செவ்வாய், 18 ஜூலை, 2017

50 வருடம் ஹிந்தி தெரியாமல் பின்னோக்கி இருக்கும் ஒரு மாநிலத்தின் கதை.....



50 வருடம் ஹிந்தி தெரியாமல் பின்னோக்கி இருக்கும் ஒரு மாநிலத்தின் கதை.....

உயர் கல்வி :

பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்… அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்..

தமிழ் நாடு – 38.2%..
பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 17.6% ; மபி – 17.4% ; உபி – 16.8% ; ராஜஸ்தான் – 18.0% ;

இந்திய சராசரி : 20.4%

கல்வி நிலையங்களின் தரம் :-

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது… அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.. பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்.. இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட
இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை……

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு – 22 ;
குஜராத் – 5 ; மபி – 3 ; உபி – 6 ; பிகார் – 1 ; ராஜஸ்தான் – 3

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ;
குஜராத் – 2 ; மபி – 0 ; உபி – 7 ; பிகார் – 0 ; ராஜஸ்தான் – 4

பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.

தமிழ் நாடு – ₹18.80 lakh crore (2nd Place) ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – ₹10.94 lakh crore (5th) ; மபி – ₹7.35 lakh crore (10th) ; உபி – ₹12.37 lakh crore (4th) ; ராஜஸ்தான் – ₹7.67 lakh crore (7th) ;
சத்தீஸ்கர் – ₹2.77 lakh crore (17th)

Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு) :-

தமிழ் நாடு – 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 36 ; மபி – 54 ; உபி – 50 ; ராஜஸ்தான் – 47 ; சத்தீஸ்கர் – 46 ; இந்திய சராசரி : 40

Maternal Mortality Rate (MMR – ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) :-
—————————————–
தமிழ் நாடு – 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 112 ; மபி – 221 ; உபி – 285 ;
ராஜஸ்தான் – 244 ; சத்தீஸ்கர் – 221 ; இந்திய சராசரி : 167

தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :-
————————————————–
தமிழ் நாடு – 86.7% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 55.2% ; மபி – 48.9% ; உபி – 29.9% ; ராஜஸ்தான் – 31.9% ; சத்தீஸ்கர் – 54% ; இந்திய சராசரி : 51.2%

கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :-
—————————————————————-
தமிழ் நாடு – 80.33% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 79% ; மபி – 70% ; உபி – 69% ; ராஜஸ்தான் – 67% ; சத்தீஸ்கர் – 71% ; இந்திய சராசரி : 74%

ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-
———————————————————–
தமிழ் நாடு – 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 890 ; மபி – 918 ; உபி – 902 ;
ராஜஸ்தான் – 888 ; இந்திய சராசரி : 919

தனி நபர் வருமானம் (Per Capita Income – ரூபாயில்)

தமிழ் நாடு – 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1,06,831; மபி – 59,770 ; உபி – 40,373 ; ராஜஸ்தான் – 65,974 ; சத்தீஸ்கர் – 64,442 ; இந்திய சராசரி : 93,293

மனித வள குறியீடு (Human Development Index)

தமிழ் நாடு – 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 0.6164 ; மபி – 0.5567 ; உபி – 0.5415 ; ராஜஸ்தான் – 0.5768 ; சத்தீஸ்கர் – 0.358 ; இந்திய சராசரி : 0.6087

ஏழ்மை சதவீதம் (Poverty (% of people below poverty line))

தமிழ் நாடு – 11.28% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 16.63% ; மபி – 31.65% ; உபி – 29.43% ; ராஜஸ்தான் – 14.71% ; சத்தீஸ்கர் – 39.93% ; இந்திய சராசரி : 21.92%

ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition)

தமிழ் நாடு – 18% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 33.5% ; மபி – 40% ; உபி – 45% ; ராஜஸ்தான் – 32% ; சத்தீஸ்கர் – 35% ; இந்திய சராசரி : 28%

மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு – 149 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 87 ; மபி – 41 ; உபி – 31
; ராஜஸ்தான் – 48 ; சத்தீஸ்கர் – 23 ; இந்திய சராசரி : 36

— இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களை விட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது…. இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது..

மேலும்,

1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.

2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.

4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..

5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்… தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக