புதன், 19 ஜூலை, 2017

இது என்ன சன்னி லியோனுக்கு இப்படி ஒரு ஆசை?..



இது என்ன சன்னி லியோனுக்கு இப்படி ஒரு ஆசை?..

 திடீர் என்று கையில் குழந்தையுடன் வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்க விரும்புகிறார் நடிகை சன்னி லியோன்.

வெளிநாட்டில் ஆபாசப் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். கணவர் டேனியல் வெபருடன் மும்பையில் வசித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் நடிப்பதுடன், டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் சன்னி.

என்ன சன்னி குழந்தை பெற்றுக் கொள்ளும் ஐடியா இருக்கிறதா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, என் வாழ்வில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதால் தற்போது நான் குழந்தை பெறுவது கஷ்டம் என்றார்.

யார் கண்டா, ஒரு நாள் நான் திடீர் என்று கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன்.

அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகலாம். இந்த குழந்தை எங்கிருந்து வந்தது என்று நினைக்கலாம் என்று சன்னி தெரிவித்துள்ளார்.

பல பிரபலங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு வேளை சன்னிக்கும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் ஐடியா இருக்கிறது போல.

வாடகைத் தாய் விஷயம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. சொல்லப் போனால் எனக்கு தெரியவில்லை. கடவுள் அளிக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பார்க்கலாம் என்கிறார் சன்னி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக