போலீஸ் இளைஞர் படைக்க 10,500 பேர் தேர்வு: விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் துவக்கம்
சேலம்: தமிழ்நாடு போலீஸ் இளைஞர் படைக்கு, 10 ஆயிரத்து, 500, பேர் தேர்வு செய்வதற்கான விண்ணப்ப விநியோகத்தை, ஆன் லைன் மூலம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் துவக்கி உள்ளது.
தமிழக போலீசாருக்கு உதவியாக, பணிகளை மேற் கொள்ளும் வகையில், போலீஸ் இளைஞர் படை உருவாக்கப்பட்டது. இதில், கடந்த, 2014ல் தேர்வு செய்யப்பட்டவர்கள், தேர்வு மூலம் போலீசாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு போலீஸ் இளைஞர் படையில், 10 ஆயிரத்து, 500, காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியை, தற்போது தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் துவக்கியுள்ளது. முதல் கட்டமாக எழுத்து தேர்வுக்கான விண்ணப்பத்தை, தமிழ்நாடு போலீசின் இணைய தளம், www.tnpolice.gov.in, www.tnusrb.tn.gov.in ஆகியவற்றில், பதவி இறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அக்.,1 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு கிடைக்கப் பெற வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு அழைப்பு, அனுமதிச் சீட்டுக்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு, நவ.,10ல், எழுத்து தேர்வு, அந்தந்த மாவட்டம், மாநகரங்களில் நடத்தபட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக