ஞாயிறு, 23 ஜூலை, 2017

மதி செய்திகள் 22-7-2017-saturday

மதி செய்திகள் 22-7-2017-saturday

♈ 🇮🇳  ஓவியாவ எலிமினேட் செஞ்சிங்க... தமிழ்நாடே பத்தி எரியும்... பாக்றீங்களா.ஒரு கிராம் வெயிட்டு இது -அவ்

♈ 🇮🇳  இந்திய எல்லை பகுதிக்குள் சீனா அத்துமீறி வருவதை கண்டித்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என சிலிகுரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

♈ 🇮🇳  லண்டன்: உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள தகவல்கள் திருடப்படும் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. இது பேஸ்புக் செட் அப்பில் உள்ள குறைபாடு என்று கூறப்படுகிறது.இதனால் வேறொருவர் உங்கள் அக்கவுண்ட்டில் ஊடுவ முடியும். இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு பல்வேறு ஷாக்கிங் தகவல்கள் உள்ளன..

♈ 🇮  பிரிட்டனின் முதல் பெண் தலைமை நீதிபதி பதவியேற்பு

♈ 🇮  திருவண்ணாமலையில் ஸ்டாலின் ஆய்வு

♈ 🇮  அமெரிக்க வான் தாக்குதல்: 15 ஆப்கன் போலீசார் பலி

♈ 🇮  இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கை குறைவு: சுகாதார துறை தகவல்

♈ 🇮  மேற்கு வங்கத்தில் நாகப்பாம்புகளுடன் பக்தர்கள் பேரணி.

♈ 🇮  அமர்நாத் யாத்திரை:ஒரே நாளில் 4650 பேர் தரிசனம்

♈ 🇮  டில்லியில் ஜனாதிபதி ஆட்சி : பா.ஜ., எம்.பி. வலியுறுத்தல்.

♈ 🇮  வெளியுறவு அமைச்சக புதிய செய்தித் தொடர்பாளராக ராவீஷ் குமார் நியமனம்

♈ 🇮  வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19,000 கோடி கறுப்பு பணம்

♈ 🇮🇳 நெல்லை அருகே விஷம் குடித்து கணவன் மனைவி தற்கொலை-

♈ 🇮  தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே,ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து,ஆண்டுதோறும், தமிழகத்தின் தேவைக்காக,192 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். முறைப்படி தண்ணீர் வழங்காமல், கர்நாடக அரசு மறுத்து வருகிறது.தென் மேற்கு பருவமழை துவங்கியதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியது. இதையடுத்து, காவிரியில், வினாடிக்கு, 4,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இது, சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வருகிறது.கர்நாடகாவில், சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், நான்கு அணைகளுக்கும் நீர்வரத்து அபரிமிதமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நான்கு அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்பு உள்ளது.அதே நேரம், காவிரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. நான்கு அணைகளில் இருந்தும், வினாடிக்கு, 3,707 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.இதனால், மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் சரியும் என,பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்-

♈ 🇮  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.77 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை -22) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது

♈ 🇮  கொழும்பு : நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கப்பற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுக கப்பற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்

♈ 🇮🇳 மணிக்கு 600 கி.மீ. வேக ரயில்களை இயக்குவது தொடர்பாக ஆப்பிள் தொழிற்நுட்ப நிறுவனத்துடன் பேசி வருகிறோம் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கூறினார்.-

♈ 🇮  திண்டிவனம் அருகே மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

♈ 🇮  இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவர் ேக.பி.ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த ஜூன் 30ம் தேதி திருச்சியில் திமுக விவசாய அணி, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம், காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக,விடுதலை சிறுத்தைகள், உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி எடுத்த முடிவின்படி தமிழகம் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் பேரணி,ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

♈ 🇮  ஆலந்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக,ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் வழங்குதல் விழா நேற்று முன்தினம் நங்கநல்லூரில் நடந்தது. காஞ்சி மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர் கே.ஆர்.ஆனந்தன் தலைமை தாங்கினார். ஆலந்தூர் பகுதி தலைவர் இளமாறன் முன்னிலை வகித்தார். உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார். இதில்,உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநிலத் தலைவரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
   11.30am -22-7-2017-saturday


♈ 🇮🇳  சென்னை திருவொற்றியூர் மேற்குமாடவீதியிலுள்ள நந்தி ஓடை குப்பத்திலுள்ள மக்கள் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.  அப்பகுதியிலுள்ள சுமார் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் சுமார் 40 வருடங்களாக குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் தண்ணீர் வரி, வீட்டு வரி   உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வரும் நிலையில் அவர்களை திடீரென அந்த இடத்தினை காலி செய்யும்படி திருவொற்றியூர் தாசில்தார் செந்தில்நாதன் மிரட்டியதால் மக்கள் அவரை முற்றுகையிட்டார்கள்.மேலும் அவரவர் பொருட்களை எடுத்துக்கொண்டு எவ்விதமான வசதியுமற்ற கும்மிடிப்பூண்டியில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்லாவிடில் அந்த பொருட்களோடு தங்களையும் சேர்த்து அள்ளி கொண்டு போய் போட்டுவிடுவோம் என்றும், தாசில்தார் மிரட்டி திங்கள்கிழமை வரை கெடு கொடுத்ததாலும் மக்கள் அந்த தாசில்தாரை முற்றுகையிட்டார்கள்.சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து வந்த ஆய்வாளர் ராஜ்குமார் மக்களிடம் சமரசம் செய்து, தாசில்தாரை வாகனத்துடன் மீட்டார்     ♈ 🇮🇳 கன்னியாகுமரியில் டெங்கு, மர்ம காய்ச்சலால் தினந்தோறும் 40 பேர் பாதிக்கப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவ்வான் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். மேலும் 50க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் மருத்துவமனையில் அனுமதிப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்    ♈ 🇮🇳  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அலட்சியத்தால், பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது       ♈ 🇮🇳  அதிமுக நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி வாகனங்கள்: நிர்வாகிகள் அதிருப்தி       ♈ 🇮🇳  

ஆடி அமாவாசை விழா: சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்    
  ♈ 🇮🇳 சென்னையில் கிண்டி போலீஸ் ஸ்டேசனில் தீ: வாகனங்கள் சேதம்-.
♈ 🇮🇳  தமிழக அரசின் நீட் மசோதா எங்குள்ளது என தெரியவில்லை: நிர்மலா .
 ♈ 🇮  ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு: மாஜி அமைச்சர் பழனியப்பனுக்கு சம்மன்   
 ♈ 🇮 மதுரையில் ரூ.7.5 லட்சம் வழிப்பறி      
🇮  குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ.,விசாரணை தேவை: வைகோ    

♈ 🇮  நாகர்கோவில் : அரசு பஸ்சில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்  .
  ♈ 🇮  அதிமுகவில் பிளவு என்பதே இல்லை : தம்பிதுரை .
  ♈ 🇮  கடந்த 2016ல் அதிக வருமானம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து பார்ச்சூன் பத்திரிகை நடத்திய ஆய்வில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அந்த பத்திரிகையில் வெளியான செய்தி: இந்த பட்டியலில் ஆசியாவை சேர்ந்த 197 நிறுவனங்களும்,வட அமெரிக்காவை சேர்ந்த 145 நிறுவனங்களும், ஐரோப்பாவை சேர்ந்த 143நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்நாட்டை சேர்ந்த 132 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. சீனாவை சேர்ந்த 109 நிறுவனங்களும், ஜப்பானை சேர்ந்த 51 நிறுவனங்கள், தென் கொரியாவின் 15 நிறுவனங்களும் உள்ளன. இந்த பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. ஆனால், முதல் 200 இடத்திற்குள் இந்தியன் ஆயில் கார்பரேசன் மட்டுமே உள்ளது. இந்த நிறுவனம் 168 வது இடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் 203வது இடத்திலும், ஸ்டேட் வங்கி 217, டாடா மோட்டார்ஸ் 247, ராஜேஸ் ஏற்றுமதி நிறுவவனம் 295, பாரத் பெட்ரோலியம் 360,இந்துஸ்தான் பெட்ரோலியம் 384வது இடத்திலும் உள்ளது.வால்மார்ட் நிறுவனம்485,873 டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த 3 இடங்களை சீனாவின் ஸ்டேட் கிரின், சின் ஓபெக் மற்றும் சீனா பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. டொயோடா, வோக்ஸ்வோகன், ராயல் டச் ஷெல், பர்க் ஷைர் ஹத்வே, ஆப்பிள் மற்றும் எக்சான் மொபில் ஆகியவை 10இடங்களுக்குள் உள்ளன.

    ♈ 🇮  சென்னை வேப்பேரியில் திவாரி என்ற குட்கா வியாபாரியிடம் 120 கிலோ மாவா மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை  போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
♈ 🇮  வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் 4பேர் பலியானர்கள். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
   ♈ 🇮  1999ம் ஆண்டு கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் போபர்ஸ் பீரங்கியைப் பயன்படுத்தினர். இந்த போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை துவக்கி உள்ளது. இந்த விசாரணையில் மற்றொரு ஊழலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போபர்ஸ் பீரங்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள் தரமற்றவை என்றும் அவை சீனாவில் இருந்து வாங்கப்பட்ட போலியான உதிரி பாகங்கள் எனவும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் பீரங்கிகளில் போலியான சீன உதிரி பாகங்களுடன் போபர்ஸ் பீரங்கிகள் இயக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அந்த விசாரணை அறிக்கையில், டில்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

     ♈ 🇮🇳 சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இரு அணிகளும் இணைய வேண்டும் என்றே விரும்புகிறோம். இரட்டை இலையை மீட்பதில் உறுதியாக உள்ளோம். தமிழக அமைச்சர்களின் இமெயில் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை. மக்களின் தங்களின் புகார்களை இமெயிலில் அனுப்ப வேண்டும் என்பதில்லை, வாட்ஸ்ஆப்பிலும் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார் 

  ♈ 🇮  பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களும், விற்பனையில் ஈடுபடுகின்றன.எண்ணெய் நிறுவனங்கள்,மாதத்துக்கு, இரு முறை, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்தன. ஜூன், 16 முதல், தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், பங்க் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், அதனால், பங்க்குகள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.இது குறித்து,தமிழ்நாடு, 'பெட்ரோலியம் டீலர்ஸ்' கூட்டமைப்பின் தலைவர் முரளி கூறியதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4,850 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்கள், 12 ஆயிரம், 20 ஆயிரம், 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள லாரிகளில், அவற்றை சப்ளை செய்கின்றன.ஊழியர் சம்பளம், வாடகை உள்ளிட்ட செலவுகளை உள்ளடக்கி,ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 2.52 ரூபாய்; ஒரு லிட்டர் டீசலுக்கு, 1.60 ரூபாயை,எண்ணெய் நிறுவனங்கள், கமிஷனாக தருகின்றன.மாதத்துக்கு, இரு முறை,பெட்ரோல் விலையில் மாறுதல் செய்யப்பட்டதால், அவற்றை அதிகளவில் இருப்பு வைக்கும் போது, பெரிய பாதிப்பு இல்லை. தற்போது, தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவதால், பெட்ரோல், டீசல் இருப்பு அதிகம் இருந்து, விலை குறையும் போது, அதிக நஷ்டம் ஏற்படுகிறது. அதாவது, டீலர்களுக்கு வாங்கும் விலையை மாற்றாமல், வாடிக்கையாளர்கள் விலையை மட்டும் மாற்றுகின்றனர். இதனால், அதிக விலைக்கு வாங்கிய பெட்ரோலை, குறைந்த விலைக்கு விற்க நேரிடுவதால், அதிக இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தேவைக்கு ஏற்ப குறைந்தபட்சம், 4,000 லிட்டர் வழங்குமாறு, அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.சமீபகாலமாக, பெட்ரோல் பங்க்கில் விற்பதற்கு பதில், சிலர்,லாரிகளில் அவற்றை முறைகேடாக ஏற்றி, சில்லரை விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்தால், எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள், சந்தையை கைப்பற்றி,மக்களை சுரண்டும். அதற்கு, அரசு இடம் தராமல், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 ♈ 🇮  கன்னியாகுமரியில் பிரபல ரவுடி காமராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட காமராஜ் மீது கொள்ளை,கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன   

♈ 🇮  பீகார் மாநிலம் சசரத்தில் உள்ள மேம்பாலம் கட்டுமான பணியின் போது திடீரென இடிந்து ரயில்வே பாலத்தின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் 1தொழிலாளி உயிரிழந்துள்ளார் மற்றும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடர்படுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து தற்போது மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது   

♈ 🇮🇳சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது.

♈ 🇮  மத்தியப்பிரதேச மாநிலம் செஹோரில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால், உயிரிழந்த ஒருவரின் உடலை கிராமவாசிகள் கட்டில் மீது வைத்து தூக்கி கொண்டு வந்தனர். கனமழை பின் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தான் காலதாமதத்திற்கு காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்

   3pm -22-7-2017-saturday

♈ 🇮🇳  சென்னை: அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் கட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது  என மாநகராட்சி, நகராட்சி ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது

♈ 🇮🇳  புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவக் கல்லூரிக்கு சென்னை உயார்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் நிர்ணயித்த ரூ.10 லட்சத்தை பெற்று மருத்துவ மேற்படிப்பு மாணவிக்கு இடம் வழங்கவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. செண்டாக் அனுமதி மூலம் ரூ.10 லட்சம் செலுத்தியும் எம் எஸ் படிப்பில் சேர்க்க அனுமதிக்கவிலை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு இடத்தை நிரப்பாமல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டு கல்லூரி நிர்வாகம் மதிக்கவில்லை என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவி பிருந்தா ரூ.10லட்சம் செலுத்தும் பட்சத்தில் எம் எஸ் படிப்பில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

♈ 🇮🇳  பாராளுமண்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இந்திய ராணுவத்தில் வெடிமருந்து தட்டுப்பாடு உள்ளது என சுட்டி காட்டி உள்ளது. ராணுவ  தொழிற்சாலை வாரியத்தின் (OFB)செயல்திறனில் குறைபாடுகளைக் கண்டறிந்துஉள்ளது. 2013 இல் இருந்ததை போல் அதன் தொழிற்சாலைகளின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. பீரங்கி மற்றும் டாங்கி வெடிமருந்துகளில் இரண்டு முக்கியமான பற்றாக்குறையை சுட்டிக் காட்டி உள்ளது.செப்டம்பர் 2016 ல் வெடிமருந்துகள் கிடைப்பதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டதில்லை . 55 சதவீத வெடிமருந்துகள் கிடைப்பது MARL க்கு கீழேயுள்ளது.அதாவது,செயல்பாட்டுத் தயார் நிலையில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தடையற்ற தேவை மற்றும் 40 சதவீத வெடிமருந்துகள் முக்கியமான நிலையில் உள்ளன, 10 நாட்களுக்குள் குறைவான இது உள்ளது, "என சிஏஜி அறிக்கை குறிப்பிட்டு உள்ளது

♈ 🇮🇳  இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவர் கே.பி.ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கையில்,விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த ஜூன் 30ம் தேதி திருச்சியில் திமுக விவசாய அணி, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்,மதிமுக, விடுதலை சிறுத்தைகள், உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி எடுத்த முடிவின்படி தமிழகம் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் பேரணி,ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறியுள்ளார்

♈ 🇮🇳  உலக தமிழ் இணைய மாநாடு அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெற உள்ளது. 25 முதல் 27 வரை நடக்கும் இந்த மாநாடு குறித்து இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது

♈ 🇮🇳  மதுரையில் நாளை நடக்கவிருக்கும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம், ஜாபிதா சரிபார்ப்பு கூட்டம் அதிமுக சார்பாக அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடந்தது. ஏற்கனவே நடந்த முகாமில் மக்கள் சரியாக வரவில்லை. ஆகையால் வீடு வீடாக சென்று மதுரை மாநகர் மாவட்டத்தில் மக்களை திரட்டி வாருங்கள் என்றும் உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் சிறப்பாக செயல்படுங்கள் என்றும் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் கெஞ்சி கேட்டுள்ளார்

♈ 🇮🇳  சென்னை நும்கம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றபிரிவு ஆய்வாளர் இல்லாததால் எழுத்தர் தான் சகலமும் . அவர் வைத்ததுதான் சட்டமாம். எல்லாவற்றிக்கும் ஒரு விலை நிர்ணனயிக்கபடுவதாக புகார்கள் வருகின்றன .மாநகர ஆணையாளர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்படுகிறது .

 ♈ 🇮🇳  சென்னை பூக்கடை சரகத்தில் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையராக இருந்த ஸ்ரீதர் என்பவர் பைக் ரேஸ் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருந்தாராம்.தற்போது அவர் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை சென்று விட்டாராம். பூக்கடை சரகத்தில் தற்போது பழையபடி பைக் ரேஸ் நடைபெறுவதாக கூறப்படுகிறது

     ♈ 🇮🇳 சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேல் அவர்களே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியது காவலர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மட்டும் தான் நல்லவரா, ஏன் நாங்கள் என்ன தப்பானவர்களா என்று மனதிற்குள் குமுருகின்றனர். சிலை கடத்தல் ஆணிவேரை பொன் மாணிக்கவேல் பிடுங்கி எறிந்திருந்தாலும் நீதிபதி அறிவிப்பை வரவேற்க்கலாம். சிலை கடத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மீடியாவின் துணையுடன் தன்னை திறமையான அதிகாரியாக காட்டி கொள்கிறார் என்று பொங்கி தள்ளுகின்றனர் மனக் குமரலில் உள்ளோர்  

 ♈ 🇮🇳  நான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

♈ 🇮🇳  எச்.ஐ.வி வைரசை சமாளிக்க "வியப்பூட்டக்கூடிய" மற்றும் "புரிந்துகொள்ள முடியாத" வகையிலான ஆற்றலை பசுக்கள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அது எய்ட்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க உதவலாம் என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

  ♈ 🇮🇳  கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், சீனாவில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து பீஜிங் கலாச்சார அலுவலகம் உத்தரவிட்டுள்ளது

     ♈ 🇮🇳  ஆப்பிள் நிறுவனத்தின் உதவியோடு ரயில்களை மணிக்கும் 600 கி.மீ வேகத்தில் இயக்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்--- vishwarubam news  

♈ 🇮🇳  மத்திய பிரதேச மாநிலத்தில் தக்காளி திருட்டை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரிகள் தக்காளியை விற்பனை செய்கின்றனர்---

♈ 🇮  கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம் முஸாபர் நகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் 70 மாணவிகளின் உடைகளை களைய சொல்லி அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களது பெண்ணுறுப்பை சோதனை செய்துள்ளார் அந்த விடுதியின் வார்டனும், தாளாளருமான பெண் சுரேகா தோமர்

  ♈ 🇮  குடித்துவிட்டு வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்ற கணவனின் உறுப்பை மனைவி வெட்டி ஏறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-no more details

♈ 🇮  தென் கொரியாவை சேர்ந்த 70 வயது மதிக்கதக்க பாட்டி ஒருவர் தற்போது யூடியூப்பை கலக்கி வருகிறார். இவருக்கு மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்

♈ 🇮  கடந்த மூன்று தினங்களாக தனது சொந்த ஊரில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேற்று முன்தினம் மாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர்  கோவில் மலையடிவாரத்தில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன

♈ 🇮  திருவனந்தபுரம் பிரபல மலையாள எழுத்தாளர்களில் ஒருவர் ராமனுண்ணி. இவர் சமீபத்தில் பிரியப்பட்ட  முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் ஒரு ஆத்திகனின் வேண்டுகோள் என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார். அதில், நிரபராதிகளான சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களை சிலர் திசை திருப்புகின்றனர். அவர்கள் இந்த செயலை நிறுத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதில் ஆறு மாதத்தில் மதம் மாறவேண்டும், இல்லாவிட்டால் தொடுபுழா கல்லூரி ஆசிரியர் ஜோசப்பின் கை வெட்டப்பட்டது போன்ற நிலை உங்களுக்கும் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த ராமனுண்ணி, மிரட்டல் கடிதத்தையும் அவரிடம் ஒப்படைத்தார் .

♈ 🇮  மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது கதிராமங்கலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

♈ 🇮  காஷ்மீரில் சோதனை சாவடியில் ராணுவம் மற்றும் போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டதில் 6 போலீசார் காயம் அடைந்தனர் .

♈ 🇮  பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆட்டோ டிரைவர்களால் கடத்தப்பட்டு மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.மும்பை

♈ 🇮  கொடுங்கையூர் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

♈ 🇮🇳ஜெய்ப்பூர்: விழா மேடையில் மயங்கிய பா.ஜ., எம்.பி., சன்வார்லால் .

♈ 🇮  உ.பி.,யில் சோட்டாராஜன் கூட்டாளி கைது: ஆயுதங்கள் பறிமுதல் 

 ♈ 🇮  ராம்நாத் கோவிந்த் செயலராக சஞ்சய் கோத்தாரி நியமனம்

   7pm -22-7-2017-saturday

♈ 🇮🇳  பொது சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.9,500 கோடி செலவு செய்யப்படவில்லை. பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லை. காலாவதியான மருந்துகள் பயன்படுத்தியுள்ளதுடன், தரமான மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை என சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கையில், அசாம், பீஹார், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா,மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் தரம் சோதனை செய்யப்படவில்லை. காலாவதியாகும் தேதியும் சரிபார்க்கவில்லை. இதனால்,அங்கு நோயாளிகள் பல ஆபத்துகளை சந்திக்க நேர்ந்தது.
 

♈ 🇮🇳  மத்திய அரசின் பல துறைகளுக்கு செயலர்கள், கூடுதல் செயலர்கள் மாற்றப்பட்டனர். இதில் பல அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி,தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலாகவும், வீட்டு மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கூடுதல் செயலராக மனோஜ் குமாரும், வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குநர் ஜெனரலாக அலோக் வர்தன் சதுர்வேதியும், தேசிய தாது வளர்ச்சி வாரியத்தின் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநராக அலி ரசா ரிஜ்வியும், தேசிய நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சி கார்பரேசன் மேலாண் இயக்குநராக நரேந்திர நாத் சிங்கும், இஎஸ்ஐ இயக்குநர் ஜெனரலாக ராஜ்குமாரும், இந்திய சுற்றுலா வளர்ச்சி கழக சேர்மன் மற்றும் மேலான் இயக்குநராக ரவ்னீத் கவுரும் நியமிக்கப்பட்டுள்ளனர்

♈ 🇮🇳  மயிலாடுதுறை: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடி சிறையிலுள்ள ஜெயராமனின் தந்தை காலமானார். பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேலு உடல்நலக்குறைவால் மயிலாடுதுறையில் காலமானார். மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது 12பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  10 பேரை விடுவிக்க வலியுறுத்தி கதிராமங்கலத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜெயராமனை விடுவிக்குமாறு அவரது மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

♈ 🇮🇳  குறை கூறி, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பதும் நாம் தான்.அதையே திருப்பி மாற்றி அடிப்பதும் நாம் தான்-காங்கிரசும் இத தான் சொல்லி காலத்த ஒட்டியது –முடியல சாமி-விஸ்வரூபம் - தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். தேர்தல் கமிஷனையும் குறை கூறியுள்ளார்.

♈ 🇮🇳  அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ, புகைப்பட‌ ஆதாரங்களை மீடியாக்களுக்கு சிலர் விலைக்கு விற்றது அம்பலமாகியுள்ளது.

♈ 🇮🇳  வரும் ஜூலை 30 ம் தேதி நடக்கிவிருக்கும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் புது வசந்தம், புதிய அலைகள் என்ற பெயரில் இரு அணிகள் போட்டியிடுகின்றன

♈ 🇮🇳  உடல்நலம் பாதிக்கப்பட்ட தினகரன் நாளிதழின் போட்டோகிராப்பர் மாதவனின் மருத்துவ மேல்சிகிச்சைக்காக இராமநாதபுரம் மாவட்ட பத்திரிகையாளர்கள், ரூ.20,000த்தை மாதவனின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஆபத்து காலத்தில் அவர்களால் இயன்றதை கொடுத்து உதவிய மனிமநேயம் மிக்க இராமநாதபுரம் பத்திரிகையாளர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்..._**_கா.அசுதுல்லா*தேசிய செயலாளர்,*_இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம்  - விஸ்வரூபம் இணைந்து நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .

♈ 🇮🇳  *ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் உயிரிழப்பு**‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வந்தவர் காய்ச்சல், வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு, அவரது உடலில் தொற்றிய கிருமி ரத்தம் முழுவதும் பரவிவிட்டதால் உயிரிழந்துள்ளதாக ஸ்டான்லி ஆஸ்பத்தி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது

♈ 🇮🇳  இந்தியாவின் முக்கிய 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் இடத்தினைப் பிடிப்பது குஜராத் ஆகும். குஜராத் இந்த இடத்தினைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகப் பிடித்துள்ளது
♈ 🇮🇳  இந்திய அணி 2வது முறையாக உலக கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.50 லட்சம் மற்றும் உதவி பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

 ♈ 🇮🇳  இலங்கை சிறையில் உள்ள 72 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைசச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழக மீனவர்களின்148படகுகளையும் மீட்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

     ♈ 🇮🇳 தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் தொடரின் 2-வது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்கும் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல்- தூத்துக்குடி அணிகள் மோதுகின்றன. இந்த தொடக்க விழாவில் இந்திய அணி வீரர் தோனி கலந்து கொண்டார்

 ♈ 🇮🇳  கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்போரை பதவிகள் தானே தேடிவரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குட்டிக்கதை மூலம் வலியுறுத்தியுள்ளார். அத்திக்கடவு-அவநாசி திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கி 30 மாதத்துக்குள் முடிவடையும் எனவும் முதலமைசச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்-

♈ 🇮🇳  ஓமலூர் முன்னாள் எம்எல்ஏ தமிழரசு பாமகவில் இருந்து விலகியுள்ளார். பாமகவின் மாநில செயலாளராக தமிழரசு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆனால் அதற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என முன்னாள் எம்எல்ஏ தமிழரசு சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாமகவில் இருந்து விலகுவதற்கு ஜி.கே.மணி தான் முக்கிய காரணம் என தமிழரசு கூறியுள்ளார்

  ♈ 🇮🇳  சென்னை கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

     ♈ 🇮🇳  தமிழக மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைப்பு.

♈ 🇮🇳  திருப்பூர் பல்லடத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

♈ 🇮  வாக்குவாதத்தில் ஈடுபடாமல் குடிநீர் பிரச்சனை, டெங்கு குறித்து அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் பேட்டியளித்துள்ளார். சசிகலாவுக்கு சிறப்பு வசதிசெய்து கொடுத்தது கர்நாடக காங்கிரஸ் அரசா அல்லது அதிகாரிகளா என வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

  ♈ 🇮  நியூசிலாந்து புயல் மழை : அவசரநிலை பிரகடனம்

♈ 🇮  தஞ்சாவூரில் மினி லாரி மோதி இரண்டு வாலிபர்கள் பலி.

♈ 🇮  தெலுங்கானாவில், போதை பொருள் விவகாரம் தொடர்பாக, நடிகர்,நடிகையர் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் விசாரணை நடத்தி வரும் உயர் அதிகாரிக்கு மிரட்டல் வருவதாக தெரிய வந்துள்ளது

♈ 🇮  பார்தி ஏர்டெல், வோடோபோன், ஏர்செல், ஐடியா, ரிலையன்ஸ் மற்றும் ஷியாம் டெலிசர்வீஸ் லிமிடட் ஆகியவை தங்களது வருமானத்தை அரசுக்கு குறைத்து காண்பித்ததாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிக்கையில், இந்த நிறுவனங்கள், தங்களது வருமானத்தை ரூ.61,064 கோடி அளவுக்கு குறைத்து காட்டியுள்ளன. இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ரூ.7,967.6 கோடி குறைந்துள்ளது. இலவச டாக்டைம், பிரிபெய்டு சந்தாதாரர்களுக்கு சலுகை, விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை காண்பித்து இந்த நிறுவனங்கள் வருமானத்தை குறைத்து காட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

  9pm -22-7-2017-saturday

♈🌴தன் மகள் வெளியே செல்வதை பற்றி பிக் பாஸ் கமல் கவலை பட வில்லை. ஒவியாயை பற்றி கவலை பட்டால் வாணி, கவுதமி எப்படிங்க.  . கிரிக்கெட் பள்ளி இறுதி தேர்வை பல மாணவர்கள் மாணவியர்கள் இழக்க உதவி புரிந்தது. இன்று மாணவ மாணவியர்கள் நன்னடத்தை கேவலமாக நடக்க கமல் தன் பெண் மகளை வியாபாரிதியாக தள்ளி விட்டதனால் எந்த பெண் மகள்களையும் தமிழ் மகள்களாக நினைக்கவில்லையா. self respect யாரிடம் உள்ளது. கமலிடம் உள்ளதா. பணத்திற்காக விலை போன கமல் இரவில் நடக்கும் நிகழ்வுகளை வெளியிடாமல் வெறும் கட்டி புடி செயல்களை காட்டி வெளிபடுத்தும் நிகழ்வுகள் அனைத்தும் வெளியிடுவது கேவலமாக உள்ளது.

♈ 🇮🇳  ஜெயா மறைவு இன்றும் மர்மம் – இதெல்லாம் சாதாரணமப்பா -பாட்னா விமான நிலையத்தில் லாலு பிரசாத்துக்கும், அவரது மனைவி ராப்ரி தேவிக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகையை சிவில் விமான போக்குவரத்து துறை திடீரென ரத்து செய்து உள்ளது

♈ 🇮🇳  சூரிய கிரகணம் நிகழும் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும்.இதனை வெறும் கண்களால் பார்க்ககூடாது.    பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும். சூரியனின் மைய பகுதியை முழுமையாக நிலா மறைக்கிறது.  இந்த சூரிய கிரகணத்தை  உலகம் முழுவதும் உள்ள  30கோடி மக்களால் இந்த  கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது

♈ 🇮🇳  பனாமா கேட் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்டால் அவருடைய தம்பியை பிரதமராக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

♈ 🇮🇳  பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்!

♈ 🇮🇳  சென்னை துறைமுகத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு ராட்சத பாய்லரை  கொண்டு செல்லும் போது   வழியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரங்களில் மின்சாரத்தை நிறுத்தக்கோரிய மனுவுக்கு  டான்ஜன்கோ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

♈ 🇮🇳  சென்னை ராயபுரத்தில் போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் கடும் அவதி –குளறுபடியான செயல்களால் அவதி படுவது வாகன ஓட்டிகளே.

♈ 🇮🇳  பொள்ளாச்சியில் 46 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

♈ 🇮🇳  மும்பையில் 300 கிலோ தக்காளி திருட்டு.

♈ 🇮🇳  உ.பி.,: எம்பி, எம்.எல்.ஏ.,க்கள் வாகனங்களுக்கு சுங்கசாவடிகளில் தனிப்பாதை.

♈ 🇮🇳  நாளைய (ஜூலை- 23) பெட்ரோல் விலை ரூ.66.88, டீசல் விலை ரூ.57.92.
♈ 🇮🇳  முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆறுகுட்டி எம்.எல்.ஏ., சந்திப்பு

♈ 🇮🇳  இலங்கையில் நீதிபதி கார் மீது துப்பாக்கிச்சூடு.

♈ 🇮🇳  சென்னை: 3,110 டிவிடிக்கள் பறிமுதல்

♈ 🇮🇳  திருப்பூர் : வைரஸ் காய்ச்சலால் கல்லூரி மாணவர் பலி-vishwarubam   

 ♈ 🇮🇳  அரசு மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்: நோயாளிகள் பாதிப்பு. லக்னோஉ பி  

     ♈ 🇮🇳  சென்னை: ஆக.,5-ல் ஆசிரியர் , அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி

  ♈ 🇮🇳  பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கேரள எம்எல்ஏவுக்கு 14 நாள் காவல் நீட்டிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக