செவ்வாய், 18 ஜூலை, 2017

தமிழக த்தில் 25 ஆயிரம் பேருக்கு சிக்கல்!!!*

அடுத்த நடவடிக்கைக்கு தயாராகும் வருமான வரித்துறை;

🍏 *தமிழக த்தில் 25 ஆயிரம் பேருக்கு சிக்கல்!!!*

🥀செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வங்கிகளில் அதிக தொகையை,
'டிபாசிட்' செய்த, தமிழகத்தை சேர்ந்த, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.

🥀நாட்டில் உள்ள கறுப்புப்பணம் மற்றும் பதுக்கல் பணத்தை வெளிக்கொணர, 2016 நவ., 8ல், 5௦௦, 1,௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

🥀அப்போது, கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை, பலர் வேறு வழியின்றி வங்கிகளில், 'டிபாசிட்' செய்தனர்.

🍅 *திரட்டிய வங்கிகள்*

🥀சிலர், வருமான வரித்துறை தங்களை கண்காணிக்கலாம் என்ற சந்தேகத்தில், உறவினர்கள் அல்லது வேறு நபர்களின் வங்கி கணக்குகளில், டிபாசிட் செய்தனர்.

🥀 இதையடுத்து, நீண்ட நாட்களாக பணம் எதுவும் டிபாசிட் செய்யப்படாமல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, திடீர் பணப்புழக்கம் அதிகரித்த வங்கிக் கணக்குகள்;

🥀அதிக தொகை, டிபாசிட்டான வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை, வருமான வரித்துறை சேகரித்தது.

🥀அந்த தகவல்களை திரட்டிய வங்கிகள், எஸ்.எப்.டி., எனப்படும், நிதி விவரங்கள் தொடர்பான அறிக்கையை, வருமான வரித்துறைக்கு அனுப்பின.

🥀அதன் அடிப்படையில், முதல் கட்டமாக, 2016, நவ., - டிச., மாதங்களில், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, டிபாசிட் செய்த, 18 லட்சம்பேருக்கு, வருமான வரித்துறை விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியது.

🥀 வருமான வரி தாக்கல் செய்வோருக்கு, இ - மெயில் மற்றும் அலைபேசி எஸ்.எம்.எஸ்., மூலமாகவும்; கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டன.

🥀 அதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், ஆன்லைனில், கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளனர்

🥀இந்நிலையில், இரண்டாவது கட்டமாக, 5.50 லட்சம் பேரிடம், வருமான வரித்துறை, விளக்கம் கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், தகவல் அனுப்பியுள்ளது.

🥀 இதில், தமிழகத்தில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

🍏 *தமிழகம் முதலிடம்...*

🥀இது குறித்து, தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

🥀 இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் தான், வருமான வரி ஏய்ப்பு அதிகம் நடந்துள்ளது.

🥀 செல்லாத ரூபாய் நோட்டுஅறிவிப்பின் போது, இங்கு, 1,300 கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

🥀 பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழும், 400 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

🥀இரண்டாம் கட்டமாக, வங்கிகளில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, டிபாசிட் செய்தவர்களுக்கு, டில்லி தலைமையகத்தில் இருந்து, இ - மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலமாக, விளக்கம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

🥀அந்த எண்ணிக்கை, 25 ஆயிரத்திற்கு அதிகமாக இருக்கும்.

*முக்கிய* *ஆலோசனை*

🥀சென்னை, நுங்கம்பாக்கத்தில், வருமான வரி தலைமை அலுவலகமான ஆயக்கர் பவனில், தமிழக - புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஹர்லால் நாயக் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

🥀 இதில், புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

🥀அதில், தமிழகத்தில், 25 ஆயிரம் பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது தொடர்பாகவும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் வீடுகளில் நடந்த சோதனை தொடர்பாகவும், எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக