வருகிறது பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் - 9 பேர் கொண்ட குழு அமைப்பு!
1 முதல் 12ம் வகுப்பு வரை பாட திட்டங்களில் மாற்றம் குறித்து உயர் மட்ட குழு அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாட திட்டங்கள் மாற்றம் செய்வது குறித்து பரிசீலனையில் இருந்தது. இதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு, இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில், 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பாட திட்டங்களை மாற்றம் செய்வது குறித்து பணிகள் நடத்தப்படுகிறது.
இதில் உயர் மட்ட குழுவில் கலை வடிவமைப்பு, பாட திட்ட வடிவமைப்பு என பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், மாநில கல்வியியல்ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அறிவொறி, அண்ணா பல்கலைக்கழக வேளாண் துணை வேந்தர் ராமசாமி, தியேட்டர் பாஸ்கரன் உள்பட 9 பேர் உறுப்பினராக உள்ளனர் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக