ரஷ்யா மற்றும் அலாஸ்கா இடையே கடலில் நிலநடுக்கம்: வட பசுபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை..
மாஸ்கோ: ரஷ்யாவில் கடலில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் கம்சட்கா பெனிசுலா மற்றும் அலாஸ்காவின் அலெயுடியன் தீவுகளுக்கு இடையே வட பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் 7 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் கடற்கரையில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவிற்குள் சுனாமி ஏற்படலாம் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் நிலப்பகுதியில் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முன்னதாக நிலநடுக்கத்தின் போது தொடர்ச்சியாக பல்வேறு அதிர்வுகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக