வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ஜெயலலிதா–சோபன்பாபுவுக்கு பிறந்தவள் என்பதை நிரூபிக்க தனக்கு DNA பரிசோதனை நடத்த உத்தரவிட மஞ்சுளா என்ற அம்ருதா கோரிக்கை



ஜெயலலிதா–சோபன்பாபுவுக்கு பிறந்தவள் என்பதை நிரூபிக்க தனக்கு DNA பரிசோதனை நடத்த உத்தரவிட மஞ்சுளா என்ற அம்ருதா கோரிக்கை

பெங்களூரு ; பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா என்பவர் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கும் மஞ்சுளா கடிதம் எழுதி உள்ளார். அதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தான் ஜெயலலிதா–சோபன்பாபுவுக்கு பிறந்தவள் என்பதை நிரூபிக்க தனக்கு டி.என்.ஏ. பரிசோதனை(மரபணு பரிசோதனை) நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில், மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை வாங்க பெங்களூருவில் இருந்து அந்த பெண் கடந்த மாதம்(ஆகஸ்டு) சென்னை சென்று வந்ததும் தெரியவந்து உள்ளது. அதாவது கடந்த மாதம்(ஆகஸ்டு) 21–ந் தேதி சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு சென்று, அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் தான் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று மஞ்சுளா கூறியுள்ளார். மேலும் தனது தாய் ஜெயலலிதா, தந்தை சோபன்பாபுவின் இறப்பு சான்றிதழ்களை தனக்கு வழங்கும்படி அதிகாரிகளிடம் மஞ்சுளா கேட்டுள்ளார்.

அப்போது அவர்களது இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி மஞ்சுளாவிடம் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. அதன்படி, ஜெயலலிதா, சோபன்பாபு ஆகியோரின் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் மஞ்சுளா பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாகவும், அதே நேரத்தில் முன்பு ஜெயலலிதாவை சென்னையில் வைத்து சந்தித்தபோது, அவர் வாங்கி கொடுத்த 2 தங்க நகைகளுக்கான ரசீதுகளையும் மஞ்சுளா பாதுகாத்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்..



வங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்..

உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், வங்கிகணக்கு, பான் கணக்கு உள்ளிட்டவுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து மத்திய அரசு அறிவித்தது. இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

ஆதார் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் எடுக்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆதார் எண்ணை நலத்திட்டங்களில் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேஸ் மானியம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 31 கடைசி தேதியாக இருந்தது. இப்போது டிச.31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை பயன்படுத்தி சிலர் வருமான வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்காக, ஆகஸ்ட் 31 தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

வருமான வரி தாக்கலுக்கு ஆதார் எண் கட்டாயம் எனவும், பான் கார்டு பெற ஆதார் எண் தேவை என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அந்த எண்ணை பான் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கிக் கணக்குகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இதற்கான காலக்கெடு முடிவடைவதாக இருந்த நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

2017- 18ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமானால் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கப்படுவது அவசியம். தற்போதைய புதிய அறிவிப்பின் படி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். அப்படி இணைக்காதவர்கள் பின்னர் வருமான வரி தாக்கல் செய்யும் போது அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும்.


ஆதார் - பான் கார்டு இணைப்புக்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. www.incometax, indiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்தில் நுழைந்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆதார் - பான் இணைப்புக்கான பக்கத்தில் விவரங்களை அளித்து இணைத்து கொள்ளலாம். பான் மற்றும் ஆதாரில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

Mathi News இன்றைய பரபரப்பு செய்திகள் 31/08/17 !

Mathi News இன்றைய பரபரப்பு  செய்திகள் 31/08/17 !

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

வங்கி , கேஸ் மானியம் , பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 76பேர் விடுவிடுப்பு இந்திய துணை தூதரக அதிகாரி நடராஜனிடம் மீனவர்கள் ஒப்படைப்பு.

திமுக ஒருபோதும் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்காது.ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவே விருப்பம் - சேலம் திருமண விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேச்சு.

பெனாசீர் புட்டோ கொலை வழக்கு : முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு 2 காவல் அதிகாரிகளுக்கு 17 ஆண்டுகள் சிறை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றம்.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சாட்சிகளை விசாரிக்க டிடிவி.தினகரன் தரப்புக்கு செப்.11 வரை காலஅவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு.

சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசியது குறுந்தகடுகளாக வெளியீடு  தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சகோதர யுத்தத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் - அமைச்சர் உதயகுமார்.

கமல்ஹாசன் ட்விட்டரை நம்பி ஆட்சி நடத்துகிறார். தமிழக மக்கள் நலனுக்காகவே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5.7% ஆக சரிவு : மத்திய அரசு.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக சட்சமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு.
சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

ஆட்சிக்கு எதிராக 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கும் நிலைமை வரும்.தமிழக மக்களின் நன்மைக்காக திமுக சிந்தித்து நல்ல முடிவை எடுக்கும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் கடம்பூர் ராஜு நீக்கம் - டிடிவி தினகரன்.

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கும் பா.ஜ.க வின் அழுத்தத்திற்கும் அதிமுக இரையாகி விடக்கூடாது.அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் - தனியரசு எம்எல்ஏ.

டிடிவி.தினகரன் இல்லத்துக்கு விஜிலா சத்தியானந்த் எம்பி நாஞ்சில் சம்பத்  வெற்றிவேல் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நாளை நேரில் சந்திக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

புளூவேல் விபரீதம் : பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழியுங்கள் காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் அறிவுரை.

புளூவேல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வுக்கு சிறப்பு செல் அமைக்கப்படும் : மதுரை ஆட்சியர் தகவல்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள புரியாத புதிர் திரைப்படத்தை வெளியிட தடை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

பாஜக தலைவர் அமித்ஷாவுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு மேற்கொண்டார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒருமணி நேரமாக அமித்ஷாவுடன் தம்பிதுரை ஆலோசனை நடத்தினார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடக்கிறது - தமிழக அரசு விளக்கம்.

ஹைதராபாத்தில் காரை மெதுவாக ஓட்டுமாறு கூறிய முதியவரை சட்டை காலரை பிடித்து இழுத்து அடித்ததாக கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மீது புகார் எழுந்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி39 ராக்கெட்.

அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2ம் இடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் விருதைப் பெறவே டெல்லி வந்தேன், அரசியலுக்காக அல்ல எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறைக்கு, நிலுவைத் தொகை ரூ.2,542 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கோரிக்கை வைத்தேன் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.

பீகார் : கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பீகார் மக்களுக்கு நடிகர் அமிர்கான் ரூ.25 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார் நடிகர் அமிர்கான்.

நாகையில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவையொட்டி செப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறை.

நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஃபெப்சி தொழிலாளர்கள் அறிவிப்பு.

இலங்கைக்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் : 50 ஓவர் முடிவில் 375 ரன் குவித்தது இந்திய அணி.

புதன், 30 ஆகஸ்ட், 2017

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக விதிகளின் (By-Laws) முக்கியஅம்சங்கள் வருமாறு:-



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக விதிகளின் (By-Laws) முக்கியஅம்சங்கள் வருமாறு:-

1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கினார். அப்போது அவர் உருவாக்கிய சட்டவிதிகளை பார்ப்போம்.

* அ.தி.மு.க.வின் தலைமை தமிழகத்தில் இயங்கும்.

* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் நேரடிப் பொறுப்பில் கழகத்தின் தமிழ் மாநில பிரிவு இயங்கும். எனவே, தமிழகத்துக்கு என தனி செயலாளர் இருக்க மாட்டார்.

* பொதுச்செயலாளர் விரும்பினால், தமிழ் மாநிலக் கழக நிர்வாகத்துக்கென ஒரு துணை செயலாளரை நியமித்துக்கொள்ளலாம். பொதுச்செயலாளர் நிர்வாக வசதிக்காக பொது உறுப்பினர்களில் இருந்து ஒரு துணை பொதுச் செயலாளரையும், 10-க்கும் மேற்படாத தலைமை கழக செயலாளர்களையும் நியமிக்கலாம்.

* கழகக் கொடி நீள, அகலத்தில் முறையே 3 பங்குக்கு 2 பங்கு விகித அளவில் இருக்க வேண்டும். கொடியின் நீளத்தில் சரிபாதி மேல் பகுதி கருப்பு நிறமாகவும், சரிபாதி கீழ்பகுதி சிவப்பு நிறமாகவும் இருக்க வேண்டும்.

* கழகத்தினுடைய குறிக்கோள்களையும், நோக்கங்களையும் ஏற்று, கழகத்தினுடைய சட்டத்திட்டங்களுக்குட்பட்டு கழகத்தை வளர்ப்பதற்காக உறுதியேற்று நடத்தும் 18 வயது நிரம்பிய அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண், பெண் இருபாலரும், கழகத்தின் முடிவே இறுதி முடிவு என்றும், அதற்கு எதிராக வழக்குமன்றங்களுக்கு போவதில்லை என்றும் ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே உறுப்பினர்கள் ஆவதற்கு தகுதி படைத்தவர்கள்.

* சாதி, மத சங்கங்களிலோ, அல்லது வேறு அரசியல் கட்சி அமைப்புகளிலோ, உறுப்பினர்களாகவோ, அல்லது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டவர்கள் கழகத்தில் உறுப்பினராக இருக்கும் உரிமையை இழந்து விடுவார்.

* கழக சம்பந்தமான எந்த பிரச்சினைகள் பற்றியும் வழக்குமன்றங்களுக்கு செல்ல கழக உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை.

* தலைமைக்கழக பொதுக் குழு, கழகத்தின் முழு அதிகாரங்களை கொண்ட தலைமை அமைப்பாகும். பொதுக்குழுவின் முடிவே இறுதி முடிவாகும்.

* பொதுக்குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கழகத்தினுடைய அவைத்தலைவர், பொருளாளர் பொதுக் குழுவில் இடம்பெறுவர்.

* பொதுக்குழு கூட்டம் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை பொதுச் செயலாளரால் கூட்டப்படும்.

* பொதுக்குழு கூட்டம் குறைந்தது 15 நாள் முன்னறிவிப்புடன் கூட்டப்பட வேண்டும்.

* கழக கொள்கைகளை வகுப்பது, அவற்றை நிறைவேற்ற திட்டங்களை தீட்டுவது, கழகத்தை வழி நடத்தி செல்வது போன்ற கழகத்தை பொருத்த எல்லா நடவடிக்கைகளிலும் இறுதி முடிவு எடுக்க பொதுக் குழுவே முழு அதிகாரம் பெற்றதாகும்.

* பொதுக்குழுவின் கால அளவு பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும்.

* பொதுச்செயலாளர்: கழகத்தின் பொதுச்செயலாளர் அ.தி.மு.க.வில் இருக்கக்கூடிய எல்லா பொதுக்குழு உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்.

* கழகத்தின் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர் பொதுச் செயலாளராவார்.

* பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், துணை பொதுச்செயலாளரும், தலைமைக் கழக செயலாளர்களும், அந்த பொதுச்செயலாளரின் பதவிகாலம் வரையில் நீடிப்பர். இதற்கிடையில், பொதுச்செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ, அல்லது பதவியிலிருந்து விலகினாலோ, இடைப்பட்ட காலத்தில் அதாவது புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் வரையில், முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியில் நீடித்து கழக பணியினை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

* பொதுக்குழு, செயற்குழு கூடாத நேரங்களில், அரசியல் நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் பற்றிய கொள்கை திட்டம் ஆகியவற்றைப்பற்றி அவசரத்தின் முன்னிட்டு தக்க முடிவுகள் எடுக்க பொதுச்செயலாளருக்கு உரிமை உண்டு. அந்த முடிவுகளுக்கான ஒப்புதலை அடுத்து கூடும் பொதுக்குழுவில் பெற வேண்டும். பொதுக்குழு கூடாத நேரங்களில், குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி, நடவடிக்கை பற்றி பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை பொதுச்செயலாளர் கடிதம் மூலம் கேட்டு ஒப்புதல் பெறலாம்.

* துணை பொதுச் செயலாளர்: பொதுச்செயலாளரால் நியமனம் செய்யப்படுவார்.

* பொதுச்செயலாளர் இல்லாத நேரத்தில், துணை பொதுச்செயலாளர் அவரது பொறுப்புகளை ஏற்று பணிகளை நிறைவேற்றுவார்.

* தலைமை கழகத்தின் அவைத் தலைவர், பொதுக் குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

* அவைத்தலைவர் பொதுக்குழு செயற்குழு கூட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்தி கொடுப்பார். அவைத்தலைவர் இல்லாத நேரங்களில் உறுப்பினர்களில் ஒருவர் தலைமை ஏற்று நடத்தி கொடுப்பார்.

* ஆட்சிமன்ற தேர்வு குழு 7 உறுப்பினர்களை கொண்டதாகும். பொதுச் செயலாளர்- துணை பொதுச்செயலாளர் ஆகியோர்களை தவிர, 5 உறுப்பினர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, கட்சியின் சட்டத் திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டுவந்தார்.

அதில் பின்வருவனவற்றை குறிப்பிட்டு இருக்கிறார்.

* கட்சியில் இருந்து தாங்களாகவே விலகி செல்பவர்களும், பொதுச் செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களும், கட்சி உறுப்பினர் பதவியை இழக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படும் போது, அவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்ட நேரத்தில் இருந்து அவர்களது உறுப்பினர் காலம் கணக்கிடப்படும். அவர்கள் அமைப்பு ரீதியான தேர்தல்களில் போட்டியிட 5 ஆண்டுக்கு பிறகுதான் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

* இந்த விதி, பொதுதேர்தல், அல்லது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்று போட்டியிட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் பொருந்தும்.

* பொதுச்செயலாளருக்கு இந்த விதியை தளர்த்த உரிமை இருக்கிறது.

* பொதுக்குழுவுக்கு கட்சியின் எந்தவொரு விதியையும் உருவாக்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கவோ உரிமை இருக்கிறது. ஆனால், பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் விதியில் மட்டும் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது மாற்றப்படவோ,h திருத்தப்படவோ முடியாது.

இவ்வாறு அ.தி.மு.க. சட்ட விதிகள் கூறுகின்றன.

MATHI NEWS முக்கிய செய்திகள்@30/8/17

MATHI NEWS முக்கிய செய்திகள்@30/8/17

கோரக்பூர் மருத்துவமனையில் மூன்று நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழந்த சம்பவமானது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாளை மறுநாள் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகரக் காவல்துறையும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அசல் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு 3 மாதம் சிறை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அது எச்சரித்துள்ளது

குஜராத் கலவரத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முழு இழப்பீடு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

'ஆதார் - பான்' இணைக்க நாளை(ஆக.,31) கடைசி நாள்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்பி.மைத்ரேயன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன: ராஜேஷ் லக்கானி தகவல்

பல்வேறு தங்குமிட சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. விகிதம் குறித்து மத்திய அரசின் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் நேற்று விளக்கம் அளித்தது. அதன்படி, மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேருபவர்கள் அறை வாடகைக்கு செலுத்தும் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டோக்லாம் பகுதியில் சாலை பணியை கைவிடும் எண்ணம் சீனாவுக்கு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை: ரயில், சாலைப் போக்குவரத்து முடங்கியது; முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழை: வானிலை மையம்

கோவை, நீலகரியில் இன்று கனமழை வாய்ப்பு: வானிலை மையம்

கோவை குற்றாலத்தில் குளிக்க 2ம் நாளாக இன்றும் தடை

கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்: மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரேஷன் கடைகளில் மாற்றுப் பணி: விண்ணப்பம் பெறுவது தொடக்கம்

சாமியார் ராம் ரஹீம் சிங் பல பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கணவனின் கட்டாய உறவை கற்பழிப்பு குற்றம் ஆக்க கூடாது - டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

வரும் செப்டம்பர் 5ம் தேதி 'முரசொலி' பவள விழா சென்னையில் நடக்க உள்ளது. இதற்கான புதிய அழைப்பிதழில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த வைகோ, 'முரசொலி' பவள விழாவில் தானும் பங்கேற்கப் போவதாகக் கூறியிருந்தார்

நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பெங்களூர் பெண் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக.,வின் கோரிக்கை நியாயமானது : தங்கதமிழ்செல்வன்

காசோலை மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைந்துள்ளார். சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் என்பவர் மீது ரூ.400 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பாலக்கோடு அடுத்து பாப்பாரப்பட்டியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒசூரைச் சேர்ந்த சபரி, ஜெயக்குமார், முன்னா ஆகியோரை கைது செய்து 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை வால்பாறையில் உள்ள ஆறுகளில் குளிக்க வேண்டாம்: கிராம மக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை திருவல்லிக்கேணியில் தகராறு காரணமாக 3 பெட்ரோல் குண்டுகள் வீச்சு

4 நாட்களுக்கு பின் நாகை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

சென்னை முகப்பேறில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருவாரூர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.3.10 லட்சம் வழிப்பறி

கல்லக்குடி அருகே வாலிபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த செவிலியர் சிகிச்சை பலனின்றி சாவு

விருதுநகர் : 100 கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே

பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் ஜவாஹிருல்லா, திருமாவளவன் வலியுறுத்தல்

சாமியார்களில் நல்லவர்கள் உள்ளனர்: பாபா ராம்தேவ்

ஹிமாச்சல பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

உயிருக்குப் போராடும் பாகிஸ்தான் குழந்தைக்கு மருத்துவ விசா வழங்கப்படும்: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

இன்றைய(ஆக.,30) விலை: பெட்ரோல் ரூ.71.62; டீசல் ரூ.60.02

பிரிட்டன்: விமான நிலையத்தில் மர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்கா: ஹார்வே புயலால் வேதிப்பொருள் தொழிற்சாலை வெடிக்கும் அபாயம் - மக்கள் வெளியேற்றம்

ஈராக்குடனான எல்லையை திறக்கிறது ஜோர்டான்

உலக பேட்மிண்டனில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்று இருந்தேன். இந்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றி இருப்பது (வெள்ளி) மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

*மதிய செய்திகள்@30/8/17💥*

பஞ்சாப்-காஷ்மீரில் பாக். தீவிரவாதிகள் பதுங்கல்: உளவுத்துறை எச்சரிக்கை

முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு தற்போதைய சூழ்நிலையில் சட்டப்படி தலையிட முடியாது எதிர்கட்சிகளிடம் கவர்னர் கூறி உள்ளார்.

'தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது': ஆளுநர் கூறியதாக திருமாவளவன் தகவல்

பல்வேறு சமூக நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் விவகாரம் தொடர்பாக பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கர்நாடக அமைச்சர் சிவகுமார் விவகாரத்தின் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பெங்களூரில் உள்ள காங். தலைவர் விஜய் முல்குந்த் இல்லத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசை கலைக்க முகாந்திரமில்லை: ராஜ்நாத்

ராட்வே, தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.மேலும், அடையாறு பத்மாநகரில் உள்ள தனியார் பள்ளியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக விஜயநாராயணன் நியமனம்

சுற்றுச்சூழலுக்காகப் போராட்டப் பிரசாரம் செய்த சேலம் வளர்மதியை அடுத்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்ட வழக்கு சரியானதே என்று அறிவுரைக் கழகம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா விவகாரத்தில் சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட, 'குட்கா' போன்ற புகையிலை பொருட்களை, சட்டசபைக்கு எடுத்து வந்தது தொடர்பாக, ஸ்டாலின் உட்பட, 21 தி.முக., - எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, சட்டசபை உரிமைக் குழு முடிவு செய்துள்ளது.

ஜோத்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பெண்ணுக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டர்கள் இருவர் வாக்குவாதம் செய்து சண்டையிடுவதும், அவர்களை அருகில் இருந்த சக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சமாதானம் செய்வதும் நடந்துள்ளது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தானாக பதவி விலக வேண்டும்: தினகரன்

தினகரன் பொதுக்குழுவை கூட்டுவார்: திவாகரன்

நாஞ்சில் சம்பத் மீது இதுவரை 8 வழக்குகள்

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தர்ணா

திருவள்ளூரில் நடைபெற இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேதி மாற்றம்

ரஜினிகாந்த் தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமையும்: அர்ஜூன் சம்பத்

முதல்வர் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க மாணவர்களை சிறைபிடிப்பதா?: அன்புமணி கண்டனம்

'நீட்' மாணவர் சேர்க்கையிலும் முறைகேடு; வெளி மாநிலத்தவரின் வேட்டைக்காடானது தமிழ்நாடு: வேல்முருகன் குற்றச்சாட்டு

ஒற்றுமையுடன் செயல்படாவிட்டால் ‘இரட்டை இலை’ சின்னம் கிடைக்காது: சேடப்பட்டி முத்தையா

தமிழக மக்களின் நலன்களை காக்கவே டெல்லியில் முகாம்: தம்பிதுரை

திறந்த வெளி சிறைகள்: உள்துறை செயலருக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மருத்துவ கழிவு விவகாரம்: கோவை கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு

குஜராத்தை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல் - 24 மணி நேரத்தில் 5 பேர் பலி

கடனை திருப்பி செலுத்தாத 40 நிறுவனங்கள் பட்டியல்: ரிசர்வ் வங்கி வெளியீடு

சுனந்தா வழக்கை 2 வாரத்தில் முடிக்க போலீசுக்கு டில்லி கோர்ட் கெடு

சுனந்தா மரண வழக்கு விசாரணையில் தாமதமில்லை: டில்லி போலீஸ்

சொகுசு கார்களுக்கான செஸ் வரியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.14½ கோடி கமி‌ஷன் சித்தராமையா, மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது ஊழல் தடுப்பு படையில் புகார்

கர்நாடக மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி

டோக்லாம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த வெளியுறவுத்துறைக்கு காங்கிரஸ் எம்.பி. வாழ்த்து

நடிகர் திலீப்குமாருக்கு ஆதரவாக நடிகை பெயரை பேஸ்புக்கில் வெளியிட்டதற்காக  நடிகர் அஜூ வர்கீஸ் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அஜூவின் மொபைல் போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.பாதிக்கபட்ட நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக  நடிகர் அஜூ வர்கீஸ் கைது செய்யபட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கபட்டார்.

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா மீது வழக்கு. பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் வழக்குகள் தாக்கல். மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதற்காக ஜகத் மீது சில மனித உரிமைக் குழுக்கள் இவ்வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன

அமெரிக்கா: ஹார்வே புயலினால் இந்திய மாணவன் உட்பட 20 பேர் பலி

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

27 வருடங்கள் போராடி தனிநபராக குளம் வெட்டிய ஹீரோ!



27 வருடங்கள் போராடி தனிநபராக குளம் வெட்டிய ஹீரோ!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா மாவட்டத்தில் உள்ள சாஜா பகத் என்னும் கிராமத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது.

ஆனால் இந்த பிரச்சனையை தீர்க்க அரசங்கமோ, கிராம மக்களோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் கிராம மக்களும், கால்நடைகளும் குடிக்க நீர் இல்லாமல் தவிப்பதை பார்க்க முடியாத 15 வயது நிரம்பிய ஷ்யாம் லால் என்னும் இளைஞர் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவர முடிவு செய்தார்.

இதற்காக

ஒரு இடத்தை தேர்வு செய்து அதில் குளம் வெட்ட முடிவு செய்தார்.

ஷ்யாம் குளம் வெட்டுவதற்காக ஒரு மண்வெட்டி மட்டுமே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஷ்யாம் குளம் வெட்டத் தொடங்கியபோது கிராம மக்கள் அனைவரும் அவரை கேலி செய்தனர்.

ஆனால்

கேலிகளையும் கிண்டல்களையும் பொருட்படுத்தாத ஷ்யாம் விடா முயற்சியோடு 27 ஆண்டுகள் போராடி 15 அடி ஆளம் கொண்ட குளத்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

"இந்த குளத்தை வெட்டுவதற்கு யாரும் எனக்கு உதவ முன்வரவில்ல்லை ஆனாலும் இதை கிராம மக்களின் நலனுக்காகவும் கால்நடைகளின் நலனுக்காவும் தான் செய்தேன்”

என- ஷ்யாம்
மகிழ்வுடன் கூறுகிறார்.

இது குறித்து மகேந்திரஹரா தொகுதியின் எம்.எல்.ஏ. கூறும்போது,

தனிநபராக குளம் வெட்டி கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட ஷயாம் லால்க்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினார்.

மேலும் ஷ்யாம் வெட்டிய குளத்தை பார்வையிட்ட கிராம மக்கள் ஷ்யாமை ஒரு ஹீரோ என்றும் மக்களின் பிரச்சனையை தீர்க்க வந்த மீட்பர் என்றும் புகழ்கின்றனர்.


திங்கள், 28 ஆகஸ்ட், 2017

MATHI NEWS முக்கிய செய்திகள்@29/8/17



MATHI NEWS  முக்கிய செய்திகள்@29/8/17

சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

நாக்பூர்-மும்பை இடையே செல்லும் துரந்தோ விரைவு ரயில் திதிவாலாவிற்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பயணிகள் உரிய இடத்திற்கு செல்ல பேருந்து வசதி அமைக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுடில்லி, தீபாவளி பண்டிகைக்காக டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் 50 லட்சம் கிலோ வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலால் ஆச்சரியம் அடைந்த நீதிபதிகள் 'இந்திய ராணுவத்திடம் இருப்பதை விட அதிகளவில், வெடிபொருட்கள் டில்லியில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது' என்றனர். சீன பட்டாசுகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடக்கம்: பி.எஸ்.எல்.வி. சி–39 ராக்கெட் 31–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டு கடுங்காவல் ஜெயில் பஞ்சாப்-அரியானாவில் கடும் உஷார் நிலை

முதல்வர், துணை முதல்வர் இன்று டில்லி பயணம்

பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பதவியிலிருந்து நீக்க திட்டம்? - சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து தினகரன் ஆலோசனை

தொடர் மழை: வால்பாறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரயில் மோதியதில் மாம்பலம் அருகே 3 பேர் பலி

தமிழக அரசிற்கு வெட்கம்,மானம், ரோஷம் இருந்தால் குட்கா விவகாரத்தில் எங்களால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று ராஜினாமா செய்திருக்க வேண்டுமென்று என்று அதிமுக-வை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க செப்டம்பர் 2-ம் தேதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை செல்கிறார்.

ஆக., 31ல் ஜனாதிபதியை சந்திக்க திமுக நேரம் கேட்பு

நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்:ஸ்டாலின்

நியமனத்தில் எழுந்த சர்ச்சையால் கோவை ஸ்மார்ட் சிட்டி சிஇஓ ராஜினாமா

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையராக ஜெயா நியமனம்

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை உடனே ரத்து செய்ய வேண்டும் - காங்கிரசார் மனு.

நாகை: கடல்சீற்றம் காரணமாக 3வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

நாளை ஜனாதிபதியை சந்திக்க திட்டம்: தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார்: தங்கதமிழ் செல்வன்

அக்டோபரில் அமித் ஷா தமிழகம் வருகை

மாணவி வளர்மதி மீதான வழக்கு-செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கணவர் முருகனை காப்பாற்ற வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்

பா.ஜனதா தலைவர்களை தாக்கி அவதூறு பேச்சு: நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை ஓட்டேரி காசநோய் அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

நெல்லையில், ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த மாணவி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள். ஆசிரியை மீது புகார் கூறி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை செய்யாறு அருகே தலித் காலனிக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் புளியரம்பாக்கம் கிராமம் தலித் காலனியில் 30 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.

சென்னை தனியார் கல்லூரி மாணவர் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்றார்

வட கொரியாவின் புதிய அடையாளம் தெரியாத ஏவுகணை ஜப்பானை கடந்து பறந்து கடலில் விழுந்துள்ளது என்று செய்தி வெளிவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல்: 15 பேர் பலி

அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஹார்வே புயல்: 200 இந்திய மாணவர்கள் கழுத்து அளவு நீரில் சிக்கி தவிப்பு

நைஜீரியாவிற்கு விமானங்கள் விற்கிறது அமெரிக்கா

இலங்கை கிரிக்கெட் அணியில் பிரச்சினை எதுவும் இல்லை; கபுகேதரா

இன்றைய(ஆக.,29) விலை: பெட்ரோல் ரூ.71.62; டீசல் ரூ.60.02

மதிய செய்திகள்@29/8/17

பலாத்கார சாமியார் குர்மீத் வழக்கு; கொடிய மிருகத்திற்கு எல்லாம் கருணை கிடையாது சிபிஐ கோர்ட்டு

ஓணம் பண்டிகை: கோவைக்கு செப்.4 ம் தேதி உள்ளூர் விடுமுறை

நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு

அதிமுகவினருக்கு நேரம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

மருத்துவ கலந்தாய்வில் முறைகேடு: மேலும் 2 மாணவர்களுக்கு சம்மன்

இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை எதிரொலி: சிர்சாவில் ஊரடங்கு உத்தரவு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா இன்று தொடங்குகிறது

பெங்களூருவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 9 வயது பெண் குழந்தையை, அவர் வசிக்கும் குடியிருப்பின் 3வது மாடியிலிருந்து இரண்டு முறை வீசி கொன்றார். இதனையறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில், அவரது குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு மிக சிரமப்பட்டு வந்தது. இதனால் மனம் வெறுத்து குழந்தையை கொன்றதாக அவரது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டை இலை சர்ச்சை தொடர்பாக அளித்த புகாரை ஓபிஎஸ் அணி வாபஸ் பெறுவதாக அறிவிப்புஇரு அணிகளும் இணைந்ததை அடுத்து புகாரை திரும்பப்பெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்கினால் நீதிமன்றம் செல்வோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க.தமிழ்செல்வன் கூறினார்.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை விவகாரத்தில் தங்களது கருத்தை கேட்காமல், எந்த முடிவும் எடுக்கக்கூடாது என தேரதல் கமிஷனில் தினகரன் தரப்பினர் இன்று மனு அளித்தனர்

கர்நாடக அணைகளில் தொடர்ந்து அதிக நீர் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு. இதையடுத்து அந்த ஆற்றின் கரையோரங்களில் வாழும் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி பாதகோட்டாவில் உள்ள தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு

அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தான்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

டெங்கு காய்ச்சல் ; காரைக்குடி அருகே ஒருவர் பலி

சென்னை திருவொற்றியூரில் கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் பலி

தொடர்ந்து பந்தாடப்படும் நேர்மையான அதிகாரிகள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 மதுக்கடைகள் மூடல்: கவர்னர் கிரண்பேடி அதிரடி

வெடிகுண்டை சுமந்து சென்று 400 குழந்தைகளை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு

நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் ஜாமீன் மனு தள்ளுபடி

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானை தாண்டி சென்றதால் பதற்றம்; பாதுகாப்பிற்கு முழு நடவடிக்கை - அபே

செப். 9-ல் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை: தென்கொரிய உளவுத் துறை தகவல்

தங்கம் விலை உயர்வு-
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,831
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,648
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,710
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.43.00
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.43,000

உலக குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் கலந்த கொள்ள இருந்த ஷிவதபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார்.

2019 உலக கோப்பையில் டோனி விளையாட முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி: வைரலாகும் வீடியோ.

*மாலை செய்திகள்@29/8/17🌑*

சிறந்த சாலைகள் நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவுகின்றன உதய்பூரில் பிரதமர் மோடி பேச்சு

தமிழக அரசின் தலைமை வக்கீல் முத்துக்குமாரசாமி, திடீர் ராஜினாமா

சரியாக செயல்படாத பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம்: நிதி ஆயோக்

ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது-மீறினால் வாகனம் பறிமுதல்- போலீசார் எச்சரிக்கைடூவீலர் முதல் லாரி வரை எல்லா வாகன ஓட்டிகளுக்கும் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம்

அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 200 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர்

சிர்சாவில் பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் சிங்கின் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், தினகரன் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து பேசி ஒரு முடிவெடுக்கவில்லை என்றால் நான் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் என கோவை எம்.பி நாகராஜன் கூறினார்

போலி இருப்பிட சான்றிதழ்: 5 பேரிடம் போலீசார் விசாரணை

எடப்பாடியை மாற்றினால்தான் ஆட்சி நன்றாக இருக்கும்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன்

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக வரும் 31-ம் தேதி குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்: ஸ்டாலின்

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆசிரமத்தில் ஆயுதங்களை குவித்து பாதுகாப்பு படையினரை தாக்கிய சாமியார் ராம்பால் விடுவிப்பு

லாலு மகன் தேஜஸ்வியிடம் வருமான வரித்துறை விசாரணை

புனே: அளவுக்கதிகமான போதையில், தனது தாயை கொலை செய்து, அவரது இதயத்தை சட்னியில் தொட்டு சாப்பிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்

பத்மநாபசாமி கோவிலில் உள்ள, ' பி' ரகசிய அறை திறக்க ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என, திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரம்: மருத்துவக்கல்லூரி முதல்வர் மனைவியுடன் கைது

துணை முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

தங்க மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது; ஜனாதிபதி வழங்கினார்

தமிழக அரசியல் சாக்கடையாகிவிட்டது - அன்புமணி ராமதாஸ்

அ.தி.மு.க., தோழமை கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், மற்றும் தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினர்.

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் பெண் யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு

முறையான கோரிக்கை வைத்தால் ஸ்டாலினை நிச்சயம் மோடி சந்திப்பார்: இல.கணேசன்

எஸ்பிஐயில் 2,780 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்த திருப்பதி தேவஸ்தானம்

நீடா அம்பானிக்கு ராஷ்டிரிய புரஸ்கார் விருது

வரும் 2022க்குள் நக்சல் தீவிரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி-தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய டாக்டர்கள், நீண்ட நேர ஆபரேசனுக்குப் பிறகு ஒரு பகுதியை வெற்றிகரமாக பிரித்துள்ளனர்

டிரம்ப் கருத்தால் அமெரிக்கா உடனான உறவை தற்காலிகமாக துண்டிக்க பாகிஸ்தான் முடிவு

தங்கம் விலை-
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,849
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,792
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,910
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.43.30
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.43,300

வார வர்த்தகத்தின் 2வது நாளான இன்று பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 362.43 புள்ளிகள் குறைந்து 31,388.40. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 116.75 புள்ளிகள் சரிந்து 9,796.10.


*இரவு செய்திகள்@29/8/17💥*

மும்பையில் கன மழை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்பையில் கன மழை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம்மேற்கு கடற்கரை பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என எச்சரிக்கைபவானி, மோயார் ஆறுகளுக்கும் நீர் வரத்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

டோக்லாம் பிரச்சனை: இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் இந்தியாவிற்கு சீன ராணுவம் மறைமுக எச்சரிக்கை

ஆக.,31-ல் ஜனாதிபதியுடன் தி.மு.க.,வினர் சந்திப்பு

தமிழக எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திப்பதில் தவறில்லை - தம்பிதுரை

தைரியமான முடிவுகளை எடுத்து அதனை உறுதியுடன் செயல்படுத்தி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்

1,000 ரூபாய் நோட்டை மீண்டும் வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை: நிதி அமைச்சகம்

ஜி.எஸ்.டி.யில் இணைந்த 59 லட்சம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர்: ஜெட்லி

ஜி.எஸ்.டி வரி மூலம் ஜூலை மாதத்தில் மட்டும் 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது அருண் ஜெட்லி

இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் இதுவரை 5 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்று கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளர்.மேலும், விசாரணையில் மருத்துவ கலந்தாய்வில் சான்றிதழ்கள் போலி அல்ல எனத் தெரிய வந்துள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் தகவல்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:கட்சியில் உள்ள அனைவருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழில் பங்கு உள்ளது-நாங்கள் நிறைவேற்றிய 4 தீர்மானங்களை முன்னிறுத்தியே இனி அதிமுக தொடர்ந்து செல்லும்.

பாஜக தலைவர் தமிழிசையின் தூண்டுதலின்பேரில், நாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்டு அவரை பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்-இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் வழக்கறிஞர், சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

வன்முறை அரசியலில் விருப்பமில்லை : தமிழிசை

மோடி குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார்

சென்னை மதுரை கோவை இடையே நாளை முதல் சிறிய ரக விமானம் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

அதிமுக சிறுபான்மை நல பிரிவு செயலர் அன்வர்ராஜா நீ்க்கம்: தினகரன்

கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான் நடிகர் செந்தில்

காஞ்சிபுரத்தில் தலித் மக்கள் மீது கொடூரத் தாக்குதல்: ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நளினி கடிதம்-முருகன் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் நளினி கடிதம-்முருகன் உண்ணாவிரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செப்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் : ஜாக்டோஜியோ

தலித் குடும்பங்களுக்கு எடியூரப்பா விருந்து அளிப்பது அரசியல் நாடகம்: முதல்வர் சித்தராமையா விமர்சனம்

தலைநகர் டெல்லியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

இந்தியாவிற்கு எதிராக படுதோல்வி: இலங்கை தேர்வுக்கு குழு கூண்டோடு பதவி விலகல்

விருது பெற்ற மாரியப்பனுக்கு டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து

பான் கார்டு’ இல்லாமல் இனி,ஒரு கிராம் தங்கம்கூட வாங்க முடியாது பிரதமர் மோடியின் அடுத்த ‘கிடுக்கிப்பிடி’ திட்டம்!


பான் கார்டு’ இல்லாமல் இனி,ஒரு கிராம் தங்கம்கூட வாங்க முடியாது பிரதமர் மோடியின் அடுத்த ‘கிடுக்கிப்பிடி’ திட்டம்!


*பான் கார்டு இல்லாமல் ஒரு கிராம் தங்க நகைகள் முதல் கிலோ கணக்கில் தங்க நகைகள் கூட வாங்க முடியாது என்ற கடுமையான நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.*

நிதி ஒழுங்குமுறை குழு அளித்த பரிந்துரையில், தங்க நகைகள் தொடர்பான அனைத்து பரிமாற்றத்துக்கும் பான் கார்டு எண் அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க நகைகள் வாங்கினால்தான் பான் எண் வழங்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அதை மாற்றி, தங்க நகைகள் வாங்கினாலே பான்கார்டு அளிக்க வேண்டும் என்று கடுமையான விதிகள் அமலாக உள்ளன.

மத்திய அரசின் நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணை குழு உருவாக்கப்பட்டு, அந்த குழு நாட்டில் உள்ள வீடுகளின் நிதிச்சூழல் குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த குழுவில் லண்டன், இம்பீரியல் கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் தருண்ராமதுரை, ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு வாரியமான ‘செபி’, இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றம் மேம்பாட்டு ஆணையமான ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.’, ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையமன ‘பி.எப்.ஆர்.டி.ஏ.’ ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகள் இடம் பெற்று இருந்தனர்.

குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை⛓ தண்டனை விதிப்பு..



குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை⛓ தண்டனை விதிப்பு..

பாலியல் பலாத்கார: வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு   10ஆண்டுகள் சிறை⛓ தண்டனை வழங்கப்படுவதாக சிபிஐ நீதிபதி⚖ அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அறிவித்தபடி பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் குக்கான தண்டனை விவரம் இன்று வெளியிடப்பட்டது. இதற்காக பஞ்ச்குலா சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக் சிறைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் தண்டனை விவரத்தை அவர் அறிவித்தார்.

முன்னதாக நீதிபதிக்கு முன்பு நடந்த இருதரப்பு வாதத்தில், குர்மீத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் குர்மீத் தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சமூக சேவையில் ஈடுபடுபவர் என்பதையும்:flusged: அவரின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அவருக்கு மிகக் குறைந்தபட்ச தண்டனையே வழங்க வேண்டும் என்று கோரிக்கை   விடுத்தார்.

இதற்கிடையே குர்மீத் ராம் ரஹீம் சிங் மன்னிப்பு கோரி, நீதிபதியின் முன்னால் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது.




ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

ஆதார் தகவல்கள் அமெரிக்கா கையில்?



ஆதார் தகவல்கள் அமெரிக்கா கையில்?

அந்தரங்கம்
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுபற்றி ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்பட்ட நிலையில்...

உலக ரகசியங்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தில், ‘இந்தியாவின் ஆதார் தகவல்கள் ஏற்கெனவே அமெரிக்காவால் திருடப்பட்டுவிட்டன’ என்று ஆகஸ்டு 25ஆம் தேதி வெளியான தகவல் இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது.

இதுபற்றி தகவல் வெளியிட்டிருக்கும் விக்கிலீக்ஸ், சுமார் நூறு கோடி மக்களின் கைரேகை, கண்ரேகை உள்ளிட்ட பயோ மெட்ரிக் அடையாளங்கள் பதியப்பட்டிருக்கும் இந்தியாவின் ஆதார் விவரங்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. ஏற்கெனவே கையகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

Cross Match என்ற அமெரிக்க நிறுவனம், பயோ மெட்ரிக் சாஃப்ட்வேரில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம். இந்த நிறுவனம்தான் இந்தியாவில் ஆதார் அட்டைக்குத் தேவையான பயோ மெட்ரிக் அடையாளங்களைப் பதிவுசெய்யும் கருவிகளை வழங்கியது. இந்த நிறுவனத்தின் இந்திய பார்ட்னரான, ‘ஸ்மார்ட் ஐடெண்டிட்டி டிவைஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம்தான் கிராஸ் மேட்ச் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் ஆதார் தகவல்களைப் பதிவு செய்யும் பணிகளைச் செய்திருக்கிறது.

இதே கிராஸ் மேட்ச் அமெரிக்க நிறுவனம்தான் அமெரிக்க புலனாய்வு முகமையான சி.ஐ.ஏ-வுக்கும் கணினி தொடர்பான திட்டமிடல்களை வகுத்து தருகிறது. எனவே, இந்த நிறுவனத்தின் உதவியுடன் எக்ஸ்பிரஸ் லேன் என்ற சாஃப்ட்வேர் மூலம் சி.ஐ.ஏ. ஆதார் தகவல்களை ஒட்டுமொத்தமாக தனது கைக்குள் கொண்டு சென்றுவிட்டதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.

இதுபற்றி இதுவரை கிராஸ் மேட்ச் நிறுவனம் பதில் தரவில்லை.

ஆதார் என்பது இந்தியா போன்ற பலகோடி மக்கள் கொண்ட நாட்டுக்குச் சரிவராது என்றும் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் அடகு வைப்பது என்றும் விமர்சனங்கள் பல ஆண்டுகளாகவே எழுந்து வந்த நிலையில்... விக்கிலீக்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

சி.ஐ.ஏ-வில் பணியாற்றிய கணினிப் பொறியாளர் ஸ்னோடென், 2013ஆம் ஆண்டு, சொந்த நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களையும், மின்னஞ்சல் உள்ளிட்ட இதர தகவல் பரிமாற்றங்களையும் உளவு பார்க்கச் சொன்னதாக அமெரிக்க அரசுமீது புகார் சொல்லிவிட்டு, பணியில் இருந்து வெளியேறினார். நாட்டைக் காட்டிக்கொடுத்ததாக அவர்மீது மிகத் தீவிரமான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறது அமெரிக்கா.

இப்போது ரஷ்யாவில் இருப்பதாக சொல்லப்படும் ஸ்னோடென் அளித்த பேட்டியில், உலகில் 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்த விவரத்தை வெளியிட்டுள்ளார். இதில் இந்தியத் தூதரகமும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். .

அமெரிக்காவால் அதிகம் கண்காணிக்கப்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்கிறது ஓர் ஆய்வு.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான ஜீண்ட்ரீஸ் என்பவர், ‘ஆதார் அடையாள எண் திட்டம் மக்களை வேவு பார்ப்பதற்கு சிறந்த கருவியாகப் பயன்படும்’ என்கிறார்.

ஆதார் என்பது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு செயல் என்று எதிர்க்குரல்கள் எழுந்தாலும்... எங்கும் ஆதார், எதற்கும் ஆதார் என்று விடாப்பிடியாக இருக்கிறது அரசு. இந்த நிலையில்தான், விக்கிலீக்ஸ் செய்தி இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய அரசுத் தரப்பில் விக்கிலீக்ஸ் செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

’அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் அறிவான்’ என்று நம்மூரில் சொல்வார்கள். இனி, நம் அந்தரங்கம் எல்லாம் அமெரிக்கா அறியுமோ என்ற அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

MATHI NEWS முக்கிய செய்திகள்@28/7/17



MATHI NEWS முக்கிய செய்திகள்@28/7/17

புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் உழையுங்கள்: அதிகாரிகளுடனான ஆலோசனையில் மோடி பேச்சு

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குர்மீத் ராம் ரகீம்சிங் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு துணை ராணுவ படையினர் குவிப்பு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து பிரதமர் மோடி ஜனாதிபதி வாழ்த்து:இந்திய பாட்மிண்டன் சங்கம் சிந்துவிற்கு 10 லட்சம் பரிசு

டிடிவி தினகரனும் எம்.எல்.ஏ போஸும் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது போஸ் தன் ஆதரவை தினகரனுக்கு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் என் ஆதரவு முதல்வருக்குதான் என்று ஏ.கே.போஸ் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சி தானாக கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல: ஸ்டாலின்

ஆதரவு குறித்து ஓரிரு நாளில் தெரிவிப்போம்: எம்.எல்.ஏ.கருணாஸ்

ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தோன்றுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்

பா.ஜ.க.வில் கடைசி தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன்: நயினார் நாகேந்திரன்

அரசை கலைத்து விட்டு ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் :  அதிமுக இணைப்பில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை: தமிழிசை

பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவுக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தினார் லாலுபிரசாத் யாதவ். அதன் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த போட்டோவுக்கு பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட போட்டோவுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.

லக்னோவில் பிணவறையில் இறந்த பெண்ணின் உடலை தெருநாய்கள் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் எடியூரப்பா கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது:கர்நாடக முதல்வர் சீதராமையா

மோடியின் 'மன் கி பாத்' வெறும் பேச்சு மட்டுமே: காங்கிரஸ் விமர்சனம்

மும்பையில் சட்டவிரோதமாக 36 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் தம்பதி கைது

ஸ்பெயின் தீவிரவாதத் தாக்குதல் பலி 16 ஆக உயர்வு

தான்சானியாவில் 3,20,000 அகதிகளுக்கு உணவளிக்க ஐ.நா. அழைப்பு

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.


இன்றைய 1 வரிச்செய்திகள்!

28/08/17 திங்கள்கிழமை!

இலங்கையுடனான
3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, தோனி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா போட்டியை வென்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

*மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடிய துணிச்சலான போலீஸ்காரருக்கு முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.*

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நிதி ஆயோக் ஆதரவு தெரிவித்து உள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டு பழங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை அதிகரிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய அமைச்சர் தலைமையிலான குழு, கோயம்பேடு பழச்சந்தையை நேற்று பார்வையிட்டு, பழ வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் மனோஜ்குமார், கவிந்தர் பிஸ்ட் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் - லக்னோ எக்ஸ்பிரஸ் நாளை இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா துபாய் சென்றுள்ளார். அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. டீசலின் விலையும் லிட்டருக்கு ரூ.3.67 அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கைகளை, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.

*உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (64) இன்று பதவியேற்று கொண்டார்.*

தொடர்ந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை, வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.

தமிழகத்தில், 2015க்கு பின் அனுமதி பெற்று, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் பதிவு செய்யாத, 300க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கி உள்ளது.

மத்திய அரசின் சிறு, குறு நிறுவனங்கள் துறையின் புதிய திட்டத்தை பயன்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில், திருப்பூர் பின்னலாடை துறையினர் இறங்கி உள்ளனர்.

தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகள் விநியாகம் செய்யப்பட இருக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இணையதளம் மூலம் ஊடுருவி ஆதார் தகவல்களைத் திருட முடியாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த, ஆதித்யா ஜாவர், 21, மிகவும் இளம் வயதில், சி.ஏ., உட்பட பல தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

💎 பெட்ரோல் ஒரு
லிட்டர் விலை - ரூ.71.60

💎 டீசல் ஒரு
லிட்டர் விலை - ரூ.60.03

💎 தங்கம் 1
கிராம் - ரூ.2,774.00

💎 வெள்ளி 1
கிராம் - ரூ.42.05

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ?


புகழ் இழந்தால் என்ன நடக்கும் ?

தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை

நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்

நாட்கள் நகர்ந்தன ...

பதவி போனது ..

புகழ் போனது ..

சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது

ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"

மனமுடைந்த அர்னால்ட்,
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்

இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்

"நாம் பதிவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்"

"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"

"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"

"உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை,
உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்"

"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

சனி, 26 ஆகஸ்ட், 2017

மதி செய்திகள்27/8/17

மதி செய்திகள்27/8/17

காஷ்மீர் போலீஸ் தலைமை அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

குர்மீத் சிங்கின் ஆசிரமங்களில் அதிரடி சோதனை அரியானா கலவர சாவு 36 ஆக உயர்வு

தமிழக அரசின் இணை செயலாளராக இருந்த ஆஷிஷ் குமார், மத்திய அரசு பணிக்கு மாற்றம் கவர்னர் உத்தரவு

பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது. அவர் இந்தியா முழுமைக்குமான பிரதமர்-ஹரியானா ஹைகோர்ட்
கட்டார் அரசையும் வதக்கி தள்ளியது நீதிமன்றம்
நீங்கள் உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நகரத்தை எரிந்து போக அனுமதித்தீர்கள்- உயர்நீதிமன்றம்

ஆதார் விபரங்கள் தொகுக்கும் பணியும், திருத்தங்கள் செய்யும் பணியும் மீண்டும், அஞ்சல் துறை வசமாகிறது. தமிழக அஞ்சலங்களில், இதற்கான பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம் குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.

வெள்ளப் பெருக்கால் ஏற்படும் சேதங்களை தடுக்க நதிகளை இணைக்க வேண்டும்: உமாபாரதி

அரியானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

பீகார் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 440 ஆக உயர்வு

ரூ.1,000 கோடி ஸ்ரீஜன் ஊழல் விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

தெலுங்கானாவில் கனமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர்

ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்கள் உடைய மனைகளை வரன்முறை செய்ய, 'ஆன் - லைன்' திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாததால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மனை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

நளினி ‘பரோல்’ கேட்டு அளித்த மனு பரிசீலனையில் உள்ளது ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் இன்று சந்திப்பு
துணை ஜனாதிபதியுடன் ஓ.பி.எஸ் இன்று சந்திப்பு

குட்கா விவகாரத்தை காரணமாகக் காட்டி திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் ரவுடி வினோத் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச் சாலையில் ரவுடி வினோத்தை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தனர்

கடலூர் அருகே விபத்து: பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு

நெல்லை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 37 பவுன் நகை கொள்ளை

பெரம்பலூர்: தொழுதூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி

மாற்றுத் திறனாளி, விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

காவலர் தேர்வில் தோல்வியடைந்த திருநங்கைக்கு சலுகை வழங்க முடியாது என்றும் அவர் ஊக்கத்தை இழக்காமல் பிற தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குர்மீத்துக்கு தண்டனை விவரம் அறிவிக்க நீதிபதி ரோடக் செல்ல உத்தரவு

தேரா சச்சா தலைவரை ஆதரித்த சாக்‌ஷி மகராஜ் எம்.பி.க்கு கேரள முதல் மந்திரி கண்டனம்

மும்பை:நீல திமிங்கல விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற 10-ம் வகுப்பு மாணவன் மீட்பு

ரூ.15½ லட்சத்துடன் 2 ஏ.டி.எம். எந்திரங்களை தூக்கி சென்ற கொள்ளையர்கள்: புனேயில் துணிகர சம்பவம்

குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளை கடலுக்குள் ஏவி சோதனை நடத்தியுள்ளது வட கொரியா

அமெரிக்க உதவிகளுக்கு பாக். விடை கொடுக்கலாம் - ஷாபாஸ் ஷரீஃப்

ஆக-27: பெட்ரோல் விலை ரூ. 71.56, டீசல் விலை ரூ.60.04

உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதியில் சாய்னா போராடி தோல்வி

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 4-வது தோல்வி

தேசிய ஸ்குவாஷ் போட்டி: ஜோஸ்னா, சவுரவ் கோஷல் ‘சாம்பியன்’:74-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நொய்டாவில் நடந்தது.

*மதிய செய்திகள்@27/8/17💥*

இறை நம்பிக்கையின் பெயரால் சட்டம், ஒழுங்கை, எவரும் தன் கையில் எடுப்பதை ஏற்க இயலாது, குற்றவாளிகள் தப்பிக்க முடியாது : மோடி

வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு

ஹரியானா மாநிலத்தில், பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு எடுபிடி வேலை பார்த்த மாநில துணை அட்வகேட் ஜெனரல், அப்பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ராம் ரஹீம் சிங் ஆசிரமங்களில் அதிரடி சோதனைஆயுத கிடங்குகளாக மாற்றப்பட்ட ஆசிரமங்கள்துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல்

பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை எதிர்ப்பதா?: சரத் யாதவுக்கு மிரட்டல் கடிதம்

முறைகேடுகளை அம்பலப்படுத்திய பேராசிரியருக்கு மீண்டும் பணி அளித்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்

புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நாளை பதவியேற்பு

சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

சேலம் புறநகர் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டதைக் கண்டித்து எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தலைமையிலான தி.மு.க.வினர் ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சந்தித்தனர்.

மைனாரிட்டி எடப்பாடி அரசை ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது - ஆளுநரை சந்தித்தப்பின் துரைமுருகன் பேட்டி

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உத்தரவாதம் அளித்துள்ளார்: துரைமுருகன்

முடிந்தால் என்னை பதவியில் இருந்து நீக்கட்டும்: தினகரனுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சவால்

தினகரன் அணிக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள்: கதிர்காமு, ஏழுமலை தகவல்

தினகரனுக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறேன்: ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மகன் கருத்தால் பரபரப்பு

தினகரனை ஜெ., ஆன்மா மன்னிக்காது : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குட்கா விவகாரத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி கையில் எடுத்துள்ளார் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூரில் விசாரணை கைதி உயிரிழப்பு

அதிமுகவின் குடுமிபிடி எங்களிடம் இல்லை: பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை பாரிமுனையில் டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்

 அரசியல், சட்ட கடமையை ஆளுநர் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன்

அதிமுக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை: காதர் மைதீன்

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், கோவில் இல்லை; அது ஒரு கல்லறை தான் என, ஆக்ரா நீதின்றத்தில், ஏ.எஸ்.ஐ., எனப்படும், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் நகரில், விநாயகருடன் மாவட்ட பெண் கலெக்டருக்கும் இளைஞர்கள் சிலை வைத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

டோக்லாம் போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் அதிகரிக்க கூடும்: பிபின் ராவத்

விஷால் தங்கை திருமணம் : ஸ்டாலின் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

புரோ கபடி லீக்: பெங்கால்- பெங்களூர் இன்று மோதல்

அமெரிக்காவை சேர்ந்த தொழில்முறை குத்து சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

*மாலை செய்திகள்@27/8/17💥*

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் முறையாக வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்தார்.அவரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்ம்,ஈபிஎஸ்ம் வரவேற்றனர்.பின்னர் அண்ணா பல்கலை.யில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அவர் திறந்து வைத்தார்

அரசியலில் கமிஷன் இருக்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு பேச்சு

ராணுவ தலைமையகம் செப்டம்பர் 29, 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் எவ்வித சர்ஜிகல் தாக்குதலையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

திமுகவை ஆதரித்தால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி போகாதுடெல்லியில் சு.சுவாமி பரபரப்பு பேட்டிசு.:சுவாமி கூறியிருப்பது அவரின் சொந்த கருத்து என்று கூறியுள்ளார் தினகரன்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரபா டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதன்மூலம் டிடிவிக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.இதற்கு முன்பாக தேனியில் தினகரனை நேரில் சந்தித்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

தொடர் மழை- சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்வுசெம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளின் நீர் மட்டம் கிடு கிடு என உயர்வு

சாமியாரை தப்பிக்க வைக்க முயன்ற Z காவலர்கள் கைது.

பிளாஸ்டிக் நாணயங்கள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட சாமியார்சிர்சா நகரில் சுற்றியுள்ள கடைகளில் சில்லறை தட்டுப்பாட்டை போக்க பிளாஸ்டிக் நாணயங்கள் புழக்கம்ரூ.5, ரூ.10 நாணயங்கள் அச்சடித்த சம்பவம் வெளியாகியுள்ளது

போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் 400 மாணவர்கள் இருந்தபோது, மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்திருப்பது தெரிய வர, அந்த வெடிகுண்டை மீட்ட போலீஸ்காரர் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் தொலைவு அதனை சுமந்து சென்று பாதுகாப்பான பகுதியில் வைத்தார்.தலைமைக் காவலர் அபிஷேக் பட்டேல் என்பவர்தான் இந்த அசாத்தியச் செயலைச் செய்தது.

பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி: ஒரே மேடையில் லல்லு, மம்தா, அகிலேஷ், சரத் யாதவ்

மத்திய அரசின் பல நடவடிக்கை மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கில் ரூ.65,844.68 கோடி உள்ளதாக நிதியமைச்சர் ஜெட்லி கூறியுள்ளார்.

தேசிய மருந்து படிப்பு நிறுவனம் மதுரையில் தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் அனந்தகுமார்

122 எம்.எல்.ஏ.க்களும் எங்களின் ஆதரவாளர்கள்தான்:  எங்களுடைய போராட்டமும் விவசாயிகளுடைய போராட்டமும் ஒன்றுதான்:டிடிவி தினகரன்:தியாகத்துக்கும் துரோகத்துக்குமான யுத்தம் நடைபெறுகிறது:அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்:ஜெ. காலத்தில் கட்சி ராணுவ கட்டுப்பாடுடன் இருந்ததற்கு நாங்கள்தான் காரணம்

எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி கூறியதாவது:பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைப்பு தொண்டர்களுக்காக அல்ல, பதவிக்காக நடந்து இருக்கிறதுபொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது.டிடிவி தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மேலும் உயரும்.

பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது செந்தில் பாலாஜி

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆறாவது நாளாக புதுச்சேரியில் முகாம்: மீண்டும் ரிசார்ட்டுக்கு மாறினர்

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது; கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்: டிடிவி தினகரன்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் எங்கே..? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்அதிமுகவின் அரசியல் இப்போது கேலிக்கூத்தாகியுள்ளது என்று டுவீட் செய்துள்ளார்.

சென்னை காசிமேடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேருக்கு வெட்டு

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

கட்சி பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கியது நகைச்சுவை: இல.கணேசன்

விநாயகர் சிலை கரைக்க அனுமதி மறுப்பு: நாமக்கல்லில் பொது மக்கள் மறியல்

உடுமலை: மடத்துகுளத்தில் பஸ் மீது கல்வீச்சு: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

மலேசியாவில் நடந்த உலக தமிழ் இணைய மாநாடு நிறைவு பெற்றது

லண்டன் பக்கிங்காமில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழர்கள் பலி.இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைகிறார்

மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடு: இலங்கை பிரதமரின் திட்டம் திடீர் ரத்து

அமெரிக்காவை தாக்கி வரும் ஹார்வே சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 2 பேர் இதற்கு பலியாகியுள்ளனர்.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

MATHI NEWS முக்கிய செய்திகள்@26/8/17


 MATHI NEWS முக்கிய செய்திகள்@26/8/17

டேரா சச்சா தலைவர் வழக்கின் தீர்ப்பிற்குப் பின் கலவரம்: 12 பேர் பலி, வாகனங்களுக்கு தீ வைப்பு

அரியானா-பஞ்சாப் கலவரம்: பொதுசொத்துகளை சேதப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

அரியானா பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

அரியானா கலவரம் எதிரொலி : டெல்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு - மாநில காவல்துறை

பஞ்சாப் கலவரம்: மாநில முதல்வரிடம் சோனியா ஆலோசனை

வன்முறையால் ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டை சாமியார் குருமீத்சிங் சொத்துக்களை விற்று வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சாமியார் வழக்கில் 4 கோடி பக்தர்களை நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை:பாஜ எம்பி சக்ஷி மகராஜ்

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நரோதா கம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 4 மாதத்திற்குள் தீர்ப்பை அறிவிக்கவேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று நார்வே சென்றார்

‘முத்தலாக்’ வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு மிரட்டல் பாதுகாப்பு அளிக்கக்கோரி மம்தா பானர்ஜிக்கு கடிதம்

தினகரனுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைசெல்வன் ஆதரவு:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கமுதி அருகே கண்மாயில் கிடக்கும் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டில் பருவ கால பயிர் தகவல்கள்

மனநலம் பாதித்தவர் போல தினகரன் செயல்: அமைச்சர் சீனிவாசன்

கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வும் உடையும் என்று சீமான் கூறியுள்ளார்.ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டால் தமிழகம் சோமாலியா போல் உடையும் என சீமான் பேச்சுமக்கள் பிரச்சனை பற்றி அ.தி.மு.க.விற்கு அக்கறை இல்லை என சீமான் கொந்தளிப்பு

முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெருகுவதை தடுக்க அராஜகம் :நாஞ்சில் சம்பத்

சென்னையில் புதியபடங்களின் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல்: 2 பேர் கைது

கின்னஸ் சாதனை படைக்க ஒரு லட்சம் விநாயகர் உருவ பொருட்களை சேகரிக்க முயற்சி: தீவிர லட்சியத்தில் உதகை நிஷாலி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேபாள பிரதமர் இன்று வருகை

துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றபின் முதல் முறையாக வெங்கையா நாயுடு நாளை சென்னை வருகை

பீகாரில் துப்பாக்கி முனையில் எஸ்.பி.ஐ. கிளையில் ரூ. 5 லட்சம் கொள்ளை

இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துகோரள பதவியேற்றுக் கொண்டார்இலங்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு நீதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இல்லத்தில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர்: குஜராத் சாம்பியன்.

Mathi News காலை செய்திகள்26/8/17

காஷ்மீர் மாநிலத்தில் காவல் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல்

பஞ்சாப், அரியானாவில் வன்முறை கலவரத்தில் 29 பேர் பலி ரெயில் நிலையங்கள், மின்சார நிலையத்துக்கு தீவைப்பு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 7 வீரர்கள் காயம்

வட தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பீகார் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 28-ந் தேதி அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

ரூ.200 நோட்டுகள் 28–ந்தேதி முதல் வினியோகம் ஏ.டி.எம்–ல் கிடைப்பது தாமதம் ஆகும் ரிசர்வ் வங்கி:
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பான்-ஆதார் இணைப்புக்கு 31 வரையே அவகாசம்

ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் தான் இந்தியை எதிர்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட முருகன் மறுப்பு: 30 நாள் பரோல் கோரி நளினி புதிய மனு

இந்திய பயணத்தை தவிர்க்க சீனர்களுக்கு அரசு கோரிக்கை

இந்தியாவிற்கு வரும் பிரிட்டன் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுரை

ஜி.எஸ்.டி., வரியால் தீப்பெட்டி பட்டாசு தொழில் பாதிப்பு வாசன் ஆதங்கம்

கல்பாக்கம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் : 7 பேர் படுகாயம்

குடியாத்தம் அருகே 6 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இப்போதுதான் முதல் முறையாக சேலம் மாவட்டத்தின் முதல் முறையாக ஆட்சியராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலப்பாளையத்தில் நகை கடை உரிமையாளர் கொலை: கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை உறவினர்கள் 2 பேர் கைது

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள்

பிரிட்டன்: பக்கிங்காம் அரண்மனை அருகே போலீசாருக்கு கத்தி குத்து - தீவிரவாத தாக்குதலா? என விசாரணை

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தகவல்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தோல்வியில் முடிந்தன - அமெரிக்கா தகவல்

ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் தாக்குதல்: பெல்ஜியம் நாட்டில் பாதுகாப்பு படையினரை தாக்கி துப்பாக்கிச்சூடு

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மறுஆய்வு மனு

ரோஹிங்யா போராளிகள்- பாதுகாப்பு படையினர் மோதல் 71 பேர் பலி

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கணையை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

இன்றைய(ஆக.,26) விலை: பெட்ரோல் ரூ.71.52; டீசல் ரூ.59.97.

செய்திகள்@26/8/17

ஹரியானாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஃஎப் வீரர் மற்றும் போலீசார் வீர மரணம்

வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்ய பீகார் வந்தடைந்தார் பிரதமர் மோடி

ஹவாலா ஏஜென்ட் மொய்ன் குரேஷி டெல்லியில் கைது

குர்மீத் ராம் ரகீம் சிங்:தேராவில் பாலியல் பலாத்காரங்கள் நடந்ததை வெளிக்கொண்டு வந்த செய்தியாளர் கொல்லப்பட்ட வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது.

அரியானாவில் குர்மித் ராமின் ஆசிரமத்தை கையகபடுத்தியது அரசு:ராம் ரஹீமின் 2 ஆசிரமங்களுக்கு சீல்

வேலூர் சிறையில் உள்ள முருகனுடன் வழக்கறிஞர் புகழேந்தி சந்திப்பு

பரோலில் வெளிவந்த பேரறிவாளனிடம் 2வது நாளாக கையெழுத்து பெறப்பட்டது

முதல்வர் பழனிசாமிக்கு பேரறிவாளன் தாயார் நன்றி

விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை: தாயாரை சமாதானப்படுத்திய பேரறிவாளன்

சென்னை அடையாரில் உள்ள தினகரன் வீட்டு அருகில் வைத்துள்ள பேனரில் தினகரன் முகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர்

சென்னையில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த 10 பேர் மீது வழக்கு

எடப்பாடி பழனிச்சாமி கொள்கை முடிவு எடுக்க தடை வேண்டும்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும்
ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஜெ.தீபா கடிதம்

ஆரம்பாக்கம் அருகே மர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

சேலம் அருகே கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

2ம் நிலை காவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் திருநங்கை நஸ்ரியா தேர்வு

தமிழகத்தில் 5 போலி ஹோமியோபதி மருத்துவர்கள் கைது

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தை சுற்றி அவ்வப்போது வட்டமடிக்கும் ஹெலிகாப்டர்
பீதியில் மக்களும், அதிகாரிகளும் காணப்படுகின்றனர்
மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

சென்னை:மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டண சலுகை 2 மாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவன் பலி

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டத்தை மதிக்காத காங்கிரஸ் அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

2ம் நாள் மருத்துவ கலந்தாய்வு துவங்கியது: 1,464 பேருக்கு அழைப்பு

குர்மீத் ராம் விஐபி சிறையில் அடைப்பு; ரோக்தாக்கில் 144 தடை உத்தரவு, 600-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து

புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஓம்சக்திசேகர் மனு

புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரியில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரியில் பொறியியல் படிப்புக்கு 31ம் தேதி இறுதிகட்ட கலந்தாய்வு

திருப்பதி வனப்பகுதியில் கூலி தொழிலாளர்களை இறக்கி விட்ட தமிழக பஸ் டிரைவர் கைது
செம்மரம் வெட்டி கடத்துவதற்கு தமிழக பஸ் டிரைவர்கள் உதவி செய்வதாக தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் 36 பேரை ஏற்றிச்சென்றனர்

போலீசார் மீது கல்வீச்சு நடத்திய தேரா சச்சா ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி வைரலாகியுள்ளது
தேரா சச்சா ஆதரவாளர் கல் வீசுவதும், குண்டடி பட்டு கீழே விழுவதும் காட்சிகளாக அதில் உள்ளது
துப்பாக்கி சூடு காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது

டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப் போட்ட ஹார்வே புயல்
மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று கரையை கடந்தது
கனமழை நீடிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
12 ஆண்டுகளுக்குப் பிறகு டெக்சாஸ் மாகாணத்தை மிரட்டும் கடுமையான புயல்

மேவெதர் - மெக்கிரிகோர் மோதும் குத்துச்சண்டை போட்டியின் மூலம் ரூ.4,230 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்: ஷியா மசூதிக்குள் ஐ.எஸ். தீவிரவாதி மனித வெடிகுண்டு தாக்குதல்- பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

மதிய செய்திகள்@26/8/17

காஷ்மீரில் போலீஸ் குடியிருப்பை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் பலி

பீகார் வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார் - 500 கோடி நிவாரணம் அறிவிப்பு

பீகாரில் அரசு பணம் ரூ.1000 கோடி ஊழல்: வழக்கை ஏற்று விசாரணையை தொடங்கியது சிபிஐ

கலவரச்சூழலை அறிந்தும் தடுக்காத ஹரியானா முதல்வர்: உள்துறை அமைச்சகத்திடம் உளவுத்துறை அறிக்கை

பஞ்ச்குலா துணை போலீஸ் ஆணையர் இடைநீக்கம்

சிர்சாவில் குர்மீத் ராம் ஆசிரமத்தில் ராணுவம் நுழைந்தது

மத தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கபட்டதும் 5 மாநிலங்களில் கலவரம் பரவியது இது தொடர்பாக 1000 பேர் கைது செய்யபட்டு உள்ளனர்

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாருக்கு மினரல் வாட்டர் வசதியுடன் ஒரு பெண் உதவியாளர் என சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

பாலியல் பலாத்கார சாமியாருக்கு சொந்தமான மையங்களுக்கு சீல்: பாதுகாப்பு படைகள் ரெய்டு

பஞ்சாப், ஹரியானா கலவர எதிரொலி: பால் கிடைக்காமல் சிம்லா மக்கள் தவிப்பு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்இந்த மாத இறுதிக்குள் இணைக்காவிட்டால் பான் எண் ரத்து செய்யப்படும்வருமான வரி தாக்கலும் செல்லாததாகிவிடும்

தமிழகத்தில் ஜோக்கர் ஆட்சி: கர்நாடக அமைச்சர் விமர்சனம்

சிவகங்கை, விழுப்புரம், அரியலூர் மாவட்ட செயலர் நீக்கம்: தினகரன்

கடவுளைத் தவிர எங்களை யாராலும் மிரட்ட முடியாது. எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு புதுச்சேரி சென்றுள்ளனரே தவிர யாருக்கும் பயந்து ஓடவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்

தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையே போர்: தினகரன்

எங்களுக்கு 8 அமைச்சர்கள் - 60 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என திவாகரன் கூறினார்.

சபாநாயகர் அனுப்பியதாக கூறிய நோட்டீஸ் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லைஅப்படியே கிடைத்தாலும் விளக்கம் அளிக்கமாட்டோம்:பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல்

ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் 2 நாளில் ஜனாதிபதியை சந்திப்போம்- தங்க தமிழ்ச்செல்வன்

சட்டமன்றத்தை கூட்டி முதல்-அமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கொ.ம.தே.க. ஈஸ்வரன்

போலீசாரால் தமிழகத்திற்கு பெருமை: முதல்வர் பழனிசாமி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அடுத்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்க்ள்.

அமெரிக்க அதிகர் ட்ரம்ப்பின் ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா:வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று வெளியேறினார்;செபாஸ்டியன் ராஜினாமா செய்யவில்லை நீக்கப்பட்டுவிட்டார் என வெள்ளை மாளிகை அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக கூடைப்பந்து: செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன்

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை

அகில இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.

*இன்றைய 1 வரிச்செய்திகள்!*


26/08/17 சனிக்கிழமை!

பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த உதயசந்திரன், இனி பாடத்திட்ட மாற்றம் தொடர்பானவற்றை மட்டும் கவனிப்பதுடன் புதிய முதன்மை செயலர் பிரதீப்யாதவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், பழனிசாமிக்கு எதிராக தினசரி ஒரு எம்எல்ஏ பேசி அதிர்ச்சியளித்து வருகின்றனர்.

வடகொரிய ராணுவம், நேற்று நடத்திய மூன்று ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கணையை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

அரசு கொறடாவின் பரிந்துரையை ஏற்று 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ள பேரவைத் தலைவர் தனபால், இதில் உள்ள சட்டச்சிக்கல்களை தீர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு - ஹரியாணா, பஞ்சாபில் வன்முறை, 31 பேர் பலி - ரயில், பஸ்களுக்கு தீ வைப்பு - 250 பேர் படுகாயம்.

மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவில்பட்டி - நல்லி இடையே நடைபெற்ற பணிகள் முடிந்ததன் காரணமாக ரயில்கள் வழக்கமாக இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பான் எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் இருந்து அடுத்த மாதம் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று முதல் துவங்குகின்றன.

புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்ததுள்ளது என்றும் வருகிற 28 - ந்தேதி (திங்கட்கிழமை) முதல் வங்கிகள் மூலம் தமிழகத்தில் வினியோகம் செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெகசாஸ், அமெரிக்காவில் கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் வலுவடைந்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பீதி நிலவுகிறது.

'ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்" என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலு}ர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை ஒரு மாத கால பரோலில் விடுவிக்க தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ. 2.97 கோடி வரை கூடுதலான கட்டணத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் அழைப்பு மேற்கொண்ட வாடிக்கையாளர்களிடம் வசூலித்துள்ளது.

ஆமதாபாத்தில் நடந்து வந்த கியு  மாஸ்டர்ஸ் லீக் ஸ்னூக்கர் போட்டியின் நேற்றைய இறுதி ஆட்டத்தில் உள்ளூர் அணியான குஜராத் கிங்ஸ் டெல்லி டான்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

💎 பெட்ரோல் ஒரு
லிட்டர் விலை - ரூ.71.52

💎 டீசல் ஒரு
லிட்டர் விலை - ரூ.59.97

💎 தங்கம் 1
கிராம் - ரூ.2,775.00

💎 வெள்ளி 1
கிராம் - ரூ.42.60


மாலை செய்திகள்@26/8/17

ஆதார் விவரங்களை திருடிய அமெரிக்காவின் சிஐஏ: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிக்கு கடும் மிரட்டல் வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராம் ரஹீமின் ‛இசட்' பிரிவு பாதுகாப்பு வாபஸ்

கேரளாவில் ரியல் எஸ்டேட் துறையில் ரூ. 6,000 கோடி முதலீடு செய்ய குர்மீத் ராம் ரகீம் சிங் திட்டமிட்டு இருந்தார்.

தேரா தலைமையகத்திற்குள் நுழைய ராணுவத்திற்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பா.ஜ.,வில் இணைந்தார்

அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விடுவித்து தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நானே நினைத்திருந்தால் முதல்வராகியிருக்க முடியும். சசிகலா என்னை முதல்வராக்கியிருக்கலாம். ஆனால், நான் அதனை விரும்பவில்லை. கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி முதல்வராக்கப்பட்டார் என தினகரன் கூறினார்.

துணை முதல்வராக இருக்குமாறு அமைச்சர்கள் கூறினர்: தினகரன்

தினகரன் ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என கடலூர் மாவட்ட அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூறி உள்ளனர்.

அரசியல் புரோக்கர்களை வைத்து தினகரன் தரப்பு எம்எல்ஏக்களுக்கு ஆசை காட்டுகிறது:தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நிச்சயம் 21ஐ தாண்டாது -தினகரன் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: அருண்மொழித்தேவன் எம்.பி.

4 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

நம்பி வந்தவர்களுக்காக பன்னீர் பரிந்துரை: பதவி அளிக்க பழனிச்சாமி யோசனை

கிரானைட் முறைகேடு தொடர்பான விரிவான அறிக்கை ஹைகோர்ட்டில் தாக்கல்;
கனிமவள முறைகேடுகளை விசாரிக்கும் ஆணையத்தின் செயல்பாடு முடிவுக்கு வந்ததுஆணையராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தகவல்

சென்னை துறைமுகத்தில் 40 டன் செம்மரக்கட்டை பறிமுதல்

கோயில் நிலங்கள் கோயில் நலனுக்கே: ஐகோர்ட் உத்தரவு

சுங்கத்துறையின் இணையதளத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை தேவை: வாசன்

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு மீண்டும் முழுமையான அதிகாரத்தை வழங்கிடுக: ஜவாஹிருல்லா

குர்மீத் ஆதரவாளர்கள் வன்முறைகளுக்குப் பிறகு புதுடெல்லியில் அமைதி திரும்பியது

கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அரசுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறது

அரசியல் லாபத்திற்காக பஞ்சகுலா நகரத்தில் நடந்த வன்முறையை மாநில அரசு வேடிக்கை பார்த்ததாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளிக்காட்டியதாக இரு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

தெரு வியாபாரிகளிடம் பணம் பறிக்க உத்திரப்பிரதேசத்தில் போலீஸ் போன்று நடித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்

ஏர் இந்தியாவின் மும்பை-கொச்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக விமானம் புறப்படுவதற்கு பல மணிநேரம் தாமதம் ஏற்பட்டது

பாகிஸ்தானின் மக்கள் தொகை கடந்த 19 வருடங்களில் 57 சதவீதம் உயர்வு

தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்:
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,774
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,192
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,130
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.70
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,700

இலங்கைக்கு எதிராக வரும் போட்டிகளிலும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும் என்று பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் குறிப்பட்டுள்ளார்.

*🔴🔵மதி செய்திச் சுருக்கம் (26/08/2017)*

1 மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பழுது 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

2 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில் பங்கு விலையை குறைவாக நிர்ணயிக்கும்படி மத்திய அரசு வழியுறுத்தி இருக்கிறது.

3 சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 71.38 புள்ளிகள் அதிகரித்து நிப்டி 19.65 புள்ளிகள் முன்னேற்றம்.

4 கடந்த ஜீலை மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 பியூச்சர் சப்ளை செயின் நிறுவனம் புதிய பங்குகள் வெளியிட அனுமதி வேண்டி பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளது.

6 தற்போது நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 23 கோடி டன்னாக இருக்கிறது.

7 நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜீலை வரையிலான முதல் 7 மாதங்களில் தனியார் பங்கு முதலீடாக 881 கோடி டாலர் ஈர்க்கப்பட்டு இருக்கிறது.

8 தனியார் துறையைச் சேர்ந்த எச்.டீ.எப்.சி ஸ்டாண்டர்டு லைப் நிறுவனம் ஆயுள் காப்பீட்டுச் சேவையில் ஈடுபட்டுள்ளது.

9 நாட்டின் மொத்த உற்பத்தியில் அன்னிய முதலீட்டின் பங்கு 2.5 சதவீதம் ஆகும்.

10 இந்திய ஆயுள் காப்பீட்டு துறையால் பொதுத்துறையை சேர்ந்த எல்.ஐ.சி நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

11 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்.

12 53 வயதில் அமெரிக்க பெண்ணுக்கு ரூ.5,000 கோடி ஜாக்பாட்!!! அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மேவிஸ் வான்ஸிக் அவருக்கு தற்போது ஜாக்பாட்டில் ரூ.5,000 கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது. ஒரு நபருக்கு இவ்வளவு பெரிய தொகை ஜாக்பாட்டில் பரிசாக கிடைத்துள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை.

13 தென்னாப்பிரிக்காவில் தொடங்க இருக்கும் டி20 குளோபல் லீக் தொடரில் பங்கேற்கும் பெனோனி ஜால்மி அணியின் பயிற்சியாளராக, கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

14 நெய்மாரின் இடத்தை நிரப்ப பல முயற்சிகளை எடுத்த பார்சிலோனா அணி, இறுதியாக பிரான்ஸ் நாட்டு வீரரும், பொருஷியா டோர்ட்மண்ட் கிளப்பின் நட்சத்திர ஸ்டிரைக்கருமான ஓசுமானே டெம்பெல்லேவை 105 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கியுள்ளது. இது பார்சிலோனா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

15 2ம் நிலை காவலருக்கான உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பில் திருநங்கை நஸ்ரியா தேர்வாகியுள்ளார்.

16 ஆமதாபாத்தில் நடந்து வந்த கியூ மாஸ்டர்ஸ் லீக் ஸ்னூக்கர் போட்டியின் நேற்றைய இறுதி ஆட்டத்தில் உள்ளூர் அணியான குஜராத் கிங்ஸ் டெல்லி டான்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

17 ஜப்பானில் உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லூலு ஹசிமோட்டோ எ‌னப் பெயரிடப்பட்டுள்ள இந்த பொம்மைக்கென பிரத்யேகமாக உடைகள் வடிவமைக்கப்பட்டு அவை விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

18 திருத்தணி மாவட்டத்தில், கடும் வறட்சி மற்றும் போதிய நிதியுதவி இல்லாததால், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு பின், விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு, பயனாளிகள் தேர்வு செய்யும் பணியில், கால்நடை துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

*🔴🔵  மதி செய்திகள் 24/7*

19 பெண்கள் கல்வி மையத்துக்கான நிதி உதவி ரத்து செய்யப்படாது' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது

20 இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடியா செல்லூலார் நிறுவனம் ரூ. 2.97 கோடி வரை கூடுதலான கட்டணத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் அழைப்பு மேற்கொண்ட வாடிக்கையாளர்களிடம் வசூலித்துள்ளது.

21 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை ஒரு மாத கால பரோலில் விடுவிக்க தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

22 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் தோல்வி கண்டார்.

23 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் போட்டித் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர்.

24 டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரையால் தான் நான் சிறப்பாக விளையாட முடிந்தது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

25 டெகசாஸ், அமெரிக்காவில் கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் வலுவடைந்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பீதி நிலவுகிறது.

26 'ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

27 புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்ததுள்ளது என்றும் வருகிற 28–ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வங்கிகள் மூலம் தமிழகத்தில் வினியோகம் செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

28 மத்திய அரசுத் துறைகளின் செயல்பாடுகள் அனைத்தையும் நிகழாண்டு இறுதிக்குள் கணினிமயமாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலன் - குறைதீர்ப்பாயத் துறை இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

29 டெல்லி வைஷாலி பகுதியுடன் நொய்டா நகரை இணைக்கும் ‘புளூ லைன்’ மெட்ரோ ரெயில் சேவைக்குட்பட்ட 50 ரெயில் நிலையங்களில் நேற்றி இலவச வைபை சேவை தொடங்கியது.

30 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகரான செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா செய்துள்ளார்.

31 ஓணம் பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் இருந்து அடுத்த மாதம் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று முதல் துவங்குகின்றன.

32 நிறவெறி தூண்டுதலினால் இரண்டு கொலைகளைச் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மார்க் அஸேவுக்கு இதுவரை பயன்படுத்தாத ஊசி மருந்து மூலம் புளோரிடாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

33 கோவை -ஈச்சனேரி அருகே தென்காசியிலிருந்து கோவை நோக்கி வந்த டிராவல்ஸ் பஸ்சும், கொச்சியிலிருந்து கோவை நோக்கி வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பஸ் கவிழ்ந்ததில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

34 பான் எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

35 பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளை வேரறுப்பதற்காக அந்த நாட்டுக்கு தூதரக ரீதியில் உதவ தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

36 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.52 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

37 கோவில்பட்டி-நல்லி இடையே நடைபெற்ற பணிகள் முடிந்ததன் காரணமாக ரயில்கள் வழக்கமாக இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

38 தரவரிசை பட்டியலில் முதல், 26 இடங்களை பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் வந்த, ௧௦ பேர், சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியை தேர்வு செய்தனர்

39 இங்கிலாந்தின் தலைசிறந்த மாரத்தான் ஓட்டப் பந்தய வீரரான மோ பாரா தனது கடைசி 5000 மீ ஓட்டத்தில் 0.03 வினாடி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.

40 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு, உணவு பாதுகாப்பு தரச்சான்று கட்டாயமாக பெற வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

41 பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு: ஹரியாணா, பஞ்சாபில் வன்முறை; 31 பேர் பலி - ரயில், பஸ்களுக்கு தீ வைப்பு; 250 பேர் படுகாயம்

42 சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

43 தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் தான் இந்தியை எதிர்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

44 குட்கா விவகாரம் குறித்து அவை உரிமைக்குழு கூட்ட முடிவை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

45 தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வருகிறார்.

46 ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

*🔴🔵மதி செய்திகள் 24/7*

47 அரசு கொறடாவின் பரிந்துரையை ஏற்று 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ள பேரவைத் தலைவர் தனபால், இதில் உள்ள சட்டச்சிக்கல்களை தீர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

48 மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

49 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

50 இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 12 டெஸ்டுகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்சின் (தென்ஆப்பிரிக்கா) உலக சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்.

51 ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர் விருதை 3-வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.

52 ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கணையை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

53 வடகொரிய ராணுவம், நேற்று நடத்திய மூன்று ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

54 தென் கொரியாவில் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாம்சங் நிறுவன துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

55 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று 72 அடி உயர விநாயகர் சிலை நிறுவி பூஜைகள் செய்யப்பட்டது.

56 உத்தரபிரதேச மாநிலத்தில் என்கவுன்ட்டரில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

57 முதல்வர் பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், பழனிசாமிக்கு எதிராக தினசரி ஒரு எம்எல்ஏ பேசி அதிர்ச்சியளித்து வருகின்றனர்.

58 பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த உதயசந்திரன், இனி பாடத்திட்ட மாற்றம் தொடர்பானவற்றை மட்டும் கவனிப்பதுடன் புதிய முதன்மை செயலர் பிரதீப்யாதவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.