ஜெயலலிதாவிற்கு பிறகான அதிமுகவின் தேனிலவு காலம் இன்றோடு முடிவடைகிறது.
💥நமக்கும் தான் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகத் தான் பாஜக இதுநாள் வரை காத்திருந்தது. நாளையிலிருந்து தமிழக அரசு பாஜகவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.
3 அணிகளாக இருந்த அதிமுக, இனி பாஜக அணியாக மட்டும் இருக்கும். இந்திய பாஜக அரசின் கொள்கை முடிவுகளே இனி தமிழக அரசின் கொள்கை முடிவுகளாக இருக்கும்.அதிமுக சிறுக சிறுக கரைக்கப்படும். அதே வேளையில் பாஜக-திமுக சண்டை நேரடியாக நிகழும். 2G வழக்கு மூலம் திமுகவின் மீதான பாஜக பிடி இறுகும். திமுக அரசியல் செல்வாக்கை இழக்கும்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கும், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும். அது தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிர்மாறாகவே இருக்கும்.
முக்கியமாக காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றைப் பற்றி பேச முடியாத அளவிற்கு முடித்து வைக்கப்படும். அணை பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்படும்.
*மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு மோடி அமைச்சரவை அனுமதி அளிக்கும். *
காவிரி, முல்லைப் பெரியாறு, பவானி போன்றவற்றில் தமிழகத்திற்கான உரிமை மாற்றி அமைக்கப்படும்.
ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக்கப்படும்.
பசுமைத் தீர்ப்பாயத்தை கட்டுப்படுத்த முடியுமென்பதால், தடைகள் நீக்கப்பட்டு நியூட்ரினோ திட்டம் மீண்டும் வரும். மருத்துவம், பொறியியல் கல்வி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும். பள்ளிக் கல்வி காவி மயமாக்கப்படும்.
எங்கும் இந்தியே இருக்கும். தமிழகத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்படும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும். தமிழகத்தின் நிலங்கள் பனியா மார்வாடிகளால் வாங்கி குவிக்கப்படும்.
சுருக்கமாக சொன்னால், தமிழகம் முன்னேறிய மாநிலம் என்ற தகுதி பிடுங்கப்பட்டு, பீகார், ஜார்கண்ட் மாநில நிலைமைக்கு தள்ளப்படும்.இதையெல்லாம் எதிர்த்து போராடும் இயக்கங்களும், செயற்பாட்டளர்களும் அரசினால் ஒடுக்கப்படுவார்கள்.
காவல்துறையின் ஆட்சியே நடைபெறும். மக்கள் போராட்டம் ஒன்று தான் இதில் நம்பிக்கையளிக்கக் கூடிய விசயமாக இருக்கும். ஆனால் தமிழகம் ஒன்று காஷ்மீர் போல் மாறும். இல்லை ஏதோ ஒரு வடமாநிலம் போல் திகழும்.
கடைசியில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லி பாதையை வேறுபக்கம் திருப்பி விட்டு கதையை முடித்துவிடுவார்கள்.
வேறென்ன சொல்ல? எதற்கும் தயாராவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக