வந்தாச்சு, தம்மாத்துண்டு மொபைல் போன்
உலகின் மிகச்சிறிய 30கிராம் எடை கொண்ட, 4 நாட்கள் பேட்டரி திறன் கொண்ட எலாரி நானோ போன் இந்திய சந்தை யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா நாட்டைச் சேர்ந்த எலாரி நிறுவனம் உருவாக்கியுள்ள உலகின் மிகச்சிறிய அதாவது கிரெடிட் கார்டு அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள நானோ போன் சி எடை வெறும் 30 கிராம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷனான பட்டன்களுடன் அழகாக வடிவமைப்பை பெற்றுள்ள இந்த சி போன் – 94.4 மில்லிமீட்டர் நீளமும், 35.85 மில்லிமீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த போன் 7.6 மில்லிமீட்டர் தடிமத்துடன், 30 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த குட்டி ஃபோன் கருப்பு, ரோஸ் கோல்டு, மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபோனின் டிஸ்ப்ளே 1 அங்குலம் 128×96 பிக்சல் தீர்மானத்துடன் டிஎப்டி பெற்றதாக உள்ளது. 280mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் 4 மணி நேர டாக்டைம் மற்றும் 4 நாட்கள் வரையிலான பேட்டரி திறனை கொண்டிருக்கும். இரு ஜிஎஸ்எம் மைக்ரோ சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஸ்லாட்களுடன், எம்பி 3 பிளேயர், எப்எம், வாய்ஸ் ரெக்கார்டு, போன் அழைப்பு பதிவு மற்றும் அலாரம் போன்றவற்றுடன் கூடுதலாக ஹெட்போன் ஜாக், மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் புளூடுத் போன்றவை இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக