புதன், 26 ஜூலை, 2017

சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து தேவை - ஓவைசி



சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து தேவை - ஓவைசி

புதுடெல்லி

“இந்த அரசு பிற்பட்டவர், தாழ்த்தப்பட்டோர்/மலைவாழ் மக்கள் ஆணையங்களுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது. ஏனெனில் இந்த அரசு யாரையும் திருப்திபடுத்தும் அரசியலை செய்வதில்லை; அதே சமயம் அனைவருக்கும் நீதி வழங்கவும் முற்படுகிறது என்று கூறிக்கொள்கிறது. அப்படியெனில் சிறுபான்மையினர் நல ஆணையத்திற்கும் அரசியல் சட்ட அந்தஸ்தை ஏன் கொடுக்கக்கூடாது?” என்று வினா எழுப்பினார் ஓவைசி.

இந்தியாவின் மக்கள்தொகையில் சிறுபான்மையினரின் விழுக்காடு சுமார் 20% ஆக இருப்பதால் சிறுபான்மை நல ஆணையத்திற்கும் அரசியல் சட்ட அந்தஸ்து கொடுப்பது சரியானது; அவர்களால் தங்களது பணியை நன்கு செய்ய முடியும் என்றார் ஓவைசி.

விவாதத்தில் துணைக் கேள்வி ஒன்றை எழுப்பிய திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் திரிவேதி இந்தியாவில் வாழும் யூத மக்களுக்கு “சிறப்பு அந்தஸ்து” வழங்க வேண்டும் என்றார். அதன் மூலம் மோடிக்கு சிறப்பான வரவேற்பை இஸ்ரேல் அளித்ததற்கு திருப்தியளிக்கிற வகையிலான பதிலாக இருக்கும் என்றார். அரசிற்கு பல்வேறு யூத குழுக்களும் இக்கோரிக்கையை வைத்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறைந்து வரும் யூத மக்கள் தொகைக்கு ஏதேனும் இந்தியர்களால் செய்ய முடியும் என்பதையே இது காட்டும் என்றார் அவர்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நக்வி, “சிறுபான்மையினருக்கு அவர்களுக்கு ‘சிறுபான்மையினர்’ எனும் அந்தஸ்து இவ்விஷயத்தில் தொடர்புடையவர்களின் கோரிக்கையோடு , மாநில அரசுகளின் கோரிக்கையும் சேர வேண்டும், என்றார்.

அவர் மேலும் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது நாட்டில் 4,650 யூதர்கள் வாழ்ந்தனர். ஆனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படவில்லை என்றார். பெரும்பாலான யூதர்கள் மும்பை மற்றும் மராட்டியத்தில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஓவைசி இந்தியர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிப்பது என்பதும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அதே போல அந்தஸ்து அளிப்பதும் வேறு வேறானவை என்று சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக