புதன், 19 ஜூலை, 2017

இயற்கை உலகம்: கடல் சிலந்தியின் விந்தை உடல்!


இயற்கை உலகம்: கடல் சிலந்தியின் விந்தை உடல்!

மனித இனம் உட்பட பல உயிர்களுக்கு ஜீரண உறுப்பு முழுவதும் வயிற்றுப் பகுதியிலேயே அமைந்துள்ளது. ஆனால், கடல் சிலந்திக்கு அதன் கால்கள் வரை ஜீரண உறுப்புகள் பரவியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அண்மையில், 'கரன்ட் பயாலஜி' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வின்படி, கடல் சிலந்திகளின் இதயம் மிகவும் பலகீனமாகவே ரத்தத்தை உந்துவதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், உடல் முழுவதும் பரவியுள்ள அவற்றின் ஜீரண உறுப்பு, ரத்தத்தை சீராக உந்திச் செலுத்தும் பணியையும் சேர்த்துச் செய்வதாக விஞ்ஞானிகள் அந்த ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக