வீராங்கனை காஞ்சனமாலாவை பிச்சைக்காரியாய் பெர்லினில் அலைய விட்ட பாஜக அரசு !
ஜெர்மனில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கண்பார்வையற்ற காஞ்சனமாலா
நூ ற்றி முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒரே ஒரு வெங்கலப் பதக்கம் கூட கிடைக்கவில்லையே என முக்கி முனகுவது ஏன்? ஜமைக்கா போன்ற குட்டி நாடுகளும், எத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளும் பதக்கங்களைக் குவிக்கும் போது இந்தியர்கள் ஏன் திணறுகின்றனர்?
காஞ்சனமாலாவின் கதையை நீங்கள் அறிந்து கொண்டால் மேற்கண்ட கேள்விக்கு விடை கிடைக்கலாம்.
காஞ்சனமாலா நாக்பூரைச் சேர்ந்தவர். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. 2011-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை. இந்தாண்டு மெக்சிகோவில் நடக்கவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உலக நீச்சல் போட்டியில் தகுதி பெறுவதற்கான இம்மாத முதல் வாரத்தில் ஜெர்மன் சென்றிருக்கிறார்.
காஞ்சனமாலாவுக்கும் அவருக்குத் துணையாகச் சென்ற ஜெய்மாலா பாண்டே என்பவருக்கும் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி உதவித் தொகை அளித்திருக்க வேண்டும் – ஆனால், அந்த உதவித் தொகை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. காஞ்சனமாலாவுக்கு மட்டுமின்றி, தகுதிப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற மற்றவர்களுக்கு உதவித் தொகை வந்து சேரவில்லை.
விளையாட்டு வீர்ர்களுக்குப் பயிற்சியளிக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயிற்சியாளர்கள் வழக்கமாக என்ன செய்வார்களோ அதையே கன்வல்ஜித்தும் செய்துள்ளார். ஜெர்மன் சென்ற அவர், கண்பார்வையற்ற காஞ்சனமாலாவைக் கவனிக்காமல் ஊரைச் சுற்றிப் பார்க்கவும் ஜெர்மன் பீரைச் சுவைக்கவும் சென்று விட்டார். மேலும், முக்கிய போட்டிகளின் போது தான் கலந்து கொள்ள 90 பவுண்டுகள் (சுமார் 7,462 ரூபாய்) தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டு நோகடித்துள்ளார்.
பயிற்சியாளரின் பாராமுகத்தாலும், கையில் காசு இல்லாத காரணத்தாலும் காஞ்சனமாலா மொழி தெரியாத நாட்டில் தவித்துள்ளார். ஒரு நாள் போட்டி அரங்கில் இருந்து தான் தங்கியிருந்த ஓட்டலுக்குச் செல்ல கையில் காசில்லாமல் டிராம் வண்டியில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போது காஞ்சனமாலாவைப் ஜெர்மன் போலீசார் கைது செய்துள்ளனர். இறுதியில் 120 யூரோ (சுமார் 10,000 ரூபாய்) தண்டம் கட்டி மீண்டுள்ளார். இறுதியில் ஓட்டல் கட்டணமான ஆயிரம் ரூபாயையும், உணவுக்கான 40 ஆயிரம் ரூபாயையும் கட்ட முடியாமல் தவித்துள்ளார்.
வேறு வழியின்றி ஜெர்மனில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் காஞ்சனமாலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக