பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுத் தேதிகள் வெளியீடு!
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுத் தேதிகளை உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே1ம் தேதிகள் வழங்கப்பட்டு விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதி ஜீன் 3ம் தேதி முடிவடைந்தது. இதுவரை பொறியியல் படிப்பிற்காக 1.41 இலட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும் ஜீன் 22ம் தேதி அதற்கான தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று கலந்தாய்வுத் தேதிகளை உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அதன்படி,
►தொழிற்கல்வி மாணவர்களுக்கு 17.07-2017 திங்கள்கிழமை மற்றும் 18.07-2017 செவ்வாய் கிழமையும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 19-07-2017 புதன்கிழமையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
►விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 19-07-2017 புதன்கிழமை மற்றும் 20-07-2017 வியாழக்கிழமையும், அவர்களுக்கான கலந்தாய்வு 21-07-2017 வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.
►பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 23-07-2017 ஞாயிறு ஆரம்பித்து 11-08-2017 வரை நடைபெறுகிறது.
►எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான கலந்தாய்வு 18-08-217 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறுகிறது.
►துணைகலந்தாய்வு விண்ணப்பம் 17-08-2017 அன்று வழங்கப்பட்டு அவர்களுக்கான கலந்தாய்வு 20-08-2017 அன்று நடைபெறும்.
ஆர்க்கிடெக்சர் படிப்புக்கான கலந்தாய்வுத் தேதிகள்:
► ஆர்க்கிடெக்சர் படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் 10-08-2017 திங்கள்கிழமை வெளியிடப்பட்டு, அவர்களுக்கான கலந்தாய்வு 19-08-2017 புதன்கிழமை அன்று நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக