செவ்வாய், 18 ஜூலை, 2017

அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு : திணறும் கல்வி அதிகாரிகள்...




அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு :
திணறும் கல்வி அதிகாரிகள்...

🥀தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் விஷயத்தில், அரசியல்
தலையீடு அதிகரிப்பதால் பட்டியலை இறுதி செய்ய முடியாமல், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்,' என சர்ச்சை எழுந்துள்ளது.

🥀கல்வி த்துறையில் ஒவ்வொரு ஆண்டும், 150 நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலையாகவும், 100 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

🥀மேல்நிலையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர்நிலையில் 750 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும்

🥀.இதில் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக 100 பேருக்கும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

🥀தரம் உயர்த்துதல் தொடர்பாக, இக்கல்வியாண்டும் அறிவிப்பும் வெளியாகிய நிலையில், பள்ளிகள் பட்டியலை வெளியிடுவதில் கடும் இழுபறி நீடிக்கிறது.

🥀'ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பெயர்களை அறிவித்து அப்பணியிடங்களையும் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும்,' என ஆசிரியர்கள் எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்தனர்.

🥀இதற்கு காரணம், தகுதி இல்லாத பள்ளிகளை தரம் உயர்த்த சொல்லி, ஆளும் கட்சி பிரமுகர்கள் சிபாரிசு செய்வதால், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்.

🥀 *இது குறித்து, ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:*

🥀 பள்ளிகளுக்கு இடையே 3 முதல் 5 கிலோ மீட்டர் துாரம், ஒரு மேல்நிலை பள்ளிக்கு அருகே குறைந்தபட்சம் 2 அல்லது 3 உயர்நிலை பள்ளிகள் (ஊட்டுப் பள்ளிகள்) இருக்க வேண்டும்,

🥀 மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் தரம் உயர்த்த தகுதிகளாக கணக்கிடப்படுகின்றன.

🥀கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனும், இதை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.

🥀ஆனால், அமைச்சர்கள் தொகுதி,
எம்.எல்.ஏ.,க்கள் விருப்பம் என குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்ய, அரசியல் கட்சி யினரின் வாய்மொழி உத்தரவால் கல்வி அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

🥀 வேறு வழியின்றி, தகுதியில்லாத பள்ளிகள் பல மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

🥀எனவே இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள பள்ளிகள், தரம் உயர்த்த தகுதி வாய்ந்தவையா என்பதை மீண்டும் ஒருமுறை கல்வி செயலாளர் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதி முடிவு மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

🥀'டிரான்ஸ்பர்' பேரம் ஜரூர்... : தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் உருவாகும், 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலை பள்ளிகளில் சுமார் 450 பட்டதாரி பணியிடங்கள் வரையும் 'டிரான்ஸ்பர்' மூலம் நிரப்பப்பட உள்ளன.

🥀எனவே தொலைதுாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் 'டிரான்ஸ்பர்' பெற்று, சொந்த ஊர் செல்ல முயற்சிக்கின்றனர்.

🥀இதற்காக ஆளும் கட்சியினர் சார்பில், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, மறைமுக பேரம் பேசப்பட்டு வருகிறது.

🥀எனவே, சிறப்பு கலந்தாய்வு நடத்தி, இப்பணியிடங்களையும் வெளிப்படையாக நிரப்ப, கல்வி செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக