TNPL டி.என்.பி.எல்.2017க்கான டிக்கெட் புக்மைஷோ இணையதளத்தில் கிடைக்கும்.
Ticket Information இந்தியா சிமெண்ட்ஸ் டி.என்.பி.எல்.2017க்கான டிக்கெட் புக்மைஷோ இணையதளத்தில் கிடைக்கும்.
ஜூலை 20 முதல், அந்தந்த கவுன்டர்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்
இந்தியா சிமெண்ட்ஸ் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2017க்கான டிக்கெட்டுகள் “புக்மைஷோ” இணையதளம் மூலம் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று சென்னை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கலில் நேரடியாகவும், டிக்கெட்டுகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை
நடப்பு சாம்பியன் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்டும், திண்டுக்கல் டிராகன் அணியும் களமிறங்கும் முதல் போட்டிக்கான (ஜூலை 22) டிக்கெட்டுகள், ஜூலை 20 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சேப்பாக்கம், விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், 50 ரூபாய், 100 மதிப்பிலான டிக்கெட்டுகள் நேரடியாக விற்பனை செய்யப்படும்.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் நடைபெறும் முதல் நான்கு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மைதானத்தில் ஜூலை 20ம் தேதி, வியாழக்கிழமை காலை 9 மணி முதல் விற்பனை செய்யப்படும். ஒரு டிக்கெட்டுக்கான விலை 50 ரூபாய் ஆகும்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நடைபெறும் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் முதல் திண்டுக்கலில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி அலுவலகத்திலும், நத்தத்தில் உள்ள அக்கல்லூரி மைதானத்திலும் விற்பனை செய்யப்படும். ஒரு டிக்கெட்டுக்கான விலை 50 ரூபாய் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக