மதி செய்திகள் Mathi News 7am -18-7-2017-tuesday
♈ 🇮🇳 உண்மை எங்கே உலாவுகிறது- உறங்கிக் கொண்டுதானே உள்ளது-
“சென்னையில் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டு 14 நாட்களுக்கு மேலாகியும் ஒரு அசைவும் இல்லை. 70% மேல் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டது. ஆனால் ஒருவர் கூட கமிஷனர் உத்தரவை மதிக்கவே இல்லை. அனைவரும் டிரான்ஸ்பர் போட்ட இடத்துக்கு போய் ரிப்போர்ட் போட்டுவிட்டு மீண்டும் பழைய ஸ்டேஷனுக்கே வந்து டூட்டி பார்க்கின்றனர்” என்ற வாட்ஸப் செய்தி வந்தது. இதுபற்றி விரிவாக செய்தி போடலாம் என்று விசாரிக்க தொடங்கினேன். அப்போது இடமாற்ற ஆணை வழங்கப்பட்ட நுண்ணறிவு பிரிவு காவலர்கள் எல்லோரும் குறிப்பாக ஜெயபால், சேஷாசலம், ஜெயக்குமார், ஜெயராஜ், குணசேகரன், ராமசந்திரன், ஆகியோர் உட்பட 164 பேரும் உடனடியாக ஜூலை 1ந் தேதியே புதிய பணியிடங்களுக்கு சென்றுள்ளனர் என்ற விஷயம் தெரியவந்தது. பழைய பணியிடத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத / புதிய பணியிடத்துக்கு போக பிடிக்காத நுண்ணறிவுப்பிரிவு காவலர் ஒருவர் செய்தியாளர் துணையோடு “புதிய பணியிடங்களுக்கு நுண்ணறிவுப்பிரிவு காவலர்கள் செல்லவில்லை” என்ற பொய்யான ஒரு செய்தியை வாட்ஸப் மூலம் பரப்பியுள்ளனர். இத்தகைய பகிர்தலால் நாம் சாதிக்கப்போவது என்ன? இனி இது போன்ற உண்மை தன்மையற்ற செய்திகளை நாம் பதிவிடுவதையும் பகிர்தலையும் தவிர்ப்போம்
♈ 🇮 தமிழகத்தில் 2017-18கல்வியாண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், எஸ்டி பிரிவினருக்கு நேற்று கலந்தாய்வு நடந்தது. அதில் 21 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள1,777 இடங்களுக்கு 5,726 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 880பேர் மாணவர்கள், 4,846 பேர் மாணவிகள். அதில் 81 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். முதல்கட்ட கலந்தாய்வுக்கு 2,996 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலந்தாய்வின் முதல் நாளான நேற்று 157 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. அதில் பாடத்திட்டம் வாரியாகவும், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 19ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
♈ 🇮 உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்டில் பெண்களும் அதிக அளவில் முத்திரைப் பதித்து வருகிறார்கள். இவர்கள் விளையாடும்போதும், விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆடை அணிந்து வருகிறார்கள்.பிளங்கிங் நெக்லைன்ஸ், லெக்கிங்ஸ் மற்றும் உள்ளாடை தெரியும் வகையில் தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வீராங்கனைகள் விளையாடும்போது மிகவும் ஆபாசமாக தெரிகிறது. இதனால் பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம், இந்த வகையான ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்று கூறியது.வீராங்கனைகள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2-ந்தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், ஜூலை 17-ந்தேதி முதல் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
♈ 🇮 தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
♈ 🇮 துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று( ஜூலை-18) வேட்பு மனு தாக்கல்
♈ 🇮 இன்று(ஜூலை-18) பெட்ரோல் விலை ரூ.66.67: டீசல் விலை ரூ.58.04
♈ 🇮 சட்டசபையில், இன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர் ராஜலட்சுமி பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்
♈ 🇮 ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று(ஜூலை 18), மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்
♈ 🇮 இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தை கண்காணிக்க, மேற்பார்வை குழுவை அமைப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதில் இடம்பெறுவோரின் பெயர்களை இன்று(ஜூலை 18) தெரிவிப்பதாக கூறி உள்ளது.
♈ 🇮 பிரதமர் மோடி மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் போது பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
♈ 🇮 மனித பிரமிடு அமைக்கும், 'தஹி ஹண்டி' எனப்படும், உறியடி விழாவை, சாகச விளையாட்டு என, வகைப்படுத்தியதற்கான காரணங்களை கூறும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது
♈ 🇮 ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
♈ 🇮 மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடனுடன் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
கல்லுாரி தலைவர் பி.கே. மோதிலால் தலைமை வகித்தார். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். முன்னதாக, மாணவர்களுடன் மேத்யூ ஹைடன் கிரிக்கெட் விளையாடினார். வேட்டி அணிந்து வந்த அவருக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார். உதவி பேராசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.
♈ 🇮 திருச்சி மணப்பாறையில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு கலெக்டர் ராசாமணி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதி கழிவறைகள், உணவு கூடங்கள் ஆகியவை முறையாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து விடுதி வார்டன் சாமிக்கண்ணு, காவலர் கோபால் ஆகியார் மீது நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
♈ 🇮 தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் கோவையில் அளித்த பேட்டி:நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் அதி நவீன ஸ்மார்ட்ஆய்வகம் அமைக்கப்படும். மாநகராட்சியின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்திட இந்த ஸ்மாட் ஆய்வகம் பயன்படும். கோவையில் மெட்ரே ரயில் சேவை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டு வருகின்றன என்றார்.
♈ 🇮 தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் வானிஹாமா கிராமத்தில் அத்துமீறி பதுங்கியிருந்த திவீரவாதிகள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது நேற்று இரவு 8.00 மணியளவில் திடீர் தாக்குதல் தொடுத்தனர். துப்பாக்கியால் குண்டுமழை பொழிந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்
♈ 🇮 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,589 கனஅடியாக சரிந்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும்,மேட்டூர் அணைக்கு கடந்த 15ம் தேதி, 3,501கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 2,500கனஅடியாக சரிந்தது. ஒரே நாளில் 1,000கனஅடி அளவில் நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 2,589 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேைவக்காக விநாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 25.21அடியாகவும், நீர் இருப்பு 5.75டிஎம்சியாகவும் உள்ளது.
♈ 🇮 பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாய கிணறு ஒன்றில் தண்ணீர் இல்லாததால் அதை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அதற்காக வெடிவைக்க துளை போடும் பணி நேற்று நடந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். கிணற்றுக்குள் துளை போட்டுக் கொண்டிருந்தபோது அதிர்வு காரணமாக பக்கவாட்டில் இருந்த பாறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதில் வடிவேல்(50), கலியன்(40) ஆகியோர் மீது கற்கள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர்
♈ 🇮 தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
12pm -18-7-2017-tuesday
♈ 🇮🇳 லஞ்சம் மட்டும் வாங்காதீர்கள். அது மிகவும் அவமானமான ஒரு செயல்,'' என, திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்
♈ 🇮🇳 தொடர் அமளி- லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு
♈ 🇮🇳 பணியின் போது செல்போன்... கண்டித்த மேஜரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஜவான்- சுட்டுக்கொலை செய்யப்பட்ட ராணுவ மேஜரின் பெயர் ஷிகர் தாபா என்பதாகும். இவர் நாயக் கதிரேசன் என்ற வீரர் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
♈ 🇮 இன்று சென்னை யில் முதலவர் வரும் கடற்கரை சாலையில் காவல்துறை பிளாஸ்டிக் கோன் தடுப்பு வைத்தனர் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக . விவேகானந்தர் இல்லம் அருகில் வந்த மாநகர பேருந்து அந்த தப்பின் மோதி நின்றது. காவலர்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தி நிலை தடுமாற செய்தனர்.
♈ 🇮 மாண்புமிகு நிதியமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கும்,சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் – சென்னை ராயபுரம் தொகுதியில் கப்பல் போலு தெருவில் மழைநீர் கால்வாய் மூடிகள் உடைந்து உள்ளன . இதனால் பலர் விபத்தில் சிக்குகின்றனர். குழந்தைகள் தங்களை அறியாமல் அன்த மழைநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. விரைந்து புதிய மூடியை கொண்டு திறந்து கொடுக்கும் கால்வாயினை மூடி கொடுக்குமாறு விஸ்வரூபம் பணிவுடன் வேண்டுகிறது. அதே தெருவில் மழைநீர் கால்வாய் செல்லும் இடத்தில சஞ்சீவினி மருத்துவமனை யருகில் தார் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சில அடிகள் கீழே சென்றுவிட சரிசெய்ய வந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் மண்ணை கொட்டி மழைநீர் கால்வாயை அடைத்து விட்டனராம். மழைநீர் நீர் இனி அவ்வழியில் செல்ல முடியாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறது
♈ துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையா வேட்பு மனு தாக்கல்
♈ராஜஸ்தானில் உலகின் உயரமான 33 அடி ருத்ராட்ச சிவலிங்கம்!
♈ சட்டசபைக்கு வர கருணாநிதிக்கு விலக்கு: சட்டசபையில் தீர்மானம்
♈ தலித் மீது தாக்குதல்: ராஜ்யசபாவில் மாயாவதி வெளிநடப்பு
♈ தகவல் தொழில்நுட்ப இலாகா ஸ்மிருதி இரானிக்கு ஒதுக்கீடு
♈ நகர்ப்புற மேம்பாட்டு துறை நரேந்திர தோமருக்கு கூடுதலாக ஒதுக்கீடு
♈ராமேஸ்வரத்தில் ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
♈ ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.32
♈ பங்குச்சந்தைகள் சரிந்தன : சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி
♈ பசுவின் பெயரில் கொலை; மம்தா கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் வலியுறுத்தல்.
♈ சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை: கடந்த வாரத்தில் சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில், தங்கம்,வெளிநாட்டுபணம், விலை உயர்ந்த கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த 13ம் தேதி இலங்கையிலிருந்து வந்த முகமது இர்பான் என்பவரிடம் விலை உயர்ந்த191 கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். கடந்த 15ம் தேதி சவுதியின் ரியாத் நகரிலிருந்து வந்த காதர் பாட்ஷா என்பவரிடமிருந்து ரூ.31.90 லட்சம் மதிப்புள்ள 1.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. குவைத்திலிருந்து வந்த சையத் ரியாஸ் என்பவரிடமிருந்து ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கமும், ரியாத்திலிருந்து வந்த முகமது அலி என்பவரிடமிருந்து ரூ.8.33 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.சிங்கப்பூரிலிருந்து வந்த அப்துல் சலீம் சம்சுதீன் என்பவரிடமிருந்து ரியால் மற்றும் ஈரோ பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு ரூ.15.15 லட்சம் ஆகும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
♈ பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மீண்டும் அவகாசம் வழங்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.
♈ கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பிரளய காளேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பாவை மற்றும் பித்தளையில் ஆன தொங்கு விளக்குகளை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
♈ கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்,45. இவர் சொந்தமாக பட்டறை வைத்து, தங்க கட்டிகளை வாங்கிவந்து நகை செய்து கொடுத்து வருகிறார். கடந்த 10 நாளுக்கு முன்பு, ஊட்டியில் உள்ள நகைக்கடையில் 1181 கிராம் தங்க கட்டிகளை வாங்கி வந்தார். அதனை 10நெக்லஸ், 2 மாங்கா மாலை செய்து நேற்று ஊட்டிக்கு கொண்டு செல்ல கிளம்பினார். மேட்டுப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் காத்து கொண்டிருந்த போது,காரில் வந்த 2 பேர் ஊட்டி செல்வதாக அழைத்தனர். ஈஸ்வரனும் நகைகளுடன் காரில் ஏறினார். வழியில் மத்தம்பாளையம் அருகே காட்டை பிரிவு வந்த போது,கத்தியை காட்டி, ஈஸ்வரனிடமிருந்த நகைகள், ரூ.900, மொபைல் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றனர். இது தொடர்பாக ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
♈ 🇮 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எதிரே செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
♈ உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலக்கெடு நிர்ணயிக்க கோரிய வழக்கில் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம்,ஆணையர்,தலைமைச் செயலாளர் ஆகியோர் பதில் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடத்த ரூ.125 கோடி செலவு செய்த நிலையில் திமுக தொடர்ந்த வழக்கால் தான் தேர்தல் ரத்தானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதனிடையே மே 14க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டும் ஏன் நடத்தவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
♈ நாடாளுமன்றத்தில் பேச இடையூறு செய்வதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். அவையில் அவர் பேச முயன்ற போது பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜினாமா செய்யப்போவதாக கூறி வெளிநடப்பு செய்தார்.
♈ ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி டெக்சாஸ் தலைநகரான ஆஸ்டின் மாநகரத்தில் நடைபெற்றது. ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கம்,ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி, மத்திய டெக்சாஸ் தமிழ் கழகம், ஹார்வர்ட் தமிழ் இருக்கை டெக்சாஸ் கிளை, #SaveTamilNaduFarmer இணைந்து நடத்திய இந்த விழாவில் இரு நகரங்களிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்
♈ 🇮 நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. ஆய்வின் தொடக்கத்தில் எவ்வளவு காபி குடிக்கின்றனர் என்று அந்த மக்களிடம் ஆய்வாளர்கள் கேட்டனர். பிறகு, அவர்களில் சராசரியாக 16 ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்களை அனுமானித்தனர்.பொதுமக்களால் உணரப்படும் ஆபத்து பற்றி ஆய்வு செய்த பிறகு,காபியால் மரணங்கள் குறைவதாக மதிப்பிட்டால், தினமும் கூடுதலாக காபி குடிப்பதால் ஒருவரின் ஆயுள் சுமார் மூன்று மாதங்களும் ஒரு பெண்ணின் ஆயுள் சராசரியாக ஒரு மாதமும் அதிகமாகலாம் என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் சர் டேவிட் ஸ்பீக்ஹால்டர்.ஆனால், இதுபோன்ற ஆய்வு அளவு கோல் இருந்தாலும், காபி கொட்டைகளை மாயாஜால மூலப்பொருள் என்பதை மிகச்சரியாக அர்த்தம் கொள்ள முடியாது. அதை நிரூபிக்கவும் இயலாது என்கிறார் அவர். காஃபின் பிறரை விட சில பேரை பாதிப்பதாகவும் அந்த பாதிப்பு ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது. ஆய்வில் ஏராளமானோர் உட்படுத்தப்பட்டிருந்தாலும், தொடக்கத்திலேயே நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் அல்லது மாரடைப்பு ஏற்பட்டவர்களை ஆராய்ச்சியாளர்கள் விலக்கி விட்டனர்.எனவே, உடல் நலமில்லா மக்கள் காபி அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகளையும் பலன்களையும் பற்றி அந்த ஆய்வு பெரிதாகக் கூறவில்லை.
♈ 🇮 இதுவரை கண்டுபிடிக்கப்படாத சிறியதொரு நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 600 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்ற சனிக் கிரகத்தை விட சற்று பெரியதொரு நட்சத்திரத்தை கண்டறிந்த பின்னர் விஞ்ஞானிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.'இபிஎல்எம் ஜே0555-57எபி' என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திரம், மிகவும் பெரியதொரு நட்சத்திரத்தை சுற்றிவருகின்ற, ஒரு பெருந்திரளை சுற்றிய சூரிய சுற்றுவட்டப்பாதைகள் இரண்டினை கொண்டுள்ள அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது.நட்சத்திரம் என்று அழைக்கும் தகுதி பெற்றிருப்பது மட்டுமன்றி,நடசத்திரங்கள் எவ்வளவு சிறியதாக இருக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுவதாக இந்த நட்சத்திரம் மிகவும் சிறியதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது உணர்த்துகிறது.ஒரு நட்சத்திரம் எவ்வளவு சிறியதாக இருக்கலாம் என்று எங்களுடைய இந்த கண்டுபிடிப்பு வெளிப்படுத்துகிறது" என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சோந்த ஆய்வாளர்களில் ஒருவரும். வானவியலாளருமான அலெக்ஸாண்டர் போயேட்டிச்சர் கூறியிருக்கிறார் .
♈ 🇮 பதின்ம வயதினர் பற்களை நறுக்குதல் அவர்களுக்கு பள்ளியில் ஏதாவது பிரச்சனை இருப்பதன் அறிகுறி.பதின்ம வயதினரிடையே பற்களை நறுக்கும் பழக்கம் அவர்கள் பள்ளிக்கூடங்களில் கேலிக்கு உள்ளாவதற்கான அறிகுறி என்று ஆய்வுகள் கூறுகின்றன. மன அழுத்தம் மற்றும் சோகத்துக்கு ஆளான பெரியவர்களையும் இது பாதிக்கும் என்பதால், பெற்றோரும் பள்ளிகளும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வாய் தொடர்புடைய சுகாதாரத்திற்கான ஒரு தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. பற்களை நறுக்குதல், தலைவலி, பல் தேய்மானம் மற்றும் தூக்க குறைபாடுகள் உள்ளிட்டவற்றை உண்டாக்கும் என்றும், இவை அதிகரித்து வருவதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர். நறுக்கும் சத்தத்தை வட்ட வடிவ ரம்பத்தின் சத்தத்துடன் ஒப்பிடலாம்.பள்ளிகளில் கேலிக்கு ஆளாகும் 13 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள், பிறரைவிட நான்கு மடங்கு அதிகமாக இரவில் பற்களை நறுக்கும் பழக்கத்திற்கு உள்ளாக வாய்ப்புண்டு என்று ஜோர்னல் ஆப் ஓரல் ரீஹேபிலியேஷனில் (Journal of Oral Rehabilitation) வெளியாகியுள்ள ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. பிற மாணவர்களில் 17 சதவீதத்தினரிடையே மட்டும் அப்பழக்கம் உள்ள நிலையில் கேலிக்கு உள்ளாவோரிடையே இது 65 சதவீதமாக உள்ளது. ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இதற்கு திறன்மிகுந்த சிகிச்சைகள் உள்ளன.கார்டு (Guard) அல்லது ஸ்ப்ளின்ட் (Splint) எனப்படும் கடினமான பிளாஸ்டிக் உபகரணத்தைப் பற்களில் பொருத்துவதன்மூலம், அவற்றை நறுக்குவதைத் தடுக்க முடியும். பற்கள் ஒன்றன் மேல் ஒன்று நன்றாகக் பொருந்த வைப்பதே இதன் நோக்கம். இந்த உபகரணத்தைப் பொருத்துவதால் மெல்லுவது இலகுவாகி பற்கள் பாதுகாக்கப்படும்.புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், மது உட்கொள்வதைக் குறைத்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களும் இப்பிரச்சனைத் தீர்க்கப் பரிந்துரைக்கப்படுகின்றன. உறக்கத்தின்போது மூச்சுத் திணறல், கடுமையாகக் குறட்டை விடுதல் உள்ளிட்ட தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் பற்களை நறுக்கும் பழக்கத்தை உண்டாக்கும்.பிரிட்டனில் மட்டும் உறக்கத்தில் பற்களை நறுக்குதல் 60 லட்சம் பேரைப் பாதிக்கலாம் என்று கார்ட்டர் மதிப்பிடுகிறார்.நம் வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மன அழுத்தம் இருந்தால், நாம் அவற்றை நம் பற்களுக்கு எடுத்துச் செல்கிறோம் என்பதில் வியப்பேதுமில்லை. பகல் நேரங்களில் நம் வீட்டு வேலைகள் மற்றும் நாமாகச் செய்து கொள்ளும் பணிகள், வாகனம் ஓட்டுதல், நாம் மிகுந்த அக்கறை கொள்ளும் பணிகள் உள்ளிட்டவற்றால் பற்களை நறுக்கறோம்.
4pm -18-7-2017-tuesday
♈ 🇮🇳 மத்திய அரசம், இரு மாநில அரசும் சசிகலாவிற்கு உறுதுணையாக இருக்கும் வரை பொது மக்கள் கனவு பலிக்காது-பெங்களூரு சிறைக்குள்ளும் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து தொடர்ந்து சட்டத்தை மீறுவதை சர்வ சாதாரணமாக கருதும் சசிகலாவுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
♈ 🇮🇳 தயவு செய்து யாரும் தவறான முடிவை எடுக்க வேண்டாம்-அமைதி காக்கவும் –ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று 110 கோடி மக்களின் நலனுக்காக மறு பரிசீலனை செய்வார்-டிவீட்டரில் இருந்து தற்காலிகமாக விலக முடிவு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு முடிவு செய்துள்ளார்
♈ 🇮🇳 கப்பல் ஏறும் கர்நாடகா மானம் -ஒட்டுமொத்த பெங்களூரு சிறையை சசிகலா விலைபேசியது அம்பலம்-சசிகலா, இளவரசியின் புதிய வீடியோவால் பெரும் பரபரப்பு-is it true.
♈ 🇮🇳 கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி:குழு அமைத்தது அரசு-அப்ப தமிழ்நாட்டிற்கு தனி கொடி கேட்பதில் தவறு ஒன்றுமில்லையே –தமிழக மக்கள் இயக்கம்
♈ 🇮🇳 கர்நாடகாவிற்கு ஒரு ரூபா – தமிழ்நாட்டிற்கு ஒரு சகாயம்- உழைத்த சம்பள பணம் பெற கோர்டிற்கு போக வேண்டியுள்ளது .கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவிற்கு சம்பளம் வழங்கப்படவில்லை என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், இந்த முறைகேட்டில் எனது அறிக்கையை யாரும் சந்தேகப்பட வேண்டாம். எனது அறிக்கையைச் சந்தேகப்படுவது எனது நேர்மையைச் சந்தேகப்படுவதற்கு சமம். விசாரணை குழுவின் பணி முடிவடைந்துவிட்டது என கிரானைட் அதிபர்கள் கூறுவதை ஏற்க முடியாது. குழுவின் பணி முடிவடைந்ததை ஐகோர்ட் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்-விஸ்வரூபம்
♈ 🇮 திருமங்கலத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகம் கட்டுமான பனி நடைபெறுவதால் முகப்பேர் ஜெ ஜெ நகர் காவல்நிலையத்தில் முதல் மாடியில் தற்சமயம் மாற்றப்பட்டுள்ளது என்று உதவி ஆணையர் திரு காமில்பாஷா அவர்கள் தெரிவித்தார்.
♈ 🇮 குண்டும் குழியுமாக காட்சியாளிக்கும் திருமுல்லைவாயில் To ரெட்டில்ஸ் சாலை-இந்த சாலை திருமுல்லைவாயல் ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் இருந்து ரெட்ஹில்ஸ் செல்கிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்
அதிலும் 3 முதல் 4 கி.மீ தூரத்திற்கு குண்டும் குழியுமாக சாலை இருப்பதே தெரியாத அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. இந்த சாலை அமைத்து சுமார் 6 வருடங்களுக்கு மேல் ஆகிறது இதை பராமரிப்பதோ பழுது பார்ப்பதோ இல்லை என இப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.இந்த பகுதியில் மகப்பேறு மருத்துவமனையும் உள்ளது பிரசவத்திற்கு செல்லும் பெண்களும் பாதிக்கபடுகின்றனர் அப்பகுதி மக்கள் எத்தனை முறை கூறியும் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாதது மிகவும் வேதனையளிக்கிறது என கூறுகின்றனர்.இந்த வழியாக தினமும் பல அரசு பேருந்துகளும் , பள்ளி, கல்லூரி பேருந்துகளும் ,சிற்றுந்துகளும் பல முறை சென்று வருகின்றன.அனைவரும் மிகுந்த சிரமபடுகின்றனர் எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள் .
♈ 🇮 கொடுத்த பணத்தையே பிடுங்கிக்கொள்ளும் காலம் இது-இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் ..!"தில்லானா மோகனாம்பாள்" - இந்த கதையை அன்றைய "ஆனந்த விகடன் "வார இதழில் , தொடர்கதையாக எழுதி வந்தவர் .... கொத்தமங்கலம் சுப்பு ...!இந்தக் கதை விகடனில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, ஆர்வத்தோடு அதைப் படித்து வந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சினிமாவாக இதை எடுக்க ஆசைப்பட்டார்.கதையின் உரிமை யாரிடம் இருக்கிறது என்று விசாரித்தார்.அது “ஆனந்த விகடன்” ஆசிரியரான எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது. உடனடியாக எஸ். எஸ். வாசனை சந்தித்த ஏ.பி.நாகராஜன் , “ ஐயா .. இந்தக் கதையை நான் திரைப் படமாக எடுக்க விரும்புகிறேன் .. இந்தக் கதையின் உரிமைக்காக நான் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்று சொல்ல முடியுமா..?” என்று கேட்டாராம்.ஒரு கணம் சிந்தித்த வாசன் , " 25 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் , போதும் .." என்றாராம் .சற்றும் தயக்கமின்றி உடனே "செக்" எழுதி கொடுத்துவிட்டாராம் , ஏ.பி.என்.ஏனென்றால் கதை உரிமைக்காக வாசன் 50 ஆயிரம் ரூபாயாவது கேட்பார் என்று எதிர்பார்த்து வந்திருந்தார் ஏ.பி.நாகராஜன் .ஆனால் வெறும் 25 ஆயிரத்தை மட்டுமே வாசன் சொன்னதும் ஏ.பி.என்.னுக்கு ஒரே ஆச்சரியம்..!வாசன் கேட்ட 25 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து விட்டு , ஒரு கணம் யோசித்தார் ஏ.பி.என்.மீதி 25 ஆயிரத்தை என்ன செய்வது..?"சட்" என ஒரு யோசனை தோன்றியது.இந்தப் பணத்தை அப்படியே "தில்லானா மோகனாம்பாள்" கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டால் என்ன..?உடனடியாக எழும்பூர் கண் மருத்துவமனைக்குப் புறப்பட்டார் ஏ.பி.நாகராஜன். ஏனென்றால் ...அந்த சமயத்தில் , கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு , கண் சிகிச்சைக்காக எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆஸ்பத்திரிக்குச் சென்று, கொத்தமங்கலம் சுப்புவை சந்தித்த ஏ.பி.நாகராஜன் .... "தில்லானா மோகனாம்பாள்" கதை உரிமையை வாசனிடமிருந்து பெற்ற செய்தியை சொல்லிவிட்டு, "கதை எழுதிய உங்களுக்கு என் சொந்த முறையில் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன்.." என்றாராம் ஏ.பி.என்.அதற்கு கொத்தமங்கலம் சுப்பு சிரித்துக் கொண்டே சொன்னாராம் :" ஐயா... இப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன் வாசன் ஐயா இங்கு வந்து விட்டுப் போனார்.என் கதை உரிமைக்காக நீங்கள் அவரிடம் கொடுத்த25 ஆயிரம் ரூபாயை முழுவதுமாக என்னிடம் கொடுத்துவிட்டு இப்போதுதான் இங்கிருந்து புறப்பட்டுப் போனார் "நம்ப முடியாமல் திகைத்துப்போனார் நாகராஜன்..!எவ்வளவு பெரிய உள்ளம் எஸ்.எஸ்.வாசனுக்கு..?
♈ 🇮 *தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள்-வாழ்த்துக்கள் -சட்டமன்றத்தில் நிகழ்ந்த அரசியல் நாகரிகம்!*திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாத நிலையில், இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில் கருணாநிதி சட்டமன்றத்துக்கு வருவதற்கு விலக்கு கேட்டு திமுக சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர் ஆதரவோடு ஆளுங்கட்சியான அதிமுகவும் ஆதரித்து இன்று ஜூலை 18 ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.இது தமிழக சட்டமன்றத்தில் நிகழும் அரசியல் நாகரிகத்தின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.
♈ 🇮விவேகத்தை முடித்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித் .
♈ 🇮 ரூ.10 ஆயிரம் லஞ்சம்: திருப்பூரில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் கைது
♈ 🇮 அதிகாரிகளை மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது: டி.ஐ.ஜி., ரூபா .
♈ 🇮 மணப்பாறை அருகே 2 வீடுகளில் 55 சவரன் நகை கொள்ளை .
♈ 🇮 கோயம்பேட்டில் 729 கடைகளுக்கு சீல்: ஐகோர்ட் உத்தரவு .
♈ 🇮 தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு .
♈ 🇮 துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையாவுக்கு சமாஜ்வாதி ஆதரவு .
♈ 🇮 ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு தயார்: பிரதாப் ரெட்டி .
♈ 🇮 ஓ.பி.எஸ்., கிணறு ஆய்வு: தேனி கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு .
♈ 🇮 தமிழக சட்டசபையில் 8 மசோதாக்கள் தாக்கல் .
♈ 🇮 ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியா வருபவர்கள் பாகிஸ்தான் வெளியுறவு துறையின் பரிந்துரை தேவையில்லை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார் .
♈ உ.பி., சட்டசபையில் கண்டுபிடிக்கப்பட்டது வெடிபொருள் இல்லை என ஆக்ராவில் உள்ள தடய அறிவியல் ஆய்வு கூடம் அறிக்கை அளித்துள்ளது,அம்மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது -மாநில உள்துறையின் முதன்மை செயலாளர் கூறுகையில், '' சட்டசபையில் கண்டுபிடிக்கப்பட்டது சக்தி வாய்ந்த பி.இ.டி.என்., வெடி பொருள் இல்லை என ஆக்ரா ஆய்வு கூடம் கூறியுள்ளதாக வெளியான செய்தி தவறானது. அந்த ஆய்வு கூடத்திற்கு எந்த மாதிரியும் அனுப்பப்படவில்லை. அந்த ஆய்வு கூடத்தில் அது குறித்த சோதனை நடத்தும் கருவிகளும் இல்லை,'' என்றார்
♈ காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளு பேரனுமான ரோஹித் திலக்கை, கற்பழிப்பு வழக்கில் மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர் .
♈ மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கிரிக்கெட் அணி வீரர் முகேஷ் யாதவ் வீட்டில் மர்ம நபர்கள், ரூ.45 ஆயிரம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
♈ கர்நாடக மாநிலத்திற்கு என தனிக்கொடி அமைப்பது குறித்து ஆராய குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் அரசியலமைப்பு சட்டத்தின், 370வது பிரிவின் கீழ் தனிக்கொடி வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடகாவும்,தங்கள் மாநிலத்திற்கு என தனிக்கொடி அமைப்பது குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், கொடியை வடிவமைப்ப்பு குறித்தும் குழுவிடம் கருத்து கேட்டு கொண்டுள்ளது. அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையிலும், மாநிலத்தில் இந்தி திணிப்பு நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருவதாக கன்னட ஆதரவாளர்கள் கூறி வரும்நிலையில், மாநில அரசு தனிக்கொடி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் பா.ஜ., கர்நாடகாவிற்கு தனிக்கொடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநிலத்தின் அதிகார பூர்வ கொடியாக மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்கள் கொண்ட கொடியை அறிவிக்க வேண்டும் என மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட போது, தனிக்கொடி அமைக்கப்பட்டால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பதில் அளித்தது .
♈ ஆதார் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தனி மனித ரகசிய காப்பு அடிப்படை உரிமைக்கு ஆதார் எதிரானது என்பதை 5 நீதிபதிகள் விசாரிக்க முடியாது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு கூறியது. இதனை ஏற்று, இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக