மதி செய்திகள் முக்கிய செய்திகள்@28/7/17
வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்ததில் தவறு இல்லை என்று சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
சேலத்தில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி அளித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி பரோல் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மகள் ஹரித்ரா திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதம் பரோலில் தர கோரி நளினி வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். பரோலில் விடுவிக்க கோரும் நளினியின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
எத்தனை கமல், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை கவிழ்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும், கமல் தொடர்ந்து இவ்வாறே பேசி வந்தால் மூன்றாம்பிறை படத்தின் இறுதி காட்சி போல ஆகிவிடுவார் எனவும் நக்கலடித்துள்ளார்.
திருவொற்றியூர்-மாட்டுமந்தை மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.58 கோடி செலவில் திருவொற்றியூர் - மாட்டுமந்தை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்மநபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை அடுத்து ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
செய்யாறு அருகே கிளியாத்தூரில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சாலையில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது.
அதிமுக ஆட்சியில் 61 மேம்பாலங்கள்: முதல்வர் பழனிசாமி
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் ரத்து செய்ய அரசு திட்டமிட்டதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
அதிமுக அணிகள் இணைப்பு நடக்கும்: முதல்வர் பழனிசாமி நம்பிக்கை
ஏரி, குளங்களை தூர்வார திமுகவுக்கு தடை கூடாது: ஐகோர்ட்டில் ஸ்டாலின் வழக்கு
இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களில் 64 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்யசபா தேர்தல்: அமித்ஷா, ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்
பிரபல பட அதிபரின் புகாரின்பேரில் சினிமா பைனான்சியர் போத்ரா மீது புதிய வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டார்
கர்நாடக மாநிலத்தில் நம்ம மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை கன்னட ஆர்வலர்கள் தார் பூசி அழித்தனர். மேலும் நம்ம மெட்ரோவில் வேலை செய்யும் ஹிந்தி பேசும் பொறியாளர்களை பணியிடமாற்றம் செய்ய வலிறுயுத்தி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் கொச்சியில் ரூ.16 கோடி மதிப்பிலான வாசனை திரவியமான கஸ்தூரி பறிமுதல் செய்யபப்ட்டது. வாசனை திரவியத்தை வைத்திருந்த ஒருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பீஹார் சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு: ஆர்ஜேடி கோரிக்கை
திருவனந்தபுரத்தில் நேற்றிரவு பாஜகவின் மாநிலத் தலைமையகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் வீட்டை பாஜக தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.
போதைப் பொருள் வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார்.போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்
குஜராத்தில் தமது கட்சி எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்தி செல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நிதிஷ் நாடகம் போடுகிறார்: தேஜஸ்வி குற்றச்சாட்டு
இலங்கையில் மைத்ரிபால சிறிசேனாவின் ஆட்சியைக் கவிழ்க்கத ராஜபக்சே துடித்து கொண்டு இருக்கிறார்.ராஜபக்சேவின் முயற்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைபோகாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இன்றியமையாச் சேவைகளை முடக்கி, அரசைக் கவிழ்க்கும் முயற்சி ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.
ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது 82 வயது ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
பனாமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
இங்கிலாந்தில் 15 வயது சிறுமி ஒரே நாளில் வெவ்வேறு நபர்களால் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை நிலவரம்-22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,72622 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.21,80824 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,904வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.00வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,000
விவசாயத்தை பாதுகாக்க மாணவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும் என்று சேலத்தில் நடந்த விழாவில் நடிகர் விவேக் பேசினார்.
புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்
கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கியவர் முனாப் படேல். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள அவருக்கு செக் பவுன்ஸ் வழக்கில் டெல்லி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அகர்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த சம்மன் அனுப்பட்டுள்ளது.
8.30pm -28-7-2017-friday
♈ 🇮🇳 பல வருடங்களாக வாட்ஸ் அப்பில் முகம் தெரியாத பலருக்கும் செய்திகள் தருகிறேன் . எனக்கு வருமானம் வரக்கூடிய vishwaroobam என்ற பெயரில் ஆன் லைன் டாட் காம் தொடங்குவது கூறித்து இலவசமாக யாராவது உதவி செய்தால் அடுத்து ஒரு அலைபேசி யாரிடமும் கையேந்தாமல் வாங்க உதவியாக இருக்கும் .
♈ 🇮🇳 Honorable Modi ji please give pm post to honorable sushmaji .realy she is great அன்புக்குரிய அம்மா, நோயாளியின் இப்போதைய நிலைக்குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்து உள்ளோம், இனி அனைத்தும் உங்கள் கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் அனுமதி அளித்தால் எங்களுக்கு விசா கிடைக்கும். மேடம், இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான மருத்துவ அறிக்கைகளை அளிக்க தயாராக உள்ளோம். இந்திய தூதரகத்திடம் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்பிக்க தயாராக உள்ளோம். உங்களுடைய உதவியானது உடனடியாக தேவைப்படுகிறது,நோயாளியின் நிலையானது மோசமாக உள்ளது, என்று கோரிக்கை விடுத்தார் ஹிஜாப் ஆசிஃப்.இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரான கெளதம் பம்பாவாலேவை தொடர்பு கொண்ட சுஷ்மா,அந்த பெண்ணிற்கு உடனடியாக விசாவை தெளிவு செய்யுமாறு உத்தரவிட்டார். இந்திய தூதரகமும் இவ்விவகாரத்தை கையில் எடுத்தது.இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாவின் உடனடி நடவடிக்கை மற்றும் இந்திய தூதரகத்தின் துரிதமான செயல்பாட்டினால் பூரித்துப்போன ஹிஜாப் ஆசிஃப்,சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு பிரதமராக இருந்திருக்க வேண்டும், நாடு மாற்றம் கண்டிருக்கும் என டுவிட்டரில் உருக்கமாக தெரிவித்து உள்ளார்-vishwaroobam posted this message in whats up tittle
♈ 🇮🇳 மனிதம் என்றால் உணர்வு உயிர் – இலங்கை நீதிபதி ஒருவருக்கு மட்டுமே தெரிந்துள்ளது -தனக்காக உயிரிழந்த பாதுகாவலரின் மனைவியின் காலில் விழுந்து கதறும் நீதிபதி. இந்தியாவில் நீதி எங்கே என்று கேட்டு கதறல் குரல் ஒலிக்கிறது –விஸ்வரூபம் -கொழும்பு: துப்பாக்கிச் சூட்டில் பலியான தன் பாதுகாவலரின் மனைவி காலில் விழுந்து இலங்கை நீதிபதி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ வைரலாக சுற்றி வருகிறது
♈ 🇮🇳 இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன் நியமனம்
♈ 🇮🇳 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகாத நிலையில் இப்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் செல்லாதவையாக அறிவிக்கப்படலாம் என்ற சந்தேகம் பரவுகிறது
♈ 🇮🇳 ஆண்டுதோறும் 4 லட்சம் விபத்துகள் நடப்பதாகவும், இதில் சிக்கியவர்களில் ஒன்றரை லட்சம் பேர் இறப்பதாகவும் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.மக்களவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, புழக்கத்தில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலி என்று தெரிவித்தார். சாலைப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன். நாடு முழுவதும் பாலங்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 163பாலங்கள் மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்
♈ 🇮 ஐதராபாத்தில் புரோ கபடி லீக் போட்டி தொடர் துவங்கியது--விஸ்வரூபம்
♈ 🇮🇳 ஐதராபாத்:பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜூக்கு சிறப்பான வரவேற்பு-விஸ்வரூபம்
♈ 🇮 சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மழை
♈ 🇮 இலங்கை சிறையில் இருந்து 77 தமிழக மீனவர்கள் விடுதலை
♈ 🇮 தேவகோட்டை: வாலிபர் கொலை: மற்றொருவர் காயம்
♈ 🇮புதுச்சேரியில் மருத்துவ மேல்படிப்பில் சேர்க்கப்பட்ட 95 பேரை விடுவிக்க வேண்டும் என மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 7 கல்லூரிகளில் சேர்ந்த95 பேரும் சென்டாக் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரியில் சுயநிதி மருத்துவ கல்லூரி,நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது
♈ 🇮 மதுராந்தகம், மொரப்பாக்கம்,பெரும்பாக்கம், மேல்மருவத்தூரில் அரைமணி நேரமாக மழை பெய்து வருகிறது. மேலும் அச்சிறுப்பாக்கம், சித்தாமூரிலும் மழை பெய்து வருகிறது
♈ 🇮 மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் நேர்மை ஆட்சிப் பணி பயிற்சியகத்தில் மூன்றாம்ண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது: ஏழை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்ற பலருக்கு பயிற்சி அளிப்பதற்காக நேர்மை பயிற்சியகத்தின் இலவச வகுப்புகள் தொடங்கப்பட்டது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதன் விளைவாகவே பலரின் ஒத்துழைப்போடு நேர்மை அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகில் நேர்மைதான் மிகவும் உயர்ந்ததென்று நினைக்கிறேன். அதற்காகத்தான் இந்த பயிற்சியகத்திற்கு நேர்மை என்று பெயர் வைத்தேன். ஆனால் நாட்டில் நேர்மை என்ற வார்த்தையைக் கேட்டாலே பலரும் பயப்படுகின்றனர். ஏதோவோர் அச்சமான சொல்லைப் போல் வியந்து பார்க்கின்றனர். திருநெல்வேலிக்கு ஒருவிழாவிற்கு சென்றிருந்த போது என்னை அழைக்க வரவேண்டியவர்கள் நீண்ட நேரமாக வரவில்லை. சிறிது தாமதத்திற்கு பிறகு வந்தவர்களிடம் பொதுமக்கள் நேர்மையான அதிகாரியை காக்க வைத்து விட்டதாக உரிமையோடு கடிந்தார்கள். அப்போது நான் சொன்னேன் அவர்களைத் திட்டாதீர்கள் நேர்மையை எப்போதும் தமிழர்கள் மெதுவாகத்தான் வரவேற்பார்கள் என்றேன். அது போல யாரும் நேர்மைக்கு வரவேற்பு இல்லை என்று ஒதுங்கிவிடாதீர்கள். கண்டிப்பாக நேர்மைக்கு மிகப்பெரும் மரியாதை கிடைக்கும். அதை நான் புதுச்சேரியில் கண்டேன். நான் பணியாற்றிடாத இடத்தில் கூட எனக்காக 5000 இளையர்கள் காத்துக்கிடந்தனர். மதுரை மக்களைவிட அதிகப்படியான உணர்ச்சிகளைக் கொண்டு என்னை வரவேற்றனர். என்னைப் போல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதை விட என்னை விட சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாக நினைத்து உழைத்திடுங்கள். முதலில் நமது வரலாறுகளைப் படியுங்கள். அதுதான் உங்களை உயர்த்தும். கடந்த 15 வருடத்தில் மூன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற தகவல் வேதனைக்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் . நமது வாழ்வாதாரம் வயல்வெளிகளில் இருந்துதான் தொடங்குகிறது. வல்லரசு கனவுகளெல்லாம் வயல்களில் இருந்து தான் தொடங்க வேண்டும்,என்று பேசினார்
10pm -28-7-2017-friday
♈ 🇮🇳 ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர், ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான, 148 கோடி ரூபாய் சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது
♈ 🇮🇳 மித்தாலி ராஜூக்கு ஒரு கோடி ரூபாய் ,வீ்ட்டுமனை பரிசு: தெலுங்கானா அரசு
♈ 🇮🇳 மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்று நாட்களில் 4 அடி உயர்வு
♈ 🇮🇳 சட்டபேரவை கூட்டத்தொடர் நிறைவு :கவர்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு
♈ 🇮🇳 திருப்பதியில் கடத்தப்பட்ட சிறுமி பெங்களூருவில் மீட்பு
♈ 🇮🇳 கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
♈ 🇮🇳 அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை
♈ 🇮🇳 பாக்., எல்லையில் தயார் நிலையில் இருக்க படைகளுக்கு தளபதி உத்தரவு
♈ 🇮🇳 இந்தியாவாக மாறிய வெனிசுலா -தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா நாட்டில் அரசியல் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நாட்டின் அதிபர் மடுரோவாவுக்கு எதிராக கடந்த 4 மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு அதிபர் ராணுவத்தையும்,போலீசாரையும் ஏவி வருகிறார்
♈ 🇮🇳 தமிழக நிதியமைச்சர் ,ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. ஜெயக்குமார் அவர்களுக்கு மக்களுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டமைக்கு நன்றி. இதை தவறாமல் கடைபிடிக்க ராயபுரம் குடிநிரோற்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்த தமிழக மக்கள் இயக்கம் வேண்டுகிறது
♈ 🇮🇳 ---முன்பக்கத்தில் "ஹீரோ" என்று எழுதியிருந்த டி-சர்ட் அணிந்திருப்போரை தேடும் பணியில் துருக்கி பாதுகாப்பு படைபிரிவுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த டி-சர்ட்அணிந்திருப்போர், தடைசெய்யப்பட்ட குலென் இயக்கத்தோடும், கடந்த ஆண்டு தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்போடும் தொடர்புடையவர்கள் என்று படையினர் கருதுகின்றனர்.
♈ 🇮🇳 அமேசான் இணையதளத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பெஸொஸ் கடந்த வியாழக்கிழமையன்று மிகக் குறுகிய கால நேரத்திற்கு உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்
♈ 🇮🇳 ரஷ்யா, இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் மீது புதிய தடைகளை பிறப்பிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை 98-2 என்ற விகிதத்தில் ஆதரவாக வாக்களித்துள்ளது.
♈ 🇮🇳 இலங்கையில் காட்டு யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது என்பது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு என வன பாதுகாப்பு ஆய்வு மத்திய தலைவரான பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ கூறியுள்ளார்
♈ 🇮🇳 ப்ரீ சார்ஜ் நிறுவனத்தை கைப்பற்ற ஆக்சிஸ் வங்கியுடன் போட்டியிட்ட அமேசான் நிறுவனம் தோல்வியை சந்தித்துள்ளது
♈ 🇮🇳 கொல்கத்தாவில் மது போதையில் கார் ஓட்டி வந்த பெண்ணை தடுத்து அவரிடம் விசாரித்த போலீசுக்கு அந்த பெண் லஞ்சமாக முத்தம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
♈ 🇮 ஐரோப்பாவை நோக்கி கடலில் ரப்பர் படகில் ப்யணத்தை மேற்கொண்ட அகதிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர் .
♈ 🇮🇳 சீன நிறுவனமான சியோமியின் ரெட்மி நோட்4 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. பெங்களூர் நகரத்தில் அமைந்திருக்கும் ஒரு செல்போன் கடையின் சிசிடிவு கேமராவில் இது தொடர்பான வீடியோ பதிவாகியுள்ளது .
♈ 🇮 ரஷ்ய கடற்படை தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடைபெறவுள்ள பயிற்சியில் பங்கேற்க உலகின் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பலான The Dmitry Donskoy செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்துள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான இந்தக் கப்பல், 120 நாள்கள் மேற்பரப்புக்கு வராமல் நீருக்குள்ளேயே இருக்கும் திறன் படைத்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக