செவ்வாய், 25 ஜூலை, 2017

மதி செயதிகள் 7am -25-7-2017-tuesday.

மதி செயதிகள் 7am -25-7-2017-tuesday.

♈ 🇮🇳  தமிழகத்தில் முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் அன்பு சுவர் என்ற புதிய திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையற்ற பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் விதமாக, இத்திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்

♈ 🇮🇳  கோவை: பட்டா வழங்காததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮🇳  கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் மதுரை மண்டலத்தில் இணைப்பதற்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கேரள அரசியல்வாதிகளுக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது---vishwarubam news  
♈ 🇮🇳  சென்னையில் இருந்து மலேசியாவுக்கு புதிய விமான சேவையை தனியார் ஏர் விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த விமானத்தில் சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்கு நபர் ஒருவருக்கு உணவுடன் சேர்த்து, 11 ஆயிரத்து 400 ரூபாய் மட்டுமே என்றும், அங்கிருந்து மீண்டும் சென்னை வர உணவுடன் சேர்த்து மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்றும், மேலும் தற்போது நாள் தோறும் காலை 8.55 மணிக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 3 விமானங்கள் இயக்கப்படும் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

♈ 🇮🇳  சேலம் மாவட்டம் மேட்டூரில், 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் 3 அலகுகளும், 600 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஒரு அலகும் உள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை, மேட்டூர் ஆண்டிக்கரையை சேர்ந்த ஜெகநாதன் என்ற ஒப்பந்த தொழிலாளி வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆக்சிஜன் சிலிண்டர் காலியானதால், மாற்று சிலிண்டரை எடுத்து வரும் பணியை மேற்கொண்டார். அப்போது திடீரென சிலிண்டர் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் சிலிண்டரின் பாகங்கள் சீறி பாய்ந்ததில் ஜெகநாதனின் கை துண்டானது. மேலும், அங்கிருந்த ஆனந்தன் என்ற தொழிலாளியின் காது செயல் இழந்தது. பயங்கர வெடிச்சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற தொழிலாளர்கள்,கை துண்டான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகநாதனையும்,ஆனந்தனையும் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஜெகநாதன் அனுப்பி வைக்கப்பட்டார்.

♈ 🇮🇳  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 250 முதல் 300 லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவு காரணமாக, காய்கறிகள் விலை உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக முருங்கைக்காய், பீட்ரூட், கத்தரிக்காய், கேரட், சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருக்கின்றன. தக்காளி விலை ரூ.20 வரை குறைந்திருக்கிறது---vishwarubam news

♈ 🇮🇳  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கீழ், 3,500வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.ராஜ்ய சபாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், என்ஜிடியில் உள்ள நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு  எழுத்து பூர்வமாக பதில் அளித்த, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “டெல்லி என்ஜிடி முதன்மை பெஞ்சில் 1600 வழக்குகளும், பூனேவில் 543ம், போபாலில்256ம், சென்னையில் 799ம், கொல்கட்டாவில்407 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த எண்ணிக்கை  நடப்பு ஆண்டு ஜூன்30ம் தேதி வரையில் கணக்கிடப்பட்டுள்ளது” என்றார்---vishwarubam news

♈ 🇮🇳  சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த ராஜி மகள் அபர்ணா(18). சைதாப்பேட்டையில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வீட்டில் அபர்ணாவுக்கும் அவரின் சகோதரிக்கும் வாக்குவாதம் ,கைகலப்பு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அபர்ணாஅடையாற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அபர்னாவை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அபர்ணாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது

♈ 🇮🇳  ஆலந்தூர் : பல்லாவரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர், பல்லாவரம் ரேடியல் சாலையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சவாரியை முடித்துவிட்டு மடிப்பாக்கம் கீழ்கட்டளை ஏரி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் எதிரே வந்த 2 பேர் ஷேர் ஆட்டோவை நிறுத்தியுள்ளனர். சவாரி வரவேண்டுமா என கேட்கும் முன், கத்தியை எடுத்து மிரட்டி வேல்முருகன் வைத்திருந்த ரூ.6 ஆயிரம்,ஒரு செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

♈ 🇮🇳 நாட்டின் 14வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த்

♈ 🇮🇳 கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

♈ 🇮🇳 கோவை: காரில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல்

♈ 🇮🇳 பிலிப்பைன்ஸில் கனிமங்கள் ஏற்றுமதிக்கு தடை

♈ 🇮🇳 குஜராத் கனமழையால் 8,000 பேர் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம்.

♈ 🇮 ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ.,எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு, கைது செய்துள்ளது.இதனை கண்டித்து இன்று காஷ்மீரில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

♈ 🇮  ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார்,பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,''என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்

♈ 🇮🇳  திருமலையில், வார இறுதி நாட்களில், 'திவ்ய தரிசன டோக்கன்கள்'வழங்குவதை, தேவஸ்தானம் மீண்டும் துவக்கி உள்ளது.

♈ 🇮  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.05காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

♈   நாட்டையே உலுக்கிய, நிதாரி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள்,மொனிந்தர் சிங் பந்தர், 59, சுரேந்திர கோலி, 46, ஆகியோருக்கு, இதுதொடர்பான ஒரு வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டா

♈ 🇮🇳   லோக்சபாவில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
எண்ணெய் வினியோக நிறுவனமான, இந்துஸ்தான் பெட்ரோலியத்தில், அரசுக்கு சொந்தமான, 51 சதவீத பங்குகளையும், அந்நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமையையும், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துக்கு விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு, கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

♈   கும்பகோணம்: குடந்தை அருகே காரை மடக்கி சோதனையிட்ட போலீசார்,பல லட்சம் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளைப் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்–விஸ்வரூபம்
♈ 🇮🇳  இந்திய தேசிய பணப்பரிமாற்ற வாரியத்தினால் வழங்கப்பட்டு வரும் பீம் செயலியை இதுவரை 16 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது

  12pm -25-7-2017-tuesday

♈ 🇮🇳  ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பார்லியில் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, நேரடியாக உத்தரவிட அனுமதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று,நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் அறிமுகம் செய்யப்பட்டது.

♈ 🇮🇳  மும்பை காட்கோபர் என்ற இடத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

♈ 🇮🇳  வேதாரண்யத்தில் உள்ள தனியார் குருகுல விடுதியில் உணவு ஒவ்வாமையால்23 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

♈ 🇮🇳  ஈரோடு : சத்தியமங்கலத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெசவு தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

♈ 🇮🇳  இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் 3 கோடி பேருக்கு இலவச வைஃபை வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனுமதி கேட்டுருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ நிறுவனம், இலவச சிம் கார்ட் மூலம் இலவச அழைப்பு, இலவச டேட்டா வழங்கியது.

♈ 🇮🇳  நாமக்கல் மாவட்டம், துத்திக்குளம் வட்டம், காரவள்ளியில் கொல்லிமலைக்கு செல்லும் சாலையில் சுங்க வசூல் நடுவம் உள்ளது. இந்த இடத்தில், கொள்ளிமளிக்கு செல்லும் அனைத்து வண்டிகளுக்கும் சுங்க கட்டணம் வசூல் செய்யபடுகிறது.இந்த சுங்க வசூல் நடுவத்திலிருந்து மலைவாழ் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கொல்லிமலை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்துகொண்ட காதலன்..!கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு ரோட்டை அடுத்த குட்டக்கடை பகுதி

♈ 🇮  உசிலம்பட்டி போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்

♈ 🇮  மோசடி: சினிமா பைனான்சியர் போத்ரா கைது

♈ 🇮  பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
♈ 🇮🇳  எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்: பார்லி வளாகத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

♈ 🇮  ஸ்ரீ சத்யசாய் அமைப்பின் வி.சீனிவாசன் காலமானார்-

♈ 🇮  அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேலும், திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாட வேண்டும். சமஸ்கிருதம் அல்லது வங்க மொழியில் பாட விருப்பமில்லாதவர்கள் தமிழில் மொழி பெயர்த்து பாடலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்தில் ஒரு நாள் வந்தே மாதரம் பாட வேண்டும்.பாடலைபாட விருப்பமில்லாதவர்கள் மீது எந்த அழுத்தம் தரக்கூடாது. வந்தே மாதரம் பாடக்கூறி அழுத்தம் தந்தால், அது தேசத்தின் மீதான வெறுப்பை அதிகரிக்கும். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது-

♈ 🇮  இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக தேசிய பங்கு சந்தை நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது-

♈ 🇮  டோகோலாம் பகுதியில் நிலவும் எல்லை பிரச்னையின் பின்னணியில்,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளதாக சீன மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன-

♈ 🇮🇳 குஜராத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

♈ 🇮🇳 ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்த கோட்டைபட்டினம் மீனவர்கள் மூன்று பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததகாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதானவர்களிடம் யாழ்பானம் கடற்படை முகாமில் விசாரணை நடைபெற்று வருகிறது.

*மதிய செய்திகள்@25/7/17🔴*

நாட்டின் 14–வது ஜனாதிபதியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார்.

அப்துல்கலாம் காட்டிய வழியில் செயல்படுவேன் ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த் உரை

இந்திய பாதுகாப்பு படைகளிடம் போதிய ஆயுதங்கள் உள்ளது என மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய வளர்மதி, ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக கருத்துக் கூறிய குபேரன் வரிசையில் கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக கல்வி நிலையங்களில் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இலங்கை சிறையில் உள்ள 89 தமிழக மீனவர்களை விடுவிக்க பரிந்துரை

சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து ஆம்புலன்சில் சாப்பாடு-காய்கறி, பழங்கள் ஆகியவற்றை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொண்டு சென்று உள்ளார்.

கஞ்சா வைத்து இருந்ததாக நடிகை காஜல் அகர்வாலின் மானேஜர் கைது செய்யப்பட்டார்

மும்பை காட்கோபர் என்ற இடத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ள 50 பேரை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் சினிமாவுக்கு பணம் வழங்கி வரும் போத்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்

நீட் நுழைவுத்தேர்வை திணிக்காதீர்கள் என்று நாம் கேட்பது மாநில உரிமை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்

கேரள மாநிலம் திருச்சூரில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் மாயமாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 9ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

விதி மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த பாலமுருகன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ஆட்டோவை ஷேர் ஆட்டோவாக பயன்படுத்தினால் ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்யலாம்.

அதிமுக தலைவர்கள் பதவிக்கு அடித்துக் கொள்வதாக நடிகர் ஆனந்த்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். சினிமாவுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டில் அரசியலே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டதற்கு நடிகர் ஆனந்த்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தோல்வியை தழுவிய அமெரிக்கா பாகிஸ்தானை பலிகடா ஆக்க விரும்புகிறது என பாகிஸ்தான் செனட்டர் குற்றம் சாட்டிஉள்ளார்.

2011ல் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் கத்தாருக்கு தொடர்பு இருந்ததாக ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் சித்ரவதைக்கு ஆளான 14 வயது சிறுமி என்னுள் இருக்கும் வலி 100 மரணங்களுக்கு சமம் என கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக