சனி, 15 ஜூலை, 2017

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சுந்தர் சிங் குர்ஜார்



தங்கம் வென்றார் சுந்தர் சிங்: உலக பாரா தடகளத்தில் அபாரம்..

லண்டன்: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சுந்தர் சிங் குர்ஜார். ஈட்டி எறிதல் தங்கம் கைப்பற்றி அசத்தினார்.இங்கிலாந்து தலைநகர் லன்டனில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. 92 நாடுகளில் இருந்து, 1074 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். கடந்த 2015 (கத்தார்) போட்டியில் இந்தியா சார்பில் கிளப் த்ரோ பிரிவில் அமித் , ஈட்டி எறிதலில் தேவேந்திரோ, தலா ஒரு வெள்ளி வென்றிருந்தனர். இம்முறை இந்தியா சார்பில் தமிழகத்தின் மாரியப்பன், வருண் சிங், தீபா மாலிக் உள்ளிட்ட 30 நட்சத்திரங்கள் பங்கேற்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கைகொடுத்த 'ஈட்டி': கடந்த பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா தகுதிப்போட்டியில் சாதிக்காதால், லண்டன் போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும், இந்தியா சார்பில் ஈட்டி எறிதலில் (எப் 46 பிரிவு) சுந்தர் சிங் குர்ஜார், ரின்கு பங்கேற்றனர்.இதில் சிறப்பாக செயல்பட்ட சுந்தர் சிங், 60.36 மீ., துரம் எறிந்து, தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் இவர், இதுவரை எறிந்ததில், அதிகபட்ச துாரம் இது தான். இலங்கையின் தினேஷ் பிரியந்தா ஹெராத், 57.93 மீ., துரம் எறிந்து வெ ள்ளி வென்றார். சீன வீரர் சுன்லியாங் குவோ (56.14 மீ) வெண்கலம் கைப்பற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக