திய மாணவர்கள் மது போதையில் இருந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் விஜய் மற்றும் சீனிவாசன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்

♈ 🇮🇳  கோவை அரசு மருத்துவமனையில் 24பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 175 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

♈ 🇮🇳  தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல் சென்னையில் தொடங்கியது. தலைவர் பதவிக்கு விக்ரமனும், செயலாளர் பதவிக்கு செல்வமணி போட்டியிடுகின்றனர். மேலும் பொருளாளர் பதவிக்கு இயக்குநர்கள் பேரரசு,ஜெகதீசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

♈ 🇮🇳  கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில், தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், மகாலிங்கத்தின் ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் அதற்காக கடவு எண்ணை தெரிந்துகொண்டு, அதன் மூலம் பணம் மாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மகாலிங்கத்திடம், “உங்களுடைய ஏ.டி.எம். கார்டை எங்கெல்லாம் கொடுத்தீர்களா...”? என்று விச்சரித்தனர்.

தன்னுடைய கார்டை உறவினர்களிடம் கூட கொடுத்து பணம் எடுத்ததில்லை, வழக்கமாக அவினாசி சாலையில் இருக்கும்,குறிப்பிட்ட ஒரு  பெட்ரோல் பங்க்கில்தான் தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதாகவும், அதற்காக மட்டுமே ஏ.டி.எம். கார்டை அங்குள்ள ஊழியர்களிடம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெட்ரோல் பங்க்குக்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், அங்குள்ள ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். அப்போது அங்கு இருக்கும் ஊழியர்கள் இருவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி சுவைப் கருவியில் தேய்த்து பணத்தை பெற்ற பின்னர், அருகிலிருந்த மற்றொரு கருவியில் கார்டுகளை தேய்ப்பதையும் பார்த்துள்ளனர்.
அதன் பின்னர் போலீசார் ஒரு வாரம் அந்த பெட்ரோல் பங்க்குக்கு அவ்வப்போது சென்று அந்த இருவரின் நடவடிக்கையை கண்காணித்தபோதும், அந்த ஊழியர்கள் இருவரும் அதுபோன்று செய்து வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது,கோவையை சேர்ந்த ஆனந்த் (வயது-32), மகேந்திரன் (வயது-30)என்பதும், ‘ஸ்கிம்மர்‘ என்ற கருவி மூலம் ஏ.டி.எம். கார்டை தேய்த்து,அதில் உள்ள எண்ணை தெரிந்து கொண்டு, அதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது

   5pm -30-7-2017-sunday

♈ 🇮🇳 நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகம் 6வது இடத்தையும்,கோவை வேளண் பல்கலைக்கழகம் 20வது இடத்தையும்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 28வது இடத்தையும், பிடித்துள்ளது

♈ 🇮🇳  ஊத்தங்கரை அருகே மான் இறைச்சியுடன் 2 பேர் கைது

♈ 🇮🇳  மதுரையில் பலத்த மழை

♈ 🇮🇳  கமல், நடன இயக்குநர் காயத்ரிக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வக்கீல் நோட்டீஸ்

♈ 🇮🇳  மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் குளித்த வாலிபர் பலி

♈ 🇮🇳  பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: ஜம்முவில் ரெய்டு

♈ 🇮🇳 நெல்லை அருகே போலீசைத் தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

♈ 🇮🇳 டெல்லியில் 15-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்
♈ 🇮🇳  சென்னை பல்கலையில் 15 மாணவர்கள் சிறை வைப்பு-அமைச்சர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கையாக சிறை வைப்பு-சென்னை பல்கலை விழாவில் அருண்ஜெட்லி பங்கேற்பு

♈ 🇮🇳  someone commet-- Group admine sir. Don't sperad ''vishwaroopam" news. It is oneside. He also expect money for news

♈ 🇮🇳  தமிழகத்தில் தற்போதுள்ள மாவட்டங்களை60 ஆக பிரித்து, அரசு நிர்வாகம் செயல்படத் தொடங்கினால் மாநிலம் முன்னேற்ற பாதையில் செல்லும் என்கிறார்கள் அரசியல் கட்சியினர். ஆனால் மாவட்டங்களின் எண்ணிக்கையை கூட்டுவதுடன் காலி பணியிடங்களை நிரப்புவதும் மிக முக்கியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.60மாவட்டங்கள் என எண்ணிக்கை கூடினால், ஆட்சியர்கள் எண்ணிக்கைதான் 60 ஆகும். வேறு எந்த ஒரு மாற்றமும் நடக்காது. ஏன் எனில், அரசின் பெரும்பாலான துறைகளில் லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பி மக்கள் சேவையைத் துரிதப்படுத்த அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் நல திட்டங்கள், அரசின் பிற சேவைகள் சென்றடைவதில் தேக்கம் ஏற்பட்டு அதுநீடிக்கும். ஆகையால் அதிக மாவட்டங்கள் பிரிக்கப்படும் சூழலில் காலி பணியிடங்களையும் நிரப்பினால்தான் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

♈ 🇮🇳  ஆக.5 முதல் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன்... தினகரன் அறிவிப்பால் பரபரப்பு-சசிகலாவின் சீராய்வு மனு மீதான முடிவுக்குப் பின் அதிமுகவை வலுப்படுத்துவோம்-தஞ்சாவூரில் சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி
♈ 🇮  ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸ் நகரில் உள்ள இரவு நேர விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மூவர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

♈ 🇮  இலங்கையில் வறட்சியான கால நிலை நீடித்து வரும் நிலையில் மனிதர்களை போன்று மிருகங்களுக்கும் குடி நீர் கிடைக்கும் வகையிலான முன் மாதிரியான வேலைத்திட்டமொன்று புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது-நீர் தேடி அலையும் காட்டு விலங்குகளுக்கு நீர் கிடைக்கும் வகையில் குளங்களை அண்மித்த பகுதியில் தகர மற்றும் பிளாஸ்ரிக் பரல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டு வவுசர்கள் மூலம் நீர் நிரப்பப்பட்டு நீர் வழங்கப்படுகின்றது

♈ 🇮 பயங்கரவாத நடவடிக்கை மூலம், விமானம் தாக்கப்படலாம் என்ற சந்தேகத்திற்குரிய தாக்குதலை, பயங்கரவாத தடுப்பு போலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் மார்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார் .

♈ 🇮  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் 29,184 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

♈ 🇮  கொலம்பியா பொலிசார் பிரபல மொடல் அழகியை காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணமாக்கி படமெடுத்து இணையத்தில் வௌயிட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.

 ♈ 🇮  பாகிஸ்தான் நாட்டில் அடுத்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

♈   சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலாளியை கொலை செய்த வங்கி அதிகாரிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

♈   ரஜினி ரசிகர்களும், பாபா ஜி பக்தர்களும் இணைந்து தமிழகத்தில் நிலவும் வறட்சி அகன்று மழை பெய்யவேண்டும் என்பதற்காக மதுரை அழகர் கோயிலிலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில் நேற்று மாலை தங்க தேர் இழுத்தார்கள்.

♈   மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது-vishwarubam

♈   வடகொரியாவிற்கு படை பலத்தை காட்டும் வகையில் கொரிய தீபகற்பகத்தில் அமெரிக்காவின் ஏவுகணை வீச்சு விமானங்கள் பறந்தது –விஸ்வரூபம்

♈ 🇮 ஃபோபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதற்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

♈   அமேதி-வருகின்ற ரக்‌ஷா பந்தன் விழாவிற்கு மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் பெண்களுக்கு கழிப்பறை கட்டித்தரும் திட்டத்தை முன் வைக்கின்றனர் அதிகாரிகள். இதன்படி 854 “சகோதரர்கள்” தங்களது சகோதரிகளுக்கு கழிப்பறை கட்டித்தருவார்கள். அதுவும் தங்களது சொந்தச் செலவில். மாவட்டத்தின் பல்வேறு தாலுக்காக்கள், ஒன்றியங்களிலிருந்து இவர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழிப்பறைகளை கட்ட வேண்டும்.கட்டிய பின்னர் குலுக்கள் முறையில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். ரொக்கப்பரிசாக ரூ. 50,000 மும் மொஃபைல் ஃபோன்களும் வழங்கப்படும். கட்டப்பட்ட கழிவறைகளை அதிகாரிகளின் குழு ஒன்று ஆராயும். அதன் பின்னர் மாவட்ட அளவிலான விழா ஒன்றில் பரிசுகள் வழங்கப்படும் என்றனர் அதிகாரிகள்

♈   கொடைக்கானல்-பழனி சாலையில் சரக்கு வாகனம் மோதியதில் கார் 50 அடி பள்ளத்தில் விழுந்தள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநரை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது --- விஸ்வரூபம்

♈   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை இலுப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளார். விவசாயத் தோட்ட மின்வேலியில் சிக்கி 10 வயது சிறுவன் ஹரிபிரசாந்த் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

    8.30pm -30-7-2017-sunday

♈ 🇮🇳  ஈரோட்டில் போலியாக ரயில் டிக்கெட் தயாரித்து விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ரயில் டிக்கெட் விற்ற பழனிசாமி என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். பழனிசாமியிடம் இருந்து 141 ரயில் டிக்கெட் மற்றும் ரூ.1.60லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது

♈ 🇮🇳  திருவள்ளூர் மாவட்டம் மோவூரில் குட்டையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளான். குட்டையில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் விக்னேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்

♈ 🇮🇳  டெல்லி: அவசரக் காலங்களில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விமானங்கள் தரையிறங்க இந்திய விமானப் படை அனுமதி வழங்கியுள்ளது.அவசரக் காலங்களில் விமானங்கள் சாலையோரங்களில் தரையிறங்க இந்திய விமானப்படை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து விமானங்கள் தரையிறங்கும் வகையில் சாலையோரங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன

♈ 🇮🇳  அமிஷாக்கு ஐந்து வருடங்களில் பல மடங்கு வருமானம் உயர்ந்தது பற்றி யாருக்காவது கேட்க தைரியம் இருக்கிறதா –போலீஸ், அதிகார வர்கம் இருக்கும் பயத்தில் நடுக்கும் நம்ம ஆளுங்க அவங்களும் உயர மாட்டாங்க – உயர நினைப்பவர்களையும் காலை வெட்டி விட்டு உயர விட மாட்டார்கள். ஒருவருக்குள்ளே ஒருவர் வன்மம், பொறாமை , துரோகம் இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு பெற்றோராக, மனைவிகளாக ,சகோதர,சகோதிரிகளாக , நண்பனாக உறவினர்களாக வாழ்கின்றனர். என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் இவர்களே நல்லவர்களாக பேசுவதுதான்-reason – money  .

♈ 🇮🇳  ஒடிசாவில் மின்னல்தாக்கி 11 பேர் பலி: 8 பேர் படுகாயம்

♈ 🇮🇳  இயக்குநர் சங்க தலைவர் தேர்தல்: விக்ரமன் முன்னிலை-இயக்குநர் சங்க செயலாளர் தேர்தல்: ஆர்.கே. செல்வமணி முன்னிலை

♈ 🇮🇳  ஆக.,1 முதல் வேலை நிறுத்தம்: பெப்சி எச்சரிக்கை

♈ 🇮🇳  மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: சித்தராமையா

♈ 🇮🇳 ஜிஎஸ்டி - நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: ஜெட்லி

♈ 🇮🇳 கலாம் நினைவிடத்தில் மத நூல்கள்: உளவுத்துறை விசாரணை
♈ 🇮🇳  தொழில் துறையில் தமிழகம் முதலிடம்: நிர்மலா சீதாராமன்

♈ 🇮🇳  மழை வெள்ளத்தால் குஜராத் மக்கள் தத்தளித்து வரும் இந்நேரத்தில் தொகுதியில் மக்களுக்கு சேவை செய்யாமல் காங்., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு ரிசார்ட்டில் உல்லாசமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்தல் ஆக.,8 ல் நடக்கிறது. பா.ஜ., சார்பில் அமித்ஷா,மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிறுத்தப்பட்டுள்ளனர். காங்., வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற, 46 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், ஒன்றின்பின் ஒன்றாக பல காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., பக்கம் தாவி வருகின்றனர். இதனால் அகமது பட்டேல் வெற்றி கேள்விகுறியாக உள்ளது. இத்துடன் சமீபத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறிய, சங்கர் சிங் வகேலாவின் உறவினரான, பல்வந்த் சிங் ராஜ்புத் போட்டியிடுகிறார்

♈ 🇮🇳  ரூ. 15 கோடி தருவதாக பா.ஜ., வினர் பேரம் பேசியதாக குஜராத் காங்.,எம்.எல்.ஏ., திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்

♈ 🇮🇳  தீர்க்கமான முடிவெடுத்து கமல், ரஜினி அரசியலுக்கு வரலாம் - தமிழிசை பேட்டி.
♈ 🇮  வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி கூறினார் (அமித்ஷாவின் வரிபற்றி சரியாக சொல்ல முடியுமா.

♈ 🇮  இந்தியா பல்வேறு துறைகளிலும் தனது இலக்குகளை அடைவதற்கு உதவ தயாராக இருக்கிறோம் என ஜப்பான் தூதர் நோடா கூறியுள்ளார்

♈ 🇮 கேபிள் ஆப்ரேட்டர்களிடம் இருந்து கேளிக்கை வரி வசூலிக்க பஞ்சாப் அரசு திட்டம்.

♈ 🇮 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் யானை தாக்கியதில் தங்கராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். தனது மாட்டை தேடி வனப்பகுதி்க்கு சென்றபோது யானை தாக்கி உயிரிழந்துள்ளார் .

♈ 🇮  நைஜீரியாவின் டிக்வா என்ற ஊரில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒரே வீட்டில் தங்கி இருந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். போகோஹரம் தாக்குதலில் வீடுகளை இழந்தோர் தங்கியிருந்த வீட்டின்மீது பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயமடைந்துள்ளனர் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக