திங்கள், 17 ஜூலை, 2017

Mathi News - 7am -17-7-2017-monday


Mathi News  - 7am -17-7-2017-monday

♈ 🇮🇳  *மிக மிக அவசரம்* பார்த்தசாரதி என்னும் தந்தையின் கிட்னி செயல்பாடு இழந்துள்ளதால் *O Negative*  இரத்தம் *2 யுனிட்*  இருந்தால்தான்  அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.மேற்கண்ட இரத்த வகை உள்ள நண்பர்கள் உதவிட வேண்டுகிறோம்.இடம் : ஸ்டான்லி மருத்துவமனை , சென்னை-*நாள் 17/7/17*-*நேரம் காலை 11:00 மணிக்குள்*தொடர்புக்கு: பழனி 9626325261-சிகரங்கள் ஸ்ரீனிவாசன்.

♈ 🇮  இன்று நாட்டின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல்; பார்லி.,யில் முழு ஏற்பாடு

♈ 🇮🇳  இன்று(ஜூலை 17) ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் .

♈ 🇮🇳  இன்று பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் துவக்கம் .

♈ 🇮🇳  பி.இ., - பி.டெக்., படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம் .

♈ 🇮🇳  பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம் .

♈ 🇮🇳  ரேஷன் பொருள் வினியோகம்: மத்திய குழு இன்று ஆய்வு .

♈ 🇮🇳  ராமேஸ்வரம் கோயிலில் இன்று கொடியேற்றம் .

♈ 🇮🇳  இன்றைய விலை நிலவரம்: பெட்ரோல்-ரூ.66.61; டீசல்- ரூ.57.98 .

♈ 🇮🇳  கொடுங்கையூர் தீ விபத்தில் பலியான ஏசுராஜ் உடல் தகனம் .

♈ 🇮🇳  சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் காயம்-சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென சரக்கு ரயிலின் பெட்டி மீது ஏறி மின்கம்பியை பிடித்துள்ளார். மின்சாரம் தாக்கியதால் அவர்  தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த வாலிபரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் காசிமேட்டை சேர்ந்த ஜீவா என்பது தெரிய வந்துள்ளது.

♈ 🇮  குழந்தைகளை ஆபாசமாக காட்டும் பாலியல் இணையதளங்களை முடக்குவதற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பின் உதவி நாடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

♈ 🇮  தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாகவும்; 10 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் ஆகிய கட்டண அடிப்படையிலும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த முறைகளில் குறைந்த பட்சம் இரண்டாண்டு முதல் 10ஆண்டுகள் விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்.இதனால், கடந்த மாதம் 24ம் தேதி, 6 மாதத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்படும், தட்கல் முறையை தமிழக அரசு அறிவித்தது. அதில்,ஏற்கெனவே 10 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் விண்ணப்பித்து காத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்த முறையில் கோயம்புத்துார் மண்டலத்திற்கு 1,148இணைப்பும், ஈரோடு 1,085, மதுரை 1,112, திருச்சி 2,138, விழுப்புரம் 1,637,சென்னை (தெற்கு) 351, வேலுார் 2,066, திருநெல்வேலி 426, சென்னை (வடக்கு)37 என பத்தாயிரம் இணைப்புகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட உள்ளன.அதில், விழுப்புரம் மண்டலம், கடலுார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட231 மின் இணைப்புகளில், விருத்தாசலம் கோட்டத்திற்கு 85 இணைப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

♈ 🇮  ஜூலை 27 ல் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தரவுள்ளதால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் வேர்க்கோடு வரை தனுஷ்கோடி தேசிய சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜூலை 27 ல் அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை திறக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார் .

♈ 🇮  'பேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும்' என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை,பேஸ்புக் நிர்வாகம் மறுத்து விட்டது

♈ 🇮  சென்னை: கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்

 ♈🇮🇳 ஊராட்சி அலுவலகத்தில் போலி கையெழுத்திட்டு ரூ.49 லட்சத்து 67 ஆயிரம் மோசடி செய்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நிதி வருவாய் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் போல போலி கையெழுத்திட்டு, போலி பில் தயார் செய்து ரூ.49 லட்சத்து 67 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.  இதுகுறித்து சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னபாஸ் அந்தோணி, சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சிவகங்கை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன்(49) நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.  மேலும் ஊராட்சி செயலாளர்கள் அங்காளஈஸ்வரி (படமாத்தூர்), கிருஷ்ணன் (குடஞ்சாடி),மருதமுத்து (முடிகண்டம்), ஞானபிரகாசம் (அரசாணிமுத்துபட்டி), ராஜா (இலுப்பகுடி) மற்றும் வங்கி அலுவலர் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

♈   திருவண்ணாமலை மாவட்டம் கொரகோட்டை பகுதியில் பிரமாண்ட பெருமாள் சிலைக்கான முகம் மற்றும் கைகள் செதுக்கப்பட்டிருப்பதை சுற்றுவட்டார மக்கள் பார்த்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த வைரம்பேட்டையை சேர்ந்த நாடக பெண் கலைஞர்கள் 17 பேர்  நேற்று மினி வேனில் சென்று, சிலையை பார்த்து விட்டு, ஊர் திரும்பினர். வைரம்பேட்டை அருகே அவனம்பட்டு பகுதியில் மதியம் 3மணியளவில்  வந்து கொண்டிருந்தபோது வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.   இதில், கோமதி(36),வெண்ணியம்மாள்(60) ஆகிய 2 பெண்கள் இறந்தனர் .

♈ 🇮  ஆலங்குடி: நெடுவாசலில் 96வது நாளாக  நேற்று போராட்டம் நீடித்தது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து  நேற்று 96வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.  இயற்கை  வளங்களை காப்பாற்றக்கோரி கைகளில் இலை தழைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து  பெண்கள் கூறுகையில்,  `எங்கள் பகுதியின் பசுமையையும், சுத்தமான காற்றையும்,தூய்மையான குடிநீரையும் பாழ்படுத்த மத்திய,  மாநில அரசுகள் நினைக்கின்றது. எனவே பசுமையான இலை தழைகளை கைகளில் ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபகிறோம்’ என்றனர்.

♈ 🇮  தஞ்சை மாவட்டம்  கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில்  கசிவு ஏற்பட்டதால், போராட்டம் நடத்திய 10பேரை  கைது செய்து  போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்ககோரி,கடந்த 12ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று வனதுர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கதிராமங்கலம் பகுதியில் பொதுமக்கள் கண்டன  பேரணி நடத்தினர். விடுமுறை தினம் என்பதால் 6வது நாள் போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர் .

♈ 🇮  துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பழனி (45). ராஜீவ் காந்தி சாலையில் டீக்கடை மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி வடமாநிலத்தை சேர்ந்த அப்துல் (21)என்பவர் மூலம் கடையின் முன் பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென சிலாப் உடைந்து விழுந்ததில்,அப்துல் மற்றும் டீ குடிக்க வந்த போரூர்,காரம்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் (34)ஆகியோர் படுகாயமடைந்தனர். தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அப்துல் பரிதாபமாக இறந்தார் .

♈ 🇮  திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் மணலி புதுநகரில் நடந்தது. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் பிரியா, கல்யாணகிருஷ்ணன்,அருண்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். குழந்தையின்மை,இதயம், மகப்பேறு, பல் மற்றும் பொது மருத்துவ சிகிச்சையும், ஈசிஜி, எக்கோ, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற   பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு,  மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன .

♈ 🇮  ஆப்பிரிக்க ராணுவ அமைதி படை அதிகாரிகளுக்கு இந்தியா, அமெரிக்கா பயிற்சி அளிக்கின்றன. இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க ராணுவ அமைதி படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ருதேந்திரா தாண்டன் கூறுகையில், “ஆப்பிரிக்க ராணுவத்தின் அமைதிப்படை அதிகாரிகளுக்கான இரண்டு வார பயிற்சி நாளை தொடங்குகிறது. இதில், கானா,மாலவி, நமீபியா, நைஜர், நைஜீரியா உட்பட34 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த அதிகாரிகள் பின்னர் அவரவர் நாடுகளில் உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இரண்டாவது ஆண்டாக இந்த பயிற்சி முகாமை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது” என்றார்.

♈ 🇮  மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்,ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாருக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு நிருபர்களை சந்தித்த அவர், ‘‘எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கோரிக்கையை ஏற்று, ராணுவ வீரர்களுக்கு மத்திய பிரதேச சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வீரர்கள் தங்கள் அலுவலக அடையாள அட்டையை சுங்கச் சாவடிகளில் காட்டி, கட்டண விலக்கு பெறலாம்’’ என்றார் .

♈ 🇮  அமர்நாத் பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்,ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு .


12.30pm -17-7-2017-monday

♈ 🇮🇳  அத்திப்பட்டியாகிறது சென்னை.. 13ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டது புழல் ஏரி! 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையின் முக்கிய நீராதாரமான புழல் ஏரி,தற்போது முழுவதுமாக வறண்டுவிட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுவாக சென்னையில் கோடையில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் கைகொடுக்கும். ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவட்டங்களிலிருந்து தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

♈ 🇮🇳  தமிழக டிஜிபி பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. டிஜிபி டிகே ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக கதிரேசன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்

♈ 🇮🇳  டெல்லியில் கனமழை.

♈ 🇮🇳  டெல்லியில் தமிழக விவசாயிகள் கொட்டும் மழையில் போராட்டம்.

♈ 🇮🇳  ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் டெல்லி வருகை.

♈ 🇮🇳  தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234வாக்குகளில் 2 பேரை தவிர அனைவரும் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி தவிர அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இதேபோல் ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளதால் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

♈ 🇮🇳  புதுச்சேரி அருகே வில்லியனூரில் மரகதம் என்பவர் வீட்டில் இருந்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

♈ 🇮🇳  மரபணு மாற்றப்பட்ட கடுகு குறித்து இறுதி முடிவு தெரிவிக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை மத்திய அரசின் இறுதி முடிவை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மரபணு மாற்றப்பட்ட கடுகை கொண்டு வந்த பின் திரும்ப பெறுவது இயலாததாகிவிடும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

♈ 🇮🇳  கடன் தொல்லையால் இரு மகன்களுடன் தாய் தற்கொலை!கடலூர் மாவட்டம், புதுகுளம் அருகேயுள்ள கோதண்டராமபுரம்.

♈ 🇮🇳  இலங்கை, யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்தாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

♈ 🇮🇳  அரசுப் பேருந்துகளை எமன் வாகனங்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு.

♈ 🇮🇳  திருச்சி கலெக்டர் வர வேண்டும்: ராக்கெட் லாஞ்சர்
வெடித்த பீதியில் மணப்பாறை மக்கள்.

♈ 🇮  சம்பள பாக்கி : சகாயம் சார்பில் ஐகோர்ட்டில் மனு.

♈   சிவாஜி சிலை வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

♈ 🇮  கருணாநிதி ஓட்டளிக்க வாய்ப்பில்லை; ஸ்டாலின் .

♈ 🇮  பழநியில் 2வது ரோப்கார்: 1 மணி நேரத்தில் 1000 பேர்.

♈ 🇮  கொடுங்கையூர் தீவிபத்து : காயமடைந்தவர்களுக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல் .

♈ 🇮  கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக அளிக்க தயார் : ஓபிஎஸ் .

♈ 🇮  அண்ணா பல்கலை பி.இ., மாணவர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது.

♈ 🇮  பார்லி., யில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்.

♈ 🇮  அரசு வழக்கறிஞர் நியமன வழக்குகள் : சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றம்.

♈ 🇮  தூத்துக்குடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தொல்லியல் துறை கமிஷனர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடவும்,மீண்டும் அகழ்வாராய்ச்சியை தொடருவது தொடர்பாகவும் ஆகஸ்ட் 7 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

♈ 🇮  நாடு முழுவதும் சரியாக பணியாற்றாத வருமான வரித்துறை கமிஷனர்கள் 245 பேரை அதிரடியாக பணிமாற்றம் செய்துள்ளது மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம். சரியாக வேலை செய்யாதவர்கள், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என வகைபடுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த இடமாற்றம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது துறைரீதியான அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வருமான வரித்துறையை மேம்படுத்துவதற்காக மண்டல வாரியாக களை எடுக்கும் பணிகளை நேரடி வரிவிதிப்பு வாரியம் துவக்கி உள்ளது.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள வருமான வரித்துறை தலைவர்களின் விபரங்கள், அவர்களின் நடவடிக்கைகள் பற்றிய ரகசியமாக கண்காணிக்கப்பட்டு, விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியாக இருந்தால் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் முறையாக செலுத்துவர். இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது .

♈   உலகதரத்திலான மாநாட்டு மையம் இல்லாததாலும், 2019 ம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாலும் 2019 ம் ஆண்டு இந்தியாவால் நடத்தப்பட வேண்டிய ஜி 20 மாநாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக தரத்திலான மாநாட்டு மையம் துவாரகாவில் தற்போது தான் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் நிறைவடைய மேலும் சில ஆண்டுகள் ஆகும்.இதனால் 2019 ம் ஆண்டிற்கான ஜி 20 மாநாட்டை ஜப்பான் நடத்த உள்ளது. ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்த மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆசிய நாடுகளுக்கான முறை வரும் போது மட்டுமே இந்தியாவால் ஜி20 மாநாட்டை நடத்த முடியும். அடுத்த ஆசிய நாடுகளின் முறை வரும் போதும் இந்தோனேசியாவின் முறையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

♈   பொதுத்துறை வங்கிகளில் வராக்கடனாக இருக்கும் 8 லட்சம் கோடி ரூபாய் தொகையை வசூலிப்பதற்கு அடுத்த ஆண்டு வரை அவகாசம் தர ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும், 2019ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் வராக்கடன்களை வசூல் செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகளின் நிதி வலிமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 2019ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அசோசாம் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கணக்குகளில் மட்டும் வராக்கடன்களின் 25 சதவீதத் தொகை முடங்கிக்கிடப்பதாக அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

♈   உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மின்னணு பணப்பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை, 23 சதவீதமே அதிகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

♈   நெய்வேலி : என்.எல்.சி., நிர்வாகத்திற்கு எதிராக சுரங்க வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 700 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முயன்றனர்

♈   மதுரையில் கார் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

  4pm -17-7-2017-monday

♈ 🇮🇳  போலீஸ் ஸ்டேஷனில் சிசிடிவி கேமிரா : டிஜிபி.,க்கு ஐகோர்ட் உத்தரவு-போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமிரா வேலை செய்யாதது ஏன் என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்ற கோட்டின் உத்தரவை நிறைவேற்றாதது ஏன் எனவும் கேட்டுள்ள நீதிபதி, இது தொடர்பாக 2வாரங்களில் பதிலளிக்க டிஜிபி.,க்கு உத்தரவிட்டுள்ளார்.

♈ 🇮🇳  இன்று லோக்சபாவுக்கு வந்த பிரதமர் மோடி, சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை, அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தார். அவை கூடுவதற்கு 5 நிமிடங்கள் முன்பாகவே வந்த மோடி, எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று, அங்கிருந்த முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங், காங்.,தலைவர்கள் சோனியா, மல்லிகார்ஜூன கார்கே, துணை சபாநாயகர் தம்பிதுரை,ராகுல் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்களையும், அவைக்கு வந்ததற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்

♈ 🇮🇳  இடஒதுக்கீடு ரத்து : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

♈ 🇮🇳  பண மோசடி : நடிகர் சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

♈ 🇮🇳  திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தீவிபத்து

♈ 🇮🇳  அவதூறு வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து கெஜ்ரிவாலுக்கு விலக்கு.

♈ 🇮🇳  பணக்காரர்கள் ஏழைகள் இடையிலான இடைவெளி குறைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம்--vishwarubam news

♈ 🇮🇳  மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக கும்பலால் தாக்கப்பட்ட பா.ஜனதா உறுப்பினர் கைது

♈ 🇮🇳  எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அடாவடி துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் மற்றும் 9வயது சிறுமி உயிரிழந்தனர்-- vishwarubam news

♈ 🇮🇳  இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.இந்நிலையில் பயிற்சியின் போது காயமடைந்த முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்-- vishwarubam news

♈ 🇮🇳  வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்ந்து 32,074 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 29புள்ளிகள் உயர்ந்து 9,915 புள்ளிகளாக உள்ளது.

♈ 🇮🇳  மார்த்தாண்டம் அருகே செங்கல் சூளையில் தீ விபத்து.

♈ 🇮🇳  சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். இடஒதுக்கீடு வழக்கில் தங்கள் கருத்தை கேட்குமாறு கேவியட் மனுவில் தெரிவித்துள்ளனர்

♈ 🇮🇳  கேம்ரூனில் ராணுவ கப்பல் கவிழ்ந்து விபத்து: 34 பேர் மாயம்-- vishwarubam news

♈ 🇮🇳  டிஐஜி ரூபா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்

♈ 🇮🇳  5 ஆண்டுக்கு முன் மர்மமாக மரணம் அடைந்த மகளின் இதயத்தை பெற்றோர்கள் தேடிவருகிறார்கள். சிபிஐ விசாரணையிலும் விடை கிடைக்கவில்லை.மும்பை

♈ 🇮  சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஜிலின் மாகாணத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதி வெள்ளத்தில் மூழ்கின. அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. கரை புரண்டோடிய வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிர் இழந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

♈ 🇮  இங்கிலாந்தை சேர்ந்த 67 வயதான பெண்ணுக்கு கண்பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த பெண்ணின் கண்ணிற்குள்27 கான்டாக்ட் லென்சுகள் சிக்கிக்கொண்டு இருந்தது. இவ்வளவு கான்டாக்ட் லென்சுகள் இருப்பது அந்த பெண்ணிற்கே தெரியாதது மருத்துவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், அந்த பெண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறி உள்ளார்.

♈ 🇮  கர்நாடக மாநில வரலாற்றில், தனது 60 மனைவிகளை ஒரே சமயத்தில் கொன்று புதைத்த மன்னன் அப்சல் கான் என்ற நிகழ்வு இடம்பெற்றிருக்கும். தற்போதைய கர்நாடக மாநிலத்தில் 1659ஆம் ஆண்டு பிஜாப்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஜோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல் கான் மன்னர் சிவாஜியை எதிர்த்து போரிடும் முன்னர் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டுள்ளார்.ஜோதிடர் சிவாஜி வெற்றி பெருவார் என்றும் நீ அவரின் கையால் கொல்லப்படுவார் என்று கணித்து கூறினார். அதை கேட்டு அதிர்ந்து போன அப்சல் கான் பின்னர் தனது மனதை தேற்றிக்கொண்டார்.ஒருவேளை தான் இறந்துவிட்டால்,தன் மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.அப்சல் கானின் 60மனைவிகளின் கல்லறைதான் இப்பொழுது உள்ள சுற்றுலா தளமான சாத் கபார்.

♈ 🇮  சமீபத்தில் ஒரு பிரபலம் கர்ப்பிணி வயிறோடு நிர்வாண போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் உலகையே பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி பியான்ஸ் சமீபத்தில் தான் பெற்ற இரட்டை குழந்தைகளுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ் கொடுத்துள்ளார். ஆங்காங்கே ஒருசில இடத்தை மறைக்கும் வகையிலான துணியை போர்த்திக்கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாகவே போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இவர் ஏற்கனவே கர்ப்பிணியாக இருந்தபோதே பிகினி உடையில் போஸ் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

♈ 🇮  பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமயை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அய்ர்ன் பாக்ஸால் சூடு வைப்பது, சுடு தண்ணீர் ஊற்றுவது போன்ற கொடுமைகளை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

♈ 🇮  இந்தியாவில் மிகப்பெரிய  ஏற்றத்தாழ்வு பிரச்சனை  உள்ளது. அதை சரி செய்வது போதுமானதாக இல்லை என தெரிவிக்கபட்டு உள்ளது.உலக அளவில் பொருளாதார ஏற்றதாழ்வு அதிகம் உள்ள நாடுகள் அதை சரி செய்ய முடியாத நிலை குறித்து  நியூ ஆக்ஸ்பாம் என்ற நிறுவனம்  ஆய்வு நடத்தியது.ஆக்ஸ்பாம், சமூகச் செலவு, வரி மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான ஒவ்வொரு நாட்டின்  அரசாங்க நடவடிக்கை  குறித்து ஆய்வு நடத்தி ரேங்க் பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா 152 நாடுகளில் 132 வது இடத்தில் உள்ளது.ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க், நோர்வே மற்றும் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது.இந்தியா 152 நாடுகளில் 132 வது இடத்தைப் பெற்றுள்ளது.இந்த புதிய குறியீடு புதிய சமநிலையை குறைப்பதற்கான ஒரு நாட்டிற்கு உதவியாக  இருக்கும் என  நம்புவதாக ஒக்ஸ்பாம் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.முதல் வரிசையில் உள்ள  சில நாடுகள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த மூன்று பகுதிகளிலும் அரசாங்கங்கள் வலுவான முன்னேற்றமடைந்துள்ளன.இந்த ரேங்கட்டியல்  21 பிரிவுகளை கொண்டு ஒவ்வொரு பிரிவுக்கும் ரேங்க் பட்டியல் வெளியிடபட்டு உள்ளது.  சுகாதார மற்றும் கல்வி செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் பங்கு,வரி விலக்குகள் பங்கு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மகப்பேறு நன்மைகள் குறித்தும் கணக்கிடப்பட்டு உள்ளது.சமூக செலவீனங்களில் இந்தியாவிற்கு 152 வது இடம் கிடைத்து உள்ளது. முற்போக்கு வரி விதிப்பில் 91 வது இடமும்  தொழிலாளர்கள் உரிமைகள் முக்கியத்தும் 86 வது ரேங்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. சுகாதார செலவீனம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது என இந்தியா குறித்து அந்த அறிக்கை கூறுகிறது.வரி அமைப்பு ஆவணங்களில் நியாயமான முற்போக்கானதாக தோன்றுகிறது, ஆனால் நடைமுறையில் மிகவும் முற்போக்கான வரி சேகரிக்கப்படவில்லை. தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு மரியாதை வழங்குவது இந்தியாவில் மோசமாக உள்ளது.கட்டுப்பாடான தொழிலாளர் சந்தைக் கொள்கைகள்  இந்தியாவில் உழைக்கும் உழைப்பு தீவிர உற்பத்தித் துறைக்கு தடையாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும், இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறப்பட்டு உள்ளது.

♈ 🇮  ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்4 பேர் பலி .

♈ 🇮  அருணாச்சல் எல்லையில் சீன ராணுவம் போர் பயிற்சி,எதிரியின் விமானம் இலக்கு .

♈ 🇮  இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர். இது குறித்து சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவினரே, காணாமல் போனவர்கள் பற்றி 19ஆயிரம் வழக்குகள் உள்ளதாக அறிக்கை அளித்து இருந்தனர்.இதில் குறிப்பிட்ட 11 பேர் காணாமல் போனதில் தொடர்பு உடையதாக முன்னாள் கடற்படை செய்தி தொடர்பாளர் தளபதி தசநாயகே உள்பட 7அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே தசநாயகே உள்ளிட்ட 7அதிகாரிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர் .

♈   சிறை விதிகளை பின்பற்றியே சஞ்செய்தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்: மராட்டிய அரசு விளக்கம் .

♈   முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் தந்தையை கத்தியால் குத்தி 2 வாலிபர்கள் பணம் பறித்து உள்ளனர்.ரோதக்

♈   இஸ்மாயிலை தாக்கிய அஸ்வின் (35), ராமேஸ்வர் (42),மோரேஷ்வர் (36) மற்றும் ஜெகதீஷ் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சலீம் இஸ்மாயிலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், அது மாட்டு இறைச்சி என்பது உறுதியானது. இதுபற்றி சலீம் இஸ்மாயிலின் குடும்பத்தினரிடம் கேட்டதற்கு, பையில் இருந்த கறி பற்றி அவருக்கு ஏதும் தெரியாது என்றனர். இதனிடையே, சலீம் இஸ்மாயிலை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக நாக்பூர் பிரிவு பா.ஜனதா தலைவர் ராஜீவ் போதார் தெரிவித்தார்.இப்போது சென்றதாக கும்பலால் தாக்கப்பட்ட பா.ஜனதா உறுப்பினர் இஸ்மாயிலை போலீஸ் கைது செய்து உள்ளது. இஸ்மாயிலை கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளதாக போலீஸ் தெரிவித்து உள்ளது. மாநில அரசின் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜனதா தலைமையிலான அரசு மாட்டிறைச்சி தடை சட்டத்தை கொண்டு வந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக