போர் தொடங்கினால் இமயமலை ஒரு பார்வை
டொக்கலாம், இமய மலைதொடரில் ஒரு உயர்ந்த பீட பூமி.. அங்கு சில ஆடர்டிலரி, பீரங்கி படைகளை வைத்தால் பங்களாதேஷ் வரை கூட குண்டு வீச முடியும்.. நிச்சயம் ஒரு நாள் கிழக்கு இந்தியவை, இந்தியாவிடம் இருந்து துண்டித்து விட முடியும்.. இது தான் சீனாவின் திட்டம்.....
இது பூட்டானுக்கு சொந்தம் என்றாலும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகிறது புட்டானின் ராணுவ பாதுகாப்பை இந்தியா தான் மேற்கொள்கிறது....
அந்த இடத்தின் பூகோல முக்கியத்துவத்தை உணர்ந்த சீனா, இந்திய அமேரிக்கா உறவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு அந்த இடத்தை ஆக்ரமித்தது... சைனா இதுபோல் எத்தனையோ முறை அக்ரமிப்பு செய்துள்ளது... ஆனால் அது, இந்த முறை புதிய இந்தியாவை பார்த்தது...
இந்திய ராணுவ வீரர்கள் துணிவோடு சீனா ராணுவத்தினரை உடலாலலேயே தள்ளி அந்த இடத்தை பிடித்தனர் .. இந்தியாவும் அந்த இடத்தில் ராணுத்தை குவிக்க, சீனாவும் குவிக்க... போர் பதற்றமானது...
உலக அளவில் இத்தியாவிற்கு ஆதரவு குரல்.. சினாவுக்கு தன்னை சுற்றி உள்ள 18 நாடுகளோடு எல்லை பிரச்சனை... அவை எல்லாம் இந்தியா தான் இந்த பூனைக்கு மணிகட்ட சரியான ஆள் என நம் பின் நின்றன...
சீனா போர் மிரட்டல் விடுத்து பார்த்தது...
போரா ??அதற்காக தான் இத்தனை வருடம் காத்து இருக்கிறோம் வா ஒரு கை பாக்கலாம் ,எங்களுக்கும் பழைய வசூல் ஒன்று இருக்கிறது என்று இந்தியா சொல்லாமல் பதில் சொன்னது ...
இந்தியா சண்டைக்கு தயாரானது, 40 ஆயிரம் கோடி வரையிலான ஆர்டிலரிகளை வாங்க அமைச்சக உத்தரவு தேவை இல்லை என் சட்ட திருத்தம் கொண்டு வந்து, ஆர்டிலரிகளை வாங்க தயாரானது..
இந்தியாவோடு மோதினால் தனது வல்லரசு பட்டத்தை இழக்க வேண்டியது வரும் என கணக்கு போட்ட சீனா war mode இல் இருந்து ரிவர்ஸ் கீர் போட்டு நார்மல் மோடுக்கு வந்தது .
முதலில் நாம் என்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
சீனா நம் பக்கத்து நாடு அல்ல.. இமலை பீட பூமியான திபேத் தான் நம் பக்கத்து நாடு.. திபேத்தில் நாடே மலை பிரதேசம்.. ஆக்டோபர் முதல் ஜனவரி வரை உறை பனி குளிர். அந்த திபேத்தை சீனா ஆக்ரமித்து உள்ளது..
தற்போது திபேத் முகாம்களில் உள்ள ராணுவ வீரர்கள் சிலரை சிக்கிம் எல்லையில் குவித்தாலும், போர் என் வந்து விட்டால் சீனா ஏவ்வளவு பெரிய படைகளையும் திபேத் என்னும் வரண்ட பாலைவனத்தை தாண்டி, ஒரே ஒரு மலை நெடுஞ்சாலை மூலமே கொண்டு வரவேண்டும்...
அந்த ஒரு ரோட்டில் இருந்து ஆறு விரல்கள் போல் சாலைகள் இந்திய எல்லைக்குள் வருகிறது அதுவும் மிக உயர்த்த மலைகள் மீது வருகிறது..... அதில் இரண்டு அருணாச்சல பிரதேசத்தில் அடர்ந்ந காட்டுக்குள் வருகிறது.. இந்த இரு சாலைகளிலும் கார் கூட போக முடியாது.. பிறகு எப்படி படைகள் செல்வது...
அடுத்தது தவாங், சிக்கிம், நாதுலே உத்திராகன்ட், ஆக்சாய் சின் ஆகிய இடங்களில் ,சீன சாலைகள் மிக உயர கரடு முரடான மலையை தாண்டி இந்திய எல்லையில் வருகின்றன்.. இதில் டவாங்கை தவிர மற்ற ஐந்து இடத்திலும் இந்தியா தான் உயரமான எல்லையை கொண்டு உள்ளது... உயரம் போருக்கு சாதகம்...
இதே நாதுலாவில் 1967ல இந்தியா 400 சைனர்களை கொன்று போரை வென்றது.. அன்று நம்மிடம் பிரம்மாஸ் கூட இல்லை ..
இந்திய சீனா போர் என்று யோசிக்கும் போதே இமையமலை பூகோலத்தை பற்றி யோசித்தே ஆகவேண்டும்..
கடவுள் இந்தியாவிற்கு குடுத்த மாபெரும் பாதுகாப்பு ராணுவம் இமையமலை.. 25000 ஆண்டு மனித வரலாற்றில் இமையமலை வழியாக இந்தியா மீது படை எடுத்தவர் எவரும் இல்லை.. செங்கிஸ்கானே கூட நம் மீது படை எடுக்க முடியவில்லை... அதனால் தான் காஷ்மீரை பிரிந்து இமையமலையை தங்களுடையதாக்கி டெல்லியை பிடிக்க சீனாவும் பாகிஸ்தானும் குறுக்கு வழியை கையாள்கின்றன..
போருக்கு தேவை Ground support, மக்கள் ஆதரவும்.. போர் களத்தில் இருந்து இந்திய மக்கள் 30கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறார்கள்.. இந்திய ராணுவ வீரனுக்கு உணவு இல்லை என்ற செய்தி கேட்டால் இந்தியாவெங்கிலும் உள்ள நம் இளைஞர்கள் , bread பால் பவுடரையும் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து கொண்டு பைக்கில் கூட போர்முனைக்கு செல்வார்கள்.. அனால் சைனாவுக்கு போர்களத்தில் இருந்து எல்லாமே 3500 கிலோமீட்டருக்கு மேல் கடும் மலைகளை தாண்டி தான் வரவேண்டும்..
திபேத் மக்கள் சீனர்களை எதிரியாக தான் பார்க்கின்றனர்... எனவே அவர்களிடம் இருந்து சீன ராணுவத்திற்கு எந்த உதவியும் கிடைக்க போவதில்லை.. எனவே சீனாவிற்கு ground support பெய்ஜிங் கில் இருந்நு தான் வரவேண்டும்..
இது எல்லாவற்றையும் விட இந்தியாவின் பலம் நம் "ராணுவ வீரர்கள்"..உலகிலேயே இவர்களை போல் வீரமாக போரிட யாரும் இல்லை..மற்ற பெரிய நாடுகளில் ராணுவ சேவை கம்பள்சரி.. ஆனால் இந்நியாவில் மட்டுமே ராணுவத்தில் விரும்பி சேர்கின்றனர்
கடந்த கால போர்களில் வெறும் 25 பேரை வைத்து கொண்டு 50 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் டாங்கிகளையும் பல நூறு ராணுவவீரர்களையும் அழித்த வரலாறு உண்டு...( லோங்கிவாலா போர்) ..
இதே போல் சில நூறு பேர் பல ஆயிரம் பேரை வீழ்த்திய வரலாறு இந்திய போர்களில் உண்டு.. இதை எல்லாம் யோசித்த சைனா போரிட்டால் தோல்வி என தெரிந்து அமைதியாக பின் வாங்குகிறது...
இப்போது பாகிஸ்தானும் தனித்து விடப்பட்டுள்ளதாக உணர்கிறது... ஒன்று மட்டும் நிச்சயம், உரி தாக்குதல் போல் மீண்டும் ஒரு செயலை பாகிஸ்தான் செய்தால் பாகிஸ்தான் பந்தாடப்படுவது உறுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக