வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் 81 லட்சம்.
தமிழகம் முழுவதும் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்கு காத்திருக்கின்றனர் என்று கொள்கை விளக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:
ேவலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 81 லட்சத்து 30ஆயிரத்து 025 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 18 வயது முதல் 57 வயதிற்குள் 61 லட்சத்து 2 ஆயிரத்து 702 பேரும், 18 வயதிற்குள் குறைவாக 20 லட்சத்து 22 ஆயிரத்து 579 பேரும், 57 வயதிற்கு மேல் 4,744 பேரும் உள்ளனர். கடந்த 2016-17ம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 13 லட்சத்து 62 ஆயிரத்து 982 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதில், 12 லட்சத்து 19 ஆயிரத்து 570 பேர் பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு கல்வி தகுதியனை பள்ளிகளிேலயே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொண்ட மாண, மாணவியர்கள். கடந்த 2016-17ம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் வாயிலாக அரசு துறையில் 5,802 பேரும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மூலம் நடத்த பெற்ற வேலை முகாம்கள் மூலமாக பல்வேறு தனியார்நிறுவனங்களில் 20 ஆயிரத்து 778 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக