சனி, 15 ஜூலை, 2017

மதி செய்திகள் 8am -16-7-2017-sunday

மதி செய்திகள்   8am -16-7-2017-sunday

♈ 🇮🇳  ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட இருக்கும் எம்.பி.,எம்.எல்.ஏ.க்களில் 1,581 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது

♈ 🇮🇳  சென்னை கொடுங்கையூரில் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மரணத்திற்கு தமிழக மக்கள் இயக்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டி கொள்கிறது

♈ 🇮🇳  நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வள பல்கலையில்,பி.எப்.எஸ்சி., மற்றும் பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், வரும்,21, 22ல்,பொன்னேரியில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் என,அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த கவுன்சிலிங், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, மாணவர் சேர்க்கை கமிட்டி தலைவர்,பேராசிரியர்சண்முகம் அறிவித்து உள்ளார்

தமிழகத்தில், இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம், ஆகஸ்ட்டில் துவங்கப்படும்,''என, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்தார்-

♈ 🇮🇳  ♈ 🇮🇳  ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுபோட எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை இழுக்க குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது

தமிழகத்தில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு,தமிழகத்தில் உள்ள மின்சார நிலையங்களில் 750மெகாவாட் மின்சார உற்பத்திக்கு பயன்படுகிறது

♈ 🇮🇳  ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர்.இதன் காரணமாக இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

♈ 🇮🇳  அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து; 3பேர் கருகிச்சாவு

♈ 🇮🇳  ஈரான் நாட்டில் டெக்ரான் நகரில் ஷார் இ மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஒரு மத குருவை அடையாளம் தெரியாத ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார்

♈ ஜியோ பைபர் சேவையை ரிலையன்ஸ் வெளியிட்டதும் அதற்கு போட்டியாக தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

♈*மரகதம்* என்னும் தாய் *இருதய அறுவைசிகிச்சைக்காக* சிகிச்சை  பெற்று வருகிறார் .. இதற்கு *O NEGATIVE* இரத்தம் *6 யுனிட்* இரத்தம் கண்டிப்பாக வேண்டும். இரத்தம் இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.தயவு செய்து *சேலம்* சுற்றுப்பகுதியில் உள்ள *O NEGATIVE* இரத்தவகை நண்பர்கள் தாமாக முன்வந்து ஓர் உயிரைக் காக்க வேண்டுகிறோம் .. இடம் :: பழனியான்டி மருத்துவமனை,சேலம்.நாள் :: 16.07.2017 , மாலை 6.00 மணிக்குள்.தொடர்புக்கு :: 9486674554-அமிர்தலிங்கம்-மேலும் விவரங்களுக்கு: சிகரங்கள் ஸ்ரீனிவாசன்-

♈சமூக வலைதளம் மூலமாக 12 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகிய 24 வயது இளைஞன் ஒருவன் அந்த சிறுமியை உடலுறவுக்கு அழைத்த சம்பவம் இங்கிலாந்தின் நார்த் ஷீல்ட் பகுதியில் நடந்துள்ளது

♈6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் குஜராத் மாநிலம் கோலியாத், என்னும் இடத்தில் அமைந்துள்ளது

♈  திருப்பதியில் இன்று ஆர்ஜித சேவை ரத்து; புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா -

♈மின் தேவை குறைவு; தூத்துக்குடியில் 450 மெ.வா மின் உற்பத்தி நிறுத்தம்

♈தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்

♈திருநெல்வேலி:தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால்,குற்றாலத்தில் சீசன் டல்லாகவே உள்ளது.மெயின் அருவியில்,குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது; சாரல் இல்லை. இதனால், சுற்றுலா பயணியர் வருகை குறைந்து விட்டது-

♈திருச்சி: பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளி நேரத்தில் மது குடித்து விட்டு போதையில் ரோட்டில் மயங்கி கிடந்தனர். அவர்களை ஆசிரியர்களே மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்த வேதனை சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டம் அருகே உள்ள மணப்பாறையில் உள்ள பாரதியார் நகர் பகுதியில் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி

♈அண்ணா பல்கலை இணைப்பிலுள்ளஇன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.67லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. இதற்கான, அழைப்பு கடிதம் மற்றும், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

   1pm -16-7-2017-sunday

♈ 🇮🇳  180030009009 சென்னை அமேசான்லிருந்து முதலில் அலைபேசி அழைப்பு வந்தது. அவங்களே சொல்லுங்க என்றார்கள். என்னத்த சொல்லுறது நீங்க எனக்கு போட்டுட்டு சொல்லுங்கனா என்றேன்.இல்ல நீங்க தான் எங்களை அழைத்தீர்கள் என்றார் ஒருவர். இல்லை நான் ஒரு மாத இதழ் பத்திரிகை ஆசிரியர்.பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றேன்.அப்படியா சார்.சாரி என்று வைத்து விட்டார். உடனே அதே என்னிலிருந்து அழைப்பு வந்தது. சொல்லுங்கள் என்றார். நீங்கதான் அழைத்திர்கள் என்றார். சார் நான் அமேசான் மீது வழக்கு தொடுக்கிறேன் உங்கள் விலாசத்தை கொடுங்கள் என்றேன் . வைத்துவிட்டார் அலைபேசியை. இது என்ன புது வித தொல்லை  

♈ 🇮🇳  *குரோம்பேட்டையில் சாம்பர்ஸ் காலனியில் பதற்றம் -சற்று நேரத்தில் ஆர்பாட்டம் நடைபெறப்போவதாக செய்தி அப்பகுதி நிருபர்கள் தொடர்பு கொள்ள.கிணறு தோண்ட அடம்பிடிக்கும் ஒரு இன மக்கள் –தோண்டினால் பாதிப்பாகும் வேறு இனம் **எத்ரா**8610102318*

♈ 🇮🇳  அரசியல் நிகழ்விற்காக 11 மாதங்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலிருந்து வெளியே வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வரும் அவரை கட்சியினர் யாரும் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. தொடர் சிகிச்சையில் இருந்து வரும் அவரை முக்கிய பிரமுகர்கள் மட்டும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பதற்காக நாளை (ஜூலை 17) கருணாநிதி வீட்டிலிருந்து வெளியே வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

♈ 🇮  டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் துவங்கியது

♈ 🇮🇳  திருநள்ளாறில் நடந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது

♈ 🇮🇳  அரியலூர்: பரதூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டில் 400 காளைகள் பங்கேற்பு .

♈ 🇮🇳  என்னமோ சார் நீங்க சொல்லுறீங்க , நாங்க நம்புறோம் -போலீசாரை மிரட்டவே கெரசின் குண்டு வீச்சு: இணை கமிஷனர் -போலீஸ் ஸ்டேசனை தெற்கு மண்டல போலீஸ் கமிஷனர் அன்பு ஆய்வு செய்தார்.பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்படுவார்கள். ஒரு வழக்கு தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரை மிரட்டவே கெரசின் குண்டை மணிகண்டன் வீசினார்.போலீசாரை கொலை செய்ய முயன்றதாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டுவீச 5 பேர் வந்துள்ளனர். ஒருவர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். உள்நோக்கத்துடன் யாரையும் கைது செய்வதில்லை. விசாரிப்பதில்லை. போலீசாரை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்

♈ 🇮🇳  தீயணைப்பு வீரர்களுக்கு போதுமான உபகரணங்கள் இல்லையா?முதல்வர் மறுப்பு .

♈ 🇮🇳  பா.ஜ.,வுக்கு ஆதரவு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை

♈ 🇮🇳  சசிக்கு உதவிய 40 கைதிகள் பெல்லாரி சிறைக்கு மாற்றம்?

♈ 🇮🇳  சென்னை கொடுங்கையூர் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் ஆறுதல்

♈ 🇮🇳  அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் : பலி 8 ஆனது --vishwarubam

♈ 🇮🇳  டில்லியில் போராட்டம் நடத்த முயன்ற தமிழக விவசாயிகள் கைது

♈ 🇮  பிரபல திரைப்பட இயக்குனரான அசிஷ் அவிகுந்தக் கோல்கட்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு நேற்று நடிகை தேவலீனா சென்னுடன் சென்றார். அப்போது அவிகுந்தக் வேட்டி அணிந்து இருந்தார். இதைப்பார்த்த வணிக வளாகத்தின் காவலாளிகள் அவரை மட்டும் நுழையவிடாமல் தடுத்தனர்.பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்டி அணிந்தவர்கள் இங்கே நுழைய அனுமதி கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்

♈ 🇮  நடிகையும், பா.ஜ., பிரமுகருமான ரூபா கங்கூலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் மேற்குவங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரூபா தெரிவித்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மாநிலத்தில் ஆளும் அரசிற்கு எதிராகவும், சட்ட ஒழுங்கை பாதிக்கும் வகையிலும் பேசியதாக ரூபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

♈ 🇮  நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரும் துவங்க உள்ளது. இதனால் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பார்லி., வளாகத்தில் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை திரிணமுல் காங்., புறக்கணித்தது.


  3pm -16-7-2017-sunday

♈ 🇮🇳  இப்படியாச்சுனா இனி விஸ்வரூபம்ச செய்தி கொடுக்க முடியாதே- சென்னை, மும்பை, கொல்கத்தா கடலில் மூழ்கும் அபாயம்.. ஏன்.. எதற்கு.. பரபர பின்னணி-அண்மையில் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் சீனா,இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிக அளவு பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. உலகம் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால் இந்தியா, வங்க தேசம்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகள் கடலில் மூழ்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சுமார்13 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களும் மூழ்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும்,பருவநிலை மாற்றம் இந்தியாவில் வெள்ள பாதிப்புக்கள் அதிக அளவில் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♈ 🇮🇳  நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுத்த தமிழக மாணவர்கள்... கதறலை பகிரும் ஃபேஸ்புக் பக்கம்

♈ 🇮🇳  இதுதான் ஜனநாயக இந்தியா –இனி தப்பித்தவறி ஒரு ஐ ஏ எஸ் – ஐ பி எஸ் அதிகாரிகள் நேர்மையா நடக்க முன் வருவார்களா-தமிழக மக்கள் இயக்கம் -பெங்களூரு சிறையில் மோசடிகளை வெளிப்படுத்திய அதிகாரி ரூபாவை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரூபாவுக்கு சிறை முறைகேடுகள் பற்றிய தகவல்களை கொடுத்ததாக கூறி ராமமூர்த்தி என்ற கைதியை சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆபாசமாகவும்,அவதூறாகவும் திட்டியதோடு, அவரை அடித்து உதைத்ததாக அந்த கைதியின் மனைவி அனிதா போலீசில் புகார் கொடுத்து உள்ளார்

♈🇮🇳🌴காமராஜர் என்னும் ஆளுமையின் தொலைநோக்குப் பார்வையால் கல்வி பெற்ற தலைமுறையினரின் வாரிசுகள் தற்போதைய அரசின் சுயநலத்தால் எதிர்காலத்தையும் மருத்துவக் கனவையும் தொலைத்துவிட்டு நிற்கும் கொடுமை நேர்ந்துள்ளதே என்பதுதான் தமிழகத்தின் குமுறல்-'மக்களுக்குத்தான் சட்டமே ஒழிய, சட்டத்துக்காக மக்கள் அல்ல' என்று சொன்ன காமராஜர், தன் ஆட்சியின் போது தமிழகத்தில் எல்லா தரப்பு மாணவர்களையும் கல்வி கற்க வைத்து அரசு அதிகாரிகளாகவும் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் உருவாக்கினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசில் உள்ள அமைச்சர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளிலும் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு ஆளானதால் மத்திய அரசிடம் போரிட்டு உரிமையை மீட்கும் சக்தி இல்லாதவர்களாக உள்ளனர். அதனால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பலிகடா ஆக்கியுள்ளனர் என்கிற குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட மாணவர்களும் பெற்றோரும் மட்டுமில்லாது அனைத்துத் தரப்பு மக்களும் முன்வைக்கின்றனர்.அதிக மதிப்பெண் வாங்கியும் மருத்துவராக முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது
♈ 🇮  தூத்துகுடி மாவட்டம்  புதுகோட்டை குமாரகிரி பஞ்சாயத்துக்குட்பட்ட. பகுதிகளில் உள்ள குறிப்பாக ஆசிரியர் தெருவில் கடந்த ஆறுமாத காலமாக குடிநீர்பிரச்சனை மிகவும் மோசமாக உள்ளது.இது சம்பந்தமாக பலமுறை மாவட்டநிர்வாகத்திடமும்,பஞ்சாயத்து  அதிகாரிகளிடமும் முறையிட்டும் இதுவரை  எவ்வித முன்னேற்றமும் இல்லை. பலதடவை நேரிலும்,மனுக்காளாக ககொடுத்தும் பயனில்லை. மாறாக. அலுவலகத்தில் சென்று முறையிட்டால் அதிகாரிகள் தங்களை மிரட்டு வதாக ககூறி உங்களை உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.மேலும்   தண்ணீர் உங்கள்  பகுதிக்கு தரமுடியாது  யாரிடம் வேண்டுமானலும் சொல்லுங்கள் என்றனர்.தண்ணீர் குழாய்கள் வாங்கி பயன்படுத்தாமல் வீனாக கிடக்கிறது. அரசு பணம் விரையமாகிவதுடன்,பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இருப்பது பொறுப்புடையதல்ல மேலும் இனி மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் , அடுத்தகட்டமாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தண்ணீர்குடத்துடன்  செல்வோம் என்று பொதுமக்கள் வேதனை யுடன் கூறினர்    .

♈ 🇮  Salem News :-* 16/07/2017 *கீரிப்பட்டியில் அதிமுக பிரமுகர் "ஆவுச்சிஅருளை" மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்.*சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் "ஆவுச்சிஅருள்" (48)வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 கிரேடு மதுபான பாட்டில்கள்; 3 கிரேடு பீர் பாட்டில்களையும் ஆத்தூர் மதுவிலக்கு DSP தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்து "ஆவுச்சிஅருளை" கைது செய்தனர்.

♈ 🇮  வாரீர் அலைகடலென ஆர்பரித்து வாரீர் ஜூலை-18மாவட்டத்தலைநகரங்களில் ஆர்பாட்டம் ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது  இக்கூட்டமைப்பில் ஜாக்டா  இடம்பெற்றுள்ளதால் அன்றும் இன்றும் கசப்பான உணர்வுகளை மறந்து ஆசிரியர்-அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தினை மீட்டெடுக்க ஜாக்டா உறுப்பு சங்கங்கள் ஜாக்டோ-ஜியோ வில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் ஒன்றாவோம் Cps ஐ ரத்துசெய்வோம்,  7 வது ஊதியக்குழுவின் ஊதியம் பெறுவோம் வெற்றிப்பெறுவோம்  பி.கே.இளமாறன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டா .

♈   *அன்பார்ந்த  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கரூர் மாவட்ட,வட்ட பொருப்பாளர்கள் மற்றும்  உறுப்பினர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். 18.7.2017 வரை     JACTTO-GEO  போராட்டம் சார்ந்த  செய்திகளை மட்டும் சக ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் தங்கள் பதிவுகள் போராட்ட களத்திற்கு ஆசிரியர்களை ஈர்க்கும்  வகையிலும் இருக்க வேண்டும் . ஒவ்வொரு ஆசிரியரும்  JACTTO-GEO  போராட்டம் வெற்றியடைய தங்கள் மேலான கருத்துகளை   பதிவிடவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."  CPS திட்டத்தில் பணியாற்றிடும்  அனைத்து ஆசிரியர்களும்  போராட்ட களத்தில்  பங்கேற்போம் என்ற உறுதியுடனும்  மற்ற  ஆசிரியர்களை திரட்டும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும் .தங்களை JACTTO-GEOபோராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே நம் வாழ்வாதாரம் பாதுகாக்கபடும் என்பதை சக ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு நம்மிடதில் உள்ளது என்பதை புரிந்து செயல்படவேண்டும்"அலை கடலனதிரள்வோம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நம் ஒற்றுமையையும் பலத்தையும் நிரூவிப்போம்!போராட்டக் களத்தில் சங்கமிப்போம்!சாதனை வெற்றி பெறுவோம்!நம் வாழ்வாதாரம் காப்போம்! *வட்ட கழக செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,கரூர் மாவட்டம்*JACTTO-GEO*-

♈ 🇮  கொடுங்கையூர் தீவிபத்தில் இறந்த வீரர் குடும்பத்திற்கு ரூ.13 லட்சம் நிதி --குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதல்வர் பழனிச்சாமி .

♈ 🇮 குடும்ப ஆட்சி அகற்றினால் தான் தமிழகம் முன்னேறும்: எச்.ராஜா .

♈ 🇮 ரயில்வே துறை மீது அதிக வழக்குகள்: சட்ட அமைச்சகம் தகவல் .

♈ 🇮 ஈராக் சிறையில் இந்தியர்கள்: சுஷ்மா .

♈ 🇮 பசுக்கள் பெயரில் வன்முறை: கடும் நடவடிக்கை எடுக்க மோடி உத்தரவு .

♈ 🇮 கொடுங்கையூர் தீவிபத்து: பேக்கரி உரிமையாளர் மீது போலீசார் வழக்கு --

♈ 🇮 காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிகள் 3 பேர் கைது .

♈ 🇮   முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது .

♈ 🇮  பெங்களூரு பரப்பன அகரஹாதாரா சிறையில் உயர்மட்டக் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளனர். சிறையில் இருந்த சசிகலாவிடம் அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு நாளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

♈ 🇮  கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்தவர்களில் 9 பேரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. தீவிபத்தில் காயமடைந்த காவலர்கள் 5 பேரும், தீயணைப்பு வீரர்கள் 3பேரையும் பேக்கரி உரிமையாளர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் ---vishwarubam

♈ 🇮  நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வடக்கன்குளம் பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்-.

♈ 🇮  சென்னை : கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தடய அறிவியல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்

♈ 🇮  சென்னை : கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தடய அறிவியல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்

♈ 🇮  செனேகல் நாட்டில் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து ஏற்பட்ட நெருக்கடியில் 8 பேர் உயிரிழந்தனர் --vishwarubam

♈ 🇮  சிக்கிம் மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இடம் கிடையாது சீனா சொல்கிறது.

  6pm -16-7-2017-sunday*  

♈ 🇮🇳  டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் நானை வாக்களிக்க செல்லும் இடத்தில் பேனா கொண்டு செல்ல எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தேர்தல் ஆணையம் கொடுக்கும் மார்க்கர் பேனா மூலம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

♈ 🇮🇳  மபியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி-குனா என்ற இடத்தில் மின்சாரம் தாக்கியது-மோட்டாரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கியது
♈ 🇮🇳  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான நடிகர் சரத்குமாரை கட்சியோடு வளைத்துப் போடுவதற்கு பாஜக மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

♈ 🇮🇳  புரோ கபடி போட்டிகளில் பங்கேற்று வெல்லும் அணியினருக்கு ரூ. 8 கோடி பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புரோ கபடி லீக் கமிஷனர் அனுபம் கோஸ்வாமி
♈ 🇮🇳  ஊருக்கே தெரிந்ததை ஆய்வு வேறு செய்ய வேண்டுமா -இந்தியாவில் குறுக்கு வழியில் வாங்கப்படும் ஓட்டுனர் உரிமங்கள்

♈ 🇮  போலி பத்திரிக்கையாளர்களை  ஒழிக்க என சில குறிப்புக்களோடு ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் செய்தியாளர்களே பரப்புகின்றனர்.இன்று கதையை கேளுங்க. இன்னைக்கு பல பத்திரிகைகள், பல ஊடகங்கள் நடத்தும் மிகப்பெரிய நிறுவனம் நடிகர் நடிகைகளை பற்றிய செய்தியை வெளியிட்டது இன்று. அதில் அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், என்ன வியாபாரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று எகத்தாளமாக கேட்கிறது. கொஞ்சம் அவங்கள பற்றி சிந்தித்தார்களா.எப்படி யாரால் சம்பாதித்து இன்று உலக கோடிஸ்வரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்று. பத்திரிகை ஊடகம் நடத்துவதினால் நாங்கள் யாரை பற்றியும் செய்தி வெளியிடுவோம், எங்களை பற்றி மட்டும் யாரும் செய்தி வெளியிடக்கூடாது என்ற ஹிட்லர் மன நிலையில் தானே ஊடக,பத்திரிகை முதலாளிகள் செய்தியாளர்கள் பலரும் பயணிக்கின்றனர் .முதலில் நாம் நேர்மையாக இருந்து பிறகு மற்றவர்களை பற்றி கேள்வி கேட்கலாம். இதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்      .

♈ 🇮 செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்ய போதுமான பட்ஜெட் இல்லாததால் தற்போதைக்கு சாத்தியமில்லை என நாசா தெரிவித்துள்ளது
♈ 🇮  காணவில்லை....#காவலர் #ஒற்றுமை முகநூல் பக்கத்தை காணவில்லை.மீண்டும் மீண்டும் முடக்கப்படும் காவலர்களின் முகநூல் பக்கம்.காவலர் குறைகளையும் கோரிக்கைகளையும் வெளியிட்டு வந்த#காவலர்.#ஒற்றுமை முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.காவலர்கள் தங்கள் குறைகளை யாரிடமும் கூறகூடாது என மறைமுகமாக அச்சுறுத்தும் திட்டமே இந்த முகநூல் முடக்கம்.கடைசிவரை காவலர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாமல் காவலர்களின் குறைகளை வெளியே தெரியாமல் முடக்குவதற்கான செயலில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர்

♈ 🇮 சினிமா பார்ப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை, அபிராமி ராமநாதன் ரத்து செய்துள்ளார்

♈ 🇮  ஓசூரில் மீண்டும் ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம்.  இன்று 16.07.17 ஒரே நாளில் 2 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு-தகவல்

♈ 🇮  இதயம் இடமாறி வலித்த தினம் ஆம் பிஞ்சுவிரல்கள் வருடி வருத்தங்கள் விடைபெறும் முன்பே தீ வந்து தீண்டி தீயிக்கு இரையாகிப் போன இளம்மொட்டுகளின் நினைவு தினம் கும்பகோணம் தீ 94  இளந்தளிர்களை விழுங்கிய இந்நாளை தமிழ்நாடு அரசு குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவித்து இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் பாதுகாத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறேன்  பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்-.

♈   இன்று (16.7.2017) இரவு 9 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி " நடந்தது என்ன " நிகழ்ச்சியில் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் பங்கேற்கிறார்.- செய்திப் பிரிவு -தமிழர் தேசிய முன்னணி .

♈   டில்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

♈  கரூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

♈  திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

♈  ஜனாதிபதி தேர்தல்: பா.ம.க., புறக்கணிப்பு

♈  ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை : சர்ச்சைக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

♈  ரவி சாஸ்திரிக்கு சம்பளம் ரூ.7.5 கோடி

♈  காஷ்மீர் விபத்து : அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் 16 பேர் பலி

♈  கருணாநிதி ஓட்டுப்போடுவது குறித்து நாளை தெரியும்: ஸ்டாலின்---vishwarubam

♈   சென்னை: சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறையில் நாளை(ஜூலை 17) நடக்கும் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அனைவரும் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்---vishwarubam

♈   பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவ் மேல்முறையீட்டு மனுவை ராணுவ கோர்ட் நிராகரித்தது---vishwarubam

♈ 🇮 இந்தியாவில் பெரும்பாலும் ஓட்டுனர் உரிமங்கள் முறையான சோதனையின்றி, குறுக்கு வழியிலேயே வாங்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் 10 ல் 6 பேர் உண்மையான சோதனையின்றியே உரிமங்களை பெறுவதாக தெரிய வந்துள்ளது.சாலை பாதுகாப்பு குறித்து 'சேவ் லைஃப் ஃபவுண்டேஷன் (SaveLIFE Foundation)' என்ற அமைப்பின் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நாட்டின் 5 மெட்ரோ நகரங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிகமுள்ள 10 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், ஆக்ராவில் வெறும் 12 சதவீதம் ஓட்டுனர்கள் மட்டுமே நேர்மையான முறையில் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர். ஜெய்பூரில் 72 சதவீதம் பேரும்,கவுகாத்தியில் 64 சதவீதம் பேரும், டில்லியில் 54 சதவீதம் பேரும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சோதனையை மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள 997 ஆர்டிஓ அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 1.15 கோடிக்கும் அதிகமான ஓட்டுனர் உரிமங்கள் புதிதாகவும், புதுப்பித்தும் தரப்படுகிறது. டில்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் 40 உரிமங்கள் மட்டுமே ஆர்டிஓ.,வால் வழங்கப்படுகிறது. மீதமுள்ள130 ஓட்டுனர் உரிமங்கள் குறுக்கு வழியிலேயே பெறப்படுகின்றன. சாலை பயன்படுத்துபவர்களில் 80 சதவீதம் பேர் பாதுகாப்பின்றி உணர்வதாகவும், 82சதவீதம் பேர் உயிர் பயத்துடனேயே சாலையை கடப்பதாகவும் தெரிவித்துள்ளனர் .

♈ 🇮 துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி ஜூலை 18-ல் வேட்பு மனுதாக்கல் செய்கிறார்-.

♈ 🇮 கோவை விமானநிலையத்தில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை தொடங்கியுள்ளது. இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனமும் வாரம் 4 முறை கோவைக்கு விமான சேவையை வழங்க இருக்கிறது. கோவை விமானநிலையத்தில் இருந்து ஏற்கனவே துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விமான சேவை உள்ளது. இந்தியாவில் 14 நகரங்களில் இருந்து இலங்கைக்கு 126 விமானங்கள் இயக்கப்படுவதாக இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சிவராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை ,திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து இலங்கைக்கு அதிகமாக விமானசேவை இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

♈ 🇮 திருவாரூர்: அடியக்கமங்கலம் ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிறுவனத்தின் சுற்றுச்சுவர் கட்டடப் பணிகளை நிறுத்த வலியுறுத்தி கிராமமக்கள் இந்த போராட்டத்தினை நடத்தி வருகின்றனர் .

♈ 🇮 திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே லாரி மோதி இருசக்கரவாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயரிழந்தது சிவா மற்றும் தனசேகர் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

♈ 🇮 நெல்லையில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 5வீடுகளில் 100 சவரன் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன .

♈ 🇮   ஜம்மு-காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு .

♈   ஜிஎஸ்டி: பதினைந்து நாட்களின் செயல்பாடு பற்றி நாளை காணொலி மாநாடு

♈   பாராளுமன்றத்தில் காஷ்மீர், டோக்லாம், பசு பாதுகாப்பு கும்பல் தாக்குதல் போன்ற விவகாரங்களை எழுப்பி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடியை கொடுக்க வாய்ப்பு உள்ளது --vishwarubam

♈   கங்கையை தூய்மைப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழு தற்போது இயங்கி வரும் இரு அமைப்புகளுக்கு பதிலாக வேறு இரு புதிய அமைப்புகளை ஏற்படுத்த பரிந்துரை செய்துள்ளது

♈   பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி பாரிஸில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் கண்கவர் வானவேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

♈   கனடாவின் மணிடோபா மாகாணத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா கீஸ்பிரேசட் என்பவர் மீது 2014 ஆம் ஆண்டு தனது ஆறு குழந்தைகளின் இறந்த உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஆண்ட்ரியா தனது ஒரு குழந்தையின் உடலை யு-ஹால் என்ற நிறுவனத்தில் உள்ள தனது லாக்கரில் மறைத்து வைத்திருந்திருக்கிறார். அவர் அந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்தாததால் அவரது லாக்கரை அந்நிறுவனத்தின் பணிபுரிபவர் திறந்து பார்த்த போது அதில் குழந்தையின் அழுகிய உடல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆண்ட்ரியா வீட்டில் சோதனை நடத்தியதில் மேலும் 5 குழந்தைகளின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைகளின் வயது 8-9 மாதங்கள் வரை இருக்கும். இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். வின்னிபெக் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆண்ட்ரியாவுக்கு 8.5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கினார்.இது குறித்து நீதிபதி தாம்சன் கூறுகையில், ‘அண்டிரியா தனக்கு குழந்தை பிறந்ததை பற்றி தனது கணவரிடம் இருந்து மறைத்துள்ளார். குழந்தைகள் உயிருடன் பிறந்துள்ளன. குழந்தைகளுக்கு மருத்துவ சிகிக்சை கொடுக்காததால் இறந்திருக்கலாம். அதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியாவிற்கு பதின்ம வயதில் இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

♈   அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் திடீரென்று நின்று போன திருமணத்தால் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட இளம்பெண் ஒருவர் எடுத்த முடிவு பலரது பாராட்டுகளையும் குவித்துள்ளது.இண்டியானா பகுதியில் குடியிருந்து வரும் Sarah Cummins என்ற 25 வயதான செவிலியர் மாணவியின் திருமணம் எதிர்பாராத சில காரணங்களால் திடீரென்று நின்று போயுள்ளது.இதனால் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட அவர் திடீரென்று எடுத்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் அவருக்கு பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்துள்ளது.திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே நாளில் அவர், சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதரவற்ற மக்கள் 170 பேரை குறிப்பிட்ட ஹொட்டலுக்கு அழைத்து வந்து, திருமண விருந்தை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். திருமண விருந்துக்கு ஏற்கனவே பதிவு செய்திருந்ததால், திருமணம் நின்று போனதாலும் அந்த உணவுகளை வீணாக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தாலும் அவர் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.திருமண நாளில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுமோ அவை அனைத்தையும் குறித்த விருந்துக்கும் செய்திருந்தார். ஆனால் மணமக்களுக்காக கேக் மட்டும் அந்த நிகழ்வில் தவிர்க்கப்பட்டிருந்தது.தமது திருமணம் ஏன் கடைசி நிமிடத்தில் நின்று போனது என்பது குறித்து வெளியிடாத சாரா, திருமண நிகழ்ச்சிக்காக மொத்தம் 30,000 டொலர் செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்

  8pm -16-7-2017-sunday

♈ 🇮🇳  அண்ணாமலை பல்கலையில் வேளாண்மை படிப்புகளுக்கு தரவரிசை பட்டில் வெளியீடு

♈ 🇮🇳  சீனாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி

♈ 🇮🇳  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சிரியா அகதிகளின் மகனான, குழந்தை ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார்.தங்களுக்கு தஞ்சம் அளித்த நாட்டிற்கு நன்றி சொல்லும் வகையில், சிரியா அகதி தம்பதியர் கனடாவில் பிறந்த தங்கள் குழந்தைக்கு ஜஸ்டின் ட்ரூடோ என்று பிரதமரின் பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

♈ 🇮🇳  பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த உச் ஷரிப் நகரில் வாழ்ந்துவந்த 14 வயது சிறுவனை ஆடு திருடியதாக குற்றம்சாட்டி சிலர் அடித்து,உதைத்து சித்ரவதை செய்தனர். இதில் அந்த சிறுவன் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்  .

♈ 🇮🇳  அமெரிக்காவின் ஜான் ஜோஸ் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பார்மர் (26)இவர் அப்பகுதியில் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை திருடினார்.அவற்றை அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தினார். முடிவில் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்றார். இது போன்று 18 பூனைகளை கொன்று இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு இச்சம்பவம் நடந்தது.எனவே கைது செய்யப்பட்ட இவர் மீது சான்ஜோஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி ராபர்ட் பார்மருக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தார்

♈ 🇮🇳  தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவாக மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள ராமு சுப்பு அரங்கில் தைப்புரட்சி அமைப்பின் சார்பாக 'தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

 ♈🇮🇳  போலி போலி செய்தியாளர்கள் என்று கூக்குரலிடுகிறீர்களே...ஒரு கட்சி இந்த ஊடகத்திற்கு ,நாளிதழுக்கு விளம்தரக்கூடாது என்ற உடன் ஒடி சென்று மண்டியிடுகின்றனரே யாருக்காக..ஊழியர்களுக்காக என்று நினைக்கின்றீர். ஒரு ஊடகம், நாளிதழுக்கு விளம்பரம் தர மறுத்த அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றதே யாரின் நலனுக்கு. ஒரு நாளிதழ், ஊடக உரிமையாளர்கள் ரவுடிகளுடன் நெருக்கம் காட்டிக் கொண்டே கடலில் கும்மாளம் அடித்து விட்டு நேர்மை செய்தி வெளியிடுவதாக காட்டிக் கொண்டது எத்தனை பேருக்கு தெரியும். பெரிய மால்களை கட்டி ஆடம்பரமான வாழ்வு வாழ்வது யார்.பத்திரிக்கை சங்கங்கள் என்ற பெயரில் சமூக விரோதிகளுக்கு செய்தியாளர்கள் என்ற போர்வையை கொடுத்து பாதுகாப்பது யார். இப்படி எத்தனையோ பேர் ஊடகம் நாளிதழ் பெயரால் சுகபோக வாழ்வதை கேள்வி கேட்க முடியாமல் சாதாரண , குடும்ப உறுப்பினர்கள் நலனுக்காக வாழும் சிறு பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தையே சிதைக்க நினைப்பது தான் உங்களின் நோக்கமா. இன்று தமிழக அரசின்  செய்திதுறை பி.ஆர்.ஒக்களின் நேர்மையற்ற செயலை கூறக்கூட பெரிய செய்தியாளர்களுக்கு துணிவில்லை காரணம் மறைமுக கூட்டணி.. அப்படி கூறினாலும் அவரை காப்பாற்ற பல திசைகளிலிருந்து உதவிக்கு ஒடி வருவர். உங்களுக்கு யார். உங்கள் சங்கங்களே உங்களுக்காக எவ்வளவு துணிந்து செயல்படும். பின்விளைவுகள் தான் அவர்களின் கண் முன் காட்சியாக தோன்றும். எத்தனையோ பயங்கர தவறுகள் நடப்பதை பார்க்கிறோம்.நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு துறைகளே அட்ஜஸ் செய்து கொள்கின்றன .உங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொலை வெறி.சிறு செய்தியாளர்களின் மேல். சட்டத்தை மீறி, சங்கத்தை மீறி , சுய நினைவை இழந்து செய்தியாளர்களுக்கு  களங்கம் விளைவிப்பவர்கள் மீது போர் தொடுங்கள்.சாதாரண விஷயத்திற்க்கெல்லாம் அரசு,அரசியவாதிகளை போல நடக்க கற்றுக் கொள்ளுங்கள் .உங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள உங்கள் இனத்தை நீங்களே அழிக்கின்றீர்.எனக்கு ரெண்டு போலீஸ் தெரியும், இன்ஸ் தெரியும், ஏ.சி தெரியும், டி.சி தெரியும், ஜெ.சி தெரியும், அமைச்சர் பி.ஏ தெரியும் அமைச்சரே தெரியும் என்று மார்தட்டி கொள்வதைவிட நம் இனத்திற்கு ஒரு துளி உதவியாவது செய்ய நினைப்போம். ஏயத்து, ஏமாற்றி வாழ்வதை விட நேர்மையாய் ஒரு நாள் வாழ்ந்தால் போது.

♈ 🇮  புதுடில்லி: பார்லி., சபாநாயகர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் .

♈ 🇮🇳  கமலை மிரட்டுவதற்கு ஸ்டாலின் கண்டனம் .

♈ 🇮🇳  மங்களூரு: ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து தவிர்ப்பு .

♈ 🇮🇳  பீகார்: லாலு வீட்டில் ராஷ்டீரிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கூட்டம் .

♈ 🇮🇳  மழை, வெள்ளம்: ஒடிசாவில் ரயில்வே பாலம் உடைந்தது .

♈ 🇮🇳  குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு மனு தள்ளுபடி: இறுதி முடிவு ராணுவ தளபதி கையில்.

♈ 🇮🇳  ஜனாதிபதிதேர்தல்: மீராகுமார் தேர்தல் முகவர்களாக சக்கரபாணி,விஜயதாரணி நியமனம்.

♈ 🇮🇳  அமர்நாத் யாத்ரீகர்கள் பலி: ராகுல் இரங்கல் -.

♈ 🇮🇳  இந்தியாவுக்காக போராடுகிறோம்: சோனியா.
♈ 🇮🇳  குஜராத், ஒடிசா மாநிலங்களில் பலத்த மழையால் பல நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. ஒடிசா மாநிலம் ராயகாடா,நாகவள்ளி,காலஹந்தி ஆகிய மாவட்டங்கள் பலத்த மழையால் ரயில்வே பாலம் அடித்து செல்லப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன.

♈   போபர்ஸ் ஊழல் காரணமாக, 30 வருடங்களுக்கு பின்,அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட இரண்டு இலகு ரக நவீன பீரங்கிகள்,பொக்ரானில் சோதனை செய்யப்பட்டது.நீண்ட தூரம் சென்றுதாக்கும் திறன் கொண்ட எம்-777 ஏ2 ரக பீரங்கிகளின் வேகம், செல்லும் தூரம் ஆகியவை இந்த சோதித்து பார்க்கப்பட்டது    

♈ 🇮 பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டியபோது மண்சரிந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலப்பாடியில் மண்சரிந்து விழுந்து கொளஞ்சி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக