தமிழக எம்.எல்.ஏ.க்கள் இரு மடங்கு சம்பளம் அதிகரிப்பு...
எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்தி 5 ஆயிரமாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரமாக உள்ளது. ரூ.50 ஆயிரம் அதிகரிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியிலிருந்து ரூ.2.5 கோடியாகவும், எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது முன்தேதியிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக