'பிக் பாஸ்' - நிகழ்ச்சி பற்றி விரிவான அலசல். கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார்? யார்? கடந்த வாரம் நடந்தது என்ன? முதல் வார அப்டேட்... Big Boss .
பிரபலங்களுக்குள் தினந்தோறும் போட்டிகள், விளையாட்டுகள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் அவர்கள் வாரம் ஒருவராக வெளியேற்றப்படுவார்கள். இறுதி வாரத்தில் 3 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்களில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும். இது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி.
பிக்பாஸ் விதிகள்
“பிக்பாஸ் தமிழ்” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் எலிமினேட் செய்யப்பட்டாலோ அல்லது நிகழ்ச்சி முடிந்தாலோ தான் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்த வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, பேனா, பென்சில், கடிகாரம், இணையம், பேப்பர் என்று எந்தவொரு தொலைத் தொடர்புக்கும் அனுமதி கிடையாது. கழிவறை மற்றும் குளியலறை தவிர வீட்டின் அனைத்து இடங்களிலும் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிமுகம்
முதன் முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ் தமிழ்” நிகழ்ச்சி 25ம் தேதி துவங்கியது. விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. துவக்க நிகழ்ச்சியுடன் துவங்கி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தினந்தோறும் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சியைக் காணலாம்.
மொத்தம் 15 பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக சென்னையின் புறநகரில் உள்ள ஈவிபி தீம் பார்க்கில் ரூ. 100 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் எபிசோடு :
முதல் எபிசோடு திங்கள் கிழமை ஒளிப்பரப்பட்டது. முதல் நாளில் ஆர்த்திக்கும் ஜல்லிக்கட்டு ஜூலியும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரவில் தூக்கம் வராமல் தவித்த நடிகை ஓவியா, வாழைப்பழமும், பிளாக் டீயும் வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்.மேலும் பிக்பாஸ் இல்லத்தின் தலைவராக பாடலாசிரியர் சினேகன் தேர்வுசெய்யப்பட்டார். இறுதியாக தன்னை கட்டிப்பிடிக்கவே யாரும் இல்லை . என்ன விட்டு போயிராத என்று ஜல்லிக்கட்டு ஜுலி இளம் நடிகர் ஸ்ரீயிடம் ரகசியமாக பேசினார்
2வது எபிசோடு:
செவ்வாயன்று ஒளிபரப்பான எபிசோடில், குழுவில் இருந்து யாரை வெளியேற்றுவது என முதல் நாள் முடிவில் அனைவரும் கருத்து கூறினர். ஜூலி, நடிகர் ஸ்ரீ இதில் நெகடிவ் மார்க் வாங்கினர். 2ம் நாளில், பாத்திரம் கழுவ, வீடு சுத்தப்படுத்த, சமைக்க தனித்தனி குழு அமைக்கப்பட்டது. ஜூலி பாத்திரம் கழுவப் போய், கையை காயப்படுத்திக் கொண்டார். பிக் பாஸ் குழுவினர் ரம்ஜான் வாழ்த்து சொல்ல, பிரியாணி தரப்பட்டது. 2ம் நாள் இரவு, பிக் பாஸ் பட்டம் வெல்வேன் எனக் கூறிய ஜூலியை அனைவரும் கிண்டல் செய்ய, அவர் கதறி அழுதார்.
எபிசோட் 3 :
மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். அவருக்கு கவிஞர் சினேகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவரும் ஆறுதல் கூறினர். இத்தனை வருட காலமாக காலை எழுந்ததும் என மனைவிக்கு குட் மார்னிங் சொல்வேன். இப்போது யார் யாருக்கோ சொல்கிறேன். மனைவிக்கு சொல்ல முடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழுதார்.
நடிகர் பரணியிடம் தன் மனக்குமுறல்களை ஜல்லிக்கட்டு ஜூலியானா தெரிவித்தார்! அண்ணன், அக்கா என்று கூப்பிட்டால் தப்பா, பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டுமா… எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று ஜூலி, பரணியிடம் கூறினார். அதற்கு பரணி, நீ என்னை அண்ணன் என்று கூப்பிடுவது தான் பிடித்திருக்கிறது. ஆனால் எல்லோரும் என்னைப்போல் இருக்க மாட்டார்கள். உன்னை எல்லோரும் டார்கெட் பண்ணும் போது, நீ எல்லோரையும் திருப்பி அடி என்று பரணி கூறினார்.
சாப்பாடு கெட்டுப்போனது குறித்து குக்கிங் டீம் தெரிவிக்கவில்லை என்று ஓவியா அணி குற்றம் சாட்டியது. இதனால் கோபமடைந்த காயத்ரி ரகுராம், ஓவியா போன்ற எச்ச கூட வரமாட்டேன் என்று அப்பவே சொன்னேன் என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து தங்களின் முதல் காதல் குறித்து ஆரவ், கஞ்சா கருப்பு பகிர்ந்து கொண்டனர். கல்யாணம் காட்சி என்று எதுவும் இல்லாமல் இருந்த கஞ்சா கருப்புவை இயக்குநர் பாலா அழைத்து பிதாமகனில் நடிக்க வைத்துள்ளார். தான் படிக்காததால் ஒரு டாக்டரை தான் கல்யாணம் செய்வேன் என்று இருந்த கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணையே முதலில் காதலித்து அவரையே கல்யாணம் செய்து கொண்டதாக கூறினார்.
அதே போல் கவிஞர் சினேகன் தனது டீச்சர் தான் தன் முதல் காதலி என்றும் அவரின் நினைவாக தான் ஞாபகம் வருதே பாடல் எழுதியதாகவும் கூறினார்.
ஜூலி கெட்டப்பெண் கிடையாது. ஆனால் அவர் வேலை செய்யும் ஸ்டைல் சரியல்ல, நேர்மையானவர் அல்ல என்று நமீதா குற்றம் சாட்டினார். அதே போல் ஜூலி தன்னைக்குறித்து கவிஞர் சிநேகனிடம் கூறினார். அதாவது வீட்டில் இருப்பவர்கள் தன்னை ஒதுக்கி பார்ப்பதாகவும், தான் சினிமாவை சார்ந்தவள் இல்லை என்பதால் தன்னை ஒதுக்குவதாக கூறினார். ஆனால் அன்று இரவே பிக்பாஸ் குடும்பம் ஜூலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரை வியப்பில் ஆழ்த்தியது.
எபிசோட் 4 :
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகள் எரிச்சல் அடைய செய்வதாக நடிகை ஓவியா கூறியுள்ளார். ஆனால் விதிகளுக்கு உட்பட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம் என்று பாடலாசிரியர் சினேகன் கூறினார். ஆனால் சினேகன் பேசுவதை துளியும் மதிக்காத நடிகை ஓவியா அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.
அதன்பின்னர் அங்கு வந்த ஓவியாவிற்கும் சினேகன் மற்றும் கஞ்சா கருப்பிற்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓவியா விதிகளையும், குழு தலைவரையும் மதிக்கவில்லை என்று அனைவரும் குற்றம் சாட்டினர். அங்கிருந்து புறப்பட்டு சென்ற ஓவியாவை, ஆரவ் சமாதானப்படுத்தினார். அவரை தொடர்ந்து கஞ்சா கருப்புவும் சமாதானப்படுத்தினார். ஆனால் ஓவியா தன்னால் எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நடக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் தலைவர் சினேகனை கட்டிப்பிடித்து நடிகை ஓவியா மன்னிப்பு கேட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தமிழ் நன்றாக கற்றுக்கொண்டுள்ளதாக நடிகை நமீதா கூறியுள்ளார். பிக் பாஸ் குடும்பம் ஒன்று சேர்ந்து ஜூலியானாவின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். அதே நாள் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷாவுக்கும் பிறந்த நாள் என்பதால் கணேஷ் வெங்கட்ராமிற்கு கேக் கொடுத்து கொண்டாடினர்.
நடிகர் ஸ்ரீ-க்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பிக் பாஸ் அவரை மருத்துவ ஆலோசனை பெற வைத்தார். மருத்துவர், ஸ்ரீ உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பரிந்துரைத்ததின் பேரில் ஸ்ரீ வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
பிறந்த நாள் கொண்டாடும் ஜூலிக்கு பிக் பாஸ் கேக் அனுப்பி வைத்தார். அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி ஜூலியின் பிறந்த நாளை கொண்டாடினர். அதன் பின்னர் ஜூலி குறித்து பேசிய நமீதா, ஆர்த்தி ஆகியோர் ஜூலி நமக்கு முன்னால் நடிக்கிறார் என்றும் ஆனால் நிஜத்தில் கபடம் நிறைந்த பெண் என்றும் விமர்சனம் செய்தனர்.
எபிசோட் 5 :
ஹார்ட் ஒர்க்கிங், சோம்பேறி, நேர்மையானவர், நேர்மையற்றவர், குழு தலைவர், குழு தலைவருக்கு தகுதி அற்றவர் என்று விருது வழங்கப்பட்டது. நேர்மையற்றவர் விருது பரணிக்கு வழங்கப்பட்டது. சோம்பேறி விருது நடிகை ஓவியாவிற்கு கொடுக்கப்பட்ட நிலையில் அவர் வாங்க மறுத்துவிட்டார்.
எபிசோட் 6 :
வீடியோ மூலம் ஒவ்வொருவரிடமும் கமல்ஹாசன் உரையாடினார். அங்கு தங்கி இருப்பவர்கள் ரொம்பவே மிஸ் செய்யும் விஷயம் என்ன என்று கேட்டறிந்தார். தங்கியிருக்கும் போட்டியாளர்களுக்கு இடையே நடைபெறும் சச்சரவுகள், மனஸ்தாபங்கள் குறித்தும் பேசினார்.
பிக் பாஸ் வீட்டில் கஞ்சா கருப்புவிற்கும், பரணிக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. கஞ்சா கருப்பு பரணியை அடிக்கப்போகும் அளவிற்கு பிரச்னை உண்டானது. இது குறித்து பேசிய கமல், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அனைவரின் முக்கிய குணங்களில் ஒன்று என்றார்.
இறுதியாக இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டிய போட்டியாளர்கள் அனுயா மற்றும் ஜூலியானா என்று கமல்ஹாசன் அறிவித்தார். இதில் வெளியேறப்போவது யார் என்று 02.07.17 அன்று அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
எபிசோட் 7:
இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து அனுயா வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த அவரிடம் பங்கேற்பாளர்களுக்கு பட்டம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. தலைவர் சினேகனுக்கு புளுகு மூட்டை பட்டமும், பரணிக்கு வெள்ளந்தி பட்டம் உள்பட அனைவரும் ஒரு பட்டம் அளித்து நிக்ழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் கஞ்சா கருப்பு , பரணி உடனான சண்டை குறித்த உரையாடல் நடைப்பெற்றது. அதில் பரணிக்கு எல்லோரும் அறிவுரை வழங்கினார்கள்.
பின்னர் கமல் ஹாசனின் பாடலுக்கு அங்குள்ளவர்கள் நடனமாட வேண்டும் என்று அனைவரும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கில் சகிட தகிமி தந்தானா பாடலுக்கு நன்றாக நடமாடிய சக்திக்கு பரிசு ஒன்றை கமல் ஹாசன் அளித்தார். மேலும் அந்த பாடல்களை பார்க்கும் போது கமலு தனக்கு தோன்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக