விரைவில் தமிழ்நாடு நீதிபதி பணிக்கு இந்திய அளவில் பொதுத் தேர்வு.
இனி வட இந்திய வழக்கறிஞர்கள் தமிழக கீழமை நீதிமன்ற நீதிபதிகள்.
கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்துக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல். கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை மாநில அளவிலிருந்து மாற்றி தேசிய அளவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய நீதித்துறை செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா உச்ச நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் தங்களின் பதிலை ஜூலை 30 -ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகள் விழிப்புடன் இல்லாவிட்டால் மத்திய அரசு இதை சாத்தியமாக்கும்.
அதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. நீதிபதி பணிக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். கீழமை நீதிமன்றங்களுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை மத்திய அரசு செய்தாலும், நீதிமன்றங்களை நிர்வகிப்பது, நீதிபதிகளை நியமிப்பது ஆகியவை இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அந்த அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கத் துடிப்பது முறையல்ல. இதை ஒருபோதும் மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக