செவ்வாய், 18 ஜூலை, 2017

மதி செய்திகள் -19-7-2017-wednesday



மதி செய்திகள்  7.30am -19-7-2017-wednesday

♈ 🇮🇳  இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை தோற்றிறந்தால் போராளி முடிவெடுத்தால் யாம் முதல்வர் அடிபணிவோர் அடிமையரோ? முடிதுறந்தோர் தோற்றவரோ?பேடா மூடா எனலாம் அது தவறு தேடாப் பாதைகள் தென்படா வாடா தோழன் என்னுடன் மூடமை தவிர்க்க முனைவரே தலைவர் அன்புடன் நான்-நல்ல கவிதையாக உள்ளது. விளங்கிக் கொள்வதுதான் சிரமமாக உள்ளது. கமல்ஹாசனே இதை விளக்கினால்தான் உண்டு. ஆனால் அவர் நாளைதான் விளக்கப் போகிறார். அதிலும் ஆங்கிலத்தில் வரப் போகிறது என்று அவரே கூறியிருமிருக்கிறார். விரைவில் விளி கேட்கும் என்றால் விரைவில் ஒரு அழைப்பு என்று பொருள் வருகிறது. அதுவரை அமைதி காப்பீர் என்று அவர் கூறுவதாகவும் தெரிகிறது. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் என்று அவர் யாரையோ பார்த்து விமர்சிப்பதாகவும் ஊகிக்கலாம். எனவே, இந்த டிவீட்டிலிருந்து நமக்குப் புரிய வருவது என்னவென்றால் (உத்தேசமாகத்தான்) விரைவில் அழைப்பு வரும்,அதுவரை அமைதி காப்பீர். அழைப்பு வரும்போது காளான்கள் கருகிச் சாகும் என்பதாக எடுத்துக் கொள்ளலாமா? (என்று தெரியவில்லை)
♈ 🇮🇳  சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய 4 ஏரிகளும் வறண்டு விட்டதால் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. சென்னை வீடுகளுக்கு தினமும் 870மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் ஆறு, ஏரிகள் எல்லாம் வற்றி விட்டதால் தேவையான அளவு குடிநீர் சப்ளை செய்ய முடிவதில்லை.வீராணம் ஏரியில் இருந்து கிடைத்த தண்ணீரும் நின்று விட்டதால் குடிநீர் தேவையை சமாளிக்க ஆழ்துளை கிணறுகள், கல்குவாரிகள், நெய்வேலி சுரங்க நீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் 470 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து 130 மில்லியன் லிட்டர்,நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 105 மில்லியன் லிட்டர்,மீஞ்சூர், நெமிலி குடிநீர் திட்டத்தில் இருந்து தலா 100மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது தவிர கல்குவாரிகளில் இருந்து 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.இந்த நிலையில் செங்குன்றம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டதால் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே அங்கிருந்து தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. நெய்வேலி அருகில் பரனூர் ஆற்றுப்பகுதியில் 20 ஆழ்துளை கிணறுகள் அமைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. போர்க்கால அடிப்படையில் ஒரு சில நாட்களில் கிணறு போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிதாக போடப்படும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் வீராணம் குடிநீர் குழாய் மூலம் சென்னைக்கு வந்து சேரும். வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்

♈ 🇮🇳  கொல்கத்தாவை சேர்ந்த அங்குஷ் குமார் என்பவர், டெல்லி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.10மணிக்கு வந்தார். அவரது உடமைகள் சோதனைக்காக ஸ்கேனரில் வைக்கப்பட்டது. அதில் புல்லட் போன்ற பொருள் இருப்பது தெரிந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட உடமையை மட்டும் திறந்து பார்த்ததில், பெட்டியில் நிஜ தோட்டா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆயுதங்களை எடுத்து செல்ல தகுந்த ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அவரை கைது செய்து, பாதுகாப்பு அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்

♈ 🇮🇳  கோவில்பட்டியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை வைத்திருந்ததாக 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈ 🇮  ஆதார் வழக்கில் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை

♈ 🇮  சட்டசபையில் இன்று(ஜூலை 19), பொதுத் துறை, நிதித் துறை,பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் பதிலளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர். அத்துடன், அரசு சட்ட முன்வடிவுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

♈ 🇮  ''இந்திய - சீன எல்லையில், 73 சாலைகளை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராணுவ ரீதியாக முக்கிய பகுதிகளான இங்கு, சாலை அமைக்கும் தேவை உள்ளது,'' என, லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்

♈ 🇮  திருவள்ளுர் : பொன்னேரியில் மர்ம காய்ச்சலுக்கு 14 வயது சிறுவன் வினோத் உயிரிழந்தார்.சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

♈ 🇮  திருவிடைமருதூர்: கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு ெதரிவித்து போராடி கைதான 10 பேரை விடுவிக்ககோரி, நேற்று 8வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கிடையே அரசு வக்கீல் எதிர்ப்பால் கைதான 10 பேரின் ஜாமீன் மனுக்களை தஞ்சை கோர்ட் தள்ளுபடி செய்தது

♈ 🇮  தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திப்ரூகர் - கன்னியாகுமரி- திப்ரூகர் இடையே இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு 2ம் வகுப்பு சாதாரண பெட்டி அகற்றப்பட்டு அதற்கு பதில் 3 அடுக்கு ஏசிப் பெட்டி சேர்க்கப்படும். அதன் மூலம் 2ம் வகுப்பு சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை 6லிருந்து 5 ஆக குறைக்கப்படுகிறது. அதன்படி  திப்ரூகரில் இருந்து புறப்படும் ரயிலில் ஜூலை 22ம் தேதியில் இருந்தும், கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயிலில் ஜூலை 27ம் தேதியில் இருந்தும் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும்

♈ 🇮🇳  பீகாரின் சமஸ்திபுர் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம் பிரசாத் சிங், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி நீலம். நேற்று முன்தினம் இரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது விக்ரமின் மகன் துப்பாக்கியால் தந்தை மற்றும் தாயை சுட்டுக்கொன்றுள்ளான். சொத்து தகராறில் ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

♈ 🇮  பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 77ல் ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. எதிர்திசையில் புரானி பஜார் பகுதியில் இருந்து பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த பேருந்து பயணி ஒருவர் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  காயமடைந்த மேலும் 6 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் நிதிஷ்குமார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

♈ 🇮  நாகாலாந்தில் முதல்வர் லெய்செட்சு தனது பெரும்பான்மையை நிருபிக்கும் வகையில் சிறப்பு பேரவை கூட்டத்தை இன்று கூட்டும்படி சபாநாயகருக்கு கவர்னர் ஆச்சார்யா உத்தரவிட்டுள்ளார். நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி சார்பில் முதல்வராக லெய்செட்சு உள்ளார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் 41 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் தன்னை ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் டி.ஆர்.ஜெலியாங் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். இதையேற்று கடந்த ஜூலை 15ம் தேதி முதல்வர் லெய்செட்சு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார். இதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை இன்று கூட்ட நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் முதல்வர் லெய்செட்சு பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்
♈ 🇮  உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்ட குடும்பநல நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்த ஏ.டி.மரிய கிளாட் கட்டாய காத்திருப்பு  பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்,  சென்னை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பதவியில்,அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதிஏ.கே.ஏ. ரகுமானும், அரியலூர் மாவட்ட முதன்மை  நீதிமன்ற நீதிபதியாக,நாமக்கல் லோக் அதாலத் மன்றங்களின் தலைவராக இருந்த எம்.டி.சுமதி பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர். ஏ.டி.மரிய கிளாட் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது

♈ 🇮  சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து  கம்ப்யூட்டர் வகுப்பை தேர்வு செய்த ஏழை, எளிய மாணவர்களுக்கு கணினி இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டு  பிளஸ்-2மாணவர்களுக்கு லேப்டாப் உடனடியாக வழங்க வேண்டும். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் “உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு  உள்ளது. தடை விலக்கி கொள்ளப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்” என்றார்   ♈ 🇮 எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: சமூகத்தில் பல்வேறு தளங்களில்  மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களுக்கு விருது வழங்க  கமிட்டி குழு அமைக்கப்பட்டது. அதன்படி, அம்பேத்கர் விருது கொடிக்கால்  சேக் அப்துல்லா,பெரியார் விருது என்.சி.எச்.ஆர்.ஓ. மனித உரிமை அமைப்பின் தேசிய தலைவர் அ.மார்க்ஸ், காமராஜர் விருது பொதுப் பள்ளிகளுக்கான  மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, காயிதே மில்லத் விருது கேப்டன் அமீர் அலி, நம்மாழ்வார் விருது அணு  உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், அன்னை தெரசா விருது மதுரையை சேர்ந்த மறைந்த எஸ்.எம்.ஏ.ஜின்னா, கவிக்கோ விருது சிலம்பொழி செல்லப்பனுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகள் வருகிற 21ம் தேதி பெரியார் திடலில் நடைபெறும் எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் விழாவில் வழங்கப்படுகிறது

♈🇮🇳  திருச்சி: மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் பழைய இரும்புக் கடை ஒன்றில் ராணுவ குண்டுகளை ராணுவ வீரர்களே விற்றது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது♈🇮🇳  அன்னை தெரசாவின் சேலைக்கு பதிப்புரிமை பெற்று, கட்டணம் செலுத்த வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

♈🇮🇳  ரஷ்யாவிற்கு புதிய தூதரை நியமிக்கிறார் டிரம்ப்

♈🇮🇳  ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் முயற்சி மீண்டும் தோல்வி டிரம்புக்கு பின்னடைவு

♈🇮🇳  *பேங்க் ஆஃப் பரோடா* வின்_ _110 வது ஆண்டின் சேவையை__சிறப்பிக்கும் வகையில்_

 


*இனி டீசல் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை*

எல்பிஜி காஸ் ஆட்டோக்களை, டீசல் ஆட்டோக்களாக மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தடை விதித்ததுமேலும்,டீசல் ஆட்டோக்களால் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது

*நாமக்கல்,ராசிபுரம் பகுதிகளில் மழை*

நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்மேலும்,சேலம் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

*கொடைக்கானலில் ஜெல்லி மீன்கள்*

கொடைக்கானல் சுற்றியுள்ள ஏரிகளில் ஆய்வு செய்ததில் நன்னீர் ஜெல்லி மீன்கள் இருப்பதாக கண்டுபிடிப்புமீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் காசிநாதன் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகளில் ஆய்வு செய்த போது இந்த வகையான மீன்கள் இருப்பதாக தெரிவித்தார்.

*இந்திய முழுவதும் இனி ஒரே அவசர உதவி எண் 112*

அவசர உதவி எண்112ஐ இன்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.காவல், தீ விபத்து, பாலியல் குற்றம் உள்ளிட்டவைகளுக்கு அவசர உதவிக்கு இந்த எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதற்காக ரூ.329கோடி திட்ட மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

*ஆதார் வழக்கு நாளையும் தொடர்கிறது*

தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆதார் கார்டு வழக்கை இன்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுஇந்த வழக்கில் தனிமனித ரகசிய காப்புரிமை, அடிப்படை உரிமைகளில் ஒன்றா என முடிவு செய்யும்.இந்ச அரசியல் சாசன அமர்வின் விசாரணை நாளையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*சென்னையில் காற்றுடன் மழை*

சென்னையில் பல பகுதிகளில் தற்போது காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது இதில் பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர் ஆகிய இடங்களில் கனமழை.மந்தைவெளி, சாந்தோம் உள்ளிட்டபகுதிகளிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது

*பத்திரப்பதிவுத்துறையில் காலிபணியிடங்களை நிரப்ப உத்தரவு*

தமிழ பத்திரப்பதிவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஸ்சி தேர்வு மூலம் நிரப்ப உத்தரவு.ஜோதி என்ற நபர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.இவர் தற்காலிக பணியாளர்களை நியமித்து பத்திரப்பதிவுதுறையில் பணிகள் நடந்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

*கதிராமங்கலம் கிராம மக்களின் தொடர் போராட்டம் வாபஸ்*

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக கதிராமங்கலம் பொதுமக்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10பேரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைகிளை ஏற்று கொண்டதுஇதனால் போராட்டத்தினை வாபஸ் பெற்றதாக அக்கிராமமக்கள் அறிவித்தனர்.

*காஞ்சியில் காற்றுடன் கனமழை*

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது கனமழை கொட்டி வருகிறது. கருமேகங்கள் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இம்மாவட்டத்தின் சுற்றுவட்டாரங்களிலும் நல்ல மழை பெய்தது

*வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு*

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து வால்பறை பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

*வண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்*

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரயில் நிலையம் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் மாணவர் ஒருவருக்கு 2 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.தப்பியோடிய மாணவர்களை வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

*கூடலூரில் வெள்ளப்பெருக்கு*

கூடலூரில் கனமழை பெய்து வருவதால் புத்தூர்வயல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மலைவாழ் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்மேலும், மலைவாழ் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 கனமழை காரணமாக
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக