இயற்கை உலகம்: அதிகரிக்கும் பனிக்கரடி தாக்குதல்கள்!
பருவநிலை மாற்றம் வேகமாக நிகழ்வதால், வன விலங்குகள் தங்கள் இயற்கை வாழிடங்களை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்படுகிறது. இது, துருவப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகளுக்கும் பொருந்தும். துருவப் பகுதிகளில் மனிதக் குடியேற்றம் அதிகரித்திருப்பதாலும், பனி உருகுவதாலும் பனிக் கரடிகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதும், தாக்குவதும் அதிகரித்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுகளில் கடந்த இரு நுாற்றாண்டுகளில் நிகழ்ந்த பனிக்கரடி தாக்குதல்களின் எண்ணிக்கையை விஞ்ஞானிகள் ஒப்பிட்டனர். இதில், சராசரியாக, ௧௦ ஆண்டுகளுக்கு எட்டு அல்லது ஒன்பது பனிக் கரடித் தாக்குதல்கள் நிகழ்ந்து வந்தன. ஆனால், கடந்த 2010 முதல், 2014க்குள் மட்டும், 15 தாக்குதல்கள் நிகழந்துள்ளன. எனவே, 2000ம் ஆண்டுக்குப் பிறகு பருவநிலை மாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக