வியாழன், 20 ஜூலை, 2017

Mathi News -20-7-2017-thursday



Mathi News   -20-7-2017-thursday

  7am -18-7-2017-tuesday

♈ 🇮🇳  உண்மை எங்கே உலாவுகிறது- உறங்கிக் கொண்டுதானே உள்ளது-vishwarubam-“சென்னையில் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டு 14 நாட்களுக்கு மேலாகியும் ஒரு அசைவும் இல்லை. 70% மேல் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டது. ஆனால் ஒருவர் கூட கமிஷனர் உத்தரவை மதிக்கவே இல்லை. அனைவரும் டிரான்ஸ்பர் போட்ட இடத்துக்கு போய் ரிப்போர்ட் போட்டுவிட்டு மீண்டும் பழைய ஸ்டேஷனுக்கே வந்து டூட்டி பார்க்கின்றனர்”  என்ற வாட்ஸப் செய்தி வந்தது. இதுபற்றி விரிவாக செய்தி போடலாம் என்று விசாரிக்க தொடங்கினேன்.  அப்போது இடமாற்ற ஆணை வழங்கப்பட்ட நுண்ணறிவு பிரிவு காவலர்கள் எல்லோரும் குறிப்பாக ஜெயபால், சேஷாசலம், ஜெயக்குமார், ஜெயராஜ், குணசேகரன், ராமசந்திரன், ஆகியோர் உட்பட 164  பேரும் உடனடியாக ஜூலை 1ந் தேதியே புதிய பணியிடங்களுக்கு சென்றுள்ளனர் என்ற விஷயம் தெரியவந்தது. பழைய பணியிடத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத / புதிய பணியிடத்துக்கு போக பிடிக்காத நுண்ணறிவுப்பிரிவு காவலர் ஒருவர்  செய்தியாளர் துணையோடு “புதிய பணியிடங்களுக்கு நுண்ணறிவுப்பிரிவு காவலர்கள் செல்லவில்லை” என்ற பொய்யான ஒரு செய்தியை  வாட்ஸப் மூலம் பரப்பியுள்ளனர். இத்தகைய பகிர்தலால் நாம் சாதிக்கப்போவது என்ன? இனி இது போன்ற உண்மை தன்மையற்ற செய்திகளை நாம் பதிவிடுவதையும் பகிர்தலையும் தவிர்ப்போம்

♈ 🇮 தமிழகத்தில் 2017-18கல்வியாண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், எஸ்டி பிரிவினருக்கு நேற்று கலந்தாய்வு நடந்தது. அதில் 21 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள1,777 இடங்களுக்கு 5,726 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 880பேர் மாணவர்கள், 4,846 பேர் மாணவிகள். அதில் 81 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். முதல்கட்ட கலந்தாய்வுக்கு 2,996 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலந்தாய்வின் முதல் நாளான நேற்று 157 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. அதில் பாடத்திட்டம் வாரியாகவும், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 19ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

♈ 🇮 உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்டில் பெண்களும் அதிக அளவில் முத்திரைப் பதித்து வருகிறார்கள். இவர்கள் விளையாடும்போதும், விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆடை அணிந்து வருகிறார்கள்.பிளங்கிங் நெக்லைன்ஸ், லெக்கிங்ஸ் மற்றும் உள்ளாடை தெரியும் வகையில் தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வீராங்கனைகள் விளையாடும்போது மிகவும் ஆபாசமாக தெரிகிறது. இதனால் பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம், இந்த வகையான ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்று கூறியது.வீராங்கனைகள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2-ந்தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், ஜூலை 17-ந்தேதி முதல் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது



♈ 🇮  தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

♈ 🇮  துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று( ஜூலை-18) வேட்பு மனு தாக்கல்

♈ 🇮  இன்று(ஜூலை-18) பெட்ரோல் விலை ரூ.66.67: டீசல் விலை ரூ.58.04

♈ 🇮  சட்டசபையில், இன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர் ராஜலட்சுமி பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்

♈ 🇮  ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று(ஜூலை 18), மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்

♈ 🇮  இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தை கண்காணிக்க, மேற்பார்வை குழுவை அமைப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதில் இடம்பெறுவோரின் பெயர்களை இன்று(ஜூலை 18) தெரிவிப்பதாக கூறி உள்ளது.

♈ 🇮  பிரதமர் மோடி மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் போது பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

♈ 🇮  மனித பிரமிடு அமைக்கும், 'தஹி ஹண்டி' எனப்படும், உறியடி விழாவை, சாகச விளையாட்டு என, வகைப்படுத்தியதற்கான காரணங்களை கூறும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது

♈ 🇮  ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

♈ 🇮  மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடனுடன் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
கல்லுாரி தலைவர் பி.கே. மோதிலால் தலைமை வகித்தார். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். முன்னதாக, மாணவர்களுடன் மேத்யூ ஹைடன் கிரிக்கெட் விளையாடினார். வேட்டி அணிந்து வந்த அவருக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார். உதவி பேராசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.


♈ 🇮  திருச்சி மணப்பாறையில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு கலெக்டர் ராசாமணி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதி கழிவறைகள், உணவு கூடங்கள் ஆகியவை முறையாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து விடுதி வார்டன் சாமிக்கண்ணு, காவலர் கோபால் ஆகியார் மீது நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார.

♈ 🇮  தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் கோவையில் அளித்த பேட்டி:நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் அதி நவீன ஸ்மார்ட்ஆய்வகம் அமைக்கப்படும். மாநகராட்சியின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்திட இந்த ஸ்மாட் ஆய்வகம் பயன்படும். கோவையில் மெட்ரே ரயில் சேவை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டு வருகின்றன என்றார்-.

♈ 🇮  தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் வானிஹாமா கிராமத்தில் அத்துமீறி பதுங்கியிருந்த திவீரவாதிகள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது நேற்று இரவு 8.00 மணியளவில் திடீர் தாக்குதல் தொடுத்தனர். துப்பாக்கியால் குண்டுமழை பொழிந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்

♈ 🇮  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,589 கனஅடியாக சரிந்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும்,மேட்டூர் அணைக்கு கடந்த 15ம் தேதி, 3,501கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 2,500கனஅடியாக சரிந்தது. ஒரே நாளில் 1,000கனஅடி அளவில் நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 2,589 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேைவக்காக விநாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 25.21அடியாகவும், நீர் இருப்பு 5.75டிஎம்சியாகவும் உள்ளது.

♈ 🇮  பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாய கிணறு ஒன்றில் தண்ணீர் இல்லாததால் அதை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அதற்காக வெடிவைக்க துளை  போடும் பணி நேற்று நடந்தது. இதில் தொழிலாளர்கள்  4 பேர் ஈடுபட்டிருந்தனர். கிணற்றுக்குள் துளை போட்டுக் கொண்டிருந்தபோது அதிர்வு காரணமாக பக்கவாட்டில் இருந்த பாறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதில் வடிவேல்(50), கலியன்(40) ஆகியோர் மீது கற்கள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர்

♈ 🇮  தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்


♈ 🇮🇳 துஷார் பொறியியலாளராக பணிபுரிந்தவர். இவர் பின்னர் கித்தார் வாசிப்பதில் ஆர்வம் கொண்டதால், அதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், துஷார் அளவுக்கு அதிகமாக கித்தார் வாசித்ததில் அவரது இடது கையிலுள்ள மூன்று விரல்கள் செயலிழந்தன.இதற்கான சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு துஷாரின் கைவிரல் நரம்புகள் துல்லியமாக கிடைக்கவில்லை. இதற்காக துஷாரை கித்தார் வாசிக்கச் செய்து அவரது விரல்களின் அசைவுகளின் மூலம் மூளையிலுள்ள பாதிக்கப்பட்ட நரம்புகளை மருத்துவர்கள் எடுத்து சரிசெய்துள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சையின் போது துஷாரின் தலையில் 14 மிமீ அளவிற்கு துளையிடப்பட்டுள்ளது. லேசான மயக்க மருந்து கொடுத்து துஷாரை கித்தார் இயக்க வைத்துள்ளனர் மருத்துவர்கள். தற்போது தன்னால் முன்பைப்போல் இயல்பாக கித்தார் வாசிக்க முடிவதாக உற்சாகத்துடன் துஷார் தெரிவித்துள்ளார்

♈ 🇮🇳 தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தால் நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் இருவரும் அரசியலுக்கு வந்தால், சினிமா கவர்ச்சியில் தமிழகம் மேலும் சில பத்தாண்டுகள் மூழ்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்  -.

♈ 🇮🇳 நெடுவாசலில் 100-வது நாளாக போராட்டம்

♈ 🇮🇳 ரஜினியின் அரசியல் வருகையை முன்னறிவிக்கும் ஒரு ஏற்பாடாக, திருச்சியில் ஒரு மாநாடு நடக்கவிருக்கிறது. இந்த மாநாடு ரஜினியின் ஏற்பாடல்ல. ரஜினிக்கு மிக நெருக்கமான அரசியல் தலைவராகத் திகழும் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம் செய்துள்ள ஏற்பாடு இது
♈ 🇮🇳 விசாரணைக் கைதியான பிரதீப்குமார் என்பவர் கடலூர் சிறையிலிருந்து தப்பி விட்டார்.

சிறையின் சுவரில் ஏறிக் குதித்து தப்பியோடி விட்டார் .

♈ 🇮🇳 அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு உதவியாக ஸ்டாலினும் செயல்படுகிறார் என்பதை கமல் தெரிந்து கொள்ள வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்

♈ 🇮🇳 பிஆர்பி கிரானைட் நிறுவன சொத்துகளை கணக்கிட குழ அமைப்பு.தமிழ்நாடு நில அளவை அலுவலக உத்தரவின் பேரில் குழு அமைப்பு.சொத்துகளை கணக்கிடும் பணியை 13 பேர் கொண்ட குழு மதுரையில் இன்று தொடங்குகிறது-.

♈ 🇮🇳 கொடுங்கையூர் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை3 ஆக உயர்வு

♈ 🇮🇳 நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை.. ஒரே நாளில் 20 செ.மீ கொட்டித்தீர்த்தது! ஊட்டியில் கனமழை!

♈ 🇮🇳 கமலுக்கு ஆதரவாக சென்னையில் டைஃபி அமைப்பினர் போராட்டம்-ஊழலில் திளைத்தவர்கள் கோட்டையில் உள்ளனர்- போராட்டக்காரர்கள்-மாணவி வளர்மதியை விடுதலை செய்யவும் கோரிக்கை.

♈ 🇮🇳 சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதி தீவிரப்படையினர் ஆய்வு மேற்கொண்டனர். எம்.எல்.ஏ. விடுதி,பல்நோக்கு மருத்துவமனை, வானொலி,தொலைக்காட்சி நிலையத்தில் அவர்கள் ஆய்வு நடத்தினர்

♈ 🇮🇳 மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக இளம்பெண் உயிரிழந்து உள்ளார். மேலூர் அருகே கூத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

♈ 🇮🇳 குட்கா விற்க லஞ்சம் வாங்கியோரை சிபிஐ விசாரிக்க ஓ.பி.எஸ் அணி எம்.பி.,க்கள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

♈ 🇮🇳 காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 13,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்துக்கொண்டு இருக்கிறது. மொத்தம் 2,284 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,284 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் கிருஷ்ணராஜாசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,336கனஅடியாக  உள்ளது. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

♈ 🇮  கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

♈ 🇮  பணி இல்லாமல் லோக்சபா 3 வது நாளாக ஒத்திவைப்பு

♈ 🇮  முதல்வர் பழனிசாமியுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் கேசி பழனிசாமி சந்திப்பு

♈ 🇮  கமல் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

♈ 🇮  எம்பிபிஎஸ் உள் ஒதுக்கீடு ரத்து: தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீது விசாரணை

♈ 🇮  கமல் குறித்து விமர்சிக்க ஊழல் அரசுக்கு அருகதை இல்லை: ஸ்டாலின்----*vishwarubam news

♈ 🇮  கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் தெலுங்குபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். பட்டறை வைத்து தங்க கட்டிகளை வாங்கி நகையாக செய்து கொடுத்து வருகிறார். நேற்று முன்தினம்(ஜூலை 18) ஊட்டிக்கு நகையுடன் சென்றார். அப்போது கத்தியை காட்டி 112 சவரன் நகை மற்றும் ரூ.8லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஈஸ்வரனின் அக்கா மகன் ரமேஷ், பாபு, அருண்,வடிவேலு ஆகியோரை போலீசார் கைது செய்ததனர். ஈஸ்வரன் நகையை கொண்டு செல்வதை தெரிந்து கொண்ட ரமேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றார். கொள்ளையர்களிடமிருந்து100 சவரன் நகை மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரிடம் 12 சவரன் நகை உள்ளது தெரியவந்துள்ளது----

♈ 🇮  கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகேயுள்ள கடுக்கான் விளை பகுதியை சேர்ந்தவர் மேரி சரோஜா. இவரது வீட்டில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வந்தது. 2வது மாடியில் சுஜன் என்பவர் பெயின்ட் அடித்த போது, உயர் அழுத்த மின்கம்பியில் அடிபட்டு மரணமடைந்தார். நீண்ட நேரம் மின் கம்பியில் தொங்கினார்

  ♈ 🇮  நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, டில்லியில் மத்திய அமைச்சர்கள் நட்டா, பிரகாஷ் ஜாவ்டேகரை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக எம்.பி.,க்கள் சந்தித்து பேசினர். ----*vishwarubam news

♈ 🇮  சென்னையில் பாடதிட்டம் தொடர்பான கருத்தரங்கில் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளிகல்வி துறையில் தமிழக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. கூடுதலாக 200 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சிபிஎஸ்இக்கு இணையான பாட திட்டம் உருவாக்கப்படும். தமிழக மாணவர்கள் எவ்வித போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாட திட்டம் அமையும். 9,10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வைபை வசதியுடன் கம்ப்யூட்டர் வழங்க பரிசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

  ♈ 🇮  டிஜிபியாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கதிரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த 2016 ஜூன் 9ல் வருமான வரித்துறையிடமிருந்து தமிழக அரசிற்கு எந்த கடிதமும் வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது---

♈ 🇮  2015 ம் ஆண்டை விட 2016 ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016 ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளிலேயே அதிக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.2016 ம் ஆண்டில் 106 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.இவற்றில் ஈராக், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான்,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலேயே 55 சதவீதத்திற்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. பயங்கரவாத தாக்குதல்களால் 75 சதவீதம் உயிரிழப்புக்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே நடந்துள்ளன.
2015 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ல் பயங்கரவாத தாக்குதல்கள் 9சதவீதமும், பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் 13சதவீதமும் குறைந்துள்ளன. தாக்குதல்களும், உயிரிழப்புக்களும் குறைந்த நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளும், அதிகரித்துள்ள நாடுகளில் ஈராக், சோமாலியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.2016 ம் ஆண்டில் நடந்த பெரும்பாலான தாக்குதல்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பாலேயே நடத்தப்பட்டுள்ளன. ஆனால் 2015 ல் தாலிபன்களாலேயே அதிக தாக்குதல்களால் நடத்தப்பட்டுள்ளன

♈ 🇮  இமாச்சல பிரதேசம், சிம்லா அருகேயுள்ள சோலன் நகரிலிருந்து கிண்ணாவூர் நகருக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. ராம்புர் என்ற இடத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 20 பேர் பலியானார்கள். சிலர் காயமடைந்தனர். அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது----*vishwarubam news

♈ 🇮  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலர் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில்,பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும், முரசொலி பவள விழா விமர்சயைாக நடத்துவது,நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுவிப்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு விலக்கு அளிக்க வலியுறுத்தி வரும் 27ம் தேதி திமுக மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, சேலம் மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி, ஆகியோர் மீது போடப்பட்ட வழக்குளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 ♈ 🇮  காலா பட வழக்கில் நடிகர் ரஜினி,இயக்குநர் ரஞ்சித், படதயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்தனர்.விளம்பர நோக்கத்துடன் காலா படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.காலா படத்தில் கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.ராஜசேகரன் தொடர்ந்த வழக்கை ஜூலை  26க்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது

♈ 🇮🇳  ஓவியா கூட தனியாக கட்சி ஆரம்பித்து தமிழக முதலமைச்சராகி 2021 ல் ஆகஸ்ட் 15 ல் கோட்டையில் கொடி ஏற்றலாம்-சென்ற மாதம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ஜுரம். இப்போது உலகநாயகன் ஜுரம். இருவரும் அரசியலுக்கு வருவார்களா மாட்டார்களா என்கிற கேள்வியில் மாட்டிக் கொண்டு தமிழக மக்கள் தங்களுடைய அத்யாவஸ்யமான குடிநீர் பிரச்சனை, ஜி.எஸ்.டி வரி ஹைட்ரோ கார்பன் அபாயம், நீட் தேர்வு,போன்றவைகளை தஙகளுடைய மூளைப் பிரதேசத்திலிருந்து அவர்களையும் அறியாமல் விரட்டியடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த தமிழக முதலமைச்சர் யார் என்பதை காலம் தீர்மானிக்கும். ஒரு டி.வி நிகழ்ச்சியில் பத்து லட்சம் வோட்டுக்கள் நாமினேஷனில் முன்னணி பெற்றுள்ள ஓவியா கூட தனியாக கட்சி ஆரம்பித்து தமிழக முதலமைச்சராகி 2021 ல் ஆகஸ்ட் 15 ல் கோட்டையில் கொடி ஏற்றலாம். யார் கண்டது? ரஜினி, கமல் அரசியல் பரபரப்பில் மக்கள் பிரச்சினைகள் மறக்கடிக்கப்படுவதாக எழுத்தாளர் ராஜேஷ் குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

♈ 🇮🇳  கடந்த 2016ல் எய்ட்ஸ் நோய்க்கு 10 லட்சம் பேர் பலியாகியுள்ளது ஐ.நா.,ஆய்வில் தெரியவந்துள்ளது.எய்ட்ஸ் நோய் தொடர்பான கருத்தரங்கில் ஐ.நா.,சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2016ல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 3.65 கோடி பேரில், 1.95 கோடி பேர் சிகிச்சை பெற்றனர். அதே நேரத்தில் 10 லட்சம் பேர் இந்த நோய்க்கு மரணமடைந்தனர். இது கடந்த 2005ல்19 லட்சமாக இருந்தது.கடந்த 2016ல் எய்ட்ஸ் நோயால் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1997 ல் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.தற்போது உலகம் முழுதும் 7.61 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் தற்போது வரை 35 கோடி பேர் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

♈ 🇮🇳  அந்தமான் திகிலிபூரில் இருந்து 100கடல் மைல் தூரத்தில் 11 ஊழியர்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. மூழ்கிய கப்பலில் இருந்து ஊழியர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை தீவிரம் காட்டி வருகிறார்கள்--.

♈ 🇮🇳  மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியியல் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. மோதவுள்ளன. இந்நிலையில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

♈ 🇮🇳  சென்னையில் தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரசு பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனின் மூன்று நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தனியார் நிறுவன அலுவகங்கள் ,நிறுவன உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வருமானத்தை குறைத்து காண்பித்தது,வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது.

♈ 🇮🇳  மத்திய அரசின் மாடு விற்பனை சட்டத்திற்கு எதிரான தடை மேலும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆசிக் ஆகியோர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

♈ 🇮🇳  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4அணைகள் நாளை பாசனத்திற்காக திறக்கப்படுவதாக குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.  பேச்சிப்பாறை,பெருஞ்சாணி, சிற்றாறு-1 மற்றும் 2 ஆகிய அணைகள் நாளை திறக்கப்படும் எனவும் இதன் மூலம் 79 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும் எனவும் அவர் கூறினார். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை பாசனத்திற்காக தொடர்ந்து நீர் திறந்து விடப்படும் என்றார்.

♈ 🇮🇳  வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வாங்கிய சுஷ்மிதாசென் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.சுஷ்மிதா சென் தொடர்புடைய வழக்கின்  விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது-.

♈ 🇮🇳  ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் இலங்கை அகதிகள் முகாமில்1000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மாதகாலமாக உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
♈ 🇮🇳 போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்வுகாண வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

♈ 🇮🇳 மத்திய அரசின் எந்த தேர்வு வந்தாலும் தமிழக மாணவர்கள் எதிர் கொள்வதற்காக, 54 ஆயிரம் கேள்விகள், அதற்கான பதில்கள்,வரைபடங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுப்பு 15நாட்களுக்குள் வெளியிடப்படும் என தமிழக கல்வி அமைச்சர் சொங்கோட்டையன் தெரிவித்தார்  .

♈ 🇮🇳 குட்காவுக்கு எதிரான புகாருக்கு வரவேற்பு: மது ஆலைகளையும் எதிர்க்கத் தயாரா? அன்புமணி.



♈ 🇮🇳 ஹரித்வாரில் இருந்து டெல்லி வரை சுமார் 200 கிமீ கண்வார் எனும் புனித யாத்திரை மேற்கொள்பவர் இந்த கோல்டன் பாபா. யாத்திரையின் போது தன் உடல் முழுவதும் தங்க நகைகளுடன் குறிப்பாக தங்கத்தாலான ஆடைகள் அணிந்து இவர் காட்சி தருவதால், இவரைக் காண பொதுமக்கள் அனவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்
♈ 🇮🇳 சென்னையின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல்லாக விளங்கிய 'சென்னை ஓபன் டென்னிஸ்' 21 வருடங்களுக்கு பிறகு இங்கு நடைபெறப்போவதில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

♈ 🇮🇳 பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் அனிதா பணியிட மாற்றம்
♈ 🇮🇳 நான் காமராஜர் வழியில் நேர்மையாக நடப்பேன். ஆனால் விரைவில் லட்சுமிகரமான பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

♈ 🇮🇳 சிறப்பாசிரியர்கள் பணி நியமனமத்தில் மாற்றம் கொண்டு வர அரசு தீர்மானித்து வருகின்றது. 1188 சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றம் , நேர்முக தேர்வு நீக்கப்படுகிறது

♈ 🇮🇳 செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளமாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது திடுக் புகார் எழுந்துள்ளது

♈ 🇮🇳 பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தாமல் இருந்தால் அதற்கு பணம் தருவதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் தகவல் வெளியிட்டு உள்ளார் .

♈ 🇮🇳 சீனாவில் இளம் பெண் ஒருவர் 102 ஐபோன்களை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார்

♈ 🇮🇳 இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்,சிறைபிடிக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என சீன தரப்பில் பூச்சாண்டி காட்டப்பட்டு உள்ளது .

♈ 🇮🇳 எல்லையில் இந்திய - சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதில் சர்வதேச நாடுகள் நம்முடன் உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது

♈ 🇮🇳 திருவள்ளூர்: அனுமதியின்றி குடிநீர் ஆலை; சீல்வைப்பு -.

♈ 🇮  தாண்டிக்குடி அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட ஆதிவாசி மக்கள்


 6pm -20-7-2017-thursday*  

♈ 🇮🇳 சென்னை: ஜாங்கிட், திரிபாதி,காந்திராஜன் ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.கூடுதல் டிஜிபிக்களாக இருந்த 3 பேருக்கும் தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. மூவருக்கும் டிஜிபிக்களாகி பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். மூன்று பேரும் 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தனர்

♈ 🇮🇳 நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., பொறுப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது

♈ 🇮🇳 இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற கபடி தொடர் இவ்வாண்டு புது எதிர்பார்ப்புகளோடு ஐந்தாவது ஆண்டாக தொடங்க உள்ளது.புதிதாக இணைந்த அணிகளில் 'தமிழ் தலைவாஸ்' தமிழ் ரசிகர்களை அதிகம் ஈர்க்க கூடியதுஅணியின் பயிற்சியாளர் காசிநாதன் பாஸ்கரன். முதல் லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான். பூர்வீகம் தமிழகம்தான். பாஸ்கரன் ஆசிய அளவிலான கபடி ஆட்டத்தில் தங்க பதக்கம் வென்ற ஜாம்பவான். இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனுமாவார். இவரது ஆலோசனைகள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்பலாம்
♈ 🇮🇳 எம்எல்ஏகளுக்கான ஊதியம் இரு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில் தனக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் அறிவித்து முன்மாதிரியாக திகழ்கிறார்

♈ 🇮🇳 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 22-ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பயனாளிகளை அழைத்து வர அந்தந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளை காலை ஏழு மணிக்கே ஊராட்சி ஒன்றிய அலுவலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடவும், வண்டிக்கான டீசல் செலவை பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் K.S.பழனிசாமி தலைமையில் நடக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தியிடம் விளக்கம் கேட்டதற்கு, "காலையில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி உள்ளது. அதே மேடையில் மதியம் அரசு பள்ளியில் மேல்நிலை கல்வி பயிலும் 9,000 மாணவர்கள், தனியார் பள்ளியில் பயிலும் ஆயிரம் மாணவர்கள் என 10,000-மாணவர்கள் பயன் பெரும் மோட்டிவேசன் நிகழ்ச்சி உள்ளது. இதற்காகத்தான் தனியார் பள்ளி வாகனங்களை கேட்டுள்ளோம். முதல்வர் விழாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை..." என்றார்

♈ 🇮🇳 கோயம்பேடு காய்,கனி அங்காடியில் வரி செலுத்தாத 39 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது

♈ 🇮🇳  சகோதரர் ஜோஷ்வா “ என் அக்கா ஜூலிக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்த்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அவரை ஏன் அங்கு அனுப்பி வைத்தோம் என இப்போது வேதனையாக இருக்கிறது.ஜல்லிக்கட்டில்  கிடைத்த பெயரை அவர் கெடுத்துக்கொண்டார். அவரை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. அவரின் நடவடிக்கைகள் பற்றி கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் போடுகின்றனர்.  அவர் எப்போது வெளியே வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவரால் எனது மொத்த குடும்பமே வேதனையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கே பயமாக உள்ளது

♈ 🇮🇳  குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்

♈ 🇮🇳  பஞ்சாப் மாநிலத்தில் ஆன்லைன் பேங்கிங் மூலம் ஹேக்கர்கள் தொழிலதிபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.70 லட்சம் தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

♈ 🇮🇳  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி பீச்சர் போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த போனின் விலை 500 முதல்1000 ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது. CLSAஅறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்கள் 150மில்லியன் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் என தெரிகிறது.இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விட பீச்சர்போனின் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தற்போது இருப்பதை விட 20% அதிக வாடிக்கையாளர்கள் அதாவது கிட்டதட்ட 100 மில்லியன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.மேலும், இதனால் இந்திய டெலிகாம் சந்தையின் வருவாய் 7% வரை குறையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

♈ 🇮🇳  ஜேர்மனியில் விவாகரத்து கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது புர்கா அணிந்து இங்கு வரக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.ஜேர்மனியின் Brandenburg பகுதியில் உள்ள Luckenwaldeநீதிமன்றத்தில், சிரியாவில் இருந்து அகதியாக வந்த இஸ்லாமிய பெண் ஒருவர்,தன் கணவருடன் சேர்ந்து வாழமுடியாது எனவும், அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரியுள்ளார்.இதனால் அப்பெண் சார்பாக வழக்கறிஞர் Najat Abokal நீதிமன்றத்தில் வாதாடினார். அப்போது நீதிபதி மத சின்னங்களை குறிக்கும் எதையும் நீதிமன்றத்தில் அணிந்து வரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளதாக எழுத்து பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதில் இப்பெண் புர்கா அணிந்து வந்துள்ளார். இதனால் முதலில் நீங்கள் உங்கள் புர்காவை நீக்குங்கள். அப்போது தான் சட்டப்படி விசாரணை மேற்கொண்டு விவாகரத்து வழங்க முடியும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.அரசு உழியர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் மதங்களை குறிக்கும் எதையும் அணியக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது நியாயமான ஒன்று தான், நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இது போன்ற தடை விதிப்பது இது தான் முதல் முறையாக இருக்ககூடும் என்று கூறப்படுகிறது-.

♈ 🇮🇳  அரசுப்படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ் தலைவர் அல் - பக்தாதி உயிரோடு தான் இருக்கிறார் என்று குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.

♈ 🇮🇳  வடகொரியாவில் கிம் ஜாங் அன் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு தனி மனித உரிமைகள் மீறப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது.இந்த நிலையில், அங்கு தொழிற்சாலைகளில் இருந்து தாமிர வயர்களை திருடி விற்கிறவர்களுக்கு,தென் கொரியாவில் தயாராகிற பத்திரிகைகளை விற்பனை செய்கிறவர்களுக்கு, ஆற்றங்கரைகளிலும், பள்ளிக்கூட மைதானங்களிலும் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக தெரியவந்துள்ளது.

♈ 🇮🇳  திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

♈ 🇮🇳  பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியில் கட்டுப்பாடுகளை கொண்டு வர அமெரிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்
♈ 🇮🇳 சினைமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை-பீதியில் கிராமங்கள்! நீண்டு கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் நெல்லை மாவட்டத்தின் அம்பை வட்டத்தில் வருகிறது முண்டன்துறை புலிகள் காப்பகம். இங்கு புலிகளின் எண்ணிக்கை 50 வரையுள்ளன. அவைகளோடு தனியாக சிறுத்தைகளும் உள்ளன. இதனால் முண்டன்துறை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாகிறது. இந்த வனச்சரகத்தை ஒட்டியே கேரள எல்லையைத் தொட்டபடி உள்ளது நெல்லை மாவட்டத்தின் புளியரைப் பகுதி. காடுகளைக் கொண்டது. அதன் அருகில் தெற்கு மேடு, பகவதிபுரம், பூலான்குளம், போன்ற விவசாய கிராமங்கள் நெருக்கமாய் அமைந்திருக்கின்றன.அண்மைக்காலமாக மலைகளில் உணவு குடி நீர் கிடைக்காமல் தரையிறங்கிய சிறுத்தைகள் மிளா,உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாயிகளின் விளை நிலங்களைச் சீரழித்ததுடன் அவர்களின் வளர்ப்புப் பிராணிகளையும் அடித்துத் தின்று விட்டுப் போயிருக்கின்றன.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது தொடர்பாக புளியரை வனச்சரகத்தில் புகாரும் கொடுத்துள்ளனர்.இதனிடையே வழக்கம் போல் பகவதிபுரம்,கிராமத்தின், கிருஷ்ணன், கண்ணன், அண்ணமாலை ஆகியோர்களின் 30க்கும் மேற்பட்ட மாடுகள் அங்குள்ள பொத்தைப் பகுதிக்கு மேய்ச்சலுக்குப் போனவைகள் மாலையில் திரும்பியதும், அந்தப் பக்கம் உள்ள தோப்புகளில் வழக்கம் போல் அடைக்கப்பட்டிருக்கின்றன.நேற்றிரவு மாடுகள் அடைக்கப்பட்ட தோப்பில் புகுந்த வனவிலங்கு ஒன்று, கன்று ஈன்றக் கூடிய தருணத்திலிருந்த சினைமாடு ஒன்றை அடித்துக் கொன்று விட்டுப் போயிருக்கிறது

♈ 🇮🇳 அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு .

♈ 🇮🇳  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் நடைபொறும் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் போராட்டக்குழு கூறியுள்ளது.

♈ 🇮🇳 வரும் 24 ம் தேதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்
♈ 🇮🇳 சசிகலாவை பார்க்க சென்ற தினகரன் திருப்பி அனுப்பி வைப்பு--

♈ 🇮🇳 அரசியல் சாசனத்தை காப்பது என் கடமை : ராம்நாத் கோவிந்த்
♈ 🇮🇳 மதவாதத்திற்கு எதிராக போராடுவேன்: மீராகுமார் பேட்டி----

♈ 🇮🇳  சாலை பணி ஒப்பந்ததாரர் தியாகராஜன் என்பவரின் நிறுவனங்களில் இன்று நடத்திய வருமான வரி சோதனையில், 22 கிலோ தங்கம் சிக்கியது.சென்னையில் உள்ள தியாகராஜனின் மூன்று நிறுவனங்கள், வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 41 லட்சம் ரூபாய் ரொக்கமும் சிக்கியதாக கூறப்படுகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக