05-07-17- நாளிதழ் செய்திகள் புதன் – ஜூலை 5
------------------------------------------------------------
• சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக மானிய சிலிண்டரின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ. 32 வரை உயர்வு!
• ஓய்வு பெறுகிறார் நசீம் ஜைதி.. புதிய தலைமை தேர்தல் ஆணையராக குஜராத்தில் தலைமை செயலாளராக இருந்த அச்சல் குமார் ஜோதி நியமனம்!
• திருப்பூரில் சிக்கிய ரூ570 கோடி கண்டெய்னர் பணம் வங்கிக்கு சொந்தமானதே- சிபிஐ அறிக்கை தாக்கல்..!
• அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தாக திமுக உறுப்பினர் அன்பழகன் ஒரு நாள் சஸ்பெண்ட்: கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
• பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், புதுச்சேரியில் புதிதாக நியமிக்கப்பட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்ததால் சர்ச்சை
• பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்ற கடையை சுற்றுலாத்தலமாக மாற்ற மத்திய கலாச்சாரத்துறை முடிவு!
• 3 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் நெடான்யஹூ நேரில் சென்று வரவேற்பு!
• நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு
• இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர்.. வரலாற்றில் இடம்பிடித்தார் மோடி!
• 22 மாநில எல்லைகளில் சுங்கச்சாவடிகள் அதிரடி நீக்கம்.. இனி லாரிகள் நிற்காமல் சீறி பாய்ந்து போகலாம்..!
• பா.ஜ.க. வட்டச் செயலாளர் போல் ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டுகிறார்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
• சீனாவுடன் போர் அபாயம் அதிகரிப்பு அருணாச்சலபிரதேசத்தில் 3 பேருடன் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மாயம்.. தேடும் பணி தீவிரம்
• களைகட்டும் குற்றாலம் சீசன்.. இன்று முதல் ஐந்தருவியில் படகு சவாரி துவக்கம் !
• நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!
• போக்குவரத்து ஊழியர்களை 15 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்துவதா? விஜயகாந்த் கண்டனம்
• வக்கிர புத்தியை தூண்டும் பைத்தியக்காரங்க வீடு: பிக் பாஸை வறுத்தெடுத்த மன்சூர் அலி கான்
• சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
• போராட்டத்தில் தீ வைப்பது தமிழக காவல்துறை அதிகாரிகளின் டிரெண்ட் ஆகிவிட்டது.. மு.க.ஸ்டாலின் அதிரடி
• சென்னை மெட்ரோவுடன் கைகோர்க்கும் ஓலா...11 ஸ்டேஷன்களில் கார் புக்கிங் வசதி
• அமெரிக்காவில் தமிழர்களுக்காக நடத்தப்படும் முதல் தமிழ் ஒளிபரப்பு சேனல் 'தமெரிக்கா டிவி'
• தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள்
• இந்த ஆண்டுக்குள் 200 ரூபாய் நோட்டு வெளியீடு: ரிசர்வ் வங்கி தகவல்
• வெள்ளத்தால் அசாம் முழுவதும் கடுமையாக பாதிப்பு: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
• போராட்டம் நடத்தக்கூட இந்த ஆட்சியில் அனுமதி இல்லை: டி.ராஜேந்தர்
• ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட காவலர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு
• முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: திரையரங்குகள் போராட்டம் நீடிப்பு - இன்று நல்ல முடிவு கிடைக்கும் என விஷால் நம்பிக்கை
• ஆக. 5 முதல் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம்: நாஞ்சில் சம்பத் தகவல்
• மத்திய அரசை எதிர்ப்பது மட்டும் தான் எதிர்கட்சிகளின் பணியா? பாஜவுக்கு ஆதரவாக நிதிஷ்குமார் மீண்டும் கருத்து
• திருவாரூர் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 3 மாவட்டங்களில் மின்தடை
• ஜிஎஸ்டிக்கு முன், ஜிஎஸ்டிக்கு பின் உள்ள விலையை பொருட்களில் தெளிவாக பதிய வேண்டும்: பஸ்வான்
• மகாராஷ்டிராவில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பாஜ மாவட்டச் செயலாளர் தலைமறைவு: வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு
• ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாரை சந்திக்க சந்திரசேகர் ராவ் மறுப்பு : காங்கிரஸ் கண்டனம்
• தஞ்சை: கதிராமங்கலத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார்
• பழைய ரூபாய் மாற்ற மீண்டும் கால அவகாசம் தர வேண்டும்: உச்சநீதிமன்றம்
• இலங்கையில் புதிய ராணுவ தளபதியாக மஹிந்த சேனநாயக்க நியமனம்
• அமர்நாத் புனித யாத்திரை: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
• திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் திருமண பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் - சட்ட ஆணையம் அரசுக்கு பரிந்துரை
• பா.ஜ.க. சார்பில் ஜி.எஸ்.டி. வரி ஆலோசகர்களாக மாறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்
• அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது- அமைச்சர் ஜெயக்குமார்
• அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை ஓபிஸ் அணியினர் மறுப்பு
• தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
• 5 ஆண்டு சட்ட படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்
• இன்றைக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.65.46, டீசல் லிட்டருக்கு ரூ.56.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக