சனி, 15 ஜூலை, 2017

அறைகூவல் விடுத்து அழைக்கிறது ஜேக்டோ-ஜியோ...!


அறைகூவல் விடுத்து அழைக்கிறது ஜேக்டோ-ஜியோ...!

18.07.2017 மாலை 5 மணிக்கு..!கோரிக்கைகள் வெற்றி பெற ஆசிரியர் சொந்தங்களே!மாவட்டத் தலை நகரங்களுக்கு ஆர்ப்பரித்து வாருங்கள்!அணி திரண்டு வாருங்கள்! அத்தனை பேரையும் அணி திரட்டி வாருங்கள்!!
 
   நமக்கென்ன வென்று இருந்திட வேண்டாம்
   ஒரு துளியா லென்ன பாதிப்பு வந்திடும்-என்ற
  குறுகிய பார்வைக்குள் தொலைந்திட வேண்டாம்!
  நதிகளின் சங்கமம்தானே பொங்கும் பெருங்கடல்
  பல துளிகளின் சங்கமம்தானே ஆகப்பெருமழை!
  உண்மை உணர்ந்து உன்னை தயாராக்கு!

 வாளாவிருந்தும் பாராமுகம் வளர்த்தும் பழக்கப்பட்டவர்களே!இதுவரை நாம் பெற்ற
எந்த உரிமையும் இனாமாக கிடைத்த தில்லை!
எத்தனை போராட்டங்கள்;எத்தனை சிறை வாசங்கள்;
எத்தனை எத்தனை உயிர் இழப்புகள்!
இந்திய தேசத்தின் விடுதலையும் அப்படித்தானே!
இப்போதாவது உயிர்த்தெழ வேண்டாமா நீ!

இரண்டு பேரில் ஒருவர் போதும்-என்ற
இருட்டு மாயைக்குள் உன்னை இருத்திவிடாதே!
தாயும் மகளுமே ஆனாலும்; வாயும் வயிறும்     வேறு வேறுதானே! உறுதிகொள் சொந்தமே!
வாழ்வின் இறுதி வரைக்கும்; நம் குடும்பம்
வாழ்வதற்கான ஆதாரம் பழைய ஓய்வூதியம்தானே!
எனவே..
சேதாரம் உணரும் போது தீயெனப் பற்றுவோம்!
சேரும் வெற்றிக்கு நாமும் ஒரு ஆதாரம்
என்பதை நிரூபித்து காட்டுவோம்!

வெற்றிக்கனி பறித்திட வீரத்துடன் களம் காணுவோம்;களம் கண்ட பிறகு-உன்
கண்ணில் தெரியும்பார் ஒரு வெற்றி மிடுக்கு!
அது நீ எழுதப்போகும் புதிய சரித்திரம்!
சந்திப்போம்!போராட்டக் களங்களில் சங்கமிப்போம்!
சாதனை வெற்றி பெறுவோம்!சரித்திரம் படைப்போம்!
                                                   உங்களோடு ஒருவனாக,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக